இது சிரிப்பதற்காக மட்டுமே... ஜஸ்ட் என்ஜாய் பன்னுங்க, ரியலா நடக்கனும்னு எதிர்பார்க்க கூடாது, ஆமா!
நமது கேப்டன் (இது வேற, வேற கேப்டன்) தலைமையில ஆட்களை தேர்ந்து எடுக்கிறார்கள்...
- விஜயகாந்த்
- ரஜினி
- கமல்
- டாக்டர் விஜய்
- அஜித்
சினிமா ஆட்கள் கலந்து கொள்ளும் நியூஸ் தெரிந்தவுடன், பொன்னகரம் தேர்தல் ரிசல்ட்டை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சினிமாக்காவே மட்டும் உள்ள கலைஞர் கருணாநிதியும் நான் இதை பார்த்தே தீர்வேன் என்று ஒத்த சேர்ல நின்னு(?) வந்துடுறாரு.
துரதிர்ஷ்டவசமாக இவர்கள் மோதும் முதல் ஆட்டமே ராஜஸ்தான் ராயலோடு அமைந்து விடுகிறது... டாஸில் வென்ற ராஜஸ்தான் ராயலே பவுலிங் செய்கிறது... சென்னை வேஸ்ட் கிங் அணியிக்காக டோனியும் விஜயகாந்தும் ஓபனிங்கா போறாங்க சினிமா ஆட்கள் விளையாடுகிறார்கள் என்பதை அறிந்த பாரதிராஜா அண்ட் குருப்ஸ், அவர்களையும் ஆட்டத்தில் சேர்க்கவில்லை என்கிற கடுப்பில் எப்படியாவது இதை தடுக்க வேண்டும் என்கிற நோக்கில் ஆவேசமாக வருகிறார்
பிரஸ் : எதுக்கு சார் எதிர்க்கிறீங்க?
பாரதிராஜா: அஜித் ஒரு மலையாளி அது எப்படி நாங்க தமிழ்நாட்டுல விளையாட விடுவோம்...
பிரஸ்: சார் விளையாடுற மத்தவங்க வேற நாட்டை சேர்ந்தவங்களும் இருக்காங்க அதுக்கு நீங்க ஒன்னும் சொல்லை...
கூட இருந்த சீமான்: அது அப்படிதான் நாங்க அப்ப்டிதான் சொல்வோம்.. நீ எப்படி இலங்கையை சேர்ந்தவன சேர்த்தே???
பிரஸ்: ஏன் சார் இதை பெரிய நாட்டு பிரச்சனை ஆக்கிரூங்க???
பாரதிராஜா: ஆஅஅ... என்கிட்டையே கேள்வி கேக்கிருயா... (ஓவரா டென்சன் ஆயிட்டார்)
விஜயகாந்து ஓடி வந்து சமாதானப்படுத்துகிறார், சமாதானமாகி பாரதிராஜா அண்ட் குருப் கிரிக்கெட் பாக்க உக்காந்திடுறாங்க.
சும்மாவே, மக்கள் கூட்டத்திற்க்கு குறை இருக்காது, சினிமாவை சேர்ந்தவர்கள் விளையாடுகிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம், அவ்வள்வு கூட்டம்... எக்கச்சக்க கூட்டம்...
விஜயகாந்திற்கு அதிக கூட்டத்தை பாத்தவுடன் குஷி ஆயிட்டார், விளையாட வந்ததை மறந்து, கத்தி பேச ஆரம்புச்சுட்டார்
விஜயகாந்த்: ஆங்! ஐபில் மொத்தம் 8 அணி இருக்கு, ஆனா மாறி மாறி ஒவ்வொரு அணிகிட்டயும் தோத்துக்கிட்டு இருக்குறது சென்னை வேஸ்ட் கிங், இதுக்குகெல்லாம் காரணம் கருணாநிதிதான், இந்த திமுக போச்சுன்னா எல்லா சரியாயிடும், இப்படிசொல்லிகிட்டு இருக்கும் போதே, பவுலர் பவுலிங் செஞ்சு கரக்ட்டா ஸ்டம்ல பட்டு அவுட் ஆயுடுறாரு... உடனே டென்சன் ஆன விஜயகாந்த், இதுக்கும் காரணம் கருணாநிதிதான் நான் சும்மா விடவே மாட்டேன் கத்திட்டு போயிட்டார்.
அடுத்தது கமல்: நேர அம்பயர்ட்ட போறாரு... ம்ம்ம்ம்... நான் ஒரு காமன் மேன், நீங்க என்னை பேர் சொல்லி கூப்பிடலாம்னு நினைக்கலாம், பட் நான் ஒரு காமன் பேனா சீ மேனா இருக்கேன், நான் இங்க வந்த வேஸ்ட்டுன்னு நினைக்கல... வேஸ்ட் கிங்க மாத்த வந்தது என்னை வேஸ்ட்டுன்னு நினைக்க கூடாது, நான் விளையாட விரும்பலை எல்லாரும் ஆசைப்பட்டாங்கன்னுதான் வந்தேன், நான் போறேன் ஆஅஅஅஅஅஅஅ அபிராமி அபிராமன்னு அழுதுக்கிட்டு உள்ளே ஓடிட்டார்.
