Jan 30, 2013

விஸ்வரூபம் : கருத்து சுதந்திரம்

எதற்கு இவ்வளவு எதிர்ப்பு என்றே தெரியவில்லை... எந்த நேரத்தில் படம் ஆரம்பித்தாரோ ஒரே சிக்கல்தான்; பாவம் கமல்... பரிதாபம்தான், எவ்வளவு தடை இந்த படத்தை வைத்து இந்து முஸ்லீம் பிரச்சனையை ஊதி பெரிதாக்கலாம் என்றே பலபேர் நினைக்கின்றனர்... ஒரு வழியாக தடை நீங்கிடுச்சு; 30 ஜனவரி முதல் படம் கண்டிப்பாக திரைப்படும், நல்ல ஒரு விளம்பரம் ஆகிடுச்சு... அப்படி என்னதான் இருக்கு படத்தில என்றே பலபேர் சென்று பார்பார்கள். முஸ்லீம்கள் முஸ்லீமை பற்றி சொல்வதற்கும் மற்றவர்கள் சொல்வதற்கு மிகவும் வித்தியாசம் இருக்கும்... தலிபானை பற்றி யாருக்கு நல்ல அபிப்பிராயம் இருக்க முடியும்? அவர்கள் மனிதர்களே இல்லை... அவர்கள் அப்படிதானே? இதில் கமல் என்ன தப்பாக சொல்லிவிட்டார் என்றே தெரியவில்லை?


 

தாலிபான் எனும் தீவிரவாதியை அழிக்க கூடிய தமிழக முஸ்லிமா கமல் வருகிறாரம்; இதுவே கமலை தவிர மற்றவர்வர்கள் எடுத்திருந்தால் எப்படி இருந்துருக்கும்? கமலுக்கு வக்காலத்து வாங்கவில்லை... ஆனால்...எப்பவுமே எல்லாரை நல்லவராக காட்ட முடியாது, உண்மை இதுதான்; அக்பர் ஒரு பெரிய சக்ரவர்த்திதான், ஆனால் பீர்பால் பற்றிய கதையில் அக்பர் ஒரு சைடு ஆர்ட்டிஸ்டாகதான் வருவாரு.... அங்கு போய் அக்பரின் சாகசங்களை சொல்ல முடியாது.


கருத்து சுதந்திரம்: இதுதான் கண்டிப்பா விவாதிக்க கூடியது, ஓசில கூகுள் பிலாக் கொடுத்துருக்கு என்னுடைய சிந்தனை எல்லாம் பட்டை தீட்டுவேன், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்களின் நம்பிக்கையும் சிதைப்பேன் இதுதான் கருத்து சுதந்திரம், ஒருவர் ரோட்டில் செல்லும் போது கையும் காலையும் வீசிக்கொண்டு நடந்தால் அது அவர் சுதந்திரம், அதே அவர் கையை மூலம் அடுத்தவர் நடக்க முடியாமல் தடுதால் அது சுதந்திரமா? இல்லை அடுத்தவர் முகத்தில் கை வைப்பது சுதந்திரமா? என்கிட்ட காசு இருக்கு நான் எப்படி வேன்னா படம் எடுப்பேன்னு இது என்னுடை கருத்து சுதந்திரம், ஒருவர் தனது பணத்தின் மூலம் அவரை பற்றி எவ்வளவு கேவலமாக வேண்டும் என்றால் எடுக்கலாம், ஆனால் அவரின் குடும்பத்தாரை பற்றி எடுக்க முடியாது கூடாது, ஏன்னா அவர்க்கு அவரின் குடும்பத்தாரை பற்றி கேவலமாக எடுக்க ரைட்ஸ் இல்லை... முடியவே முடியாது எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கு அப்படிதான் எடுப்பேன், எழுதுவேன் அப்படி என்பவர்களை என்ன செய்ய முடியும்?


பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ சிப்பாயை கழுத்தை அறுத்து கொலை செய்தானே அப்ப ஏன் முஸ்லீம்கள் போராடலை/பாகிஸ்தானை எதிர்க்கலை என்கிறார்கள், ஆமா இதை குற்றமாக கூறும் எவ்வளவு பேர் இதற்கு எதிராக போராடினார்கள்? சன் நியுஸ்ல இயக்குனர்/தயாரிப்பாளர் செல்வமணி மற்றும் கேயார் கூட கூறினார்கள்; அவர்கள் இதற்கு எதிராக போராடினார்களா? எதாவது எதிர்ப்பை தெரிவித்தார்களா? நாம் எல்லாரும் ஒரு காமன் மேன் அவ்வளவுதான்... எங்கயாவது ஒரு அன்னா ஹசாரே வரும்போது சேர்ந்து இருந்து சப்போர்ட் செய்வோம், வேறு என்னதான் செய்திருக்கிறோம்? இது ஒரு லூசுதனமான வாதமாகத்தான் இருக்கு. ஒரு செய்தி எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை, ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு செல்பவர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கும் செல்வார்கள், அப்படி ஒரு வேனில் செல்லும் போது தொண்டி எனும் இடத்தில் அந்த வேன் விபத்துக்கு உள்ளாகிறது அனைவரையும் தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக முஸ்லீம்கள் உதவி செய்திருக்கிறார்கள்.


பல பேர்களின் கருத்து, படத்தை படமாக ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே பார்க்க கூறுகிறார்கள் அதுவும் தமிழகத்தில்... ஆளும் கட்சியும் சரி, எதிர்கட்சியும் சரி திரைபடத்தின் மூலம் வந்தவர்களே. பொழுதுபோக்கு என்பது தேய்ந்து போயிடுச்சு, நம்மக்கள் பவர்ஸ்டாரை முதலமைச்சர் ஆக்காமல் விடமாட்டர்கள் அல்லவா? முஸ்லீம்னாவே குண்டு வைக்கிறவனாவும், ஆடு மாடு வெட்டுகிறவனாகவும், சாம்புராணி போடுகிறவனாகவும் காட்டுகிறது இந்த பொழுதுபோக்கு சாதனம். நான் சென்னையிலதான் இருக்கேன், வீடு வாடகைக்கு பிடிக்க முடியாது; முஸ்லீம்னு சொன்னாவே வீடு கொடுக்க மாட்டேங்கிறாங்க, ஏன்? எப்படி வந்தது இந்த வெறுப்புணர்வு?  ஊடகமும் ஒரு காரணம் இல்லையா????


எப்படியோ, முஸ்லீம்கள் மேல் நல்ல நட்புடன் இருப்பவர் கமல், பாபர்மசூதி இடிப்பின் போது திரையுலகின் முதல் ஆளாக தனது கண்டனத்தை பதிவு செய்தவர் கமல், மருதநாயகம் என்ற பெயரில் முஸ்லீம்களே மறந்துவிட்ட ஒருவரை பற்றி படத்தை ஆரம்பித்தவர்... இனிமேலும் இவற்றை கமலிடம் எதிர்பார்க்க முடியுமா???

Jun 27, 2012

*.blogspot.in to *.blogspot.com

கூகுள் சமிபத்தில் பிலாக்ஸ்பாட்டின் டாப் லெவல் டொமயின் URL மாற்றி விட்டது, அந்த அந்த நாடுகளுக்கு தகுந்தது போல் மாற்றிவிட்டது, இதை பற்றி எந்த ஒரு முன்அறிவிப்பும் இல்லை... இதனால் நமது தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் உள்ள வோட்டிங் பட்டன் வேலை செய்யாமல் போய்விடும்.

இதற்கு தீர்வு, கீழே உள்ள கோடிங்தான்...
<script>
if ((window.location.href.toString().indexOf('.com/'))=='-1') {
  window.location.href =window.location.href.toString().replace('.blogspot.in/','.blogspot.com/');
}
</script>
கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள், உங்களது பிலாக்கர் அக்கவுண்டுக்கு சென்று Design -> Edit HTML செல்லவும், பிறகு Expand Widget Templates என்ற செக்பாக்சை செலக்ட் செய்யவும்,இப்போது பேஜ் மறுபடியும் லோடு ஆகும், CTRL + F (தேடும்) </head> என்று தேடி அதற்கு மேல் காப்பி செய்து விடுங்கள், பிறகு "SAVE TEMPLATE" எனும் பட்டனை கிளிக் செய்து சேவ் செய்துவிடவும். உங்களது பிலாக் இனி எப்போதும் blogspot.com ஒபன் ஆகும்.

