வேறு ஒரு தளத்தில் இதை பார்த்தேன், பிடித்திருந்தது... அதான் பகிறலாமே என்று...
முதலிலே சொல்லிவிடுகிறேன், கடவுள் மேல் எனக்கு அபாரமான நம்பிக்கை உள்ளது, ஓரிறை கொள்கை கொண்டுள்ளேன். என்னுடைய கடவுள் நம்பிக்கையவும் இதோடு தொடர்புபடுத்தாதீர்கள்.
சரி விதி ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
விதி சரிதானா?
மிகவும் குழப்பதிற்கூறியது.
அனைவராலும் ஏதாவது ஒரு நேரத்தில், ஏதாவது ஒரு காரணத்தினால் விதியின் மேல் பாரத்தை போட்டுள்ளுனர்.
அனைத்து மதத்தினரும் விதியை ஏற்றுக்கொண்டுள்ளனர்… அதாவது மத நூல்கள் கூறியதில் ஏதாவது ஆராய்ந்து கேள்வி கேட்டோம் ஏன்றால், உடனடியாக விதியைதான் காரணம் காட்டுவார்கள். இது மட்டுமல்ல, நம்மால் ஏற்றூக்கொள்ள முடியாத, புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று நடக்கும் போதும் விதிதான் பழியை ஏற்றுக்கொள்கிறது.
பாவம் விதி, பாவப்பட்டு பாரம் சுமக்கின்றது.
நமக்கு அறியாத நம்மால் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு விசயங்கள் உலகத்தில் நடந்து கொண்டுள்ளன… அனைத்துக்கும் விதியை காரணம் காட்டமுடியுமா?
விதியின் படிதான் அனைத்தும் நடக்கின்றனவா?
விதி ஏற்றுக்கொள்ளும் அனைத்து மதவாதிகளும் ஒன்றை மறந்துவிடுகின்றனர், ஆதாவது, விதி கடவுள் நம்பிக்கையை தகர்த்துவிடும்.
விதியின் படி எது நடக்க இருந்த்தோ, அதுதான் நடந்த்து.
இப்போது நான் விதியை நம்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம், நான் எழுதும் இந்த பதிவும் முன்பே நான் இவ்வாறு எழுதுவேன் என்று தீர்மானிக்கப்பட்ட்தாருக்கும். ஆதாவது, விதியை நான் தூற்றி எழுதுவேன் என்று தீர்மானிக்கப்பட்டது.உலகத்தில் நடக்கும் விசயங்கள், முன்பே தீர்மானிக்கப்பட்டது, நாம் செய்யும் நன்மையும் தீமையும் முன்பே தீர்மானிக்கப்பட்டவை. இதன் மூலம், நன்மை செய்பவர்களே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது அடிபட்டு போகின்றது இல்லயா? விதியை நம்பும் பொழுது, இவற்றையும் நம்ப வேண்டயதுள்ளது.
நன்மை செய்யும் ஒருவர் சொர்கத்திற்கு செல்வார் என்பதும், தீமை செய்யும் ஒருவர் நரகத்திற்கு செல்வார் என்பதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளபடுகிறது. கடவுள் ஒருவர் செய்த நன்மை தீமையை பொருத்து தீர்ப்பளிப்பார், ஆனால் விதியின் படி ஒருவர் எங்கு செல்ல போகிறார் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டுள்ளது, இதன்படி கடவுளுக்கே தீர்ப்புக்கே ஒரு கேள்விக்குறி? கடவுள் ஏன் நரகத்திற்கு செல்பவர்களை படைக்க வேண்டும்? இன்னார்தான் சொர்கத்திற்கு செல்பவர்கள் என்று எவ்வாறு முடிவெடுக்க படுகிறது. விதியின் படி ஏன் நரகம் செல்பவர்கள் தீமைகளால் ஆழ்படுகின்றனர். விதியை நம்பினால் இவற்றையும் நம்ப வேண்டியதுள்ளது.
இதை படிக்கும் போது மிகவும் குழப்பமாக தோன்றலாம், ஆனால்.... உண்மையாகவே உள்ளது, பொதுவாக எல்லா மதத்திலும் எல்லாம் உன் விதிபடிதான் நடக்கும் என்பார்கள் அல்லது கோள்களின் படி நடக்கும் என்பார்கள் எப்படியோ நமது வாழ்க்கையை வேறு சில விசயங்கள்தான் தீர்மானிக்கின்றன, ஆனாலும் அதை நம்ப(லாம்???) கூடாது.
