இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இப்போதுதான் நான் சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கியது உண்மையே! – நீதிமன்றத்தில் ஒப்புதல். பதிவை பார்த்தேன். அதில் கூறப்பட்டு இருக்கும் ஒரு விசயம் இன்னும் நாம் 1947 ஆண்டு உருவக்கிய சட்டத்தை வைத்து அழுது கொண்டு இருக்கிறேம் என்பது உறுதியானது. நம்ம ஆட்கள் ரெம்ப மறதியானவங்க அவங்களுக்காக
சின்ன பிளாஷ்பேக்
இரண்டு வருடங்களுக்கு முன்பு இளஞ்செழியன் எனும் இலங்கை தமிழர் சரவணா ஸ்டோரில் பொருட்கள் வாங்க செல்லும் போது அவரின் மீது சந்தேகப்பட்ட சரவணா ஸ்டோர் உழியர்களால் தாக்கப்பட்டார், இவ் விசயம் கூட அனைத்து பத்திரிக்கைகளும் வெளியிட்டன, நாம் கூட இதை கவனித்து, எப்பவும் போல மறந்து இருப்போம்.
இப்போதுதான் அதுக்கு தீர்ப்பு வந்துள்ளது... நீதி என்றாவது ஒருநாள் வெல்லும் என்பது உண்மையாகி விட்டது.
ஆனால்..
ஆனால்....
ஆனால்........
அடிப்பதற்கு காரணமாக இருந்த சரவணா ஸ்டோர் உழியர்களுக்கு தல 1500 ருபாய் தண்டனை என்று தீர்ப்பு வந்துள்ளது. நான் தவறாக எழுத வில்லை இது ஆயிரத்து ஐநூறு இது ஆயிரத்து ஐநூறு இது ஆயிரத்து ஐநூறு ருபாய்தான் மட்டும்தான். என்ன ஒரு கொடுமை... இதற்க்க பாடுபட்ட இளஞ்செழியன் எவ்வளவு மனம் நொந்திருப்பார், எவ்வளவு பணம் செலவளித்திருப்பார். அந்த உழியர்கள் ஈஸியாக பணத்தை கட்டிவிட்டு டாடா காமித்து சென்றுருப்பார்கள்.
ஒரு தண்டனை என்பது, தப்பு செய்தவரால் கால காலத்திற்க்கும் நினைத்து பார்க்கவும், எதற்க்கக தண்டனை பெற்றாறே அதை மீண்டும் செய்யாதிருக்கத்தான்.
இப்போது கொடுத்திருக்கும் தண்டனை கொஞ்சம் கூட போதுமானதாக இல்லை. சரவணா ஸ்டோரில் வேலை பார்ப்பவர்கள் மிகவும் ஏழ்மையனவர்கள்தான், ஆனாலும் இதை மீண்டும் அவர்கள் செய்யாதிருக்க தண்டனை தொகையை அதிப்படுத்திருக்க வேண்டும். குறைந்தது ஒருவருக்கு ஒரு லட்சம் அபராத தொகையும், அதில பாதியை சரவணா ஸ்டோர் கட்டுமாறும் செய்திருக்களாம், கூடவே சிறிது காலம் சிறைத்தண்டனையும் வழங்கிருக்கலாம்.
பஸ்சில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தால், தண்டனை தொகை எவ்வளவு தெரியுமா? 500 ருபாய் மட்டுமே.
நமது சட்டத்தில், கொஞ்சம் மாற்றம் செய்து, இப்போது உள்ள விலைவாசிக்கு தகுந்தாற் போல் மாற்றம் செய்ய வேண்டும்.
மாற்றம்னு சொன்னாலே குய்யோ முய்யோன்னு குதிக்கும் கூட்டத்தை அடக்கி விட்டுடுதான் ஏதாவது செய்யனும்.
படத்திற்கு நன்றி நுகர்வோர் நலன்
குற்றம் குறைய தண்டனைகள் அதிக்ப்படுத்த வேண்டும்.