Jun 26, 2012

Top 100 Sci-Fi Movies

அறிவியல் கதைகள் என்றால் உங்களுக்கு பிடிக்குமா? அதுவும் பழைய படம் மற்றும் புதிய படம் என்றால்? எனக்கு மிகவும் பிடிக்கும்...   டோரண்ட் மூலமாக 100 படங்களை டவுன்லோடு செய்யலாம். மொத்தம் 75 GB

படங்களின் தொகுப்பு 
 1. 20 Million Miles to Earth (1957)
 2. A Boy and his Dog (1975)
 3. A Clockwork Orange (1971)
 4. A Scanner Darkly (2006)
 5. A Space Odyssey (1968)
 6. A Trip to the Moon (1902)
 7. Akira (1988)
 8. Alien (1979)
 9. Aliens (1986)
 10. Alphaville (1965)
 11. Altered States (1980)
 12. Back to the Future (1985)
 13. Barbarella (1968)
 14. Blade Runner (1982)
 15. Brazil (1985)
 16. Children of Men (2006)
 17. Close Encounters of the Third Kind (1977)
 18. Cocoon (1985)
 19. Cube (1997)
 20. Dark City (1998)
 21. Dark Star (1974)
 22. Delicatessen (1991)
 23. Donnie Darko (2001)
 24. Dune (1984)
 25. E.T. (1982)
 26. Escape from New York (1981)
 27. Eternal Sunshine of the Spotless Mind (2004)
 28. Event Horizon (1997)
 29. Explorers (1985)
 30. Fahrenheit 451 (1966)
 31. Fantastic Voyage (1966)
 32. Flash Gordon (1980)
 33. Forbidden Planet (1956)
 34. Galaxy Quest (1999)
 35. Gattaca (1997)
 36. Ghost in the Shell (1995)
 37. Godzilla (1954)
 38. Independence Day (1996)
 39. Invaders From Mars (1953)
 40. Invasion of the Body Snatchers (1956)
 41. Invasion of the Body Snatchers (1978)
 42. It Came From Outer Space (1953)
 43. Jurassic Park (1993)
 44. La Jetée (1962)
 45. Logan’s Run (1976)
 46. Mad Max (1979)
 47. Mad Max 2 (aka The Road Warrior) (1981)
 48. Metropolis (1927)
 49. Minority Report (2002)
 50. Moon (2009)
 51. Outland (1981)
 52. Planet of the Apes (1968)
 53. Predator (1987)
 54. Primer (2004)
 55. Quatermass 2 (1957)
 56. Repo Man (1984)
 57. Return of the Jedi (1983)
 58. RoboCop (1987)
 59. Rollerball (1975)
 60. Serenity (2005)
 61. Silent Running (1972)
 62. Sleeper (1973)
 63. Solaris (1972)
 64. Soylent Green (1973)
 65. Stalker (1979)
 66. Star Trek (2009)
 67. Star Trek II: The Wrath of Khan (1982)
 68. Star Trek VI: The Undiscovered Country (1991)
 69. Star Wars (1977)
 70. Stargate (1994)
 71. Starship Troopers (1997)
 72. Terminator 2: Judgement Day (1991)
 73. Tetsuo: The Iron Man (1989)
 74. The Abyss (1989)
 75. The Andromeda Strain (1971)
 76. The Day the Earth Stood Still (1951)
 77. The Empire Strikes Back (1980)
 78. The Fantastic Planet (1973)
 79. The Fifth Element (1997)
 80. The Fly (1986)
 81. The Fountain (2006)
 82. The Invisible Man (1933)
 83. The Man Who Fell to Earth (1976)
 84. The Matrix (1999)
 85. The Omega Man (1971)
 86. The Quiet Earth (1985)
 87. The Stepford Wives (1975)
 88. The Terminator (1984)
 89. The Thing (1982)
 90. Them! (1954)
 91. Things to Come (1936)
 92. This Island Earth (1955)
 93. THX 1138 (1971)
 94. Total Recall (1990)
 95. Trancers (1985)
 96. Tron (1982)
 97. Twelve Monkeys (1995)
 98. Videodrome (1983)
 99. WALL-E (2008)
 100. Westworld (1973)

