இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வாவ்வ்வ்வ்வ்வ்வ்.... வாவ், வாவ், இப்படி ஆரம்புச்ச ராஜுதான் வீடு வந்து சேர்கிற வாவ், வாவ்வ்வ்வ்வ்வ்வ் இவைகளை விடவே இல்லை.
ராஜு என்னோட பிரண்டுதான் இப்பதான் அமெரிக்கவிலிருந்து வாறான்.
அவன் அமெரிக்கா போனத இப்ப நினச்சாலும் காமடியா இருக்கும்.
அவன் காலேஜ் படிக்கிற போது ஆங்கிலத்துக்கு எதிரியா இருந்தான், எதிரினாலும் எதிரி காட்டு எதிரி... அவனுக்கு எதுக்கு ஆங்கிலமேல கடுப்பு வந்துசுச்சுன்னா, எல்லாரும் ஒரு பிகருக கூட சுத்திக்கிட்டு இருக்க, இவன் எவ பக்கதுல போனாலும் தஸ்புஸ்ஸுன்னு ஆங்கிலத்துல பேசுனவுன்னே, அவனுக்கு அவளுகளுக்கு பதில் சொல்ல முடியாததுக்கு காரணம் ஆங்கிலம்தான்னு முடிவு செஞ்சு; ஆங்கிலத்தையே ஜென்ம விரோதியக்கிட்டான், ஆங்கிலம் யாராவது பேசினாலே அவங்க அவனுக்கு எதிரிதான் அதுமட்டும் இல்ல, நானும் அவங்களுக்கு எதிரியாடனும்.
இப்படி இருந்த ராஜு வாழ்கை, விதியின் வசத்தால ஆங்கிலம் கத்துகிற சூழ்நிலை வந்துடுச்சு. நாங்க எல்லாரும் படிச்சுட்டு வேலை தேடிக்கிட்டு இருக்க, தொரை ராஜு மட்டும் வேலை தேடாமல் எல்லாத்துக்கு இந்தியாதான் காரணம், இங்க இருக்குறுவங்க உருப்படவே மாட்டாங்க இப்படி சொல்லி சொல்லியே அவனுக்கு இந்தியா வெறுத்து, அமெரிக்கா மேகம் ஆட்டியது.
அமெரிக்கா போறதுக்கவே ஆங்கிலம் கத்துக்கிற ஆரம்புச்சான், கடைசில கத்துகொடுத்தவருக்கு எல்லாம் மறந்து இவன் தட்டு தடுமாறி ஆங்கிலம் பேசி கஷ்டப்பட்டு அமெரிக்கவுக்கு ஜுன் 5, 2005 போய்ட்டான்.
அங்க போனாலும் அடிக்கடி எனக்கு போன் பேசுவான்.
அங்க ஒருத்திய கல்யானம் பன்னிக்கிட்டதா தகவல் சொன்னான், அடுத்த 2 வருடத்துல டைவர்ஸ் ஆச்சுங்கிற விசயதயும் சொன்னான்....
இடையில் இந்தியா வரவே இல்லை.
அவன் போயி 15 வருசம் ஆச்சு, இப்பதான் ஆகஸ்ட் 15, 2020 கரெக்டா இந்தியா சுதந்திரதினம் அன்று திரும்ப வந்துட்டான். நாந்தான் சென்னை அண்ணா விமான நிலையம் 22வது டெர்மினல் 159 கேட்டில் வெயிட் செஞ்சு கூட்டி வந்தேன். கூட்டிவரும்போதுதான் அவன் கூறிய வார்த்தைகள்தான் ஆரம்பத்தில் இருந்தவை.
விமான நிலையத்தில் வாய ஆன்னு பிளந்தவந்தான்... சென்னை மெட்ரே ரயில், எலக்ட்ரானிக் சிட்டி, சென்னை நகரம் முழுமைக்கும் ஏசி, உலகத்தின் உயரமான கட்டிடம், மிகப்பெரிய விளையாட்டு திடல், பறக்கும் கார்கள் அதுவும் அன்று சுதந்திரதினம் சென்னையே விழாக்கோலம் பூண்டிருந்தது இப்படி எல்லத்தையும் பார்த்து வியந்தான்
வீடு வரும் வரை வாவ்தான். எனக்கு காதுல இருந்து ரத்தமே வந்துடுச்சுன்னா பாத்துக்குங்களேன்.
வீடு வந்தவுடன் ஒரே புலம்பல்தான்....
