Sep 15, 2009

உங்கள் பிலாக்கை பிரபலமாக்க

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரபலமாக்கனுமா?

வழி #1 
முடிந்த அளவு அனைத்து தமிழ் திரட்டிகளிலும் உங்களின் பதிவு வெளியுடுமாறு செய்யவும், அதாவது தமிழ்மணம், தமிழ்ஸ்... இப்படி.

வழி #2 
நீங்கள் வெளியிடுவது அனைத்து மக்களுக்கு போய் சேர சர்ச் இஞ்சினின் உதவியும் வேண்டும். அதாவது நமக்கு ஏதாவது தேவை என்றால் கூகுள் வெப்சைட்டில் சென்று தேடுகிறோம், அதே போல்  உங்களது பதிவு கூகுள் சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், கூகுள் மட்டும் அல்ல பல சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், சில மாற்றம் செய்ய வேண்டும்.  பிலாக்ஸ்பாட் இயல்பாகவே இவ்வசதியை மறைத்து வைத்துள்ளது.

அதை செய்வதற்கு உங்கள் பிலாக்கர் அக்கவுண்டில் சென்று பிறகு
Dashboard -> Layout -> Edit HTML செல்லவும். அங்கு இருக்கும் Expand Widget Templates என்ற டிக் பட்டனை கிளிக் செய்து. 









இப்படத்தில் இருக்கும் 'nofollow' என்பதை 'follow' என்று மாத்திவிடவும். பிறகு சேவ் செய்து விடவும்.


வழி #3
முதலில் கூகுள் அனலையிக்ஸ் என்ன என்று பார்த்து விடுவோம். நீங்கள் சொந்தமாக பிளாக் அல்லது வலை வைத்திள்ளீர்களா?   அவ்வலைக்கு வருகை தரும் பார்வையாளர்களின் சாரசரி பற்றி அறிய நினைக்கிறீர்களா?  நாம் இதற்காக மற்ற நிறுவனம் தயாரித்தவகைலையே உபயோகப்படுத்துகிறோம். இப்போது கூகுள் முற்றிலுமாக இலவசமாக இதை தருகிறது. 

இதை உபயோகப்படுத்துவதினால் 
1. கூகுள் SEO  நம்மை இனைத்து கொள்கிறது.
2. நமக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும்
3. வருகைதருபவர்கள் எங்கிருந்து வந்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளளாம்
4. வருகைதருபவர்கள் எண்ணிக்கையும் பிறகு அவர்களால் படிக்கப்பட்ட பதிவும் எவை எவை என்று துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
5. தேதி வாரியாக அறிந்து கொள்ளலாம்.
இன்னும் பலவேறு பலன்கள் உண்டு.

இதை நடைமுறை படுத்த

1. http://www.google.com/analytics/ உங்களை பற்றி பதிவு செய்யுங்கள்

கீழ்வரும் படங்களில் உள்ளது போல் தொடர்ந்து செய்யவும்












முதலில் பதிவு









உங்கள் தளத்னைப் பற்றிய தகவல்களை தரவும்.









உங்களை பற்றிய தகவல்களை தரவும்.



"Yes, Agree" என்ற டிக் மார்க்கை டிக் செய்து விட்டு "Create New Account" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

சரியான முறையில் உங்கள் கணக்கு பதிவாகிவிட்டால்







இப்படி ட்ராக்கிங் பேஜ் கமிக்கபடும்.

இதுதான் மிகவும் முக்கியம்.

இதில் உள்ள கோட் காப்பி செய்து

உங்களது பதிவில் போடவேண்டும்.





அதை செய்வதற்கு உங்கள் பிலாக்கர் அக்கவுண்டில் சென்று பிறகு

Dashboard -> Layout -> Edit HTML செல்லவும். அங்கு இருக்கும் Expand Widget Templates என்ற டிக் பட்டனை கிளிக் செய்து.






என்று இருப்பதை தேடி அதற்கு முன்பு அக்கோட போடவேண்டும்.






 






பிறகு சேவ் செய்து விடுங்கள்.

உஸ் அப்பாட... அவ்வளவுதான் முடிந்தது.

பிறகு நீங்களும் சொல்லலாம் "நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்" :D

நீங்க விரைவில் மிகவும் பிரபலமடைய வாழ்த்துக்கள்.



கடைசியா ஒன்னு...:  பிலாக்கை பிரபலமாடைய வைக்க,  அடிக்கடி பதிவிடுதலும், பின்னூட்டத்துக்கு பதிலளித்தலும் முக்கியம். ரெம்ப பெரிய எழுத்து திறமைலாம் தேவையே இல்லை. அட, எந்த திறமையும் தேவையே இல்லை. பல பேரு இப்படிதானே இங்கே குப்பை கொட்டுறாங்க.


கட்ட கடைசியா இன்னும் ஒன்னு...: உங்களின் புரோபைலின் பெயர் பெண்பாலில் வைத்து இருந்தால்... ஹிட்டோ ஹிட்டுதான்.

30 comments :

கிரி said...

