சமிபத்தில் ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு கொடுக்கபட்ட இட ஒதுக்கீட்டை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது... இதற்காக பெரும் பிரச்சனை ஆந்திராவில் நடந்து கொண்டுள்ளது... தேவையில்லாத ஒன்று, அரசியல்வாதிகள் செய்யும் காரியங்களால் நமது நாடு இன்னும் இப்படியே இருக்கிறது.
எனது எண்ணம் எல்லாம்... இட ஒதுக்கீடே தேவையா என்பதை பற்றிதான், இது மதம் சார்ந்து சொல்ல வில்லை... மொத்தமாக நமது நாட்டில் மற்றவர்களுக்கு கொடுக்கபடும் இட ஒதுக்கீடு பற்றிதான்...
ஆரம்ப கல்வியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த ஒதுக்கீடு இறுதி வரை தொடந்தே கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் ஏழையாக இருந்தவர்களுக்கு எந்தவிதமான சலுகைகள் கிடைக்கபெறாத மக்களுக்கு கொடுக்கபட்டது இட ஒதுக்கீடு, பெற்றவர்கள் மிகவும் நன்றாய் இருக்க, மற்றவர்கள் இன்றும் இடமில்லாமல் அவதியுருகிறார்கள்.
ஏழை என்பது எல்லா ஜாதி மதத்திலும்தான் உள்ளது, ஏன் ஒருசிலருக்கு மட்டும் பாகுபாடு??? ஆரம்பத்தில் கொடுக்கபட்டது ஏதோ சரின்னால்லும், இன்னும் அதை தொடர்ந்து கொண்டிருப்பது என்ன நியாயம்? 60 வருங்களுக்கு முன்பிருந்த நிலமையா இன்றும் இருக்கிறது? மேலும் இந்த சலுகைகளை பெற்றவர்களே மேலும் மேலும் சலுகைக்காக முயல்கிறார்கள். இதில் ஏழை பணக்காரன் என்று வித்யாசம் இல்லை...
தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு கொடுப்பட்ட 3.5 சதவீத இட ஒதுக்கீடை நான் மனதலவில் ஒதுக்கியவன். இங்கு கொடுப்படும் 3.5 சதவீத இட ஒதுக்கீடை யார் யாரெல்லாம் அனுபவிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள், கண்டிப்பாக அவ்வசதியை பெற்றவர்களே மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள், ஏனெனில் இது மனித இயல்பு. தமிழ்நாட்டில் பிறந்து பிரபலமாக இருக்கும் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு மூலம் அந்த பலனை அடைந்திருப்பார்களா என்றால் கண்டிப்பா இருக்காது.
நன்கு படிப்பவன் ஒரு பள்ளியில் சீட் கிடைக்காமல், ஒன்னுமே தெரியாமல் ஜஸ்ட் இட ஒதுக்கீடு மூலம் உள் வருபவர்கள் கடைசியில் என்ன பெருசா சாதிச்சிட போறாங்க? ஒரு அரசாங்க வேலையில் சேர்ந்து மற்றவர்களை எரிச்சலா பேசுவதை தவிர?
அனைவரும் நமது நாட்டின் குடிமக்கள், ஒருவருக்கு சில சலுகைகளும் மற்றவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காமல் செய்வதுமா நீதீ? இடமில்லா ஒதுக்கீடும் செய்வது ஏனோ? அனைவரும் சமம், யாருக்கும் எந்த பாகுபாடும் கிடையாது என்று கூறும் அரசாங்கமே இப்படி இன்னும் இட ஒதுக்கீட்டை விட்டு வைத்திருப்பது கொடுமைதான், இட ஒதுக்கீடு மூலம் என்ன சரியாக சாதிக்க முடிந்தது? ஏழைகள் எண்ணிக்கையை குறைக்க முடிந்ததா? சரி ஓரளவுக்கு நன்மை இருந்தாலும், இன்னும் இது தேவையா? நமது நாட்டில் இரவு உணவு இல்லாமல் உறங்குபவர்கள் எவ்வளவோ பேர் இருக்க... ரோட்டிலும் காட்டிலும் வசிப்பவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்.. உண்மையான ஒதுக்கீடு என்றால் இவர்களுக்கு செய்யவேண்டும்... மீண்டும் மீண்டும் கொடுத்தவர்களுக்கே கொடுப்போம் என்றால் என்ன தீர்வு?
