Dec 31, 2009

வித்தியாசமான வாழ்த்து

மனிதனின் சிந்தனை சக்தியிம் வித்தியாசமான செயல்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. இதை டவுன்லோடு செய்து  பாருங்கள்,  மிகவும் ஆச்சிரியபடுவீர்கள்.

  1. இதை டவுன்லோடு செய்து கொள்ளவும் (ரைட் கிளிக் செய்து "Save..." என்பதை செலக்ட் செய்யவும்)
  2. நோட்பேடில் திறக்கவும்  
  3. CTRL + H (Menu->Replace) பிரஸ் பன்னவும்
  4. Find = 6
  5. Replace = _ (6 என்பதை "Find" இடத்திலும் _ (underscore) என்பதை "Replace" என்பதில் கொடுக்கவும்)
  6. கிளிக் "Replace all" பட்டன்
 
  1. Open this notepad (Right click above link and select "Save Target As...:")
  2. Press cntrl + H
  3. Press 6 in find box and underscore(_) in replace box
  4. Click replace all Button.
  5. Enjoy!
 
Mirror : http://www.fileden.com/files/2009/12/28/2705548/wish.txt




கடைசியாக விடைபெறுகிறேன்... [முற்றிலுமாக]

இதை எப்படி ஆரம்ப்பது என்றே தெரியவில்லை...மனசு மிகவும் கணமாக இருக்கிறது.எப்படியும் சொல்லிதானே ஆகவேண்டும், கண் குளம் போல் நீர் தேங்கி கிடக்கிறது. இவ்வளவு நாட்களாக பழகிவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றால் எல்லாருக்கும் மனசு கஷ்டமாக இருக்கும், ஆதலாம் கடைசியாக செல்வதற்கு முன்பு சொல்லிவிட்டு போகலாம் என்றுதான் இந்த பதிவு.

வரவர அனைத்து விசயங்கள் மீதும் கோவமும் ஒரு வெறுமையும் ஏற்படுகிறது, மற்றவர்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர்கள் மீது ஆத்திரமும், சில சமயம் பச்சாதாபமும் வருகிறது... தொன்றுதொட்டு தொடரும் வேதனை மீண்டும் வேண்டாம் என்றுதான் இந்த முடிவு.

எதற்கு விடை பெறுகிறேன் என்று தெளிவாக சொல்ல தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி கண்டிப்பாக திரும்ப வரமாட்டேன், ஆமாம் முற்றிலுமாக ஒழியபோய்கிறேன். எல்லாருக்கும் ஒவ்வொரு எல்லை இருக்கும், உலகில் உருவாகின்ற ஒவ்வொன்றுக்கும் கண்டிப்பாக அழிவும் இருக்கும். ஏதாவது ஒருவிதத்தில் நான் உங்களை காயபடுத்திருக்கலாம், எனது வார்த்தைகள் மனதை வருத்தபட வைத்திருக்கலாம். எனது செயல்பாடுகள் உங்களை கஷ்டபடுத்திருக்கலாம், உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் துன்பத்திற்கோ இன்பத்திற்கோ நான் காரனமாய் இருந்திருக்கலாம். துன்பத்திற்கு ஒரே வார்த்தையில் மன்னிப்பு என்று கேட்டு இதற்கு எல்லாம் ஈடுகட்ட நினைக்கவில்லை. மன்னிப்பு என்ற வார்த்தையும் இதற்கு அருகதை இல்லை.  நான் கூறிய வார்த்தைகள் காய படுத்தி இருக்கலாம், அல்லது எனது செயல்கள் உங்களையோ உங்களை சாந்தவர்களையோ காயபடுத்தி இருக்கலாம். இதற்கு எல்லாம் ஒரே தீர்வு கடைசியாக முற்றும் போடுவதுதான். ஆம்! இதுதான் எனது கடைசி.




இதற்கு பிறகு நான் உங்களை சந்திக்கவே போவதில்லை. இந்த நினைப்பே மிகவும் கொடுமையாக இருக்கின்றது.  இவ்வளவு நாள் நன்றாய் பழகிவிட்டு திடீர் என்று யாரையும் இனிமேல் சந்திகபோவதில்லை என்பது மிகவும் கொடுமையான விசயம் தான். என்ன செய்வது ஒவ்வொன்றுக்கும் கால நிர்ணயம் ஒன்று உண்டு அல்லவா... இதை எழுதும் போது எனது கண்ணில் சிறிது கண்ணீர்... நான் தவறு செய்வதாக நினைக்கிறீர்களா? செய்திருந்தாலும்... எதையும் மாற்றவே அழிக்கவே முடியாது. நாம் அனைவரும் ஏற்கனவே போடப்பட்ட பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம், அனைத்தும் முன்பே தீர்மானிக்கபட்டதுதான். என்க்கு நல்லது என்று தோன்றியது உங்களுக்கு தப்பாக பட்டிருக்கலாம்.

