Jan 27, 2010

Creativity On Top

நான் மிகவும் ரசித்த படம் இதுவும் ஒன்று. ஒரு கணிணி நிறுவனத்தில் புகைபிடிக்கும் அறையில் இப்படி ஒட்ட பட்டுருக்காம். என்ன ஒரு கிரிட்யவிட்டி...புகைப்பது நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் மரணப்படுக்கை. இல்லையா?


Jan 25, 2010

தமிழன் இளிச்சவாயனா?

வர வர தமிழன் இங்க வேலையே செய்ய முடியாது போல இருக்குது, இப்பவே ஹிந்திக்காரன் சென்னையில எல்லா இடத்திலையும் வந்துட்டான், சென்னையில தமிழ்நாடு வகை சாப்பாடு போயி ஹிந்தி டைப்பு சாப்பாடு வந்துடுச்சு, தமிழ்படங்கள் அதிகமா வெளிட்டது போக நிறையவே ஹிந்திபடங்களா வர ஆரம்புச்சுடுச்சு... இங்க பிழைக்க வந்தவன் எல்லாம் இங்க உரிமை கொண்டாட ஆரம்புச்சுட்டான். இப்பவே பல பகுதிகளுக்கு தமிழன் வீடோ நிலமோ வாங்க முடியாத நிலமை, சென்னையில சில இடங்கள் இருக்கு மார்வாடியை தவிர யாரும் அங்கு குடி போக முடியாது, தமிழ்நாட்டுடைய மொழியா ஹிந்தியை ஆக்கிடுவாங்க போல இருக்கு... இப்ப வரைக்கும் லங்காவுல தமிழனை அடிக்கிறானுக, மலேசியாவுல அடிக்கிறானுக, அப்ப அப்ப மகராஷ்ட்ராவுலயும் கர்நாடகத்திலயும் அடிப்பானுக. நாம எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கனும் அது போதாதுன்னு இங்க வேற வந்து அடிக்கிறானுக... நாமதான் எல்லாதையும் பொருத்துகிட்டு போகிட்டு இருக்கிறோம்... இந்தியாவவது மயிராவது??? எல்லாம் வேஸ்ட்... இப்படி தமிழன் அடிவாங்கிறத செண்ட்ரல் கவர்மண்ட்ல இருந்து எவனாவது கேட்டுறானா??? ஹிந்து பேசுறவனுல்லாம் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, PM குரல் கொடுக்குறார்,    இங்க அரசியல் நடத்துறவனுக எல்லாம் தே... பசங்க, ஆரம்பிக்கம்போது அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம்னு சொல்வானுக ஆனா எல்லாரும் வேஸ்ட்... தமிழன் நல்லா இருக்கனும்னா தனிநாடு வேனும், இல்ல மகராஷ்ட்ராவுல ராஜ்தாக்ரே செய்யிறது போல நாமளும் செய்யனும்... 







இப்படி ரயிலில் ஒருவர் பொதுவாக பேசிக்கொண்டுவந்தார்...


அவர் சொல்ல வந்தது எனக்கு புரிந்ததுதான், கருத்தை கேட்க கேட்க மனது ஏதோ கொதிக்க ஆரம்பித்தது, அவர் நிறுத்தவே இல்லை, அதிகமாக பேசினார், நியாமாத்தான் இருந்தது... ஆனாலும் மனது கேட்கவேவில்லை, ஏனோ கருத்தை ஒப்பு கொள்ள மறுக்கிறது மனது...


நானே என்னுள் இரண்டாக மாறி சண்டையிட்டு கொள்கிறேன்...
ஆமா, அவர் சொல்வது சரிதான். தமிழன் ஏமாளிதான், எங்க போனாலும் அடியும் உதையும் வாங்கதான் செய்வான், கேட்பதற்கு நாதி இல்லாமல் போயிடுச்சுதான்... போற இடத்துல அடிவாங்குறாண்டா, சொந்த இடத்திலும் அப்படிதான்.இதுக்குலாம் ஒரு விடிவு வரனும்னா மத்தவன் நம்ம இடத்துல நுழைய விடாம தடுக்கனும், அப்பதான் முடியும்... ஒவ்வொரு மொழிக்காரனும் தமிழ்நாட்டை ஆக்கிறமச்சுகிட்டோ போறான், இப்படியே போச்சுன்னா தமிழ்நாட்டிலயும் தமிழனை அகதி ஆக்கிடுவாங்க போல, ஒரு வெறி ஆட்டம் ஆடினாத்தா நமக்கு உள்ள உரிமை நமக்கு கிடைக்கும்... 


