Jun 28, 2011

தியாகராய நகர்

பல நாட்கள் ஆகிவிட்டது பதிவு எழுதி... நம்ம என்னத்த எழுதி அப்படீன்னு விட்டுறது; ஒரு சோம்பேறித்தனம் தான், வேறேன்ன

சமிபத்தில் சென்னை டி நகருக்கு ஷாப்பிங் செய்வதற்காக சென்றிருந்தேன், என்ன ஒரு கூட்டம், என்ன ஒரு கூட்டம், எங்கிருத்துதான் இந்த மக்கள் வருகின்றனோ??? எப்பவுமே இப்படிதான் போலெ, அப்படி ஒரு கூட்டம். ரங்கனாதன் தெருவில் ஒவ்வொரு அடியாகத்தான் நடக்க வேண்டிததிருந்தது, கொஞ்சம் வேகம நடக்கவே முடியாது... எப்படியும் யாரோடவாவது மோதிகொண்டே செல்ல வேண்டும் அவ்வளவு மக்கள் கூட்டம்.

ரங்கனாதன் தெருவில் இரு பக்கமும் இருக்கும் கடைகள் பாதி சாலையை அடைத்தார்கள் என்றால், சாலையோரம் வியாபரம் செய்வபவர்கள் மீதி இடத்தையும் ஆக்கிறமிப்பு செஞ்சு மக்கள் நடக்க வழி இல்லாமல் செஞ்சுடுறாங்க...

மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் இருந்து,ரங்கனாதன் தெரு வழியாக உஸ்மான் சாலை அடைய குறைந்தது 10 நிமிடம் ஆகும்.






அவ்வளவு கூட்ட்ட்டமா இருக்கு.

இவ்வளவு மக்கள் வந்து செல்கின்றனரே? ஏதாவது நல்ல உணவு விடுதி இருக்கா? சரவண பவன் இருக்கு, அங்கு போய் சாப்பிடனும்னா, குறைந்தது 30 நிமிடம் பொறுக்கனும்... வேறு நல்ல ரெஸ்டாரன்ட்?

ஹும்ம்ம்ம்... சரவணபவனில் சாப்பிட 61 அல்லது 75 ருபாய், இதே ஏசி என்றால் 150, 180 ருபாய் உஸ்ஸ்ஸ்ஸ்... ஏன்தான் இவ்வளவு விலையோ? எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை என்று சரவணபவனை மொய்க்கும் கூட்டம் ஒருக்கும் வரை விலை குறைய சான்ஸே இல்லை.

அதேபோல் கழிப்பிட வசதி? இவ்வளவு பேர் வந்து செல்லும் இடங்களில் கழிப்பிட வசதி இருக்க வேண்டாம்? பாவம் பெண்கள். வருந்துவதை தவிர என்ன செய்ய

நான், ரங்கனாதன் தெருவில் இருக்கும் பல கடைகளுக்கும், மேலும் உஸ்மான் சாலையில் இருக்கும் பல கடைகளுக்கு சென்று வந்தேன்... எல்லா இடத்திலும் கூட்டம், கூட்டம், கூட்டம்... எல்லா வியாபரிகளும்

பணம்தான் குறிக்கோள், ஆனால் மக்களை பற்றிய கொஞ்சமாவது கவலை? சுத்தமாக கிடையாது. இவ்வளவு மக்கள் கூடும் இடங்களில், பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும்? பாதுகாப்பா அப்படீன்னா? வியாபரிகளும் கண்டு கொள்வதில்லை, அரசாங்கமும் வாங்கியதை வாங்கி கொண்டு அமைதியாகி விடுகிறது. 5 மாடி உள்ள கட்டடத்தில் 4 மாடியில் தீப்பிடித்தி விடுகிறது என்றால், ஆவசரமாக வெளியேறுவதற்கு Fire Exit கிடையாது, இருக்கும் ஒரே படி வழியாகத்தான் இறங்கி வரவேண்டும்... வருவதற்குள் தீ நம்மளை தின்றுவிடும். சாதரனமாகவே ஒரு கட்டிடம் கட்டும் போது, பல்வேறு விசயங்களை கடைபிடிக்க வேண்டும், அதுவும் இப்படி அதிகம் மக்கள் கூடும் இடங்களில் மூன்று மடங்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்... டி நகரில் எங்கும் இது கடைபிடிக்கவே இல்ல.