அடுத்து வருகிறார்... டாக்டர் விஜய், எதுவும் பேசாம உம்முன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு பேட்டை புடிக்கிறார்... பால் போட்டவுடன் நல்லா ஓங்கி அடுச்சுடுறார் ஆச்சிரியமா சிக்ஸ் போயிடுச்சு... 6 ரன் மட்டும் கிடச்சவுடன் உடனே டாக்டர் விஜய் அம்பயர்கிட்ட போயி முதல்ல பவுண்ட்ரி லைனை தாண்டி போச்சு அதனால 4 ரன்னும், பறந்துபோயி விழுந்தது அதனாலே 6 ரன்னும் இப்படி மொத்தம் மொத்தம் மொத்தம்10 கொடுக்கனும் சொல்லுறாரு.. அம்பியர் டென்சன் ஆகி விஜயை சமாதனப்படுத்த ஆரம்பிக்கிறார்... உடனே விஜய் சமாதானமா போறதுக்கு நான் ஒன்னும் புறா இல்லைடா, சுறாடான்னு கிளம்பி போயிடுறார்.
அடுத்து அஜித் வருகிறார், வரும்போதே பிரஸ்காரங்க கேள்வி கேக்க ஆரம்பிக்க, மைக்கை பாத்தவுடன் அஜித்துக்கு உடம்புலாம் அப்படியே நடுங்க ஆரம்புச்சுடுது, அப்படியே கை கால் நடுங்க.. யாருமே என்னை மிரட்டல நானாத்தான் இந்த விளையாட்டுல கலந்துக்கிறேன்....யாருமே என்னை மிரட்டல மிரட்டலஅப்படீன்ன்னு புலம்ப ஆரம்புச்சுட்டார்... இவர் வேலைக்கு ஆகமாட்டாருன்னு உடனே உள்ளே வர சொன்னவுடனே... இல்லை நான் போறேன் போறேன்னு ஸ்டேடியம் விட்டே போயிடுறாரு.
நெக்ஸ்ட் வருகிறார் சூப்பர் ஸ்டார்... ஹஹான்னு சிரிச்சுக்கிட்டே உள்ளே வருகிறார், பேட்டை கொடுத்தவுடன் டக்குன்னு பேட்டை கீழே போட்டுறாரு, மறுபடியும் எடுத்து கொடுக்க அப்பவும் பேட்டை கீழே போட்டுறாரு... என்னடான்னு யோசுச்சு பாத்தா பேட் வெயிட்டை சூப்பர் ஸ்டாரால தூக்க முடியலை... :( பேட்டையே தூக்க முடியாத இவரு எப்படி விளையாடுவாருன்னு அம்பயர் ரஜினியை விளையாட அனுமதிக்கலை... உடனே... கண்ணா, பேட்டு புடுச்சவன் எல்லாம் அடிக்க மாட்டான், அடிக்கிறவன் எல்லாம் பேட்டு புடிக்கமாட்டான்னு ஒரு லூசுதனமா தத்துவம் சொல்லிவிட்டு, மனசுக்குள் சொல்லிகொள்கிறார் இமயமலைல இருந்தவன கூட்டி வந்து கொல்றாங்களே ஆண்டவா! என்று பெருமூச்சு விடுகிறார்.
எங்களையும் சேர்த்து கொள்ளுங்கள், நாங்களும் மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளோம் என்று குரல் வர திரும்பிபார்த்தால், ரஞ்சிதானந்தா தனது சேவை நாயகிவுடன் உள்ளே வருகிறார்... ஸ்டேடியத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆசி வழங்கி கொண்டு, கையை உயர்த்தி வருகிறார்... ரஞ்சிதானந்தா வருவதை பார்த்த அனைவரும் அப்படியே ஸ்டண்ட் ஆகிவிட்டார்கள்... அவரை பார்த்த மக்களும் ஸ்டார்களும் கொஞ்சம் கொஞ்சமா சூடாகிறார்கள்... அவர் அங்கு இருந்தால் ஏதாவது தப்பாக (?) நடந்து விடும் என்பதை அறிந்த டோனி, ரஞ்சிதானந்த பக்கத்தில் சென்று... "சாமி பாக்கி இருக்குற சிடிலாம் எப்ப வெளிவரும்" அப்ப்டின்னு கேக்குறாரு.... இவர் இப்பவாவது ஏதாவது செய்வாருன்னு எப்பவும் போல மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்...
6 comments:
Nalla Karpanai!!! :-)
hahaha... nallarukku
please remove says about Rajini
ஹா ஹா ஹா
நல்ல காமெடி போங்க
haaaaahaahaaaaaaaaaaaaaaaaaaaaa
ஹா ஹா ஹா
நல்ல காமெடி
Post a Comment
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
தமிழில் எழுத!
வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.