இரண்டாவதாக...
இந்தியா என்பது அகண்ற நாடு யாரு வேண்டும் என்றாலும் எங்கு வேண்டும் என்றாலும் போகலாம், வாழலாம், சம்பாரிக்கலாம்... இப்படி இந்தியர் அனைவருக்கும் சம உரிமைகளை நாடு வழங்கி உள்ளது, இப்படி இருக்கும் போது நீ இங்கு வராதே.. நீ ஹிந்திக்காரன் இப்படி சொல்லுறது கொஞ்சம் ஓவரா படுது. ஏன் தமிழர் வேறு பகுதிகளுக்கு போயி வாழலையா? தமிழ்நாட தவிர பல இடத்துல தமிழர்கள் நல்லாதானே வசிக்கிறாங்க, யாருக்கு இப்ப என்ன ஆச்சு, சில இடத்துல சில சம்பவங்கள் நடக்கிறது என்பதற்காக நாமும் மிருமமா மாறிடலாமா??? என்ன உரிமை? அவனுக்கும் இந்தியாவுல உரிமை இருக்கதானே செய்யுது, தமிழ்நாடு ஒன்னும் தனிநாடு இல்லையே... 







இப்படியே என்னோட யோசனை போச்சு... அவ்வளவு சீக்கிறத்தில் ஒரு முடிவுக்கு வந்து விட முடியுமா என்ன? இது ஒருவருடைய சிந்தனையா இல்லாமல் பலபேருடைய கருத்தாதான்  எண்ணவேண்டியதுள்ளது, அதிகமானோர் மனதில் பூட்டி வைத்துள்ளனர், இப்படி சிலபேர்தான் வெளிட்டு விடுகின்றனர்,,, இந்திவுக்குள்ளே நடக்கும் இந்த இனவெறியை எப்படி தடுப்பது??? ஒன்று பட்ட இந்தியாவை இந்த வெறி பாதிக்குமே... இப்போதுதானே இந்தியாவே வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக ஆகின்றது, இவர்கள் சிந்தனை இப்படி இருந்தது என்றால்... யாருடைய குற்றம், அவர் சொன்னதில் ஒன்று கூட தவறு இல்லை, ஆனால் தமிழரும் பல்வேரு இடங்களில் சென்று வசிக்கின்றனர் அவர்களை பற்றி இவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்... இப்பேர்பட்ட தீ அதிகமாகமல் தடுக்கவேண்டும், இந்தியர் அனைவரும் சகோதர்கள் என்ற சிந்தனைக்கு இவர்களை கொண்டு வரவேண்டும்... 

Jan 12, 2010

புதுசு - தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் இருக்க

தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் இருக்க நான் ஒரு ஹேக் முறையை கண்டுபிடித்து இருத்தேன். அதில் சில தவறுகள் இருந்ததால் சரியாக வேலை செய்யவில்லை. இப்போது மாற்றபட்ட ஒன்றை கொடுத்துள்ளேன். கண்டிப்பாக எல்லா பிரவுசரிலும் வேலை செய்யும்...

முதல் பதிவை பார்க்கவும்

அதில் மாற்றவேண்டியது
function setval()

{
document.getElementById('tamilvote').parentNode.innerHTML=document.getElementById('tamilvote').parentNode.innerHTML.replace(/http:\/\/tamilmanam.net\/rpostrating.php\?s=N/gi, 'http://www.google.com/search?q=mastanoli.blogspot.com');
}
 
செய்து பார்த்துவிட்டு கூறவும்

வாழ்க ஹேக்கிங் :D

Jan 11, 2010

தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் இருக்க

சமிபத்தில் அதிக அதிகமாக நான் கேள்வி படுகிற விசயம், தமிழ்மணத்தில் நெகட்டிவ் வோட் விழுவதை பற்றி, சில பேர் வேண்டும் என்றும் வேண்டாம் என்று சொல்கின்றனர். யார் யார் நெகட்டிவ் வோட் போட்டார்கள் என்றே நமக்கு தெரியவில்லை... தெரிந்தால் ஏதாவது செய்யலாம் அல்லவா... :) சரி... நெகட்டிவ் வோட் முறை இருந்தால் தானே நெகட்டிவ் வோட்டு போடுவார்க்ள், ஏதாவது ஹேக் முறையில் அதை மாற்றிவிட்டால்... இப்படி யோசித்து நான் ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் மாற்றுவதற்கு வழி கண்டு பிடித்துள்ளேன்... 


நான் சொல்கிற வழியில் சென்றால் ஈஸியாக தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் தடுத்து விடலாம்.


