கணவன் மனைவியின் ஒரு ஜாலி உரையாடல்.
நல்ல ஜாலியான மூடுல பேசிக்கிறாங்க
மனைவி : நீங்க என்ன செய்வீங்க நான் இறந்துட்டா? திரும்ப கல்யாணம் செய்வீங்களா?
கணவன்: சே சே மாட்டேன்
மனைவி: ஏன், மாட்டேன்! கல்யாண வாழ்கையை விரும்பமாட்டீங்களா?
கணவன்: ம்ம்ம்... விரும்புவேன்
மனைவி: பின்ன ஏன், இன்னும் ஒரு கல்யாணம் செய்ய கூடாது?
கணவன்: சரி சரி, செஞ்சுகிறேன்.
மனைவி: செஞ்சுப்பீங்களா? (கோவப்பார்வை)
கணவன்: (க்கும்...., அமைதியா இருக்கார்)
மனைவி: நீங்க நம்ம வீட்டுல தங்குவீங்களா?
கணவன்: கண்டிப்பா, இது ரெம்ப நல்ல வீடு இல்லயா...!
மனைவி: ம்ம்ம்... நீங்க அவளோட இந்த பெட்ரூம்மை யூஸ் பன்னுவீங்களா?
கணவன்: அப்ப, நாங்க போய் எங்கே தூங்குறது?
மனைவி: என்னோட படத்தை எடுத்துட்டு அவ படத்தை மாட்டி விடுவீங்களா?
கணவன்: அது செஞ்சுதானே ஆகனும்
மனைவி: என்னோட நகைகள் எல்லாம் அவகிட்ட கொடுப்பீங்களா?
கணவன்: சே சே, அவளோடதுதான் விரும்புவா.
மனைவி: ஓ, என்னோட காரை அவள ஓட்ட அலவ் பன்னூவீங்களா?
கணவன்: ஆமா ஆமா, அது புதுசுதானே...
மனைவி: எனக்கு டிரைவிங் கத்துகொடுத்தது போல, அவளுக்கும் கத்து கொடுப்பீங்களா?
கணவன்: இல்ல இல்ல, அவளுக்கு கார் ஓட்ட தெரியும்.
மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்...
கணவன்: ஷிட்
மனைவி:
கணவன்:
5 comments:
எப்படிப் போட்டு வாங்கிட்டா பாருங்க!
http://kgjawarlal.wordpress.com
பட்டய கிளப்பிட்டீங்க...
:))))
ஹாஹா:-)
அருமை மஸ்தான் இது ராஜுசுந்தரம் ஒரு படத்தில் இப்பிடி பேசி அடி வாங்குவாருல்ல .
மஸ்தான் என்னுடைய்ய ப்லொக்கில் புதிய பதிவுகள் வெளியிட முடியவில்லை
டாஷ்போர்டு இல் பழைய இரண்டு பதிவுகள் மட்டுமே காட்டுகிறது
Post a Comment
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
தமிழில் எழுத!
வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.