//உங்களது பதிவு கூகுள் சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், கூகுள் மட்டும் அல்ல பல சர்ச் இஞ்சினில் தேடப்படவேண்டும் என்றால், சில மாற்றம் செய்ய வேண்டும். பிலாக்ஸ்பாட் இயல்பாகவே இவ்வசதியை மறைத்து வைத்துள்ளது. //

இதற்க்கு Webmaster Tools ல் நம் பதிவை இணைத்து crawl செய்ய வேண்டியது அவசியம்.

நீங்கள் கூறியது புதிய விசயமாக உள்ளது.. முயற்சித்து பார்க்கிறேன்

நன்றி

கோவி.கண்ணன் said...

சிறப்பான தகவல்கள்.

மிக்க நன்றி !

Unknown said...

வருகைக்கு நன்றி கிரி.
முயற்சிங்கள்.
பிறகு இங்கு தெரிவிங்கள். :)

Unknown said...

வருகைக்கு நன்றி கோவி. :)

செ.பொ. கோபிநாத் said...

பயனுள்ள பதிவு சகா...

Unknown said...

வருகைக்கு நன்றி கோபிநாத்

பீர் | Peer said...

வழி 2,
இப்பவே தேடுதளங்கள் என் பதிவை காட்டுகிறது, இருந்தும் மாற்றம் செய்ய வேண்டுமா?

Unknown said...

ஆம் பீர். மாற்றம் செஞ்சுதான் பாருங்களேன்.

Robin said...

//ரெம்ப பெரிய எழுத்து திறமைலாம் தேவையே இல்லை. அட, எந்த திறமையும் தேவையே இல்லை. பல பேரு இப்படிதானே இங்கே குப்பை கொட்டுறாங்க.// True!

Unknown said...

வருகைக்கும் அடிக்கடி வந்து ஊக்கிவிப்பதற்க்கும் நன்றி ராபின்

ஹிஹி உண்மைதான். :)

மாடல மறையோன் said...

கடைசியில் சொன்னதுதான் ரொம்ப பலன் தரும். அப்படி பெண்ணென நினைத்து, நம் பதிவில் நுழைபவர்களிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்?

அவர்களுக்கு நேரம் ‘கிக்’காகபோக வேண்டும். அவ்வளவுதான். நமக்கு அதிலென்றும் திருப்தி கிடைக்காது.

"Fit friends though few"

மாடல மறையோன் said...

I appreciate your help to the new and obscured bloggers like me.

I have recently opened my blog, which does not even appear in Tamilmanam net. But it appeared in Tamilish.

Thank you.

இமலாதித்தன் said...

nandri thala....

Unknown said...

வருகைக்கு நன்றி ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ

இவ்வளவு பெரிய பேரா???? :)

நானும் முடிந்த அளவு பிலாக்கில் செய்யப்படும் மாற்றங்களையும் புது விசயம் இனைப்பதையும் பற்றி பதிவிடுகிறேன்

Unknown said...

வருகைக்கு நன்றி பாலாஜி.ச.இமலாதித்தன்.

வர வர எல்லாம் புதுப்பேராவே இருக்கு.. ஏன் இப்படி? இதுதான் உங்க உண்மை பெயரா?

Anonymous said...

tnx

geethappriyan said...

உங்க நல்ல எண்ணம் வாழ்க.
ஓட்டு போட்டாச்சு.
உங்க பழைய டெம்பிலேட் நன்றாக இருந்தது பாஸ்.
ஏன் மாற்றினீர்கள்?

ஜோதிஜி said...

உள்ளதைக் கண்டு உள்ளத்தில் வந்த வார்த்தைகளுக்கு நன்றி.

மு.இரா said...

நன்றி

George Ananth said...

Thanks for your nice Information..........

Unknown said...

வருகைக்கு நன்றி கார்த்திக்கேயன்.

புது டெம்பிலேட்டும் நல்லாதானே இருக்கு :)

Unknown said...

வருகைக்கு நன்றி ஜோதிஜி. தேவியர் இல்லம்.
வருகைக்கு நன்றி மு.இரா
வருகைக்கு நன்றி ஜார்ஜ்

அன்புடன் மலிக்கா said...

நல்ல பகிர்வு நானும் இதேபோல் செய்துவிட்டு மீண்டும் வருகிறேன் பின்னூட்டம் இட

அப்பப்ப நீங்களும் எங்கப்பக்கம் வாங்க

NO said...

அன்பான நண்பர் திரு மஸ்தான்,

முக்கிய விடயங்களை விட்டு விட்டு ஏதேதோ பதிவு செய்திருக்கிறீர்கள்!
உங்களுக்கு என் வன்மையான கண்டனங்கள்!!!!

உங்கள் பிளாக்கை பிரபலமாக்குவது எப்படி

வழி 1 :

முடிந்த அளவுக்கு எல்லா பதிவர் பதிவுகளுக்கும் சென்று சூப்பர், நல்ல இருக்கு, அசத்திட்டீங்க, கலக்கிட்டீங்க, அருமை என்று சும்மானக்கா பின்னூட்டம் போடவும்! அவர்களும் உங்கள் பிளாகிற்கு வந்து அதயே செய்வார்கள். நீங்களும் பிரபலம் அடையலாம்.