நமக்கு இதுதான் கடைசி நாள்.

விடைபெறுகிறேன்
கண்ணிருடன்
முற்றிலுமாக


































































































































































































































































































































இப்படிக்கு
உங்களுடன் உறவாடிய கடந்த ஆண்டு (2009)

Dec 30, 2009

கொஞ்சம் சிரீங்க...

எல்லாரும் சண்டை போட்டு சண்டை போட்டு கோவமா இருக்கீங்க... அதுனால, சிரிக்கிறதுக்காக படங்க... கண்டிப்பா சிரிப்பீங்க, இது கொஞ்சம் பழசுதான் இருந்தாலும் ரசிக்கலாம்.

சண்டைபோட்டு வாழாதீங்க, சிரித்து வாழுங்க. :)




















































வெளிவந்துகொண்டிருப்பது பூனைக்குட்டியா ஓநாயா?

இப்போதுதான் அதிக அதிக பூனைக்குட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது... மிகவும் பக்கத்தில் பார்க்காமல் விட்டதினால் தெரியவருகிறது அது பூனைக்குட்டி இல்லை, ஓநாய் என்று. இவ்வளவு நாள் அடிமனதில் தேக்கிவைத்திருந்தவை இப்போதுதான் வெளிவருகின்றன. அது கூட அதிகம் பழகிவருக்கே அது தெரியவில்லை பூனைக்குட்டியா அல்லது வேறு எதுவுமா என்று... ஓநாய் எதற்கு வரும், இரத்தம் தேடிதான் ஓநாய் வரும். இரத்த்தை பார்க்காமலும் இறந்த மனித உடலை பார்க்காமலும் கண்டிப்பாக ஓநாய் செல்லாது.




விதைப்பது விஷம் என்றே தெரியாமல் சிலபேர்,
நட்பை அசிங்கபடுத்தியிம்,
உறவை கொச்சைபடுத்தியும்..
இதுதானா அவர்கள் விருப்பம்?
அசிங்கத்தை பார்த்து விட்டால்
சிங்கத்தை எதிபார்க்கும் கூட்டம்...
இதுதான் இறுதி,
இதுதான் முடிவு என்றும் சிலபேர்...
அய்யோ பாவம்...
கொடுப்பதுதான் கிடைக்கும் அறியாதவர்களா அவர்கள்?
பரவட்ட்டும் தீ...!


இதற்கு மேலும் இதை பற்றி எழுத விரும்பவில்லை, புரியவேண்டியவர்களுக்கு புரிந்தாலும் சரி தொலைந்தாலும் சரி, நான் ஒரு பிரபல எழுத்தாளன் இல்லை பிரபல எழுத்தாளர்கள் படிப்பதற்கு, ஒரு சராசரியின் உள்ள கூக்குரல்தான் இது.

தீ பரவ வேண்டுமா அல்லது அனைக்க வேண்டுமா.

Dec 29, 2009

வேட்டைக்காரனும் ஜூஜூவும்

வோடாபோன் விளம்பரத்தில் வரும் ஜூஜூ ஒரு விசயத்தை பார்த்து பயந்து ஓடுது, என்னவா இருக்கும், வேட்டைக்காரன்தான் அது... ஹிஹி... மக்களின் கிரியட்டியவிட்ட்டியே கிரியட்டியவிட்ட்டியே அருமையா யோசுச்சுருங்காங்க.. நீங்களும் பார்த்து சிரீங்க...

ஏன்தான் வேட்டைக்காரனும் இந்த அளவுக்கு வெறுப்போ?

சரி நம்ம நோக்கம் சிரிக்கிறதுதானே... என்ஜாய் :)

இது அனிமினேட்டட் GIF படம், ஆதலால் படம் லோடு ஆக கொஞ்சம் நேரம் ஆகலாம். வெயிட் பிளீஸ்...