11 comments :
நல்ல பகிர்வு
அத்வானி, 'சவுதியில் இருப்பதுபோல் கடுமையான தண்டனைகள் வேண்டும்' என்று சொன்னதாக நினைவு.
தண்டனை அதிகமா, கம்மியா என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு வருட அலைக் கழிப்புக்கு பின்.. இந்த தீர்ப்பு மகா கொடுமை!!
உங்கள் பதிவும் ப்ளாக்கும் ரொம்ப அழகு
வாழ்த்துக்கள்,தொடர்ந்து படையுங்கள்
ஓட்டு போட்டாச்சு
வருகைக்கு நன்றி பீர்
வருகைக்கு நன்றி சாம்ராஜ்ய ப்ரியன் (எந்த சாம்ராஜ்ஜியத்தை ஆள்வதாக உத்தேசம்?)
வருகைக்கு நன்றி கார்த்திக்
yes
கலாசாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர்பெற்ற இந்தியாவில் குடும்ப பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
அமெரிக்காவில் வளர் இளம் பெண்கள் (டீன் ஏஜ்) கருத்தரிக்கும் சம்பவம் அதிகமாக உள்ளது.
இதனால், அங்கு தந்தை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுபோல, இந்தியாவிலும் இப்போது தந்தை இல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெண்களுக்கு ஆதரவாக 44 சட்டப்பிரிவுகள் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். வரதட்சிணை கொடுமை என பொய்யாக தகவல் கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள்தான் அதிகம் நடக்கின்றன.
வரதட்சிணை வழக்கில் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை.
ஆனால், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கப்படுகிறது.
குறிப்பாக படித்த, வசதி படைத்த ஆண்கள்தான் இவ் வழக்குகளால் பாதிக்கப்படுகின்றனர்.
சமுதாயத்தில் பெண்கள் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
ஆனால், அவர்களை தண்டிக்க சட்டம் இல்லை. இதனால், குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகின்றன.
வரதட்சிணை வழக்குகளால் நீதிபதிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஓராண்டில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பெண்கள் (மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவுகள்) கைது செய்யப்படுகின்றனர்.
தந்தை, தாய், மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோரை உள்ளடக்கியதுதான் குடும்பம். ஆனால், இப்போது தந்தை, தாய், மகன் அல்லது மகள் ஆகியோரைக் கொண்டதுதான் குடும்பம் என்று மாறி வருகிறது.
இதனால், வயதான பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
ஆம் சட்டங்களை கடுமையாக்கப்படவேண்டும்.. வாய்பிருந்தால் இந்த வலைபூ பக்கத்திற்கு சென்று பாருங்கள்...
http://tamil498a.blotspot.com
வருகைக்கு நன்றி ஜார்ஜ்
இப்போது தந்தை இல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருத்தமான உண்மை சரவணன்...
சில பெண்கள் செய்யும் தவறுகளுக்கக அனைவரையும் நாம் குற்றம் சொல்ல வேண்டியதில்லை...
கண்டிப்பா சட்டங்களை கடுமையாக்கப்படவேண்டும்.
வருகைக்கு நன்றி சரவணன்.
கிருத்தவ தேவாலயத்தில் தங்கிப் படிப்பதற்காக அனுப்பி வைக்கப் பட்ட 14 வயது சிறுமியை 15 வாலிபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறி
http://sagaevents.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%2015%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
வருகைக்கு நன்றி சகா
மிகவும் கொடுமையான செய்தி. இப்படி பட்டவர்களை மிக கொடுமையாக தண்டிக்க வேண்டும்.
Yes, must be increase.
Nice article.
வருகைக்கு நன்றி குரங்கு, உண்மைதான் தண்டனைகள் அதிகப்படுத்த வேண்டும்.
வருகைக்கு நன்றி மிக்ஸ்
Post a Comment