யாருக்கும் எதிலும் இட ஒதுக்கீடே தேவையில்லை, ஜாதிக்கு மதத்திற்கு என்று அனைத்து இட ஒதுக்கீட்டையும் தடைசெய்யவேண்டும்.
நன்கு படிப்பவர்களுக்கு மட்டும் கல்வியும், நன்கு வேலை பார்க்க தெரிந்தவர்களுக்கு மட்டும் வேலையும் என்று மாறவேண்டும்.
7 comments:
http://www.tamilveli.com/mk2009/?p=29
//அனைவரும் நமது நாட்டின் குடிமக்கள், ஒருவருக்கு சில சலுகைகளும் மற்றவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காமல் செய்வதுமா நீதீ?//
சாதி, மத வேறுபாடு இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. மத நல்லிணக்கம், சமத்துவம் வேண்டும் என்ற போதனைகளில் சாதிப் பேய்கள் தொடந்தும் வளர்ந்தும் வருகின்றன.
மக்கள் மனதில் அடிப்படையில் சாதிப் பற்று இருக்கிறது. இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாவிட்டால் அவன் அவன் சாதிக்கு, மதத்திற்கு உரியவர்களை எப்பாடு பட்டேனும் கொண்டு வரத்தான் முயற்சி செய்வார்கள்.
நீங்கள் சொல்வது போன்று இட ஒதுக்கீட்டில் ஏற்கனவே பலன் பெற்றவர் மீண்டும் வாரிசுகளுக்கும் அதை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் அது பரவலான எதிர்பார்ப்பும் இல்லை.
தலித்துகளில், பிற்பட்டவர்களில் படித்தவர்களின் எண்ணிக்கையும், பொருளாதார உயர்வு பெற்றவர்களின் எண்ணிக்கையும் போதிய அளவு இல்லை. முன்பு சுத்தமாக கிடையாது.
உங்களுக்கு தெரிந்தவர்களை மட்டுமே வைத்து ஒரு கருத்தைச் சொல்வது உங்கள் அளவில் உண்மையாக இருக்கலாம், ஆனால் பொதுவான உண்மையாகாது.
ஒரு குடும்பத்தில் ஒரே ஒருவன் சாப்ட்வேரில் மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தாலும் அது அவனுடைய குடும்பத்திற்கு மட்டுமே உடையது, அண்ணன் தம்பிகளுக்கோ, வேறு உறவினர்களுக்கோ என பெற்றோர்களின் பொருளாதாரத்தை அது வளர்த்துவிடாது.
அள்ளிக் கொடுக்கிறார்கள் நடுத்தர சமூகம், தாழ்த்தப்பட்டவர்களும் பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டார்கள் என்பதெல்லாம் வெறும் தோற்றமும் கட்டமைப்பு மட்டுமே.
தனிக் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றம் கணக்கில் கொண்டு அவர்கள் முன்னேறி இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு தடைசெய்யலாம், அதன் மூலம் அதே வகுப்பினரில் ஏழையாக உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மற்றபடி இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிப்பதாலோ, பொது இடங்களுக்கான விழுக்காடுகளை மிகுதி ஆக்குவதாலோ எந்த பலனும் இல்லை.