Torrent Download Link
How to use/download Torrent

Jun 24, 2012

மஹியின் மரணம்

என்னதான் சொல்வது, யாரைத்தான் நோவது... மரணம் கண்டிப்பா வரும், எப்படி வேன்னா வரும் அப்படீன்னு நமக்கு நாமே சமாதானமா போகனுமா? இல்லை குழந்தைகளை கொல்வதற்காவே கிணறுகளை/குழிகளை வெட்டி மூடாமல் விடுகிறார்களா என்று எண்ணிக்கொள்வதா?

எல்லாரும் படிச்சுருக்கலாம், நான்கு வயது சிறுமி ஒரு குழிக்குள் விழுந்து 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கபட்டாள் என்பதை, படிக்க
இப்படி நிகழ்வுகள் அடிக்கடி நிகழ ஆரம்பித்துவிட்டது, அடிக்கடி இப்படி குழிக்குள் குழந்தைகள் விழுவதும், இறப்பதுமாக... எதுக்காக அப்படி ஒரு குழியையை தோண்டி மூடாமல் விடனும்? இப்ப நம்ம நாட்டுல எப்படி ஆயிடுச்சுன்னா, நாம நல்ல வாழ்ந்தா மட்டும் பரவாயில்லை, எவனும் எப்படி வேன்னா போகட்டும்... எல்ல மட்டதிலும் சகிப்புதன்மை இல்லாமல் போயிடுச்சு... சுயநலம் மட்டுமே முக்கியமா இருக்கு...

கொஞ்சம் வேகமா மீட்பு நடவடக்கை இருந்திருந்தா மஹியை காப்பாதிருக்கலாமே???

சிறுமி மஹியை இழந்து தவிக்கும் அந்த பெற்றேருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.... :(

Jun 16, 2012

ஆட்டுக்கு தாடியும் நம் நாட்டுக்கு குடியரசுதலைவரும்

தேவை என்பது எவ்வளவோ இருக்க, எதுக்குதான் ஆட்டுக்கு தாடியை வளர்க்க பாடு படுகிறோமே???  ஆட்டை மேய்ப்பவர்கள் எப்படி பெருமைபடுவார்களோ அப்படி நாமும் நன்றாய் பெருமைபடலாம், அட அவ்வளவு ஏன் ஆடே தன்னுடைய தாடியை பார்த்து பெருமை பட்டு கொள்ளும்... அடடா எவ்வளவு பெருசா இருக்கு, எவ்வளவு கருப்பா இருக்கு என்று. ஆனா என்ன தாடி வைப்பதுற்க்கு அடிக்கடி 23 கோடி, 205 கோடின்னு செலவு செய்ய வேண்டியது வரும்.


அடப்போங்ப்பா லட்சத்துகோடி கணக்குல செலவு செஞ்சவங்களையே கண்டுக்க மாட்டோம், வெறும் பிசாத்து 205, 200, 23 கோடிதானே, ஆட்டுக்கு தாடி நல்லதுதானே, எல்லாருட்டையும் நல்லா சொல்லிக்கொள்ளலாம்... பாருங்க எங்க ஆட்டுக்கு தாடி இருக்கு,  ஆட்டை வெட்டும்போது  அந்த தாடிதான் விலை அதிகமா போகும், அந்த தாடிதான் எங்க நாட்டையே பாதுகாப்பாகவும், சந்தோசமாவும் வச்சுருக்கு...


நடக்கும் ஒவ்வொரு செயல்களும் எனது விரக்தியை அதிக படுத்தவே உதவுகின்றது... ரப்பர் ஸ்டாம்ப் என்கிற பதவி எதற்கு நமது நாட்டிற்கு? மற்ற நாடுகளில் ஜனாதிபதிக்குதான் எல்லா அதிகாரமும் இருக்கும், நல்லதோ கெட்டதோ, ஏதாவத அவர் தனது நாட்டு மக்களுக்கு செய்வார். தலைமை சக்தி உள்ளவராக இருப்பார், நம்ம நாட்டுல??? எங்க அது இருக்குன்னே தெரியலை இல்லையா?