டவுன்லோடு செய்தும் பாருங்கள்






Dec 28, 2009

காமெடி உரையாடல்

ஆங்கிலம் தெரியாமலே பேச முடியுமா? பேச முடியும்... முடியாது... எப்படி வேன்னா எடுத்துக்கலாம், இந்த உரையாடல் இமெயில் மூலம் கிடைத்தது,  இதை கேட்டு கேட்டு சிரித்தது வயிறு வலித்தது, அவ்வளவு காமெடி, சரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று போட்டுட்டேன்...

நீங்களும் கண்டிப்பா சிரிப்பீங்க... எவ்வளவு பெட்?





Note: Please view Internet Explorer browser

அதிகபட்ச தண்டனை

சமிபத்தில் நாளிதள்களில் வந்த செய்திகள்.


  • கள்ளநோட் மாற்றிய கும்பல் பிடிபட்டது
  • சீனாவில் இருந்து போலி மருந்து

முதலில் உள்ளது நமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்க கூடியது. இரண்டாவது உள்ளது மக்களின் உடல் நலத்தை சிதைக்க கூடியது. இரண்டுமே மிகக்கொடியதுதான். 

கள்ளநோட்டு மாற்றுபவர்கள் அடிக்கடி பிடிபடுவதும், அவர்களை பற்றிய செய்திகள் நாளிதள்களில் வெளியிடப்படுவதும் நடந்து கொண்டே உள்ளன, பிடிபடுபவர்கள் என்ன் ஆகிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு பதில் எப்போதும் போல் வெறுமையாகவே உள்ளது... பிடிபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும், மேலும் இதனின் வேர் எங்குள்ளது என்று கண்டுபிடித்து வேரோடு அழிக்கவேண்டும். ஒவ்வொரு தடவை பிடிபடுபவர்களை போட்டோ எடுத்து நாளிதளில் போடுவதும், வேறு ஒரு பரபரப்பான செய்தி வந்தவுடன் அதை மறப்பது என்று இல்லாமல் அதனின் ஃபாலேஅப் செய்தியை வெளியிட்டு, நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பவர்களை வேரோடு சாய்க்கவேண்டும். 




இதையிம் விட மிகவும் கொடியவர்கள் போலி மருந்து இறக்குமதி செய்பவர்கள். மனசாட்சியை பணத்திற்காக அடமான வைத்து செயல்படுவர்கள். சீனாவில் இறக்குமதி செய்யபடும் அதிகாகமான பொருட்கள் நமது உடல் நலத்திற்கு ஏற்றது இல்லை, இதை மருத்துவர்களே ஒப்புகொண்டுள்ளுனர், நமது நாட்டில் விற்கபடும் மிக அதிகமான பொருட்களின் இடத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபடும் பொருட்கள் பிடித்துள்ளன, எங்கு நோக்கினும் "Made in China" என்ற முத்திரையுடன் பொருட்கள் உள்ளன. 

இப்படி மக்களை அழிப்பது போதாது, இந்திய மக்கள் அதிகமானோர் நோயளிகள் அவர்கள் அதிகம் நாடுவது மருந்துகளைதான், அதை போலியாக தயாரித்து மொத்தமாக இந்திய மக்களை ஒழித்து விடலாம் என்று சீனா என்னுகிறது போல, ஏனெனில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமான நாடுகள், வளர்ந்துவிட்டால் ஏதாவது ஒன்றுதான் வல்லரசாக இருக்க முடியும், இப்போதே இந்திய மக்களை ஏதாவது விதத்தில் அழித்துவிட்டால் அல்லது நோய்வாய் படுத்திவிட்டால் சீனாவிற்கு எதிரிகளே இருக்கபோவதில்லை, ஆதலால் கூட இப்படி செய்யலாம். 

நமது நாட்டு அரசியல்வாதிகள் இதை கண்டும் எதை பற்றியும் கவலைபடாமல் இருப்பது, சீனாவை கண்டு அஞ்சுகிறார்களா அல்லது வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. 

எந்த பத்திரிக்கையிம் இதற்கு முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிடவில்லை, அவர்களை சொல்லியும் குற்றமில்லை, சகீலா காதல்தான் அவர்களுக்கு முக்கியம். அல்லது செக்ஸ் புகார்ல எந்த சாமியாருடா சிக்குவான், அந்தரங்க படத்தை வெளியிடலாம் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள்.

போலி மருந்துக்கு சீனாவும், போலி நோட்டுக்கு பாகிஸ்தானும்தான் காரணம் என்றாலும் நமது ஆட்களில் உள்ள ஆடுகளால்தான் இவை அனைத்தும் நடைபெறுகின்றது, பிடிபடும் ஆட்களும் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் அப்போதுதான்  மற்றவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும். 