அமெரிக்கா சரியில்லடா, ஜார்ஜ் z புஷ் நிர்வாகமே வேஸ்ட்டா. அமெரிக்கா காரனுக்கு எத கண்டாலும் பயம், இப்பவுலாம் அமெரிக்கவுல வேலை இல்ல திண்டாட்டம் அதிகமாய்டே போகுது, அமெரிக்காககாரன் (அவனே அமெரிக்காக காரன்தான்) வேலை பாக்காதா நாடே இல்லைனு ஆயுடுச்சு, உலகத்துல எல்லா இடத்திலயும் அமெரிக்கா காரன் இருக்கன், இப்பவுலாம் அமெரிக்கா காரனுக அதிகமா இந்தியாவுக்குதான் வேலைதேடி வாராங்க, அதான் நானும் வந்துட்டேன்.
எனக்கு மனசுக்குல்லே ஒரே ஆனந்தம், மவனே இந்தியா புடிக்கலைன்னு போனே. இப்ப பத்தியா இந்தியாவுக்கே திரும்ப வந்துட்டே...வாடா வா அப்படின்ன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டு
ஆமாம் ராஜு நீ சொல்லுறதும் சரிதான். இப்ப இந்தியாதானே உலகத்தின் வல்லரசு, அப்துல் கலாம் ஆசைப்பட்ட இந்தியா 2020 அடைந்து விட்டது. பக்கதில இருக்குற இருக்குற பாகிஸ்தான் நாமகிட்ட வாலட்டுறதே இல்லை, நாம சொல்லுறததான் ஐநா சபை கேக்குது, இந்தியா சொன்னதுக்கக சைனாமேலயிம், இலங்கைமேலயும் பொருளாதார தடை விதிச்சுருச்சு. இந்தியாவின் சக்திய பாத்த அய்ரோப்பாவெல்லாம் உலகத்தின் நாணயமா ருபாயை ஏத்துகிருச்சு, அவ்வளவு ஏன் சவுதிக்கே பயோ பெட்ரோலை இந்தியாதான ஏற்றுமதி செய்து.
இப்படி இந்தியாவின் அருமை பெருமைகளை நண்பனிடம் கர்வத்துடன் சொன்னேன். அப்பத்தான் வாசலில் இருந்து ஒரு குரல்
"அய்யா, சாமி, சாப்புட்டு ரெண்டு நாளாச்சு, ஏதாவது சாப்பாடு போடுங்க சாமி"
================
இந்தியா 2020ல் எப்படி இருக்குனு நினைப்பேன். அதான் இப்படி வந்துருக்கு இது என்னுடைய முதல் கதை, அடிக்கடி சுஜாத்தவுலாம் எட்டிப்பாப்பாங்கா. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
நட்புடன்
மஸ்தான் ஒலி
20 comments :
supper
வருகைக்கு நன்றி ரமேஷ் விஜய்
கதை பிடிச்சுருக்கா?
நல்லாருக்கு
Good story. Really nice.
In our country we cant be avoid beggar.
Keep writing more and more
All the best
"அய்யா, சாமி, சாப்புட்டு ரெண்டு நாளாச்சு, ஏதாவது சாப்பாடு போடுங்க சாமி"
பிச்சக்காரனுக எப்பவும் இருப்பானுக
இந்தியா வல்லரசு
Send to kumudam or vikadan
wow
அவ்வளவு ஏன் சவுதிக்கே பயோ பெட்ரோலை இந்தியாதான ஏற்றுமதி செய்து.
:)
in 2020??? hahaha...
india cant become super power in 3020 also
வருகைக்கு அனைவருக்கும் நன்றி நன்றி :)
நல்ல நடை நண்பா...
வாழ்த்துக்கள்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜெட்லி :)
/
விமான நிலையத்தில் வாய ஆன்னு பிளந்தவந்தான்... சென்னை மெட்ரே ரயில், எலக்ட்ரானிக் சிட்டி, சென்னை நகரம் முழுமைக்கும் ஏசி, உலகத்தின் உயரமான கட்டிடம், மிகப்பெரிய விளையாட்டு திடல், பறக்கும் கார்கள் அதுவும் அன்று சுதந்திரதினம் சென்னையே விழாக்கோலம் பூண்டிருந்தது இப்படி எல்லத்தையும் பார்த்து வியந்தான்
/
ஹ ஹ...
Nice story ya....
Carry on ur story write ...........
Hey Mastan ,
Your Think is good ya........
Don't stop ur story write ........
continue ur write ...............
2020. India.........
ஜார்ஜ் z புஷ் நிர்வாகமே வேஸ்ட்டா
:)
வருகைக்கும் நன்றி கார்திகேயன்
வருகைக்கும் நன்றி ஜார்ஜ்
வருகைக்கும் நன்றி ராஜு
நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்
வருகைக்கும் நன்றி ஞானசேகரன்
Post a Comment