அரசாங்கம் எப்போதுதான் கண்டு கொள்ளபோய்கிறதோ??? எப்போதுமே பெரிய அளவில் விபத்து நடக்கிறதோ, அப்போதுதான் அரசாங்கத்தின் பார்வைக்கு வருமோ?

Jan 13, 2011

இன்னுமா தந்தி கலைஞரே???

கருணாநீதிக்கு அப்படி என்னதான் தந்திமேல் மோகம் என்று தெரியவில்லை, தொடர்ந்து தந்தி மேல் தந்தி.... தபால் துறையை வாழ வைத்து கொண்டிருப்பதே திராவிட இயக்கங்கள்தான் போல. இமெயில், போன், இண்டெர்நெட் என்று எவ்வளவோ வந்தாலும் பிடிவாதமாக பிரதமருக்கு தந்தி மேல் தந்தியாக அதுவும் மற்றவர்களின் துன்பத்தின் போதுதான்... என்ன ஒரு பிடிவாதமோ?

சிங்கள கடற்படை வெறிச்செயல்-மீனவர் பலி

நேற்று ஒரு தமிழக மீனவரை இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார், அதற்காக இந்திய பிரதம மந்திரிக்கு தமிழக முதல் மந்திரி தந்தி அனுப்புசாராம். இலங்கைகாரன் தொடர்ந்து தமிழக மீனவர்களை கொண்டுகிட்டு இருக்கான், தினமும் ஒரு குறிக்கோள் வச்சுருப்பான் போல, எப்படியும் ஒரு தமிழனை கொல்லனும்னு... இது பல நாட்களா தொடர்ந்து கொண்டே இருக்கு, இதை கண்டிக்க வேண்டிய பிரதமரும், முதல் அமைச்சரும் தந்தி கொடுத்து விளையாண்டுகிட்டு இருக்காங்க. ராசாவுக்கு ஒரு பிரச்சனைன்ன என்றவுடன் தனது தூதுவரை உடனே டில்லிக்கு விமானம் புடுச்சு போக சொல்லி பேச சொன்னார்; ஆனா? ஒரு வேளை தினமும் இதை கேட்டு கேட்டு சலிச்சுருக்குமோ? என்னாப்பாது டெய்லிந்தான் கொல்றானுக, என்னதான் செய்றதுன்னு நினைச்சுருப்பாரோ????



தமிழக மீனவரை அடித்தால் இலங்கை மாணவரை அடிப்போம் தமிழக மக்களுக்கு ஆதரவாய் கருத்து சொன்ன சீமானை பிடித்து உள்ளே போட முடிந்த இந்த ஆட்சியாளர்களுக்கு, இலங்கை நடத்தும் துப்பாக்கி சூட்டை மட்டும் தடுக்க இயலவில்லையா? பல நாட்களாக இலங்கை அரவு தமிழக மக்கள் மீது அறிவிக்கபடாத போரை நிகழ்த்தி வருகிறது. இன்னும் தந்தியே அனுப்பிகிட்டு இருந்தா மீனவ இனத்தையோ ஒழிச்சுரும்...

Jan 12, 2011

சில நிஜங்கள்...

இந்திய நாட்டின் சில நிஜங்கள், இது சில நேரங்களில் உலக அளவில் கூட பொருந்தும் இல்லையா?

மாங்கு மாங்குன்னு இரவும் பகலும் கண்ணு முழுச்சு படிச்சு முதல் வகுப்புல தேறி டாக்டராவோ பொறியாளரோவோ ஆகுறாங்க.






மாங்கு மாங்கு படிக்காட்டாலும் ஓரளவுக்கு படிச்சு இரண்டாம் வகுப்புல தேறி MBA வா ஆகி, முதல்ல வந்த டாக்டரையும் இஞ்னியரையிம் கண்ட்ரோல் செய்றாங்க..






கடமைக்குன்னு படிச்சு மூன்றாம் வகுப்புல தேறி, அரசியல்ல நுழைச்சு முதல்ல வந்தவர்களையும் இரண்டாம் வந்தவர்களையும் ஆட்டி படைக்கிறாங்க...








