Aug 30, 2009

தமிழ் குர்ஆன்

தமிழ் குர்ஆன்



தமிழ் குரான், 30 சுஜுவும் இனைந்தது
இத்துடன் ஒரு லிங்க் இனைத்துள்ளேன்... டவுன்லேடு செய்து கொள்ளவும்... முதலில் ஃபான்ட் செட் ஆகது,  அதற்கு முதலில் ரன் செய்யும் பொழுது "எழுத்து சரியாக அமையவில்லையா"  கிளிக் செய்யவும், பிறகு ஃபான்ட் ஒன்று சேவ் செய்யும் படி கூறும், அந்த பைலை desktop ல் சேவ் செய்து விட்டு, பிறகு Start -> Settings -> Control Panel -> Fonts கிளிக் செய்யவும், பான்ட் போல்டர் ஒபன் ஆகி இருக்கும், இப்போது File -> Install New Fonts... கிளிக் செய்யவும், பிறகு போல்டர் பாத்தில் desktop காமித்து அந்த பான்ட் பைலை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

தமிழ் குர்ஆன் டவுன்லேடுக்கு இங்கு கிளிக் செய்யவும்

Aug 28, 2009

சென்னையின் சப்தம்

என்ன டைட்டில் வைப்பது என்று யேசித்தே, யேசித்தே பதிவ பதிவு செய்யாம விட்டுறேன். எப்படித்தான் பர பரப்பான பேரா வக்கிறாங்களோ???
நான் பொதுவா தமிழ்மணத்தில் பரபர பதிவு, அதிகமாக பின்னூட்டம் இட்ட பதிவு எதுவோ அதையோ முதலில் பார்பேன், பிறகு மற்றவகளை பார்வையிடுவேன், அதிரடியா பதிவுக்கு எப்படித்தான் பெயர் வைப்பார்களோ?

உண்மையில் பிலாக் எழுதுறது என்பது ஒரு அடிட் மாதிரி, இதான் எனக்கு ரெண்டாவது பதிவு, முதலுக்கும் ரெண்டாவது இடையில் ஒரு 10 தடவை பிலாக் ஓபன் செஞ்சு ஏதாவது எழுதிட்டு அப்புறம் விட்டுவேன்... இதை எப்படியோ கடைசி வரை கொண்டு வந்தாச்சு :)

இப்ப நான் எழுதப் போறது. சென்னையில் இருக்குற அனுவிக்கிற சப்தங்களை பற்றி. அனுபிவிக்கிறம்னு சொல்லுறத விட செவிடாகிக்க் கொண்டு இருக்கிறோம் என்பதே உண்மை.

உஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.... தினமும் யராவது ஒரு ஆட்டோக்காரரிடம் திட்டு வாங்குவது அல்லது அவரை திட்டுவது என்பது சென்னை வாசிகளுக்கு பழக்கமான ஒன்றுதான். நான் ஆட்டோக்காரரை திட்டுறேன்னா, அதுக்கு முதல் காரணம், என்ன கருமாந்திரமான எஞ்சின்தான் வைய்த்துருப்பார்களோ, கடவுளே, அது ஓசோன் படலத்துல ஓட்டை போடுறது ஒரு பக்கம். சில ஆட்டோ விடும் பாருங்க ஒரு சப்த்ம், உலகத்துல யாருமே கேட்டே இருக்க முடியாது; அப்படி ஒரு சவுண்டு.... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்னூ மிகக்கொடுமையான சப்தம், நான் பைக்ல போகும் போது ஆட்டோ வந்தா ஒதுங்கி வழிவிட்டுறது, ஆட்டோ முன்னாடி மாட்டிக்கிடா டிரைவரோட வாய் சத்தம்; ஆட்டோ பின்னாடி மாட்டிக்கிடா இஞ்சின் சத்தம்.

அப்புறம், பைக்... சில பேர் பன்னுற அழும்பு தாங்கவே முடியலை... பைக்ல ஹாரனுங்குற பேருல வச்சுருப்பங்க ஒரு வித்தியாசமா சவுண்டு. ஏதாவது மிருகம் பக்கதுல போய் அடுச்சா அடுத்த நொடி அது செத்துரும், நாம எல்லாம் இதை எல்லாம் கேட்டுகிட்டு எப்படித்தான் உயிர் வாழ்றோமே???

ஏதாவது தலைவர் பிறந்த நாள், இறந்த நாள் வந்தா போதும்... உசிரோட இருக்கும் போது கண்டுக்கதவன், மைக் செட்டு வச்சு போடுவான் பாட்டை... கொஞ்சம் நோயால இருக்குறவங்க எல்லாம் பெரிய சீக்காளி ஆய்டுவங்க. அந்த பாட்டு எழவுதான் ஒழியுதுன்னா, அவரு மைக் புடுச்சு பேச ஆரம்பிப்பார்... கொண்டாடப்படும் தலைவரே மறுபடியும் செத்துடலாமான்னு நினைப்பார்... அவரு பேசிறதா சென்னைல இருக்குற எல்லா ஏரியாவுக்கும் கேக்கனும்னு தெடர்ச்சியா மைக் செட் கட்டி நம்ம காத புண்னு ஆக்கிடுவாங்க.

