Sep 6, 2009

நன்றிகள் பல...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நானும் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், ஏதாவது தப்பு வந்துடுது... :(  ஒரு வார்த்தைகளை டைப் செய்து அதை சரிய இல்ல தப்பா இருக்குமோன்னு நான்  கவலைப்படுவது இருக்கே உஸ்ஸ்ஸ்.. அது கொடுமை, வருங்காலம் என்னை பழிக்குமே, எனது தமிழையும் அல்லவா தவறாக பழிக்கும் (ஹிஹி) எனற காரணத்தினாலே  இலக்கண தவறு இல்லாம முயற்சி செய்கிறேன்,  என்ன என்ன்வே பண்னுனாலும் தப்பு வந்துடுறது... என்ன பண்னுறது, முயற்சி செய்கிறேன் முற்றிலுமாக சரி செய்வதற்கு.

நீங்கள் எனது எண்ண  எழுத்தில் ஏதாவது வண்ணப்பிழை கண்டால் தயங்காமல் சுட்டி காட்டவும், தவறுகள்தான் சரியான பாதைக்கு வழிவகுக்கும்.

இதுவரை நான் சில இலக்கணப்பிழைகளை செய்துள்ளேன்... (இப்ப சரி செஞ்சுட்டேன் :) )

முதலில் "எனது என்னங்க்கள்" என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன்.  ன ண வுக்கும் அவ்வளவு வித்தியாசமா?

ஆனாலும் அடங்காத எனது தமிழார்வத்தாலும் உங்களை துன்புறுத்துதல்  மகிழ்ச்சி ஏற்படுத்துவதாலும்  எழதுவதை மட்டும் நிப்பாட்டவில்லை. நல்லவேலை நான் அனானி பின்னூட்டுத்துக்கு அனுமதிக்கவில்லை... இருந்து இருந்தால் என்ன சாகடுச்சுருப்பாங்க இல்லையா? ஹிஹி

எங்கு ழ வரும் எங்கு ள, எப்ப ன இல்லை ண இப்படி ஒரே குழப்பமோ குழப்பம். :(  யாராவது இத சரி பண்னுவதற்கு பிலாக் போட்டா தேவலை.

எனது எண்ணத்துக்கு ஊக்கம் தந்து, சில தவறுகளை சரி செய்ய உதவிய நல்ல உள்ளங்களான பீர், கார்த்திக்கேயன் மற்றும் அலுவலக சகாவான் சாகதேவனுக்கும் நன்றிகள் பல.

இங்கு வந்து என்னை ஊக்கிவித்து கொண்டு  மற்றும் விக்காம இருக்கும் அனைவருக்கும் நன்றிகள் பல...




நட்புடன்
--மஸ்தான்

5 comments :

ஆ.ஞானசேகரன் said...

போக போக சரியாகும் விடுங்க... தொடர்ந்து எழுதவும்

Anonymous said...

பிழைகள் உள்ளன; ஆனால் நீங்கள் எண்ணுவதுபோல் மிகுதியாக இல்லை.நன்றாகவே எழுதியுள்ளீர்கள்.

எழுதிய பிறகு ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது நல்ல பழக்கம்; பிழைகளக் களைய உதவும்.

ஆனால் பிழைகளையே நினைத்துக்கொண்டிருந்தால் எழுதுவது கடினமாகிவிடும்.அன்பர் ஞானசேகரன் சொல்வது சரி; போகப் போகச் சரியாகிவிடும்; தொடர்ந்து எழுதுங்கள்.

நிறையப் படித்தல்வேண்டும்.

வாழ்த்துகள்.

- அ. நம்பி

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

geethappriyan said...

ரொம்ப வேதனையான விஷயம்
நான் படிப்பில் கடைசிபென்ச் மாணவன்
என்னைப்போல எவனும் மட்டமாக படிக்க முடியாது
ஆனாலும் வெகுஜன இதழ்களை வெறியோடு படித்த அனுபவம் நன்கு உதவுகிறது.குமுதம் ஆனந்தவிகடனுக்கு நன்றி

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஞானசேகரன் சார்
வருகைக்கு நன்றி மிக்ஸ் (இது என்ன மிக்ஸ்?)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நம்பி சார்
வருகைக்கு நன்றி உலவு
நன்றி கார்த்திக், நானும் குமுதம் விகடன் தொடர்ந்து படிப்பவந்தான் ஆனாலும், எழுத்தில் தவறு வந்து விடுகிறது.