வழி 2:

உன்னைப்போல் ஒருவன் என்ற ஒரு சினிமா படத்திற்கு விமர்சனம் எழுதுங்கள், அதுவும் கண்டபடி திட்டி, கண்டிப்பாக பிரபலமாவீர்கள்! உங்களைப்பாராட்டியும் திட்டியும் நிறைய பின்னூட்டம் போடுவார்கள். நீங்களும் பிரபலமாகலாம்!

வழி 3:

கேள்வி பதில் எழுதுங்க, அதாவது சுமார் பத்து அல்லது இருபது மொக்கையான கேள்விகளை நீங்களே தயார் செய்து, அதற்க்கு நீங்களே மொக்கையாக பதில் எழுதுங்க! இதில் முக்கியம் எல்லாகேள்விகளிலும் யாரவது ஒரு பதிவரை ஆஹா ஹோ ஹோ என்று உயர்த்தி எழுதி நீங்கதான் எனக்கு உற்ச்சாகம் கொடுத்தது என்றெல்லாம் சும்மா அடிச்சி உடுங்க. நீங்களும் பிரபலமாகலாம்!

மேல கொடுத்தது சில முக்கியமான சாம்பிள்கள்தான்..... இன்னும் நிறைய இருக்கு .... விரும்புவர்கள் திரு கோவி அண்ணனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்!

நன்றி

vijay said...

No said...
அன்பான நண்பர் திரு மஸ்தான்,

முக்கிய விடயங்களை விட்டு விட்டு ஏதேதோ பதிவு செய்திருக்கிறீர்கள்!
உங்களுக்கு என் வன்மையான கண்டனங்கள்!!!!

உங்கள் பிளாக்கை பிரபலமாக்குவது எப்படி

வழி 1 :

முடிந்த அளவுக்கு எல்லா பதிவர் பதிவுகளுக்கும் சென்று சூப்பர், நல்ல இருக்கு, அசத்திட்டீங்க, கலக்கிட்டீங்க, அருமை என்று சும்மானக்கா பின்னூட்டம் போடவும்! அவர்களும் உங்கள் பிளாகிற்கு வந்து அதயே செய்வார்கள். நீங்களும் பிரபலம் அடையலாம்.

வழி 2:

உன்னைப்போல் ஒருவன் என்ற ஒரு சினிமா படத்திற்கு விமர்சனம் எழுதுங்கள், அதுவும் கண்டபடி திட்டி, கண்டிப்பாக பிரபலமாவீர்கள்! உங்களைப்பாராட்டியும் திட்டியும் நிறைய பின்னூட்டம் போடுவார்கள். நீங்களும் பிரபலமாகலாம்!

வழி 3:

கேள்வி பதில் எழுதுங்க, அதாவது சுமார் பத்து அல்லது இருபது மொக்கையான கேள்விகளை நீங்களே தயார் செய்து, அதற்க்கு நீங்களே மொக்கையாக பதில் எழுதுங்க! இதில் முக்கியம் எல்லாகேள்விகளிலும் யாரவது ஒரு பதிவரை ஆஹா ஹோ ஹோ என்று உயர்த்தி எழுதி நீங்கதான் எனக்கு உற்ச்சாகம் கொடுத்தது என்றெல்லாம் சும்மா அடிச்சி உடுங்க. நீங்களும் பிரபலமாகலாம்!

மேல கொடுத்தது சில முக்கியமான சாம்பிள்கள்தான்..... இன்னும் நிறைய இருக்கு .... விரும்புவர்கள் திரு கோவி அண்ணனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்!

நன்றி



hehehe.. ippadi pannuna famous ahalama?

Prathap Kumar S. said...

//கட்ட கடைசியா இன்னும் ஒன்னு...: உங்களின் புரோபைலின் பெயர் பெண்பாலில் வைத்து இருந்தால்... ஹிட்டோ ஹிட்டுதான். //

ஆஹா... இப்படி ஒரு மேட்டரு இருக்கா...


நல்ல பயனுள்ள தகவல்...நானும் செய்துட்டேன்..

அப்புறம் நாம கொடுக்குற லேபிள் கூட அதிகமா தேடப்படற வார்த்தைகளை கொடுத்த நம்ம பிளாக் கொடுத்தா சர்ச் என்ஜீன் மூலம் சுட்டப்பட வாய்ப்பு இருக்கிறது...

மகா said...

its really usefull.......

thiyaa said...

பயனுள்ள பதிவு

earnguru said...

ரொம்ப நன்றிங்கண்ணா !!!!

Sibhi Kumar SenthilKumar said...

உங்களின் அறிவுரைப்படி நான் மாற்றம் செய்தவுடன் Google' ல் என் வலைப்பூவை கண்டேன். மிகவும் மகிழ்சியாக உள்ளது.

'என்னத்த போட்டு என்னத்த செய்ய? யாரும் பார்க்க வசதியாக இல்லையே' என்று வெந்து கொண்டிருந்தேன். அதற்கு மருந்து கொடுத்ததற்கு நன்றி . நேரமிருந்தால் என் வலைப்பூவை ஒருமுறை பாருங்கள்.