Dec 24, 2009

Dec 22, 2009

வேட்டைக்காரன் அமெரிக்காவில் ரிலீஸ்

இந்த படம் இமெயில் மூலம் வந்தது, பார்த்தவுடன் சிர்ப்பு சிரிப்பா இருந்துச்சு... நான் விஜய் படத்தை எதிர்ப்பவன் கிடையாது, விஜயின் நடனம் மிகவும் பிடிக்கும், இன்னும் வேட்டைக்காரன் பாக்கவில்லை... பார்த்துட்டும் விமர்ச்சனம் எழுதுகிற ஐடியாவுலாம் இல்லவே இல்லை :D


Dec 21, 2009

இடைத்தேர்தல், அரசாங்கதிற்கு ஏற்படும் சுமை

சமிபத்தில் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது, திமுக அரசாங்கம் பதவி ஏற்ற நாளில் இருந்து இது 10 இடைத்தேர்தல் ஆகும்.




ஓட்டு போடுவது கட்டாய கடமை, கட்டாய கடமை என்று சொல்லி அதிககதிகமா ஓட்டு போடுவது நடந்து கொண்டுள்ளது. வரவேற்கதக்க அம்சம்தான். ஆனால் எதையிம் தொடர்ந்து செய்வதினால் ஒரு தொய்வு ஏற்படுவதை தடுக்க முடியாது. என்ன எழவுஓட்டுடா... எவனுக்கு போட்டாலும் எதுவும் ஆகபோறதில்லை, என்னதுக்கு அடிக்கடி ஓட்டு போடனும் என்று மக்களுக்கு தோன்றதவரைதான் தில்லுமுல்லு ஜெயிக்கும்.

இடைத்தேர்தல் நடப்பதினால் அரசாங்கதிற்கு பல்வேறு சுமைகள்.  இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் ஆண்டுகொண்டுருக்கும் அரசாங்கம் வெற்றி பெற்று ஆகவேண்டிய நிர்பந்தம், ஏவெனில் இடைத்தேர்தலில் மக்கள் வெற்றி பெற வைத்தால்தான் அந்த அரசாங்கதிற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக எண்ணம். இதற்காக எந்த எல்லை வரை செல்ல ஆண்டு கொண்டிருக்கும் தயங்குவதில்லை.

ஏற்கனவே நமது அரசாங்கம் வாங்கிய கடனுக்காக வட்டியே கோடிக்கணக்கில் கட்டி வருகிறது, இதில் இடைத்தேர்தல் நடப்பதினால் ஏற்படும் பணச்சுமை மிகப்பெரிய சுமை. இப்போது தேர்ந்து எடுக்க போகும் MLA ஒன்றும் ஆகபோவதில்லை, பாவம் பதவிகாலம் வெறும் 1 1/2 வருடம் தான். இந்த காலத்தில் அவர் மக்களுக்கு நல்லது செய்யபார்ப்பாரா அல்லது இழந்த பணத்தை மீட்க நினைப்பாரா?

ஒவ்வொரு இடைத்தேர்தலின் போதும் பணம்தான் அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்கிறது.

இடைத்தேர்தலினால் அரசாங்கதிற்கு ஏற்படும் செலவு எவ்வளவு என்று தனியாக கணக்கு வைத்து கொள்ளவேண்டும். அவ்வளவு செலவழிகிறது.

இதற்கு மாற்று வழி கண்டுபிடித்தால் என்ன?

ஏன் இடைத்தேர்தல் நடத்தவேண்டும்?

ஒரு தொகுதில் அதிக வாக்கு வாங்குபவர் வெற்றி பெற்றவர் ஆவர், அவரின் இறப்போ அல்லது பதவியிழப்போ அங்கு இடைத்தேர்தல் நடத்த வழிவகுத்துவிடும். அவ்வாறு இல்லாமல் அதிக வாக்கு வாங்குபவர் வெற்றி பெற்றவராகவும் இரண்டாம் நிலையில் வாங்கு வாங்குபவரையிம் மாற்றாளாக (substitute) வைத்து கொள்ளவேண்டும்.  அப்படி இருக்கும் பட்சத்தில் முதலில் இருப்பவர் பதவி இழப்பு ஏற்பட்டால் இரண்டாம் நிலையில் உள்ளவர் அப்பொறுப்பை எடுக்கலாம். இதன் மூலம் அரசாங்கதிற்கு ஏற்படும் சுமையிம் ஆண்டு கொண்டுப்பவர்கள் ஜெயித்தால்தான் ஆச்சு என்ற தன்மையும் மாறும்.

