Jun 16, 2010

ரயில்வேயில் நடக்கும் கொள்ளை

சிறுவயதில் அனைவருக்கும் இருக்கும் கனவுதான், அதாவது ரயிலில் பயணம் செய்வது, ரயில் பயணம் செய்வது மட்டுமல்ல, அதை பார்ப்பது கூட மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாகவே உள்ளது. எனக்கு ரயில் பயணம் செய்வது அவ்வளவு சந்தோசம், அதனுடைய கூஊஊ என்று கூவிக்கொண்டு போகும் சப்தமும், பர்த் கிடைத்து படுக்கும் போது அதன் தாலாட்டு போல் அமைவது... சே, இவை எல்லாம் அனுபவித்தவர்களுக்குதான்...

நடுத்தரவர்க்கம் மட்டுமல்லாது அனைவரும் விரும்பி பயணம் செய்வதும், விரும்பவதும் ரயிலில்தான், ஏனென்றால் அதனின் வேகமும், அனைத்து வசதிகளும்... பயணம் செய்து கொண்டிருக்கும் இப்படி கிடைக்கும் வசதிகள்தான் அனைவரையும் ரயிலை மிகவும் விரும்ப வைக்கின்றன... மிக முக்கியமாக தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல் விலையில் உயராமல் இருக்கும் ரயில் கட்டணத்தின் விலைதான் நடுத்தரவர்க்கம் மற்றும் ஏழை மக்கள் மிக விரும்ப ஒரு காரணம் ஆகும்!



சமிபகாலமாக, ரயிலில் பயணம் செய்வது கடினமான ஒன்றாய் ஆகிவிட்டது, அதுவும் மிகவும் கடினமான ஒன்றாய் ஆகிவிட்டது, ஜெனரல் கம்பார்ட்மெண்ட் எனப்படும் பொதுப்பெட்டி ஒரு ரயிலில் 4 தான் அதிக பட்சமாக இருக்கிறது, அந்த 4 பெட்டிகளிலும் அதிகபட்சமாக 300 நபர்கள் முதல் 350 நபர்கள் வரை இருக்கலாம், ஆனால் இப்போது என்ன நடக்கிறது ஒரு பெட்டியிலே 400 நபர்கள் வரை இருக்கிறார்கள்... இதெல்லாம் சாதாரன நாட்களில்தான் ஏதாவது திருவிழா நேரம் என்றால் தொலைந்தோம்... படியில் தொங்குவதற்கு கூட இடம் இருக்காது, அவ்வளவு கூட்டமாக இருக்கும்.



இரண்டாம் படுக்கை வசதி என்பது 3 மாதங்களுக்கு முன்பு புக் செய்தால் மட்டுமே நன்றாய் படுத்து கொண்டு போகலாம், இல்லையென்றால் கொடுமைதான். புக்கிங் ஏஜெண்ட் எப்பொழுது நியமித்தார்களோ, அப்போது ரிசர்வரேசன் என்பது அதிக பணம் கொடுப்பவர்களுக்கு என்பதாகிவிட்டது... ஒரு வாரத்தில் எங்காவது பயணம் போகவேண்டியது இருந்து, ரயில் போய் ரிசர்வ் செய்து விடுங்கள் பார்ப்போம், கண்டிப்பா கிடைக்காது, அதே நேரத்தில் ஏதாவது ஒரு ரயில் புக்கிங் ஏஜெண்ட் பார்த்து கூட 200 அல்லது அதனின் கூடவோ கொடுத்தால் நீங்கள் கண்டிப்பாக பயணம் செய்வது உறுதி. எப்படி அவர்களுக்கு இதனை கொடுக்க முடிகிறது, எல்லாம் ரயில்வேயில் தவறுகள்தான்... ரிசர்வ் செய்யும் ஒருவர், ஒரே நேரத்தில் 6 பேர்களை ரிசர்வ் செய்யலாம், ஆனால் ஒருவர் மட்டும் ஐடி கார்ட் காமித்தால் போதும், புக்கிங் ஏஜெண்ட் ஏதாவது பெயரிலும் வயசிலும் டிக்கட்டை புக் செய்து விட்டு மற்றவர்களுக்கு வழி இல்லாமல் செய்து விடுகிறார்கள்.

உங்களுக்கு மிகவும் அவசரமாய் போக வேண்டுமா???
தட்கல் கூட கிடைக்க வில்லையா???
புக்கிங் ஏஜெண்ட் கூட உதவ வில்லையா???

கவலை வேண்டாம், சாதாரன டிக்கட் எடுத்து கொண்டு ரிசர்வ் கம்பார்ட்மண்டில் ஏறி டிடியை (டிக்கட் பரிசோதிப்பர்வரை) கொஞ்சம் கவனித்தால் போதும்... எப்படிதான் இவர்களுக்கு மட்டும் சீட் இருக்குமோ? பணம் தின்னும் கழுகாக மாறி வருகிறார்கள். ஒரு சிலபேர் நல்லவர்களாய் இருக்கலாம், ஆனால் மிக அதிகமானோர் கவனிப்புக்கு மயங்குறவர்களே... பொதுவாக RAC 1 என்று இருந்த்தால் ஏதாவது ஒரு டிக்கட் கேன்சல் ஆகிவிட்டது என்றால் அவர்களுக்கு ஒதுக்க வேண்டும், அதுதான் நியாயமும்.. ஆனால் TTE அப்ப்டி செய்வதில்லை, பணம் இருக்கா, கண்டிப்பா சீட் கிடைக்கும், இல்லையா சீட்ல இருக்கும் முனை கூட கிடைக்காது.