கீழே உள்ள லிங்கை பாருங்கள், அவை கடந்த இரண்டு மாதம் உள்ள செய்தி ஆகும், சும்மா படிச்ச் உடனே வயிறு எரிய ஆரம்பிக்கும்...

அட ரெண்டு மூனு மாசத்துக்கே இப்படி,  கடந்த 4.5 வருசத்துல நமது குடியரசுதலைவர் என்ன ஆட்டம் போட்டுருப்பார்??? அந்தம்மா சாகுற வரைக்கும் பெரிய வீடு கொடுத்து அரசாங்கம் கஞ்சி ஊத்தும், என்ன செய்ய விதியேன்னு போகவேண்டியதுதான்...


அப்துல் கலாம், மிகவும் நல்லவர்தான், என்ன செய்ய?? 5 வருசமா இருந்து என்ன செஞ்சுட்டாரு?? சொந்த ஊருக்கு ஏதாவது செஞ்சாரா? சொந்த மாவட்டதுக்கு ஏதாவது செஞ்சாரா? சொந்த மாநிலத்துக்கு ஏதாவது செஞ்சாரா?முடியாது,  முடியவே முடியாது; எங்க மாவட்டம் இன்னும் அப்படிதான் இருக்கும், அதே சாக்கடை, அதே கொசு, அதே தண்ணி பிரச்சனை... பவர் இல்லதா ஒன்னு, பாவம் அவர் கூட ஆசைப்பட்டுருப்பாரு நம்மல போல, என்ன செய்றது,  ஆனா 5 வருசமும் நல்லா அனுவிக்கலாம், ராஜா போல இருக்கலாம், ஆனா யாருக்கும் எதுவும் செய்ய முடியாது.

நாட்டுடைய முதல் குடிமகன், எந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் வந்தால் பிடிவாதமா முதல் குடிமகனைதான் சந்திக்க போறாங்களா? புதுசா ஏதாவது சட்டம் இயற்ற முடியுமா? பாராளுமன்றம் பரிந்துரைக்கும் அமல்களை மூன்று முறைக்குமேல் நிராகரிக்க முடியமா? தூக்கு தண்டனைய முதல் குடிமகன் நினைத்தால் நிப்படி விடலாம் என்பார்கள்? இதுவரை அப்படி ஏதாவது கேள்விபட்டதுன்டா???


இப்படி கேட்டுகிட்டே போகலாம், இப்படி பட்ட பதவி தேவையா? ஆட்டுக்கு எதுக்கு தாடி? சும்மா டம்மியா ஒருத்தர் இருப்பதுனால் என்ன பலன்?


இதெல்லாத்தைம் விட கொடுமையான ஒன்னு காங்கிரஸ் யாரை நிறுத்துனாலும் பிஜேபி ஆதரிக்குமாம், கொடுரமான கூட்டம் போட்டு இதை அறிவிச்சுருக்காங்க, என்ன காரணம்னா, துணை குடியரசுதலைவர் பிஜேபிக்கு கிடைக்குமாம்... என்ன ஒரு அண்டர்ஸ்டாடிங்...

May 28, 2012

வாழ்த்துக்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்

இப்படி நான் வாழ்த்து சொல்லவில்லை என்றால் பிலாக் எழுதுவதே வேஸ்ட்... மாறி மாறி ஏதாவது ஒரு கிரிக்கெட் வந்தாலும் ஐபில் என்றாலே ஒரு பொழுதுபோக்கை மீறிய ஒன்றாகி விட்டது, சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பேரு வச்சுக்கிட்டு சென்னையில் உள்ளவன் சப்போர்ட் செய்யலைன்னா யார் சப்போர்ட் செய்வார்கள்???

