இப்ப எழ காரணம்???
அவர்களை மற்றவர்கள் குற்றம் சாட்டியதை ஜீரணிக்க முடியவில்லை, அது எப்படி எல்லாரையும் நாங்கள்தான் குற்றம் சொல்வோம் நீங்கள் எப்படி எங்களை சொல்லலாம், என்று தெருவுக்கு தெரு வந்து போராடுகின்றனர். அவர்கள் எவரை பற்றியும் பற்றியும் எப்படியும் செய்திகள் போடுவார்கள், அவர்களை மற்றவர்கள் செய்தியாக்கியது பொருக்கவில்லை.
பத்திரிக்கை அன்பர்களை பற்றி அவர்களின் குடும்பங்களை சினிமா நபர்கள் விமர்ச்சித்தை தாங்க முடியவில்லையே... இப்படிதானே இருந்திருக்கும் நீங்கள் மற்றவர்களின் மனதை காயப்படுத்தும் போதும், பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தை உங்களது பேனா எனும் ஆயுதத்தலால் குத்தி கிழிக்கும் போது அவர்கள் மனது என்ன பாடுபட்டிருக்கும்.
சினிமாவும் சினிமா நடிகைகளும் எப்படி என்று அனைவருக்கு தெரியும், சில பத்திரிக்கை செய்தது சினிமா நடிகைகளுக்கு மார்க்கெட்டிங். அமாம் அதுதான் உண்மை, இந்த நடிகை இவ்வளவு வாங்குகிறார், அந்த நடிகை அவ்வளவு வாங்குகிறார் என்ற செய்தியால் என்ன நன்மை இருக்க போய்கிறது? அந்த நடிகைகளை நாடிசெல்லும் நபர்கள் விலை நிர்ணயம் செய்வார்கள்.
இது நாள் வரை நடிகைகளின் நாய் தொலைந்து போனதை பெருமையாக எழுதி நாயின் படத்தை பெரிதாக பத்திரிக்கையில் போடுவதை சந்தோசமாகவும் இதுதான் மக்களுக்கு ஆற்றும் தொண்டு என்று நினைத்தவர்கள் இன்று அதே நடிகைகளுக்காக எதிரான குரல்.
நான்காவது தூண் என்று ஊடகங்களை சொல்வார்கள். அந்த ஊடகங்களை சேர்ந்தவர்களே மிகவும் கொதிக்க ஆரம்பித்து விட்டார்கள், அதுவும் அவர்கள் அபிமான நடிகைகளுக்கு எதிராக, பாவம்... போராடுவதற்கு முன்பு பல சினிமா எழுத்தாளர்கள் "இந்த கொடுமைய பார்ப்பதற்காகவா என்னை உயிருடன் விட்டு வைத்துள்ளாய் கடவுளே" என்று மனம் நொந்துருப்பார்கள்.
ஊடகங்கள் சரியா செயல் பட்டு இருந்தால், அதற்கு எதிராக ஒன்று நடக்கும்போது மக்களே வீதிக்கு வந்து ஊடகங்களுக்கு ஆதரவா போராடுவார்கள். சில ஊடகங்கள் தவிர பலவேறு ஊடகங்கள் என்ன செய்தார்கள் மக்களுக்கு?
இப்போது வரும் தினசரி பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் என்ன தலைப்பு செய்தியாக இருக்கும்??? சமிபம் வரை புவனேஸ்வரி தலைப்பு செய்தியாக இருந்தார், கொஞ்ச நாட்களுக்கும் அவரே இருப்பார்... முக்கியமா மக்களின் அத்யாவசிய தேவைகளை பற்றி எந்த ஊடகம் எழுதாது... அப்படியே எழுதினாலும், கண்டிப்பா அதை பின் தொடர்ந்து செய்தி போட மாட்டார்கள்.
கேட்டா உடனே சொல்வார்கள் பத்திரிக்கை விற்க வேண்டாமா என்பார்கள்.
ஏதாவது பரபரப்பு தகவல் வேண்டும் இவர்களுக்கு... அடுத்தவர்களின் கொடுர மரணம் இவர்களுக்கு பரபரப்பான தகவல். அடுத்தவர்களின் வாழ்கையின் படுக்கை அறை வரை சென்று பரபரப்பு தகவல் தேடி தலைப்பு செய்தியாக்குவதுதான் இவர்களின் நான்காவது தூண்.
- அரசாங்க வேலையில் இருக்கும் சில பேர் இன்னும் ஜாதி/மத வெறி கொண்டு செயல் படுகின்றனர் அவர்களுக்கு எதிராக?
- ஹோட்டல்களில் நாளும் பொழுதும் சாப்பாடு விலையை கூட்டிக்கொண்டு கேவலமான சாப்பாடு போடுகின்றார்களே அவர்களை பற்றி?
- சீரழிந்த சாலை பற்றி கவலை பட்டிருப்பார்களா?
- ரேசன் கடையில் பொருட்கள் ஒழுங்கா தருவதில்லை... இதைபற்றி?
- சராசரியா நடக்கும் திருட்டை பற்றியும் & பின்தொடர்ந்த செய்தி?
- சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாலையில் உறங்கும் மனிதர்களை பற்றி?
- மாற்றபடும்/இயற்றபடும் சட்டங்களை பற்றிய ஒரு பார்வைகள்?
- நீதி மறுக்க படுவோரை பற்றி?
இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.
அதிகமான மாத, வார இதழ்களில் இருக்கும் செய்தியே சினிமாவை பற்றிதான். மேலும் கிசுகிசு வேறு... க் பேருல முடிகிற இவர் சின்ன ச் வச்சுருகாராம்... இப்படி எழுதி எழுதியே வாழ்கையை ஓட்டிக்கொண்டுள்ளனர்...