இப்படி பட்ட கொள்ளைகள் ரயில்வேயில் நடந்து வருகிறது... யாரும் இதற்கு எதிராக எந்த விதமான ஆக்சனும் எடுக்கவில்லை.


பல நாடுகளில் வேலையை செய்ய வேண்டாம் என்றால்தான் லஞ்சம்
ஆனால், இந்தியாவில்தான் வேலையை செய்ய லஞ்சம்.

இந்தியன் படத்தில் வரும் வசனம்

Jun 9, 2010

என்ன உலகம் இது???

இந்த படத்திற்கு விளக்கம் ஏதுவும் கொடுக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்... இப்படத்தை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது, என்ன உலகம்டா இது என்றுதான்... உங்களுக்கும் அந்த நினைப்பு வரும்... :)


Jun 6, 2010

புகையில்லா சென்னை

சமிபகாலமாக சென்னைவாசிகள் எங்கு பார்த்தாலும் "SMOKE FREE CHENNAI" என்ற வாசகம் காணப்படுகிறது.... ஸ்மோக் ஃபிரி என்பது சரிதான், ஆனால் சிகரட்டில் மட்டும்தான புகை காணப்படுகிறதா???



மாநகரங்களில் வசிப்பவர்கள் இழக்கவேண்டிய ஒன்று ஆரோக்கியம், ஆமாம் சென்னையில் ஆரோக்கியத்தை இழந்துதான் பணத்தை(?) சேர்த்துக் கொண்டிருக்கிறோம். சிகரட் மட்டும் மட்டும் புகை விடுது என்பவர்கள்...














பஸ்கள், லாரிகள் வெளியுடும் கரும்புகை


















சென்னையில் ஓடும் கார், ஆட்டோக்களின் புகை




















இண்டஸ்ட்ரீஸ் வெளியிடும் புகை






















பண்டிகையின் போது வெளியும் புகை


இப்படி புகையோ புகை, கண்டிப்பா இவை எல்லாம் நமக்கு பகைதான், ஆனால் எதிர்ப்பவர்கள் ஒன்றை மட்டுமே ஏன் எதிர்க்க வேண்டும்? புகையில்லா சென்னை என்பது, எங்கும் புகை இல்லாமல் இருப்பதை குறிக்கும் அல்லவா? சிகரட்டில் வெளிப்படும் புகை ஒன்றும் ஓசன் படலத்தை ஓட்டை போடுவதில்லை, புகைப்பவர்களின் இதயத்தில் ஓட்டை போடுவதோடு சரி, ஆனால், மேற்கண்ட வழிகளில் வெளிப்படும் புகை ஓசன் படலத்தை அல்லவா ஓட்டை போடுகிறது, இதனால் என்ன பிரச்சனை என்பவர்கள் வருங்கால சந்ததிக்காக நாம் சேர்த்து வைப்பது கொடிய நோய் நொடிகள்தான், போராடுபவர்கள் இதற்கும் சேர்ந்து போராடினால் மிகவும் நன்றாய் இருக்கும்!

நமது நாட்டில் அரசாங்காத்தின் பல்வேறு தூண்கள் பேருக்காகவே இருக்கின்றன... அதில் ஒன்றுதான், "மாசு கட்டுபாட்டு வாரியம்"... இதன் செயல்பாடுகளை யாராவது எடுத்து சொன்னால் தேவலை, பேருதான் "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஆனால் செயல்பாடுகளோ "மாசு கட்டுபடுத்தா வாரியம், உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டில் நமது நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா? 123வது இடம். அவ்வளவு சுகாதாரமாக நமது நாட்டை வைத்துள்ளோம். "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஒழுங்காகவே செயல்பட்டு இப்படி புகை வெளியும் பஸ், காரு, ஆட்டோ போன்றவற்றை தடை செய்து, கொடுரமாக புகை வெளியிடும் இண்டஸ்ட்ரீஸ் கட்டுபாட்டில் கொண்டு வந்தால் மிகவும் நல்லது.


கடைசியா இரண்டு தகவல்

  • சிக்ரட் குடிப்க்கும் ஆண்களுக்க் ஆண்மை குறைவு ஏற்படுமாம், பெண்களாய் இருந்தால் பெண் தன்மையே பரிபோகுமாம்.
  • சிக்ரட் குடிப்பவர்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தால் அது குழந்தையின் உயிரை கூட பரித்து விடுமாம்,சமிபத்தில் வந்த தந்தியில் இருந்த தகவல்.