இன்னும் எனக்கு ஆச்சரியமான உண்மை என்னவென்றால், எவ்வளவோ அடி வாங்கு வாங்ன்னு வாங்கி சி.எஸ்.கே உள்ளே வந்தது, என்ன மாயமோ மந்திரமே தெரியலை..அது எப்படியோ தொடர்ந்து வேற டீம் தேர்த்தால் அல்லது ஜெயித்தால் மட்டுமே சி.எஸ்.கே வாய்ப்பு இருக்கும் என்ற நிலையில், வாய்ப்பு எப்படி வந்ததோ...எல்லாம் அந்த சினிவாசனுக்கே வெளிச்சம் :)இதுல பாவப்பட்ட டீம்ன்னு டெல்லி மற்றும் மும்பைதான், தொடர்த்து ஜெயித்து வந்து, கடைசில தோல்வி என்பது; பெரும் கொடுமை, சென்னை எப்படி ஜஸ்ட் லைக் தட் என்று உள்ளே வந்தது... ஐபில் எலிமினேட்ர், ஃக்லிபையர், பைனல் என்ற முறையை மாற்றி எல்லா டீமும் எல்லாருடன் 3 தடவை விளையாடி, நல்ல ரேட் பெரும் அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்,

கடைசியா சென்னை மற்றும் டெல்லி மோதியது, தோற்பதுக்கே வந்ததுபோல் சேவாக் இருந்தது, பெரும் பாவமாய் இருந்தது, எல்லாமே முன்னமே தீர்மானிப்பட்டது போல் இருந்தது... அதுவும் டெல்லி அணி பீல்டிங்கை விடுவதாட்டும், கேட்ச் மிஸ் செய்வதாகட்டும்... அடடடடா அட்டடா...  வெல் பிளே வெல் பிளே... என்னமோ போங்க...

உண்மையிலே பைனல் நல்லா இருந்துச்சு, சென்னை ஜெயிச்சுருக்க வேண்டியது, அதான் ஏற்கனவே ரெண்டுதடவை ஜெயிச்சாச்சே பிறகு என்னத்துக்கு ஜெயிக்க என்ற எண்ணத்தில்தான் கொல்கத்தாவுக்கு விட்டு கொடுத்துடுச்சு....

என்னவா இருந்தாலும் நம்ம டோணிக்கு ஒரு பெரிய விசில் அடிக்கனும்

Apr 14, 2012

இலவசக் கல்வி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த செய்தியை எவ்வளவு பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை, எதுவும் பரபரப்போ அல்லது நடிகை பற்றிய நிகழ்ச்சியே என்று யாரும் கண்டுகொள்ளாமல் கூட போய்விடலாம். பொதுவா இப்படிதானே நடக்குது.

அதாவது உச்சநீதிமன்றம் மிகவும் வரவேற்க்க கூடிய தீர்ப்பை கூறி இருக்கிறது, ஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக்கீடு, 

தட்ஸ்தமிழில் வந்த செய்தியை பாருங்கள்.

http://tamil.oneindia.in/news/2012/04/13/india-sc-stamp-on-right-education-poor-students-to-study-free-aid0174.html

கல்வி என்பது மாபெரும் வியாபரமாக போய்விட்ட நமது நாட்டில், கல்வி என்பது இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை எப்பாடி ஏற்படும்? 1000 ருபாய் முதல் போட்டவர்கள் 100 ருபாய் லாபம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் கல்வி வியாபரத்திலே முதலே போடாமல் லாபம் மட்டும்தானே, லாபத்தில் குறை ஏற்பட்டால் விடுவார்களா?என்ன மனது இருந்தால் ஏழை குழந்தைகளுக்கு கல்வி தர முடியாது என்று நீதிமன்றம் சென்றிருப்பார்கள். அதுவும் 25 சதவீதம்... மீதி 75 சதவீதம் தாரளமாக கொள்ளை அடிக்கலாமே, யார் தட்டி கேட்க முடியும், அதுவும் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற பெயரால், இவர்களால் சிறுபான்மை மக்களுக்க் நன்மை என்றால் அதுவும் கிடையாது.  ஒரு சிலர் வளரத்தான் எங்கும் எப்போதும் "சிறுபான்மை" என்ற சொல் பயன் படுது, இதை பற்றி தனியே தொடர் கட்டுரையே எழுத் முடியும். பிறந்தவுடனே ஸ்கூலில் சேர்க்கிற அவலம் நமது நாட்டில்தான் உள்ளது, ஏன்னா அப்பத்தான் நல்லா படிக்க முடியுமாம், ஆமாம் அப்படியே எல்லாரும் விஞ்ஞானிகளை உருவாக்கிறார்கள் பாருங்கள், நினைக்க நினைக்க மிகவும் எரிச்சாலத்தான் இருக்கு...

