கடவுளுக்கு கருணையே இல்லையா?
நான் யாருக்கும் எந்த துன்பமும் செய்யலையே!
எல்லாம் எனக்கு மட்டுமே நடக்கனுமா?
பட்ட காலிலே ஏன் படுதோ?
இறைவா ஏன் இந்த சோதனை?
நமக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது?
கடவுளே நீ என்னை காப்பதே இல்லையா?
இப்படிலாம் எல்லாருக்கு ஏதாவது ஒரு நேரத்தில் சிந்தனை வரும். எனக்கும் அடிக்கடி கடவுள் மேல கோவம் கோவமா வரும், அது கொஞ்ச நேரம்தான் இருக்கும், அப்புறம் சகஜமாயிடுவேன். சின்ன விபத்து நடந்தா, நல்ல வேளை பெரிய விபத்து நடக்காம ஆண்டவன் காப்பாத்திட்டன்னுதான் நினைப்பேன், அதுபோல் 100 ருபாய் காணாமல் போனா 10000 போகாம இருந்துச்சேன்னு நினைப்பேன். ஏதாவது தவறா ஒரு விசயம் நடந்தா, நல்ல வேளை ரெம்ப பெருசா எதுவும் நடக்கலை இப்படித்தான் நினைக்கனும்.
உண்மையிலே கடவுள் நம்மளை எல்லா விசயத்திலும் பாதுகாத்து கொண்டுதான் இருக்கிறார், நாம்தான் புரிந்து கொள்வதுமில்லை, சரிவர நன்றி செலுத்துவதும் இல்லை, நன்றி செலுத்த விட்டாலும் பரவாயில்லை நாம் செய்யும் அனைத்து தவறுக்கு காரணம் கடவுளே என்று தூற்றுகிறோம்.
கொஞ்ச நாளைக்கும் முன்பு என்க்கு இந்த மெயில் வந்துருந்துச்சு... மிகவும் நான் விரும்பிய மெயில். கடவுளின் கருணையை பற்றி ஒரு படத்தில் சொன்ன விசயம். பார்க்கும் அனைவருக்கும் ஒரு சந்தோசத்தை தர கூடியது.
பாருங்கள் இந்த படத்தில்... ஒருவனை எப்படி கடவுள் காக்கிறார் என்பதையும், அவன் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளான் என்பதையும்.
5 comments:
சூப்பர் மஸ்தான்
இறைவனை நினைவுகூர்தல்
இசுலாம் தனது மக்களை, தமது வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இறைவனை நினைவு கூற வழியுருத்துகிறது. இது மக்களை பாவம் செய்வதில் இருந்து தடுப்பதாக இசுலாம் கூறுகின்றது. இதன்படி ஒவ்வொரு இசுலாமியரும் மற்ற இசுலாமியரை பார்க்கும்பொழுது அஸ்ஸலாமு அலைக்கும் ( உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என கூறவேண்டும். இவ்வாறே ஒருவர் சந்தோசமாக இருக்கும் பொழுது அல்லாஹு அக்பர் (இறைவன் மிகப்பெரியவன்) என்றும் துக்கமாக இருக்கும்பொழுது இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் (நாம் இறைவனிடம் இருந்தே வந்தோம், மேலும் அவனிடமே திரும்பிசெல்பவர்களாக இருக்கிறோம்) என்றும் கூற வேண்டும். இவ்வாறு தும்மும்போதும், கொட்டாவி விடும் பொழுதும், பிறருக்கு உதவி செய்யும் பொழுதும், பிறருக்கு நன்றி சொல்லும் பொழுதும் என அனைத்து நிலைகளிலும் இறைவனை நினைக்க வேண்டும். மேலும் பொதுவாக எந்த செயலை செய்ய ஆரம்பிக்கும் பொழுதும் பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருப்பெயரால்) என கூறி ஆரம்பிக்கவேண்டும்.
நிச்சயமாக மனிதர்கள் நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றோம்.
உங்கள் பதிவு மிக அருமை மஸ்தான். அல்ஹம்துலில்லாஹ்
font மாத்திட்டன் இப்ப வந்து அதிசயத்தப்பாருங்க.
நல்ல இடுகை, படைத்தவனை குறைகூறுவதைவிட்டும் அந்தபடைத்தவன் நம்மை காக்கட்டும்..
I know that you are more brilliant, so you would not allow others to copy and republish in other`s site(even with your permission). But it can be done.
The Messenger of God (Sallallaahu `alayhi wa sallam) said:
“To acquire some useful knowledge is of greater merit than to perform a hundred devotional prayers voluntarily.”
Post a Comment
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
தமிழில் எழுத!
வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.