இதுதான் லீஸ்ட், சுத்தமா படிப்பும் ஏறாமே, எல்லாத்துலையும் பெயில் ஆகியும் தாதாவ ஆகி படுச்சவர்களை பூரா ஆட்டிவைக்கிறாங்க.

என்னத்த படிச்சு என்ன செய்றது??? வேன்னா பெஸ்ட் நாத்திகவாதின்னு சொல்லிக்கலாம் :)

Jan 10, 2011

கமலும் ஏ ஆர் ரஹ்மானும்

எம் எஸ் விஸ்வனாதன், இளையராஜா வரிசையில் அடுத்து வர மிக தகுதியானவர் தேவி ஸ்ரீ பிரசாத்தானாம், வருங்காலத்தை மிகச்சரியாக கணிக்கும் கமல்ஹாசன் சொல்லியிருக்கின்றார். கமலுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏ ஆர் ரஹ்மானை மட்டம் தட்டி கொண்டே இருக்க வேண்டும்.

கமலுக்கு அவரை தவிர மற்றவர்கள் பிரபலம் அடைவது பிடிக்கவே செய்யாது, அதுவும் உலக அளவில் பிரபலம் என்றால் வயிறு எரிவது இயற்கைதானே... பல காலமாக பெயரில் ஆஸ்கார் நாயகன், உலக நாயகன் என்றெல்லாம் விளிக்கபட்ட இந்த சாதா நாயகன் பல வருடங்களாவே ஆஸ்காரை வாங்கி வருகிறேன், வாங்கி வருகிறேன் என்று ஏமாற்றி ஒருவர் ஆஸ்காரை வாங்கியவுடன் அவரை விமர்ச்சிப்பது என்ன பண்போ?

இந்தியன் படத்தில் இயக்குனர் ஷ்ங்கரின் வற்புற்தலினால், தென்னாலி படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிகுமார் வற்புற்தல் காரணமாகவே ஏ ஆர் ரஹ்மான் கமல் படத்திற்கு இசை அமைத்தார், அல்லது கமல் ஏ ஆர் ரஹ்மானை இசை அமைப்பதற்கு இயக்குனர்கள் காரணமாக ஒப்பு கொண்டார்.

கமலும் எப்படியாவது ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராக எந்த இசை தொகுப்பாளர்களாவது கொண்டு வந்து விட வேண்டும் என்று வெறி, அதனால்தான் தசவாதரம் படத்தில் ஹிமேஸ் ரேஸ்மியாவை கொண்டு வந்தார், அவர் என்னடான்னா நான் ரஹ்மானின் ரசிகன், எனக்கு ரஹ்மான் இசையில் பாடனும்னு ஆசைன்னு கமல் மூஞ்சில் கரியை பூசிட்டு போய்ட்டார்... கமலும் விடல விக்ரமாதித்தன் போல் தொடர்ந்து கொண்டிதான் இருக்கிறார்....

உலக நாயகன், உலக நாயகன் என்று கூறுகிறார்களே... அப்படி என்னதான் உலக அளவில் விரும்ப படும் படங்களை எடுத்துவிட்டார்? அவரின் பிரபலமான அவ்வை சண்முகி முதல் மன்மதன் அம்பு வரை ஆங்கில படங்களின் காப்பி, சொந்தமாக ஒரு கதையை யோசிக்க தெரியாத இந்த உலக நாயகன் ஏன் தான் இப்படி?

சமிப குமுதத்தில் இதை பற்றி சில இசையமைப்பாளர்களிடம் கேட்டு கருத்து வெளியிட்டு உள்ளது, அதில் சில பேர் கூறி உள்ளது
சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர் என்றால் அது சிம்புதான்

இப்படி கூறினால் எப்படி ஏற்கொள்ள முடியாதோ, இப்படி கூறினால் எப்படி கூறியவர்கள் அசிங்கபடுவார்களோ, இதனால் எப்படி கமலுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லையோ, அதேபோலத்தான் கமல் கூறியதை எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்வுகளை படிக்கும் போது, தவளை கதைதான் ஞாபகம் வருது... உங்களுக்கும் வருதா??? தமிழ்ழண்ண்டா....