இப்படி நான் வாழ்த்து சொல்லவில்லை என்றால் பிலாக் எழுதுவதே வேஸ்ட்... மாறி மாறி ஏதாவது ஒரு கிரிக்கெட் வந்தாலும் ஐபில் என்றாலே ஒரு பொழுதுபோக்கை மீறிய ஒன்றாகி விட்டது, சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பேரு வச்சுக்கிட்டு சென்னையில் உள்ளவன் சப்போர்ட் செய்யலைன்னா யார் சப்போர்ட் செய்வார்கள்???
இன்னும் எனக்கு ஆச்சரியமான உண்மை என்னவென்றால், எவ்வளவோ அடி வாங்கு வாங்ன்னு வாங்கி சி.எஸ்.கே உள்ளே வந்தது, என்ன மாயமோ மந்திரமே தெரியலை..அது எப்படியோ தொடர்ந்து வேற டீம் தேர்த்தால் அல்லது ஜெயித்தால் மட்டுமே சி.எஸ்.கே வாய்ப்பு இருக்கும் என்ற நிலையில், வாய்ப்பு எப்படி வந்ததோ...எல்லாம் அந்த சினிவாசனுக்கே வெளிச்சம் :)
இதுல பாவப்பட்ட டீம்ன்னு டெல்லி மற்றும் மும்பைதான், தொடர்த்து ஜெயித்து வந்து, கடைசில தோல்வி என்பது; பெரும் கொடுமை, சென்னை எப்படி ஜஸ்ட் லைக் தட் என்று உள்ளே வந்தது... ஐபில் எலிமினேட்ர், ஃக்லிபையர், பைனல் என்ற முறையை மாற்றி எல்லா டீமும் எல்லாருடன் 3 தடவை விளையாடி, நல்ல ரேட் பெரும் அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்,
கடைசியா சென்னை மற்றும் டெல்லி மோதியது, தோற்பதுக்கே வந்ததுபோல் சேவாக் இருந்தது, பெரும் பாவமாய் இருந்தது, எல்லாமே முன்னமே தீர்மானிப்பட்டது போல் இருந்தது... அதுவும் டெல்லி அணி பீல்டிங்கை விடுவதாட்டும், கேட்ச் மிஸ் செய்வதாகட்டும்... அடடடடா அட்டடா... வெல் பிளே வெல் பிளே... என்னமோ போங்க...
உண்மையிலே பைனல் நல்லா இருந்துச்சு, சென்னை ஜெயிச்சுருக்க வேண்டியது, அதான் ஏற்கனவே ரெண்டுதடவை ஜெயிச்சாச்சே பிறகு என்னத்துக்கு ஜெயிக்க என்ற எண்ணத்தில்தான் கொல்கத்தாவுக்கு விட்டு கொடுத்துடுச்சு....
என்னவா இருந்தாலும் நம்ம டோணிக்கு ஒரு பெரிய விசில் அடிக்கனும்