சமிபத்தில் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது, திமுக அரசாங்கம் பதவி ஏற்ற நாளில் இருந்து இது 10 இடைத்தேர்தல் ஆகும்.
ஓட்டு போடுவது கட்டாய கடமை, கட்டாய கடமை என்று சொல்லி அதிககதிகமா ஓட்டு போடுவது நடந்து கொண்டுள்ளது. வரவேற்கதக்க அம்சம்தான். ஆனால் எதையிம் தொடர்ந்து செய்வதினால் ஒரு தொய்வு ஏற்படுவதை தடுக்க முடியாது. என்ன எழவுஓட்டுடா... எவனுக்கு போட்டாலும் எதுவும் ஆகபோறதில்லை, என்னதுக்கு அடிக்கடி ஓட்டு போடனும் என்று மக்களுக்கு தோன்றதவரைதான் தில்லுமுல்லு ஜெயிக்கும்.
இடைத்தேர்தல் நடப்பதினால் அரசாங்கதிற்கு பல்வேறு சுமைகள். இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் ஆண்டுகொண்டுருக்கும் அரசாங்கம் வெற்றி பெற்று ஆகவேண்டிய நிர்பந்தம், ஏவெனில் இடைத்தேர்தலில் மக்கள் வெற்றி பெற வைத்தால்தான் அந்த அரசாங்கதிற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக எண்ணம். இதற்காக எந்த எல்லை வரை செல்ல ஆண்டு கொண்டிருக்கும் தயங்குவதில்லை.
ஏற்கனவே நமது அரசாங்கம் வாங்கிய கடனுக்காக வட்டியே கோடிக்கணக்கில் கட்டி வருகிறது, இதில் இடைத்தேர்தல் நடப்பதினால் ஏற்படும் பணச்சுமை மிகப்பெரிய சுமை. இப்போது தேர்ந்து எடுக்க போகும் MLA ஒன்றும் ஆகபோவதில்லை, பாவம் பதவிகாலம் வெறும் 1 1/2 வருடம் தான். இந்த காலத்தில் அவர் மக்களுக்கு நல்லது செய்யபார்ப்பாரா அல்லது இழந்த பணத்தை மீட்க நினைப்பாரா?
ஒவ்வொரு இடைத்தேர்தலின் போதும் பணம்தான் அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்கிறது.
இடைத்தேர்தலினால் அரசாங்கதிற்கு ஏற்படும் செலவு எவ்வளவு என்று தனியாக கணக்கு வைத்து கொள்ளவேண்டும். அவ்வளவு செலவழிகிறது.
இதற்கு மாற்று வழி கண்டுபிடித்தால் என்ன?
ஏன் இடைத்தேர்தல் நடத்தவேண்டும்?
ஒரு தொகுதில் அதிக வாக்கு வாங்குபவர் வெற்றி பெற்றவர் ஆவர், அவரின் இறப்போ அல்லது பதவியிழப்போ அங்கு இடைத்தேர்தல் நடத்த வழிவகுத்துவிடும். அவ்வாறு இல்லாமல் அதிக வாக்கு வாங்குபவர் வெற்றி பெற்றவராகவும் இரண்டாம் நிலையில் வாங்கு வாங்குபவரையிம் மாற்றாளாக (substitute) வைத்து கொள்ளவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் முதலில் இருப்பவர் பதவி இழப்பு ஏற்பட்டால் இரண்டாம் நிலையில் உள்ளவர் அப்பொறுப்பை எடுக்கலாம். இதன் மூலம் அரசாங்கதிற்கு ஏற்படும் சுமையிம் ஆண்டு கொண்டுப்பவர்கள் ஜெயித்தால்தான் ஆச்சு என்ற தன்மையும் மாறும்.
எவ்வளவு காலத்திற்கு பழையதை வைத்து அழுது கொண்டுருப்பது, ஒரு மாற்றம் தான் வரட்டுமே...
2 comments:
நீங்கள் சொல்லுறபடி பார்த்தால், எப்போதுமே தொகுதியில் வெற்றி பெற்றவருக்கு உயிராபத்து, இரண்டாவது நிலையில் உள்ளவரால் இருக்கும்.
இது தேவையற்ற பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கும்.
nice
Post a Comment
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
தமிழில் எழுத!
வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.