இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த செய்தியை எவ்வளவு பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை, எதுவும் பரபரப்போ அல்லது நடிகை பற்றிய நிகழ்ச்சியே என்று யாரும் கண்டுகொள்ளாமல் கூட போய்விடலாம். பொதுவா இப்படிதானே நடக்குது.அதாவது உச்சநீதிமன்றம் மிகவும் வரவேற்க்க கூடிய தீர்ப்பை கூறி இருக்கிறது, ஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக்கீடு,
தட்ஸ்தமிழில் வந்த செய்தியை பாருங்கள்.
http://tamil.oneindia.in/news/2012/04/13/india-sc-stamp-on-right-education-poor-students-to-study-free-aid0174.html
கல்வி என்பது மாபெரும் வியாபரமாக போய்விட்ட நமது நாட்டில், கல்வி என்பது இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை எப்பாடி ஏற்படும்? 1000 ருபாய் முதல் போட்டவர்கள் 100 ருபாய் லாபம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் கல்வி வியாபரத்திலே முதலே போடாமல் லாபம் மட்டும்தானே, லாபத்தில் குறை ஏற்பட்டால் விடுவார்களா?
என்ன மனது இருந்தால் ஏழை குழந்தைகளுக்கு கல்வி தர முடியாது என்று நீதிமன்றம் சென்றிருப்பார்கள். அதுவும் 25 சதவீதம்... மீதி 75 சதவீதம் தாரளமாக கொள்ளை அடிக்கலாமே, யார் தட்டி கேட்க முடியும், அதுவும் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற பெயரால், இவர்களால் சிறுபான்மை மக்களுக்க் நன்மை என்றால் அதுவும் கிடையாது. ஒரு சிலர் வளரத்தான் எங்கும் எப்போதும் "சிறுபான்மை" என்ற சொல் பயன் படுது, இதை பற்றி தனியே தொடர் கட்டுரையே எழுத் முடியும். பிறந்தவுடனே ஸ்கூலில் சேர்க்கிற அவலம் நமது நாட்டில்தான் உள்ளது, ஏன்னா அப்பத்தான் நல்லா படிக்க முடியுமாம், ஆமாம் அப்படியே எல்லாரும் விஞ்ஞானிகளை உருவாக்கிறார்கள் பாருங்கள், நினைக்க நினைக்க மிகவும் எரிச்சாலத்தான் இருக்கு...
என்னுடைய எண்ணம் எல்லாம், அனைவருக்கும் சமமான இலவச கல்வியை கொடுக்க வேண்டும், ஏழை, நடுத்தர வகுப்பு, பணக்காரன் என்ற பாகுபாடு கல்வியில் இருக்கவே கூடாது, எல்லாரும் சமம் என்ற நிலை கல்வியில் இருந்துதான் வரவேண்டும். அரசாங்கத்தின் கேவலமான நிலைப்பாடால், கொள்ளை அடிப்பவர்கள்தான் அதிகமாகி கொண்டே செல்கின்றனர்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்க்க கூடியது.
2 comments :
//அதுவும் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற பெயரால், இவர்களால் சிறுபான்மை மக்களுக்க் நன்மை என்றால் அதுவும் கிடையாது. ஒரு சிலர் வளரத்தான் எங்கும் எப்போதும் "சிறுபான்மை" என்ற சொல் பயன் படுது
///
100% உண்மை
kareta sonna thala
Post a Comment