கஷ்டகாலம் படுச்சவுடனே தலை சுத்த ஆரம்புச்சுடுச்சு :(
மத நம்பிக்கையின் படி, நல்லது செய்தால் சொர்க்கமும்/முக்தியும்; கெட்டது செய்தால் நரகமும்/மீண்டும் பிறப்பு கிடைக்கும் இல்லையா? இப்போது ஒருவர் ஏதோ நல்லது செய்கிறார் என்றால் அவர் ஏற்கனவே நல்லது செய்வார் என்று தீர்மானிக்க பட்டுள்ளது இல்லையா, அதே போல் ஒருவர் ஒருவரை கொலை செய்து விட்டார் என்றால் அதாவது தப்பு செய்துவிட்டார் என்றால் ஏற்கனவே இது தீர்மானிக்க பட்டதாகத்த்னே அர்த்தம் அதாவது இன்னார் இன்னாரால் கொலை செய்யபடுவார் என்று, அப்படி கொலை செய்பவருக்கு தீமையிம் செய்யப்பட்டவர் வேறு ஒன்றையும் அடைவார்கள் விதி/கோள்கள் படி. சோ கொலை செய்தவர் தண்டனைக்கு உள்ளாகிறார் அதாவது நரகத்திற்கோ மீண்டும் மனித பிறப்போ எடுக்கிறார், அப்படி என்றால் இன்னார்தான் இப்படிதான் என்று ஏற்கனவே தீர்மானிக்கபட்டுள்ளது இல்லையா?
இதை நினைத்தாலே மிகவும் குழப்பமாக உள்ளது, தயவு செய்து இதை பற்றி தெரிந்தவர்கள் விளக்கினால் மிகவும் நன்று.
5 comments :
ஏன் இந்த குழப்பம்?. நம் விதி எப்படியோ அப்படியே. இதற்கு பதில் தெரிந்தவர் கடவுள் மட்டுமே.
கடவுள் நம்பிக்கையும் , விதியையும் ஒரு சேர நம்புவதால் இந்த பிரச்சனை எதாவது ஒன்றின் மேல் மட்டும் நம்பிக்கை கொண்டால் குழப்பம் வராது
samy
yellaam yen vidhi.........idhai padikkanum yendru irunthurukku...irunthaalum kulampa vendaam mr masthan,iraivan viruppa padi nadappathaithaan naam vidhi yendru solhirom......... ...RAJA MAS.......
பகிர்வுக்கு நன்றி
விதி வாழ்வின் ஒரு பகுதி.
வேட்டைக்காரன் காட்டுக்கு வேட்டையாட சென்றான் . மரத்தின் மேல் கிளையில் அமர்ந்திருந்த புறாவைக் குறி வைத்து அம்பு எய்தினான். குறி தவறியது. ஆனால் அவன் எய்த அம்பின் வில் அவன் தலையில் வீழ்ந்து அவன் மாண்டான். அந்த வழி வந்த நரி அந்த அம்பின் நாணலைக் கடிக்க அந்த அம்பின் நாணல் அறுந்து நரியின் பொட்டில் தாக்க நரி மாண்டது.
புறா பறந்து தப்பித்தது ஆனால் மனிதனும் இறந்தான், நரியும் மாண்டது. இதுதான் விதி. விதி வாழ்வின் ஒரு பகுதி .விதியை மதியால் வெல்ல முடியும் என்பர்.அதனை ஆராய்ச்சி செய்ய முயல்வது இரண்டு கால்களையும் நின்றபடி தூக்க முயலும் நிலைதான். விதியினை வெல்வோர் யார்! விதியின் பெயரைச் காரணம் காட்டி ஒரு காரியத்திலும் ஈடுபடாமல் இருந்தால் வாழ்வு ஒரு காணல் நீர்தான். அது இறைவன் வசம்தான் உள்ளது . மனமுறுகி இறைவனை வேண்டினால் அது மாற்றப் படலாம்.
நன்மையும், தீமையும் அல்லாஹ்விடமிருந்து
4:78. ''நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது'' என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, ''இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது'' என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்; ''எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கி
Post a Comment