சாலையில் செல்லும் போது PRESS என்று பெருமையாக சொல்லி போலீஸ்காரரிடம் இருந்து தப்பி செல்லமட்டும் நான்காவது தூண்ணின் உதவிவை பெற்று கொள்ளும் பத்திரிக்கையாளர்கள், மக்களுக்கு நன்மை செய்யும் செய்தியை வெளியிட எப்போது வெளியிட போறார்கள்? , எது மக்களுக்கு விரோதமானதோ, எதனால் மக்கள் அதிகமாக உணர்ச்சிக்கு ஆளாவர்களோ அந்த செய்தியைதான் அதிகமாகவும் மக்கள் பார்வை படும் விதத்திலும் வெளியிடுவார்கள்.
ஜனநாயக முதல் தூண் மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறார், இவர்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை... இரண்டாவது அரசு ஊழியர்கள் பொதுவா இந்தியாவில் இருக்கும் பலபேர் இன்னும் அதிக வரி கட்டி கொண்டுருக்க இவர்கள்தான் காரணம், மூன்றாவது நீதிமன்றங்கள், இதுதான் கொஞ்சம் கொஞ்சம் மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது, நான்காவது தூண் ஊடகம் அது எப்படி இருக்கனும்? முதலில் இருக்கும் தூண்கள் சாயும் போது காப்பாற்றவேண்டியது நான்காவது தூண்தான். ஆனா கொடுமை என்னன்னா கட்டிடம் சாய்வதற்கு நான்காவது தூணே காரணமாய் அமைந்து விடுகிறது.
இந்தியா சிறந்த நாடாக மாற ஊடகம் சரியாக மாறினால், மக்களுக்கு எதிரானவைகளை எதிர்த்து வணிக நோக்கில் மட்டும் செயல்படாமல், நீதி நேர்மையுடன் செயல் பட்டால் மக்கள் வருவார்கள் உங்களுடன் போராட என்பதுதான் எனது எண்ணம்.
13 comments:
//எது மக்களுக்கு விரோதமானதோ, எதனால் மக்கள் அதிகமாக உணர்ச்சிக்கு ஆளாவர்களோ அந்த செய்தியைதான் அதிகமாகவும் மக்கள் பார்வை படும் விதத்திலும் வெளியிடுவார்கள்.// True!
இந்தியா சிறந்த நாடாக மாற ஊடகம் சரியாக மாறினால், மக்களுக்கு எதிரானவைகளை எதிர்த்து வணிக நோக்கில் மட்டும் செயல்படாமல், நீதி நேர்மையுடன் செயல் பட்டால் மக்கள் வருவார்கள் உங்களுடன் போராட என்பதுதான் எனது எண்ணம்.
hahaha...
திரு. மஸ்தான்,
நல்ல பதிவு. பத்திரிகைத் தொழிலும் ஆசிரியத் தொழிலைப் போல் அதன் நெறிமுறைகளை விட்டு நழுவி வருகிறது.
உங்கள் "ப்ரொஃபைலில்" சில வரிகளில் வரும் "hungry" என்பதற்குப் பதில் "angry" என்றிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்; சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
true
Thanks ஹுஸைனம்மா.
I changed it.
mika sariyaana pathivu nanbare.ungal pathivin tharam nalukku naal merukeri kondirukkirathu.vazthukal.
நன்றி Barari.
கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் மாறிக்கிட்டுதானே இருக்கனும்
///ஹோட்டல்களில் நாளும் பொழுதும் சாப்பாடு விலையை கூட்டிக்கொண்டு கேவலமான சாப்பாடு போடுகின்றார்களே அவர்களை பற்றி?
சீரழிந்த சாலை பற்றி கவலை பட்டிருப்பார்களா?
ரேசன் கடையில் பொருட்கள் ஒழுங்கா தருவதில்லை... இதைபற்றி?
சராசரியா நடக்கும் திருட்டை பற்றியும் & பின்தொடர்ந்த செய்தி?
சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாலையில் உறங்கும் மனிதர்களை பற்றி?
மாற்றபடும்/இயற்றபடும் சட்டங்களை பற்றிய ஒரு பார்வைகள்?
நீதி மறுக்க படுவோரை பற்றி?///
நீங்கள் கேட்கும் இந்த் கேள்விகள் அனைத்துமே தினமலரில் நாள் தவறாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சுட்டிக்காட்டப்படும் விஷயங்கள். தினமலர் தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் அதை ஒழிக்க ஒரு கூட்டம் அலைகிறது.
அதே தினமலரில்தான் நடிகைகளின் விலை பட்டியலையிம் வெளியிட்டார்கள்.
Everything has become commercial nowadays. They have huge investment and will do all they can to earn money.
Right Said Mr.Masthan
These fellow reporters always used to write about the fellows who are in good position. why cant they write inspirational, innovation which mould ordinary people to good position. whatever be magazines are moving towards the customers. customers too want to know about others anytime.
//இந்தியா சிறந்த நாடாக மாற ஊடகம் சரியாக மாறினால், மக்களுக்கு எதிரானவைகளை எதிர்த்து வணிக நோக்கில் மட்டும் செயல்படாமல், நீதி நேர்மையுடன் செயல் பட்டால் மக்கள் வருவார்கள் உங்களுடன் போராட என்பதுதான் எனது எண்ணம்.
//
ஆமோதிக்கிறேன்.
Post a Comment
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
தமிழில் எழுத!
வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.