என்னுடைய எண்ணம் எல்லாம், அனைவருக்கும் சமமான இலவச கல்வியை கொடுக்க வேண்டும், ஏழை, நடுத்தர வகுப்பு, பணக்காரன் என்ற பாகுபாடு கல்வியில் இருக்கவே கூடாது,  எல்லாரும் சமம் என்ற நிலை கல்வியில் இருந்துதான் வரவேண்டும். அரசாங்கத்தின் கேவலமான நிலைப்பாடால், கொள்ளை அடிப்பவர்கள்தான் அதிகமாகி கொண்டே செல்கின்றனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்க்க கூடியது.

Apr 10, 2012

கள்ளகாதலும் உயிர் பறிப்பும்

தினமும் ஏதாவது ஒரு அதிர்ச்சி ஏற்பட்டு கொண்டே போகிறது, அதுவும் கள்ளகாதலினால் ஏற்படும் உயிர் பறிப்பும் அதிகம் அதிகம்… இன்று தட்ஸ்தமிழ் படிக்கும் போது மிகவும் கொடுமையான சம்பவமாக இது உள்ளது, அதாவது கள்ளக்காதலாக்காக பெற்ற குழந்தைகளைக் கொன்றதுதான்… படிக்கும்போதே மிகவும் வலித்தது…

என்ன ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேமோ…


அதை படிக்க

http://tamil.oneindia.in/news/2012/04/10/tamilnadu-illicit-affair-auto-driver-killed-his-kids-aid0128.html


என்னுடையே கேள்வியெல்லாம், எதுக்கு குழந்தையை கொல்லனும்? அவருடைய கள்ளக்காதலியுடன் போய் தொலைய வேண்டியதுதானே… அந்த கள்ளக்காதலி கொல்ல சொன்னாராம் இவரும் கொன்னுட்டாறம்… ஒரு பெண் எப்படி இப்படியெல்லாம் குழந்தையை கொல்ல சொல்ல முடியும்? இதில் மிகவும் பாவம் அந்த குழந்தைகளின் தாய்தான்.. மிகவும் பரிதாபம்….


கள்ளகாதல் மிகவும் ஒரு கொடுரமாக பரவிக்கொண்டிருக்கிறது, ஏதாவது ஒரு தீர்வு கண்டிப்பா வேண்டும்.


சரி, குழந்தைகளை கொன்றவருக்கு நமது நாட்டின் அரசியல் சட்டபடி என்னதான் தண்டனை கொடுப்பார்கள்? இப்படி பட்ட ஆட்டகளையெல்லாம் என்னதான் செய்யலாம்?

Feb 23, 2012

மின்வெட்டு, என்னதான் செய்யலாம்?

மிகவும் ஒரு வேதனையான, குழப்பமான இன்னும் சொல்ல முடியாத  நிலையாகி கொண்டிருக்கிறது மின்தடை, சென்னையில் 2 மணிநேரமும்; பிற பகுதிகளில் 5 மணிநேரமும் மின்வெட்டு; இல்லை இல்லை சென்னையில் 3 மணிநேரமும் மற்ற பகுதிகளில் 6 மணிநேரமும் என்று, அரசாங்கமே ஒரு முடிவில்லாத அறிவிப்பு செய்ய கொண்டிருக்கிறது. மின்வெட்டு எவ்வளவு நேரம் என்று இன்னும் தீர்மானிக்கபடவில்லை.எதுக்கு எங்கும் பாரபட்சம் பார்பானே, மொத்தமாக எல்லாபகுதிக்கும் 24 மனிநேரமும் வெட்டிடலாம் என்று கூட நினைக்கலாம்,  எதுவேன்னா நடக்கலாம்,  ஏன்னா எந்த வழியிலும் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு வராவே போவதில்லை...  ஏப்ரல், மே மாதங்களில் இதன் தேவை அதிகமா ஆகும் பொழுது; கண்டிப்பாக கொடுரமான மின்வெட்டை எதிர்பார்க்கலாம்...