முதலில் உங்கள் Blogger அக்கவுண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

Blogger -> Layout -> Edit HTML

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து பத்திரமாக வைத்து கொள்ளுங்கள், ஏதாவது தப்பா ஆகி அப்பறம் குய்யோ முய்யோன்னு குதிக்க கூடாது. :)

Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.

tamilmaNam.NET toolbar code starts எனும் எழுத்தை வைத்து தேடவும், அதற்கு கீழ்
< script expr:src="http://services.thamizmanam.com/toolbar.php என்று ஆரம்பாகி இருக்கும், அந்த இடத்தில் < script id="tamilvote" expr:src="'http://services என்பதை சேருங்கள், அதாவது id="tamilvote" என்பதை இணைக்கவேண்டும்.

அடுத்து </head>
என்பதை வைத்து தேடுங்கள், கண்டு பிடித்த பிறகு
அதற்கு முன்பு இக்கோடிங்கை சேர்க்கவும்


<script>

function setval()

{

document.getElementById('tamilvote').parentNode.innerHTML=document.getElementById('tamilvote').parentNode.innerHTML.replace(/http:\/\/tamilmanam.net\/rpostrating.php\?s=N/gi, 'http://www.google.com/search?q=mastanoli.blogspot.com');

}

</script>

சேர்த்ததுக்கு பிறகு <body>
என்பதை தேடவும்
அங்கு <body OnLoad="setval()"> என்று மாத்தவும்... அதாவது பாடி டேக்கில் OnLoad="setval()" என்பதை சேர்க்க வேண்டும் அவ்வளவுதான்.

இனிமேல் உங்களுக்கு தமிழ்மணத்தில் ஒரு நெகட்டிவ் ஓட்டு கூட விழாது.

செய்து பார்த்துவிட்டு கூறவும்
வாழ்க ஹேக்கிங் :D

Jan 6, 2010

எந்திரன் எக்ஸ்குளூசிவ் படங்கள் [ROBO Exclusive picture]

ரஜினி என்றாலே ஒரு விறுவிறுதான் இல்லே?? எந்திரன் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்க பட்ட சில படங்கள், நண்பர் மூலம் எனக்கு அனுப்பிவைக்க பட்டன. அனைத்து படங்களும் அருமை. எப்பட எந்திரன் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்க வைத்தது.... பாருங்களேன், ரஜினியுடைய ஸ்டைலே ஸ்டைலே...

சூப்பர் ஸ்டார்னா சும்மாவா.. :)






கீழே இருக்குறதுதான் எனக்கு ரெம்ப புடுச்சது... சூப்பர் ஸ்டார் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார், ரஜினி முன்னாடி ஐஸ் கூட உருகிடும்.. ஹிஹி










ஐஸ்வர்யா ராய் இவ்வளவு இளமையா???







Jan 4, 2010

கொண்டாடின தப்பா?

புது வருடம் ஆரம்பம் எப்படி போச்சு? நல்லா சந்தோசமா கொண்டாடிருப்பீங்க... நானும் அப்படிதான். :) ஒரே ஜாலிதான்.
 
எல்லா வருசம் போல, இந்த வருசமும் எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்.
 
புது வருடத்தை கொண்டாட கூடாதுன்னு சில கூட்டம்... எல்லா மதத்திலிருந்தும் சொல்ல ஆரம்புச்சுட்டாங்க.
 
 

 
ஏன் கொண்டாட கூடாதுன்னு கேட்டா பதில் இல்லை, ஆனா கொண்டா கூடாது...
 
இப்போதய கலண்டர் படி நாம் ஆங்கில முறையை பின்பற்றுகிறோம்... அரசு எழுதுகிற டாக்குமெண்ட்ஸ், பொது நிறுவனங்கள் வெளியிடும் ஏதாவது டாக்குமெண்ட்ஸ் போன்றவற்றில் இடம் பெறுவது ஆங்கில தேதியே... எங்காவது வேறு முறையில் எழுதுகிறார்களா? பின்பற்றும் அனைத்தையும் ஒரு மாதிரி வைத்துகொண்டு... அந்த வருடம் முடிந்து அடுத்த வருடம் தொடங்கினால் மட்டும் கொண்டாடாதேன்னு சொல்லிறதுக்கு ஒரு கூட்டம்... ஏதாவது சொல்லி மக்களை பிரிக்கனும் அதுதான் நோக்கம்.
 
உஸ்ஸ்ஸ்... சந்தோசமா எழுத வந்தேன், மக்களின் சில பேர்களை நினைத்தாலே சந்தோசம் சந்தோசமில்லாம போய்டுது...
 
நல்லா கொண்டாடுவோம்!