நான் சென்னை விட்டு போகலைனா, விரைவில் நான் செவிடு ஆயிடுவேன் :(

எது எதுக்கோ கேசு போடுற புண்ணியன்களே சென்னையின் சப்தம் குறைக்க ஒரு வழி செய்ய கூடாதா???

Aug 23, 2009

ஹாய் நண்பர்களே

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்...


நானும் பிளாக் ஆரம்புச்சுட்டேன், ஆரம்புச்சுட்டேன், ஆரம்புச்சுட்டேன்...

இவன் என்னடா எழுதி கிழிக்க போறான்னு நினைக்கலாம்,  அட நானே இதத்தான் நினைச்சேன், பல இடத்துல பின்னுட்டம் போடுறோம், எத்துன நாட்களுக்கு பின்னூட்டமா போடுறது, இனிமேல் முன்னோட்டம் போடலாம் முடிவு எடுத்துட்டேன்.  சரி பல நாள் ஆசை, தமிழ் மக்களுக்கு ஒரு கொடுமை நடக்கனும்னா யாரால என்ன பண்ண  முடியும் :) உங்க விதி அவ்வளவுதான் ஹிஹி. 

எழுத்துல தப்பு இருந்துச்சுன்னா சுட்டி காட்டுங்க, எழுத்தே தப்பா இருந்துச்சுன்னா குட்டி காட்டுங்க. (அதிகமா டி.ஆர் படம் பாத்த எபெக்ட் ஹி ஹி).  இங்க நான் எழுத்போறது, என்னை பாதித்தவை பற்றியும் என்னால் பாதிக்ப்பட்டவை பற்றியும். யாருக்கும் ஒரு தீங்கு கூட நினச்சதுல்லை... எல்லாரும் எல்லாம் பெற்று வாழனும்தான் நினைப்பேன். எனக்கு எனது மார்க்கம் பிடிக்கும் அதேநேரத்தில் மதம் பிடிக்கவில்லை,  நல்ல ஒரு  முஸ்லீமா வாழ  முயற்சி செய்திக்கிட்டு இருக்கேன். மற்றவர்களை மதிக்காதவன் மனிதனே இல்லை. கணினி பற்றி ஏதோ தெரியும் என்பதால் அதைப்பற்றி பதிவும் இடுகிறேன். கணினி ஏதாவது சந்தேகம்னா எஸ்கேப் ஆயிக்கிற்றேன் ஹிஹி :D .  எனக்கு பல விசயத்துல ஆசை இருக்கு... திரைப்படங்களில் நடிக்கனும்னு, பல மொழி கத்துக்கிறனும்,  ஊர் நல்லா சுத்தனும்னு,  கணினி உலகத்துல இந்தியாவுக்கு பேரு வாங்கி தாறது போல ஏதாவது சாதிக்கனும்னு,  என்னுடை அம்மா அப்பவை ஹஜ் அனுப்பணும்னு இப்படி பல ஆசை இருக்கு... இன்ஷா அல்லாஹ் நிறைவேறணும்...   எல்லாருக்கும் தான் எல்லா ஆசையும் இருக்கீங்களா? சரிதான். தமிழ் ரெம்ப புடிக்கும் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.  இதுதான் என்னோட பயோகிராப். ஏதாவது தெரியனும்னா mmastanoli@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.


என்ன பற்றி ஒரு சிறு அறிமுகம்


பெயர்:  மஸ்தான் ஒலி
இருப்பது: சிங்கார சென்னை
படிப்பு: MSc [IT]
வேலை: கணினி பொறியாளர் (கற்றது கையளவு)
தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் (பெண்கள் பேசுகிற மலையாளம் அழகோ அழகு)
பொழுது போக்கு: ஊர் சுற்றுறது, பாட்டு கேக்குறது, புத்தகம் படிக்கிறது, படம் பாக்குறது, சாட் பன்னுறது, இனிமேல் இப்படி எழிதி உங்களை கொல்லுறது :)


கொஞ்சம் கொஞ்சமா எழுதுறேன்... அடிக்கடி வாங்க. ஊக்குவீங்க.




கடைசியா ஒன்னு...
ஒரு ஆய்வின் படி உலகத்தில் பல பேர் இரவு உணவு உண்ண வசதியில்லாமல் பட்டினியால் உறங்குகின்றனர். என்ன ஒரு கேவலமான உலகில் நாம் வசிக்கின்றோம், ஒரு பக்கம் உணவு மீந்து வீணாகிறது, மறுபக்கம் உணவில்லாமல் மக்கள் வீணாகின்றனர். உங்களிடம் கேட்டுகொள்வது எல்லாம் ஒற்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்களுக்கு அறியாதவர் தெரியாதவருக்கு உணவிடுங்கள்...  மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.