எவ்வளவு காலத்திற்கு பழையதை வைத்து அழுது கொண்டுருப்பது, ஒரு மாற்றம் தான் வரட்டுமே...

Dec 9, 2009

ஐயமிட்டு உண்

சமிபத்தில் இந்த விடியோவை பார்க்க நேர்ந்தது, பார்த்தவுடன் மனது கணமானது. இப்படியும் உலக மக்கள் இருக்கின்றனர். பிச்சை புகினும் கற்றல் நன்று என்பது பசி அடக்குவதற்கவே என்று ஆகிவிட்டது.  இதை பாருங்கள் சிலர் சாப்பிடும் உணவை.


Dec 8, 2009

பிரிதல் நலமா?

பிரிவினை...

ஒரு மொழி பேசும் மக்களுக்குள்ளும் பிரிவினை...

தூண்டபடுகிறவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது இந்த அரசாங்கம்! எதற்காக போராட்டம்? தெலுங்கான பகுதியில்தான் ஆந்திராவின் தலைநகரம் அமைந்துள்ளது, ஆந்திராவை சேர்ந்த அனைத்து மக்களும் அங்கு வேலை பார்க்கத்தான் செய்வார்கள். தெலுங்கான பகுதியில் வேலை பார்ப்பவர்கள் அதிகமானோர் தெலுங்கான பகுதியை சேரதவர்களாம், எங்கள் ஏரியாவை சேராதர்கள் எப்படி எங்கள் இடத்தில் இருக்கவேண்டும், வேலை செய்யவேண்டும் என்று ஒளிவுமறைவான திட்டத்துடன்தான் தனிமாநிலம் கேட்டு போராடுகிறார்கள்.




மாநிலம் பிரிவதற்காக போராட்டம் நடத்தும் சந்திரசேகர ராவை காப்பாற்றுவதற்காக போராடும் மருத்துவர்கள் தெலுங்குதேசப் பகுதியை சேராதவர்களும் இருப்பார்கள். இவற்றை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா? 30 மருத்துவர் குழு அவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது. 30 மருத்துவர்களும் தெலுங்கு தேச பகுதியை சேர்ந்தவர்கள்தானா?

இதற்கு ஆதரவு தெரிவித்து மற்ற தேசிய(?) கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுள்ளது. தேசியம் பேசினாலே நாங்கள்தான் என்று மார்தட்டும் பிஜேபி எப்படி இதற்கு ஆதரவு தெரிவித்தது என்று தெரியவில்லை.

சொந்த மொழி ஆட்கள் மீது வெறுப்பாக இருக்கும் சந்திரசேகர ராவ் கட்சியினர் மாநிலம் பிரிக்கபட்டால் அங்கு பல காலமாக வசிக்கும் தமிழர்கள் மற்றும் மற்றவர்கள் மீதும் வெறுப்பை கக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தெடர்ந்து பல நாட்களாக பந்த்... ஆந்திராவில் இயல்பு வாழ்க்கையே பாதுக்கபட்டது, இவ்வளவு சிக்கலாக ஆக்கிகொண்டது மாநில அரசாங்கம்தான், அவர் ஆரம்பித்தவுடனே தடுத்திருக்கவேண்டும்.




ஏற்கனவே நமது நாட்டில் மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்டதில் பிரிந்து போய் கிடக்கிறோம். இந்தியாவின் ஒரு சரிசரியான வளர்ச்சி எட்டாதற்கு மொழியால் பிரிந்து கிடப்பது ஒரு காரணம் ஆகும், யார் மறுத்தாலும் இது ஒரு கசப்பான  உண்மையே. இந்தியர்கள் என்று பெருமை பேசும் நாம், இந்தியர் என்பதால் ஒன்றுபடுகிறோம் எனும் நாம், மொழி என்று வரும்போது மட்டும் அனைத்து விசயங்களிலும் கோட்டைவிட்டு விடுகிறோம்,  எனது மொழி பெரிதா உனது பெரிதா எனும் சண்டையிலே இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து கொண்டுயிருக்கிறோம்.

மொழியால் நமது நாடு பிரிந்து கிடப்பதினலே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, மொழிக்குள்ளும் பிரிவு ஏற்பட்டால்?

