Aug 13, 2010

சாவு கண்டிப்பா உண்டு உங்க வீட்டில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எனது நண்பருக்கு இப்படி ஒரு SMS வந்தது, வந்ததில் இருந்து பாவம் மனிதன் மிகவும் கவலையா இருக்கார். இப்படிமா SMS அனுப்புவாங்க? கொஞ்சமாவது அறிவு வேண்டாம், அந்த நம்பருக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை. ஏதாவது ஒரு SMS அனுப்ப வேண்டியது அதை எல்லாருக்கும் பார்வோர்டு செய்ய சொல்லுவது இல்லையென்றால் ஏதாவது தீமை ஏற்படும் என்று பயமுறுத்துவது. இப்படி பட்ட ஆசாமிகளை என்ன செய்தால் தகும்?



Today is Friday and 13th, Say GOD SAVE ME & forward this to 10 people else death will definitely occur in your family. No stupid comedy please send back this sms.




வர வர மொபயிலில் SMS தொல்லை அதிகமாய் விட்டது, எல்லாத்துக்கும் SMS அனுப்ப ஆரம்புச்சுட்டாங்க. வீடு லோன் இப்ப அதிகமா வருது... எப்படி இதெல்லாம் தடை செய்றதுன்னு தெரியலை, மெயிலில் இருப்பதுபோல் ஸ்பாம் இருந்தால் நல்லாருக்கும் :)

சரி நார்மலான SMS வந்தா உடனே அழித்திடலாம், ஆனால் எனது நண்பருக்கு வந்தது போல் இருந்தால். எதுக்கு இப்படி கிருக்கு ஆட்கள் இருக்க வேண்டும்? "இதை செய் இல்லாட்டா சாவு கண்டிப்பா உண்டு" என்ன ஒரு பயமுறுத்தல், இவர்களை போலீஸில் ரிப்போர்ட் செய்ய யாராவது வழி சொல்லுங்களேன் பிளீஸ்.

6 comments :

Unknown said...

ராஜ், நீங்கள் கிருஸ்தவத மதத்தை தூற்றி எழுதிய பின்னூட்டத்தை வெளியிட முடியாது, சாரி. இங்கு எந்த மதத்தையும் விமர்ச்சிக்க மாட்டோம்.

பனித்துளி சங்கர் said...

ஹ ஹ ஹ இது என்னங்க மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கு . நண்பரிடம் சொல்லுங்கள் சாகப்போகிற காலம் தெரிந்துவிட்டால் வாழப்போகிற காலமும் நரகமாக மாறிவிடும் . இதெல்லாம் யாரோ வேலைவெட்டி இல்லாத ஆசாமி பண்ணியதுதான் என்று .

Unknown said...

எல்லோரும் ஒருநாள் சாகத்தானே போறோம்.அதுல என் குடும்பம் மட்டும் தப்பவா முடியும்.நாங்கல்லாம் செத்த பின்பு நீ மட்டும் தனியா இருந்து SMS அனுப்ப ஆளில்லாம அனுபவிப்ப அப்படின்னு ரிப்ளை அனுப்ப சொல்லுங்க.

அன்புடன் மலிக்கா said...

அச்சோ இப்படியெல்லாம்கூடவா அனுப்புவாங்க.

அவர்மட்டும் உலகிலிருந்து ஆண்டு அனுபவிக்கபோகிறார் போலும் போனப்போகுது அனுவிக்கட்டும். ஹா ஹா..

ரிஷபன்Meena said...

அதுக்காக நீங்க எதுக்கு இப்படி தலைப்பு வைக்கிறீங்க!

நீங்க ஆதங்கப்படுவதாக இருந்தால் வேறு தலைப்பை வைக்க வேண்டியது தானே.

நெருப்புன்னா நாக்கு வெந்திடாது தான் அதற்காக துக்கிரி தனமான இந்தத் தலைப்பை தமிழ் மனத்தில் பார்த்த போது எரிச்சல் தான் வந்தது.

Unknown said...

@ரிஷபன்Meena,

உங்களின் இந்த பின்னூட்டம் பார்த்தவுடன்தான், தவறு செய்துவிட்டோனோ என்று என்னுகிறேன், முன்பே தமிழ்மணத்தில் ஏற்றபட்டதால் தலைப்பை மாற்றுவதில் அர்த்தமில்லை.


தவறுக்கு வருந்துகிறேன்.