அரசாங்கம்,, எவன்டா கை நீட்டி பேசுறது, இப்ப யார புடுச்சு ஜெயிலில் போடலாம் என்றும், அரசியல்வியாதிகளுக்கும், அரசாங்க உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தடையில்லா மின்சாரமே கிடைக்கும் பொழுது, இதை பற்றி நினைக்க நேரம் ஏது? 

சரி என்னதான் செய்யலாம்???
 • மின்திருட்டை தடுக்க வேண்டும், எங்காவது எந்த கட்சி பொதுகூட்டம் நடக்கும் போதும் சரி, கல்யாணம், ஊர் பொதுவிழா (திருவிழா) நடக்கும் போதும் சரி 90% மின் திருட்டுதான் நடக்குது.
 • 220~240 வோல்டேஜ், 110~120 வோல்டேஜ் மாறவேண்டும், ஏன் என்றால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மின்கடத்தல்(?) ஆகும் போது அதிகமாக வீணாகுது.
 • கட்டுபாடான மின்வினியோகம்சென்னை போன்ற நகரங்களே அதிக அதிக மின்சாரத்தை உருஞ்சுகின்றனர்; அதுவும் பணக்கார வீடுகளில் நாய் கக்கா போகும் இடங்களில் கூட ஏசிதான் இருக்கும், இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் மிகஅதிகப்ட்சம் இவ்வளவுதான் என்று மாற்றவேண்டும்.
 • கடைகளின் பயன்பாடு, சில கடைகள், MNC நிறுவனங்கள் ஜொலிக்குதே ஜொலிஜொலிக்குதே என்று தடையில்ல மின்சாரத்தை பயன்படுத்துவதை தடைசெய்யவேண்டும்
 • சோலார் திட்டம், அராசாங்கம் மானியம் கொடுத்து வீடுகளில் சேலார் மின்சேமிப்பு திட்டத்தை கொண்டுவரலாம்.
 • கூடங்குளம், மிக கண்டிப்பா செயல்படுத்த வேண்டும்.

 இதை நான் எழுதும் போது கூட இருட்டில் இருந்தே எழுதினேன் :)

Jan 1, 2012

இனிய 2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

2012 ஆரம்பித்து விட்டது….

எப்படி 2011 முடிந்தது என்றே தெரியவில்லை… இதே இப்பதான் ஆரம்பித்தது போல் உள்ளது, அவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டது, நாட்கள் மிகவும் வேகமா ஓடுகிறது… 2011 கடுமையான வெயில், மழை, குளிர் என்று 2010 விட அதிகமாக இருந்த்து, 2012ல் 2011 விட அதிகமாக இருக்கும்…

எனக்கு 2011 ஒரு கொடுமையான வருடமாகத்தான் இருந்தது, மருத்துவத்துக்கு சம்பளம் போதாயென்று கடன் வாங்கி வெலவு செய்ய வேண்டியது இருந்த்து… வருடம் வருடம் நமது சம்பளம் கூடுதோ இல்லையோ டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுக்கபடும் பீஸ்/செலவு கூடிக்கொண்டே போகிறது… மருத்துவத்தை சேவை என்று கூறுவதை 2012 வருடத்தில் இருந்து நிப்பாட்ட வேண்டும்.

இந்தவருடம் எப்படி இருக்கும் என்பதை பார்போம், எல்லாமே ஒரு எதிர்பார்ப்புனே… நல்லதே நடக்கனும் இன்ஷா அல்லாஹ்.

அனைவரும் அனைத்து வளங்களை பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.நோய் நொடியற்ற மகிழ்ச்சியான புத்தாண்டாக நல்வாழ்த்துக்கள்