Jan 11, 2010

தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் இருக்க

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சமிபத்தில் அதிக அதிகமாக நான் கேள்வி படுகிற விசயம், தமிழ்மணத்தில் நெகட்டிவ் வோட் விழுவதை பற்றி, சில பேர் வேண்டும் என்றும் வேண்டாம் என்று சொல்கின்றனர். யார் யார் நெகட்டிவ் வோட் போட்டார்கள் என்றே நமக்கு தெரியவில்லை... தெரிந்தால் ஏதாவது செய்யலாம் அல்லவா... :) சரி... நெகட்டிவ் வோட் முறை இருந்தால் தானே நெகட்டிவ் வோட்டு போடுவார்க்ள், ஏதாவது ஹேக் முறையில் அதை மாற்றிவிட்டால்... இப்படி யோசித்து நான் ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் மாற்றுவதற்கு வழி கண்டு பிடித்துள்ளேன்... 


நான் சொல்கிற வழியில் சென்றால் ஈஸியாக தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு விழாமல் தடுத்து விடலாம்.


முதலில் உங்கள் Blogger அக்கவுண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

Blogger -> Layout -> Edit HTML

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து பத்திரமாக வைத்து கொள்ளுங்கள், ஏதாவது தப்பா ஆகி அப்பறம் குய்யோ முய்யோன்னு குதிக்க கூடாது. :)

Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.

tamilmaNam.NET toolbar code starts எனும் எழுத்தை வைத்து தேடவும், அதற்கு கீழ்
< script expr:src="http://services.thamizmanam.com/toolbar.php என்று ஆரம்பாகி இருக்கும், அந்த இடத்தில் < script id="tamilvote" expr:src="'http://services என்பதை சேருங்கள், அதாவது id="tamilvote" என்பதை இணைக்கவேண்டும்.

அடுத்து </head>
என்பதை வைத்து தேடுங்கள், கண்டு பிடித்த பிறகு
அதற்கு முன்பு இக்கோடிங்கை சேர்க்கவும்


<script>

function setval()

{

document.getElementById('tamilvote').parentNode.innerHTML=document.getElementById('tamilvote').parentNode.innerHTML.replace(/http:\/\/tamilmanam.net\/rpostrating.php\?s=N/gi, 'http://www.google.com/search?q=mastanoli.blogspot.com');

}

</script>

சேர்த்ததுக்கு பிறகு <body>
என்பதை தேடவும்
அங்கு <body OnLoad="setval()"> என்று மாத்தவும்... அதாவது பாடி டேக்கில் OnLoad="setval()" என்பதை சேர்க்க வேண்டும் அவ்வளவுதான்.

இனிமேல் உங்களுக்கு தமிழ்மணத்தில் ஒரு நெகட்டிவ் ஓட்டு கூட விழாது.

செய்து பார்த்துவிட்டு கூறவும்
வாழ்க ஹேக்கிங் :D

11 comments :

Unknown said...

now I changed it! :)

geethappriyan said...

என்ன மஸ்தான் ந்லம்தானே? உங்க பதிவுக்கு நீங்க அந்த கோடை பயன்படுத்தலையா?
:)
--------
இது எல்லாம் எதுக்கு?பாஸ்,நெகெடிவ் ஓட்டு போட்டால் போடட்டும்,அதுல ஒரு இன்பம் சிலருக்கு,சிலர் நான் நெகெட்டிவ் ஓட்டு போட்டென் என சொல்லிவிட்டெ போடுகின்றனர்,
--------
ரொம்ப நாளா நம்ம பக்கம் வ்ரவேயில்லையே?

Unknown said...

நலம்தான் கார்த்திக்கேயனும், நீங்கள் எப்படி???

நான் வேறு ஒரு சில ஸ்ரிப்டை இணைக்கும் போது யாரோ, இரண்டு - ஓட்டு போட்டுடாங்க :( சரி போகட்டும்... ட்ரை செய்துதான் பார்ப்பது

Unknown said...

in firefox it doesnt working :(

calmmen said...

ungal blog design and content super

good luck

karurkirukkan.blogspot.com

Sanjai Gandhi said...

ஆஹா.. இப்டி எல்லாம் கிளம்பிட்டிங்களா? :)

மகா said...

thanks for the post...

பீர் | Peer said...

மஸ்தான், 6 - ஓட்டு விழுந்திருக்கு. அத்தனை பேரும் உங்க பதிவிலேயே முயற்சி பண்ணி பார்த்திருக்காங்க போல. :)

உண்மைய சொல்லணும்னா, நான்கூட முதலில் - ஓட்டு முயற்சி செய்தேன். முடியவில்லை... அதனாலே, + ஓட்டு போட்டிருக்கேன்.

ஆனாலும், கார்த்திகேயனை வழிமொழிகிறேன். பதிவு சரியில்லை என்றால் - ஓட்டு போடுவதில் என்ன தவறு?

Anonymous said...

நான் இப்போ ஒரு மைனஸ் ஓட்டு போட்டிருக்கேன் எப்பூடி.... நாங்க எத்தனுக்கெல்லாம் எத்தனுங்க.

Unknown said...

என்னுடைய ஹேக் இத்துபோன மைக்ரோசாப்ட் IE மட்டும்தான் வேலை செய்யுது, மத்த எல்லாதுலையும் வெகட்டிவ் வோட் விழுது. யாரே நல்லாருப்பாங்க (?) 13 வோட்ல 9 வோட் வெகட்டிவ் வோட்டாவே போட்டிருக்காங்க :( சரி சரி நல்லாருந்துட்டு போகட்டும்...

விரைவில் மத்த எல்லாதுக்கும் ஹேக் கண்டுபுடுச்சுடுவோம். :D

நாங்களும் நாங்களும் எத்தனுக்கெல்லாம் எத்தனுங்க. ஹிஹி

ஓட்டுக்கு நன்றி கார்த்திக்கேயன், பாஸ், சஞ்சய், மகா, பீர்ஜி :) நல்லாருங்கப்பா... :D

Anonymous said...

good innovative, but in unethical direction. Please try to develop something really useful to people. you have that capability.

P.S. http://tamilmanam.net/rpostrating.php?s=n&i=450082 This the secret for puting negative vote