இப்படியே போனால் வீதிக்கு என்றும் ஜாதிக்கு என்றும் மாநில கோரிக்கை எழலாம்.




இந்தியா வல்லரசு ஆக அனைவரும் சேர்ந்து இருந்தலே நலம்.

Dec 2, 2009

உலகின் அசிங்கமான விலங்குகள்

இந்த படங்கள் எனக்கு இமெயில் மூலம் வந்தது, பார்த்தவுடன் இப்படியிம் விலங்குகள் இருக்குமா என்று யோசிக்க வைத்த்து... இதை உங்களுடன் பகிரவேண்டும் என்பதற்காகதான் இப்பதிவு. படங்கள் அதிகமாக இருப்பதினால் இப்பதிவு லோடு ஆவதற்கு நேரம் ஆகலாம், பொறுமை காக்கவும். தமிழில் மாற்ற முயற்சி செய்தேன், அதிகமான விலங்கின் பெயரை தமிழில் அறிய முடியவில்லை (தெரியலை) அதலால் ஆங்கிலத்திலையே...



The Star Nosed Mole

A resident of the North America, this mole makes up for his poor eyesight with a hairless nose that is a "star" of 22 fleshy tentacles. The tentacles are extremely sensitive, they can even sense electricity!
 

 
 
The Naked Mole Rat

The naked mole rat could be the ugliest animal in the world. Good thing they spend most of their lives underground. These guys can hardly see and use their giant teeth and jaws to dig extensive holes in the ground. They live in colonies like bees and have one queen who is responsible for all the reproduction.
 



The Sloth
Sloths move very very slowly and only when absolutely necessary. Their fur is a jungle in and of itself; Sloth fur plays host to two different kinds of moss. The moss gives the sloth an ugly coat but provides camouflage.






The Chinese Crested Dog
Archie, a Chinese Crested dog, sits with his tongue out before the start of the 20th Annual Ugliest Dog Competition. Chinese Crested dogs swept the ugliest dog competition from 2002-2008
 



The Yeti Crab

This crazy crustacean gets its name from the abominable snowman for its hairy arms. You don't have to worry about running into this crab though: they are found around 8,000 feet deep in the Pacific ocean
 




The Aye-Aye

The Aye-Aye is currently an endangered species partially due to the fact many in its native Madagascar view the animal as an evil omen and kill them on the spot
 





The Red-lipped Batfish

The lipstick won't help. This ugly fish has quite a pout. They are terrible swimmers and use their pectoral fins to "walk" on the ocean floor.






Almiqui

The Almiqui may have a cute name, but this thing is not fun to run into. It is one of the only mammals in the world with venomous saliva.
 




The Hag fish

The name suits this ugly fish. The hagfish has 4 hearts and 2 brains. Grosser still, the fish produces a large amount of slime when held or captured. The hag fish can produce 20 liters of slime in a matter of minutes
 





The Coconut Crab

These crabs are huge! They are the largest land-living arthropod (animal with its skeleton on the outside) in the world. The crabs can climb trees and are sometimes called "robber crabs" because they have a penchant for stealing shiny objects like pots and pans.
 





The Alligator Gar

Alligator gar is the largest freshwater fish in North America and can be as long as 8 to 10 feet. These enormous fish can survive outside the water for 2 hours.
 





Pabst

Pabst, a 4-year-old boxer mix wins the World's Ugliest Dog Contest finally taking the prize from the Chinese Crested Dogs.
 




The Sphinx Cat

The Sphinx cat may look hideous but these guys are known to have great personalities and are extremely affectionate with their human owners.
 




The Proboscis Monkey

This endangered monkey's most unique feature is its protruding nose. The monkeys will honk to communicate with one another, the nose straightens out during each honk.
 





The Komondor

They may be fancy pure breed dogs, but the Komondor needs a comb. The dogs were originally used as sheepdogs and their cord like fur creates a kind of armor against wolf or bear attacks.
 





The Warthog

Warthogs get their name from four large wart-like protrusions found on their heads. Despite their appearance, Warthogs are excellent jumpers and fast runners.
 





The Tarantula

The tarantula is one of the most common species of spiders and are found all over the globe. These creatures may look intimidating but no tarantula is known to have a bite that is deadly to humans.
 





Mata mata turtle

The Mata Mata turtle uses its ugly appearance to protect itself from prey. It's shell and head look like tree bark and it remains motionless when in water