என்னைக் கேட்டால் கல்வியில் பணக்காரர்கள் எவராக இருந்தாலும் அவர்களிடம் கட்டணத்துடன் கல்வி அளிப்பது தான் இதற்கு தீர்வு, குறைந்த கட்டணம் / இலவச கல்வியாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி அளிப்பது தீர்வாக அமையும்.
அப்படியும் எவனும் முறையான வருமான சான்றிதழ் தருவார்களா என்பது ஐயமே. நடைமுறையில் சில சிக்கல்கள் உண்டு, ஆனால் அடிப்படை இட ஒதுக்கீடே தவறு என்பது சரியான கருத்து ஆகாது. அதைப் பொது புத்தி, அல்லது தாம் முன்னேறி விட்டதால் அனைவரும் அப்படியே என்று நினைக்கும் சிந்தனைப் போக்கு ஆகும்.
//ன், இட ஒதுக்கீடு மூலம் என்ன சரியாக சாதிக்க முடிந்தது? ஏழைகள் எண்ணிக்கையை குறைக்க முடிந்ததா//
இடப்பங்கீடு என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைய அல்ல
//நன்கு படிப்பவன் ஒரு பள்ளியில் சீட் கிடைக்காமல், ஒன்னுமே தெரியாமல் ஜஸ்ட் இட ஒதுக்கீடு மூலம் உள் வருபவர்கள் கடைசியில் என்ன பெருசா சாதிச்சிட போறாங்க? ஒரு அரசாங்க வேலையில் சேர்ந்து மற்றவர்களை எரிச்சலா பேசுவதை தவிர?//
தமிழகத்தில் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு ஒவ்வொரு பிரிவிற்கும் தேவைப்படும் குறைந்த பட்ச மதிப்பெண்கள் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்
//ஆரம்பத்தில் மிகவும் ஏழையாக இருந்தவர்களுக்கு எந்தவிதமான சலுகைகள் கிடைக்கபெறாத மக்களுக்கு கொடுக்கபட்டது இட ஒதுக்கீடு, பெற்றவர்கள் மிகவும் நன்றாய் இருக்க, மற்றவர்கள் இன்றும் இடமில்லாமல் அவதியுருகிறார்கள்.
//
தவறான தகவல்
ஏழைகளுக்கு தேவை உதவித்தொகை.
இடப்பங்கீடு என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்ய அல்ல
இடப்பங்கீடு என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்ய
இது குறித்த விரிவான இடுகைகள் இங்கு உள்ளன
படித்து பார்த்து உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
60 ஆண்டு காலம் நடைமுறையில் இருந்தும் இட ஒதுக்கீட்டினால் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய முடியவில்லை என்றால் பிரச்சனையை எங்கே? சமூக ஏற்றத்தாழ்வுகளை இட ஒதுக்கீட்டினால் களைய முடியாது என்று வைத்துக்கொள்ளலாமா? இல்லையென்றால் எத்தனை நூற்றாண்டுகள் இட ஒதுக்கீடு இருந்தால் சமூக ஏற்றத் தாழ்வுகளை களைய முடியும்?
நமது நண்பர் மஸ்தான் சொல்வது மிகவும் சரி. நானும் பல நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்துக்கு விட்டார் பிள்ளைகளை பார்றுள்ளேன். மிகவும் நன்றாக படிபவற்கள், அந்த பள்ளியில் முதல் மதிபென் பெறுபவர்கள் ஆனால் அவர்களோ மிகவும் வசதி இல்லாதவர்கள். முற்படுத பட்ட இன்னதை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு விரும்பும் பிரிவில் கல்லூரிகளில் சேர முடியவில்லை. ஆனால் அவர்கள் வகுப்பில் படித்த மிகவும் வசதிபடைத்த பிற்படுத்த பட்ட இன்னதை சேர்ந்தவர்கள் மிகவும் எளிமையாக அந்த பிரிவில் செர்ந்துவிண்டிகின்றனர். இது என்ன ஞாயம்.
Post a Comment
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
தமிழில் எழுத!
வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.