இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சாலைவிதி..., மாற்றம் செய்யவேண்டியது எவ்வளவோ உள்ளது, இன்னும் இதேபோல் தொடர்ந்து கொண்டிருந்தால் பெருநகரத்தில் இருப்பவர்கள் கடுமையான விரக்தி உள்ளாவர்கள்.
போக்குவரத்து நெரிசல் அதிகம் அதிகமாகி கொண்டே போகிறது, இப்போது கார் வாங்குவது என்பது ஒரு அவசியம் ஆகிவிட்டது, வரும்காலங்களின் கார் என்பது கட்டாயமாகிவிடும். ஆனால் சாலை வசதி மட்டும் மாறவே மாறாது, அப்படியே இருக்கும்... அதாவது போக்குவரத்து நெரிசல் தகுந்தார்போல் சாலையை மாற்ற மாட்டார்கள்... என்னதான் மெட்ரோ ரயில் விட்டாலும் கொஞ்ச நாளிலே போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்து விடும், இன்னும் 1900 போட்ட சட்ட திட்டங்களையோ கொண்டிருந்தால் வருங்காலத்தில் கண்டிப்பாக வருத்த படுவோம்.
சமிபத்தில் ஒரு சட்டம் போட்டிருக்கிறார்கள், என்னவென்றால் இ-சாலன் முறை, இ-சாலன் முறை வந்தால் மட்டும் திருந்திட போகிறார்களா என்ன? அவர் தொடர்ந்து தவறு செய்து கொண்டிருந்தால் அவரின் அத்யாவசிய தேவைகளான குடிநீர், மின்சாரம் போன்றவற்றை தடை செய்ய வேண்டும், அப்போது ஓரளவுக்கு தவறுகள் மட்டுபடும்.
சென்னை போன்ற பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் தனிமனித ஒழுக்கமின்மையாகும், எல்லாருக்கும் எங்கும் அவசரம்தான். ஒரு பகுதி ஒரு வழி சாலையாக இருந்தால் அதில்தான் தவறாக போக முயற்சிப்பார்கள், இதில் ஆட்டோ ஓட்டுனர் ஆகட்டும் அல்லது இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் ஆகட்டும்.... அனைவரும் தவறிலைப்பதில் குறைந்தவர்கள் அல்ல.
நான் பார்த்த வரை, சென்னையின் மற்றும் அனைத்து மாநகரங்களின் போக்குவரத்துக்கு மிக தேவையான ஒன்று, மஞ்சள் பெட்டி பகுதி (Yellow Box System) கொண்டுவருவதாகும். இது எதற்கு என்றால் நான்கு ரோடு சந்திக்கும் பகுதி என்றால் நேராக செல்பர்கள் குறுக்காக செல்பவர்களுக்கு தோதாக நிற்க வேண்டும், அதாவது மஞ்சள் ஒளிந்தவுடன் நிற்க ஆரபித்து, சிவப்பு ஒளிரும் போது நின்றுவிட வேண்டும் அதுதான் முறை, ஆனால் என்ன நடக்கிறது என்றால் ஒருவர் சீக்கிறமாக சென்றுவிட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் செல்லும் வழியை அடைத்து கொள்வார்கள்.
மஞ்சள் பெட்டி என்பது நடுவில் போடப்படும் ஒரு மஞ்சள் கட்டம் ஆகும், எதற்கு என்றால் அந்த கட்டத்திற்குள் எந்த வாகனமும் அதிக நேரம் நிற்க கூடாது.
கிழே இருப்பதுதான் மஞ்சள் பெட்டி
இப்ப நான் நேரே செல்லவேண்டும் என்றால் பச்சை விளக்கு எரிந்தால் மேலும் மஞ்சள் கட்டத்திற்குள் சிக்காமலும் இருக்க வேண்டும்; மஞ்சள் கட்டத்திற்குள் சிக்க கூடாது என்றால் நான் போக வேண்டிய அளவு இடம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும். கீழே உள்ள படத்தை பாருங்கள் 1ம் எண் வண்டி போவதற்கு பச்சை விளக்கு எரிந்தும் நிற்கிறது, ஏனேன்றால் 3ம் எண் வண்டி சென்றால்தான் அதனால் மஞ்சள் பெட்டியில் மாட்டாமல் செல்லமுடியும்; அதே நேரத்தில் 2ம் எண் வண்டி சென்று கொண்டியிருக்கிறது ஏனெறால் அந்த வண்டி எப்படியும் மஞ்சள் பெட்டி பகுதியில் நிற்க போவதில்லை. மஞ்சள் பெட்டியில் நின்றால் என்ன நடக்கும் மற்றவர்களின் (குறுக்காக செல்பவர்களின்) வழியை மறைத்து கொண்டிருப்பதினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
எவ்வளவு நல்ல விசயம் அல்லவா? யாராவது இதை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்து கொண்டு போங்களேன்.
11 comments :
நல்ல விஷயம்... அருமையான விளக்கம்...
மஞ்சள்பெட்டி நல்ல விஷயம் தான் ஆனால் அதையும் ஃபாலோ பண்ணனுமே நம்ம மக்கள்...
நிறைய நிறைய சாலைவிதிகள் கொண்டுவரணும்... இந்தியா மாதிரி ஜன நெருக்கடி நிறைந்த நாடுகள்தான் டிராஃபிக் கண்ட்ரோல் போன்ற விஷயங்களில் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் ஆனால் இதிலும் நாம் வெளிநாடுகளைப் பார்த்தும் கற்றுக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளோம்... ஷேம்!
கண்டிப்பா கொண்டுவரவேண்டும் பிரபு, நல்லா சொல்லிருக்கீங்க.
வரவுக்கு பின்னூட்டத்திற்கும் நன்றி பிரபு.
Who are going to pin your ears back this? Useless people.
--an unknown
Very nice flow.Good article
வித்தியாசமான பிரயோசனமானதுமான பதிவு
good one
அனு பின்னூட்டத்திற்கு நன்றி.
நன்றி ரோசினி.
நன்றி விஜய்
good
nice information... it should come to chennai.
-Ram
Post a Comment