நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.
ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
[] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
- ரேசன் கார்டு
- குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
- தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
- மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
- கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
- வாக்காளர் அடையாள அட்டை
- வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
- துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
- 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
- பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
- கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்
- 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
- உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
- பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.
அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு
மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.
சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)
39 comments:
அருமை...
மிக உபயோகமான தகவல்
வாழ்த்துக்கள்
உபயோகமான தகவல். நன்றி
Thanks for your useful information.
nalla thagaval, keep it up
உபயோகமான தகவல் நண்பரே.. மிகவும் நன்றி!
மிக்க நன்றி. மேலும் தொடரட்டும் உங்கள் நற்பணி.
குட் ஜாப்!
/ஹாய், ஒரு ஓட்டாவது போட்டுட்டு போகலாமே
//
பின்னே! நிறைய ஓட்டு வேற போட முடியுமா?
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்...
மிகவும் உதவிகரமான பதிவு....வாழ்த்துக்கள்,,,
பகிர்வுக்கு நன்றி
மிக உபயோகமான தகவல்
தேவையான பதிவு... ஆனால் ECNR கு இப்போது பத்தாம் வகுப்பு போதும்
பிறந்த & சொந்த மாநிலம் வேறாக இருப்பின், தற்போது வேலைக்காக இருக்கும் மாநிலத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியுமா ? இப்போது இருக்கும் மாநிலத்தில் இருக்கும் முகவரியில் 2 மாதங்களே வசத்திருக்கும்பட்சத்தில்... ??
இந்த தகவல் தெரிந்தால் உதவுங்கள்.. நன்றி :-)
அருமை அருமை நண்பரே ..நான் 2 மாதமாக பாஸ்போர்ட் விண்ணபிக்க முயற்சி செய்து கொண்டுருக்கிரின் .இப்போது உங்களால்
புதிய பாஸ்போர்ட் பெரபோகிறேய்ன் ...மிக்க நன்றி அருமை
இப்படிக்கு
பரணி
வந்த, ஓட்டு போட்ட, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. :)
@விந்தைமனிதன், மாற்றி கொள்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றி.
@யாத்ரீகன், முயற்ச்சிக்கலாம் என்று நினைக்கிறேன்... ஆனால் குறைந்தது 6 மாதம் தங்கிருக்க வேண்டும்.
நன்றி பரணி, உதவ முடிந்ததில் மிக்க சந்தோசம்.
விரைவில் பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.
very use full thanks for you
Very use full information thank you. One doubt , how will proof date of birth. I born before 1989 and my educational certificates are missed. I am not interested to apply duplicate certificates. But I have ration card, voter id and Pan. Kindly give the details
@R.Ravichandran,
affidavit is enough, you can get it from notary public, please consider any notary public lawyer.
Thanks karthik.
நண்பா......ஆன்லைனில் பதிவு செய்து விட்டேன்...மே மாதம் முதல் வாரத்தில் எனக்கு Appointment கொடுத்து உள்ளார்கள் ...மேலும் தொடரட்டும் உங்கள் நற்பணி........மேலும் ஆவலுடன்
இப்போதைக்கு நன்றியுடன்,
பரணி
ரொம்ப தேவையான தகவல்ங்க மிக்க நன்றி
இளமுருகன்
நைஜீரியா
எனக்கு மிகவும் தேவையான தருணத்தில், தங்களின் பகிர்வு கிடைத்துள்ளது. மிக்க நன்றி.
Thank you for your reply.best wishes
மிக்கவும் பயனுள்ள தகவல்கள்!
நன்றி நண்பரே!
நல்ல பதிவு!
நான் கத்தாரில் இருக்கின்றேன். மனைவி, மகன், மகள் ஊரில் உள்ளனர், அவர்களுக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும்..
*ரேஷன் கார்டில் குழந்தைகள் பெயர் அதிகப்படியாக சேர்க்கப்பட்டுள்ளது
* குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் உள்ளது.
* மனைவியிடம் பள்ளிச் சான்றிதழ், வாக்காளர் அடைய அட்டை உள்ளது.
* என் பெயரில் வீட்டு வரி, மின் வரி ரசிது உள்ளது.
* திருமணச் சான்றிதழ் இல்லை
வேறு என்ன தேவைப்படும்? குழந்தைகளுக்கும், மனைவிக்கும் பாஸ்போர்ட் எடுக்க என்ன செய்ய வேண்டும்?
தனித் தனிப் பாஸ்போர்ட்டா?
fist of all thanks for the useful info, i have a question. I am going to apply passport for my wife and she is 17 years and 8 months old, is it permissible to add the spouse name? please advice
@தமிழ் பிரியன், வருந்துகிறேன், நான் உங்களின் பின்னூட்டத்தை பார்க்கவில்லை. :( சாரி
தனித் தனிப் பாஸ்போர்ட் எடுப்பதுதான் மிகவும் நல்லது, தாங்களிடம் இருக்கும் சான்றிதல்களே போதுமானது. உங்கள் மனைவிக்கு இது முதல் பாஸ்போர்ட் என்பதால் திருமண சான்றிதல் தேவையில்லை.
Hi Anonymous,
as per rules min age of marriage should be 18 for girl, so you cant add her in your passport, let she complete 18 years of old. just 4 months to wait... :)
பதிலுக்கு நன்றி! நான் வெளிநாட்டில் இருப்பதால் குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் எடுக்க, இங்கிருந்து அப்டவிட் ஏதும் தேவையா?.. இதையும் கொஞ்சம் விசாரித்து சொல்லி விடுங்கள்.. நன்றி!
யாதாவது அல்ல. மிகவும் நல்ல கட்டுரை . அருமை.
மிக்கவும் பயனுள்ள தகவல்கள்!
என்னை மன்னிக்கவும்..
உங்கள் அனுமதி இல்லாமல்..
நான் எனது வலைப்பூவில் ..
வெளியிட்டு விட்டேன்.
மன்னிப்பீர்களா...
அன்புடன்..பாசுதீன்.
உபயோகமான தகவல் நண்பரே.. மிகவும் நன்றி...மேலும் தொடரட்டும் உங்கள் நற்பணி...
நல்ல தகவல்...,
அத்தியாவசிய தகவலைத் தந்தவங்களுக்கு மிக்க நன்றி...
உங்களின் நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்கள்...
by AC
மிகவும் உபயோகமான தகவல். இந்த தகவல் ஆறு மாதத்திற்கு முன்பே தெரிந்து இருந்தால்
நான் ரொம்ப அலையாமல் எடுத்திருப்பேன். இருந்தாலும் பரவாயில்லை, இனி பாஸ்போர்ட்
எடுப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மிக்க நன்றி.
http://www.sengiskhanonline.com/2010/11/blog-post_4511.html
Post a Comment
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
தமிழில் எழுத!
வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.