இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
திருட்டு விசிடி விற்பவர் பிடிபட்டார், ஓடி பிடித்தோம் வலை வீசி பிடித்தோம் என தினந்தோறும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. தினசரி பத்திரிக்கைகளும் அதற்காக சில பத்தியை ஒதுக்கி இருக்கும் போல், மிகச்சரியாக அவ்விடத்தில் சிலபேர் போட்டோவை வெளியிடுவார்கள். விசிடி என்பதே தப்பு எந்த படத்தை இப்போது விசிடி அடக்க முடிகிறது? டிவிடி, புளுரேய் என்று முன்னேறிக் கொண்டிறிக்கிறார்கள். இன்னும் விசிடி? ஹும்ம்ம்...சரி, விற்பவர் பிடிபட்டார், விற்பவர் பிடிபட்டார்... என்பவர்கள், இதையும் அவர்கள் வேறிடத்திலுருந்துதானே வாங்கி கொண்டுவந்திருக்க வேண்டும் அந்த தயாரிப்பாளர்(?) என்ன ஆனார், அவரை பற்றி எதற்கு எந்த நியுஸ் இல்லை??? திருட்டு விசிடி விற்பவர்கள் உண்மையில் மிகவும் பாவம், ஒரு டிவிடி விற்றால் அதிகபட்சம் 10 ருபாய் கிடைக்குமா? 10 ருபாய்க்கு ஆசைப்படுபவற்களுக்கு குண்டர்சட்டம் எல்லாம் பாயுது... இவைகள் சாதாரண டிவிடி விற்பவர்களுக்கே பாயவேண்டுமா... நம்ம நாட்டுலதான் சட்டத்தை மிகவும் திறன் பட பயன்படுத்துகிறார்கள்.
நான் சொல்ல வந்ததே வேற மேட்டரு... அதாவது ஏதாவது ஒரு புதிய தொழில்நுட்பம் வரும் பொழுது அதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்... இல்ல, மாட்டேன், என்னால் முடியாதுன்னு சொன்னா அந்த தொழில்நுட்பம் நம்மை சீண்டித்தான் செல்லும். தொழில்நுட்பம் என்பது சுனாமி மாதிரி அப்படியே அடிச்சு தூக்கிபோட்டு போய்கிட்டே இருக்கும்... இப்ப எல்லாம் சின்ன மொபைல் போனில் 10 MP கேமரா வந்துடுச்சு... ரொம்ப ரொம்ப ஈஸியா படம் எடுத்து போய்கிட்டே இருக்கலாம். படம் எடுக்குறது மட்டும் இல்லை, அதை ஆன்லைனில் வெளியிடுவதும் மிக மிக எளிதான காரியம். டிவிடி தொழில்நுட்பத்தை கண்டிப்பாக திரைத்துறையினர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
ஒரு படத்தை இருவர் பார்க்க சென்றால் குறைந்தது 350 - 500 ருபாய் ஆகும்... டிக்கட் விலை குறைந்தது 80 முதல் 150 வரை இது கவுண்டரில் வாங்கினால்தான் பிளாக்கில் வாங்கினால் இரண்டுமடங்கு விலை, வெளியே 22 ருபாய்க்கு விற்கும் கோக்கோ பெப்சியோ 50 ருபாய்க்குமேல். அதையெல்லாம் விட 6 ருபாய்க்கு வாங்கும் சமோசா குறைந்தது 20 ருபாய் முதல் 30 ருபாய் வரை... இப்படி கொள்ளை மேல் கொள்ளை, இவற்றை சரி செய்வதற்கு எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளர்களோ, நடிகர்களோ முன்வரவில்லை... திருட்டு விசிடி திருட்டு விசிடி என்று ஆவூன்னா முதல்வரை பார்க்க போய் விடுகிறார்கள், என்ன ஒரு பிஸியான வேலை இருந்தாலும் முதல்வர் திரைத்துறையினறை பார்க்க மட்டும் தவறுவதில்லை. குண்டர்சட்டமும் பாஞ்சுக்கிட்டேதான் இருக்கு, ஏதாவது தடுக்க முடிந்ததா???
கண்டிப்பா முடியாது... ஒரு படம் வெளியிடும் போதே அதன் டிவிடி பதிப்பையும் வெளியிட்டால் ஓரளவிற்கு இதை தடுக்கலாம். விலையையும் ஓரளவிற்கு நியாயமாக வைத்தால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாது, தியேட்டரில் படம் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக அங்குதான் பார்பார்கள். திருட்டு விசிடியும் ஒழியும்.
2 comments :
//ஒரு படம் வெளியிடும் போதே அதன் டிவிடி பதிப்பையிம் வெளியிட்டால் ஓரளவிற்கு இதை தடுக்கலாம். //
எத்தனை மணிநேரப் படமானாலும் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து ஒருமணி நேரத்திற்குள்ளேயே பார்த்து முடிக்கிற என்னைப்போன்ற பொறுமையில்லாதவர்களுக்கும் இம்முறை மிகுந்த பயனளிக்கும்.
அருமையான கருத்து
Post a Comment