இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ரமலான் வந்தாலே மிகவும் சந்தோசம்தான். அந்த மாதம் முழுவதும்...
காலையில் 3 மணிக்கு எழுந்து, சாப்பிட்டு விட்டு, பிறகு தொழுதுவிட்டு காலாற காற்று வாங்க நடந்து கொண்டு வீட்டுக்கு வருவேன்.
பக்கத்தில் எல்லாம் இருந்து சாப்பிட முடியாமல்... தண்ணீர் கூட குடிக்காமல்; இரவு 6:30 வரை பொருந்திருந்து உணவு உண்பது... அல்ஹம்துலில்லாஹ்.
நோன்பு நேரங்களில் தான் அதிகம் தண்ணீர் தாகம் எடுக்கும். நமக்காக ஏதாவது சோதனை நடக்கும், எல்லாவற்றையும் அடக்கு கொண்டு. 30 நாட்கள் பிடிக்கும் நோன்பு, எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
இதுவரை நான் 30 நோன்புகளை பிடித்ததே இல்லை :( நானும் ஒவ்வொரு தடவையும் முயற்சி செய்கிறேன், ஏதாவது ஒரு விதத்தில் தட்டி போய் விடுகிறது. இந்த தடவை எனக்கு காய்ச்சல் வந்ததால் 4 நோன்பு விட்டுவிட்டேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த வருசமாவது பிடிக்கனும்.
30 நாட்களும் கழிந்தவுடன் கொண்டாடும் மகிழ்ச்சி இருக்கிறதே அது எதற்கும் ஈடு ஆகாது. ஒரே சந்தோசம் தான். இனிமேல் தொடர்ந்து சாப்பிடலாம் என்ற எண்ணம் கூட காரனமாய் இருக்கலாம், ஹிஹி..
2 comments :
ஈத் முபாரக்
eid mubarak to all
Post a Comment