இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரிவினை...ஒரு மொழி பேசும் மக்களுக்குள்ளும் பிரிவினை...
தூண்டபடுகிறவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது இந்த அரசாங்கம்! எதற்காக போராட்டம்? தெலுங்கான பகுதியில்தான் ஆந்திராவின் தலைநகரம் அமைந்துள்ளது, ஆந்திராவை சேர்ந்த அனைத்து மக்களும் அங்கு வேலை பார்க்கத்தான் செய்வார்கள். தெலுங்கான பகுதியில் வேலை பார்ப்பவர்கள் அதிகமானோர் தெலுங்கான பகுதியை சேரதவர்களாம், எங்கள் ஏரியாவை சேராதர்கள் எப்படி எங்கள் இடத்தில் இருக்கவேண்டும், வேலை செய்யவேண்டும் என்று ஒளிவுமறைவான திட்டத்துடன்தான் தனிமாநிலம் கேட்டு போராடுகிறார்கள்.
மாநிலம் பிரிவதற்காக போராட்டம் நடத்தும் சந்திரசேகர ராவை காப்பாற்றுவதற்காக போராடும் மருத்துவர்கள் தெலுங்குதேசப் பகுதியை சேராதவர்களும் இருப்பார்கள். இவற்றை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா? 30 மருத்துவர் குழு அவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது. 30 மருத்துவர்களும் தெலுங்கு தேச பகுதியை சேர்ந்தவர்கள்தானா?
இதற்கு ஆதரவு தெரிவித்து மற்ற தேசிய(?) கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுள்ளது. தேசியம் பேசினாலே நாங்கள்தான் என்று மார்தட்டும் பிஜேபி எப்படி இதற்கு ஆதரவு தெரிவித்தது என்று தெரியவில்லை.
சொந்த மொழி ஆட்கள் மீது வெறுப்பாக இருக்கும் சந்திரசேகர ராவ் கட்சியினர் மாநிலம் பிரிக்கபட்டால் அங்கு பல காலமாக வசிக்கும் தமிழர்கள் மற்றும் மற்றவர்கள் மீதும் வெறுப்பை கக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
தெடர்ந்து பல நாட்களாக பந்த்... ஆந்திராவில் இயல்பு வாழ்க்கையே பாதுக்கபட்டது, இவ்வளவு சிக்கலாக ஆக்கிகொண்டது மாநில அரசாங்கம்தான், அவர் ஆரம்பித்தவுடனே தடுத்திருக்கவேண்டும்.
ஏற்கனவே நமது நாட்டில் மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்டதில் பிரிந்து போய் கிடக்கிறோம். இந்தியாவின் ஒரு சரிசரியான வளர்ச்சி எட்டாதற்கு மொழியால் பிரிந்து கிடப்பது ஒரு காரணம் ஆகும், யார் மறுத்தாலும் இது ஒரு கசப்பான உண்மையே. இந்தியர்கள் என்று பெருமை பேசும் நாம், இந்தியர் என்பதால் ஒன்றுபடுகிறோம் எனும் நாம், மொழி என்று வரும்போது மட்டும் அனைத்து விசயங்களிலும் கோட்டைவிட்டு விடுகிறோம், எனது மொழி பெரிதா உனது பெரிதா எனும் சண்டையிலே இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து கொண்டுயிருக்கிறோம்.
மொழியால் நமது நாடு பிரிந்து கிடப்பதினலே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, மொழிக்குள்ளும் பிரிவு ஏற்பட்டால்?
இப்படியே போனால் வீதிக்கு என்றும் ஜாதிக்கு என்றும் மாநில கோரிக்கை எழலாம்.
இந்தியா வல்லரசு ஆக அனைவரும் சேர்ந்து இருந்தலே நலம்.
1 comments :
வேற்று மாநிலத்தவர்கள்னு சொல்லி விலக்கினது போய், இப்ப மாநிலத்துக்குள்ளேயே பிரிவினையா?
இன்னும் இதமாதிரி எத்தன பேர் கிளம்புவாங்களோ.
Post a Comment