இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இப்போது உள்ள உலகத்தை இரண்டாக பிரிக்கலாம்.கமு கபி (கணிணி ஆட்சிக்கு முன் கணிணி ஆட்சிக்கு பின்)
நாங்கள் இருப்பது கபி 69 வருடம்.
ஏனென்றால் இப்போது அனைத்தையும் நிர்வாகிப்பது கணிணிதான்.
நாங்கள் இப்போது வசிப்பது பூமி கிரகத்தில் அருகில் இருக்கும் InD532 கிரகம், இதை எல்லாம் செயற்கை முறையில் கணிணியால் உருவாக்க பட்டவை. பூமியில் மனிதர்கள் வசிப்பதுக்கும் இடம் இல்லாததால், இவ்வாறு கணிணியே இடம் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.
எங்கள் InD532 கிரகத்தை பராமரிப்பது CCx93BB என்கிற கணிணிதான் அதுதான் எங்களின் தலைவன்.
இந்த சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து CCxxxxx ரக கணிணிகள் மட்டும் அனைத்தையும் பராமரித்து பாதுகாப்பது பூமியில் உள்ள Axhd எனும் கணிணியாகும், அதுதான் உலகத்தின் தலைவன்.
பிறப்பும் இறப்பும் கணிணி வசம் தான்.
எங்களை உருவாக்கியதும் கணிணிதான், அழிப்பதும் அதுவே.
மனிதர்கள் எந்த இடங்களில் தேவை என்பதை கணிணி முடிவு செய்யும், பிறகு BIOTECH முறையில் அவர்களை 52 நிமிடம் 12 வினாடிகளில் உருவாக்கிவிடும்.
அனைவருக்கும் 500 மாதங்கள் மட்டுமே இங்கு வசிப்பிடம். பிறகு மனிதனின் உயர்கூறு செல்களை அழித்துவிட்டு அவர்களின் மூளை எடுத்து அதன் அனைத்து தகவல்களையும் ஓளியின் சேமிப்புகிடங்கில் வைத்து விட்டு பிறகு மூளையை flush செய்து விட்டு அடுத்து உருவாக்கும் மனிதர்களுக்கு வைத்து விடும்.
மனித இனத்தை இன்னும் அழிக்காமல் விட்டு வைத்திருக்க காரணம், மனிதனின் சுய சிந்திக்கும் திறன், முக்கியமா மனித மூளையின் இடது பக்கம், இந்த ஒருவிசயத்தை கணிணியால் இன்னும் அடைய முடிய வில்லை. எங்களை உபயோகித்து பல்வேறு செயல்களை செய்து வருகிறது.
மனிதர்களின் மூளையில் மிக பெரிய அளவிலான கணிணி ஒன்று பொருத்த பட்டு அது மனிதனின் பிம்பமாமாய் இருக்கும்.
இங்கு அனைவரும் அனைத்து விசயங்களிலும் கண்காணிக்கப்படுவர்.
யார் எங்கிருந்தாலும் கணிணி அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து கொண்டே வரும், யாரும் தவறு செய்யவும் மாட்டார்கள், ஏன் என்றால் மனிதர்களுக்கு தவறு செய்யும் மூளையின் நியுட்ரான் செல்களை அழித்துவிட்டுதான் மனிதர்களின் உருவாக்கத்தை உறுதி செய்யும்.
கமு 250 வருடங்களில் மனிதர்களின் வாழ்ந்த வாழ்கை முறையை பற்றி படித்திருக்கிறேன். அப்போது ஆண், பெண் என்றும் ஜாதி மதம் என்றும் மொழி இனம், நாடு என்றும் பல்வேறு கூறுகளாக பிரிந்து இருந்ததை நினைத்து வியப்பாக இருக்கும், மேலும் மனிதர்களே மனிதர்களை உருவாக்குவார்கள் என்பதும் ஆணும் பெண்னும் சேர்ந்துதான் மனித இனம் உருவாகியது என்பதையும் எங்களால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.
அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்கைமுறை மிகவும் சிரமத்திற்கு உள்ளானது... ஒரு இடங்களில் இருந்து இன்னும் ஓர் இடங்களுக்கு தனது உடம்பின் மூலமா சென்றிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடிய விசயம்... நாங்கள் எங்களின் இயக்ககளை மற்றும் உடல் கூறுகளை மின்காந்தங்களாகா மாற்றி பயணம் செய்வோம். எங்களின் வேகம் நியுட்ரானின் வேகத்தை விடவும் வேகமானது.
புது பால்வெளியை கண்டுபிடிக்கும் வேலை எனக்கு, நானும் இப்போதுதான் வேலையை முடித்து வருகிறேன்.
வந்தவுடன்...
நான் இருக்கும் இடத்தில் Axhd கணிணி Virtual 4D முறையில் தோன்றி நான் மற்றும் அனைவர்களும் தனது பிம்பத்தையும் மக்கள் தொடர்புமையத்தை கண்டிப்பாக தொடர்பு கொள்ளுமாறு ஆணையிட்டது.
ஏதாவது மிக முக்கியமான காரணத்தை தவிர Axhd எங்களை தொடர்பு கொள்ளாது.
இதற்கு முன்பு ஒருமுறைதான் இப்படி தொடர்பு கொண்டிருக்கிறது.
எல்லாரும் தொடர்பு கொண்டவுடன் Axhd பேச ஆரம்பித்தது. "கமு காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் இயற்கை விரோத போக்கினால் சூரியனின் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்தது... மேலும் அது சூரியனுக்கு மிகவும் ஆபத்தாக மாறிவிட்டது... கடந்த பல வருங்களாகவே சூரியன் தனது செயல்பாட்டை இழந்து வருகிறது. நாமும் முடிந்த அளவு அதை தடுப்பதுக்கு முயற்சித்தோம், ஆனால் இப்போது சூரியன் முற்றிலுமாக செயல்..."
இப்படி Axhd பேசிக் கொண்டிருக்க போது... மிகப் பெரிய அதிர்வுடன், நாங்கள் எதையோ நோக்கி வேகமாக இழுக்கப்பட்டோம்...
13 comments :
நல்ல கற்பனை மஸ்தான். ஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு போய்டீங்க ;-)
விஞ்ஞான அறிவும், நிறைய ஹாலிவுட் படங்களை பார்த்திருந்தால் மட்டுமே இதை எழுதியிருக்க முடியும்.
Congrats.
செயற்கை அறிவு (Artificial Intelligence) துறையில் இதுபற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனவு நனவாக சில காலம் பிடிக்கலாம்.
Just fantastic.
நன்றி Zahoor.
ஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு ஒப்பிடுறது கொஞ்சம் ஓவரா இருக்கு.. ஹிஹி :)
புதுமையா இருக்கு கதை, எழுத்துநடை அருமை!!
நன்றிகள் ராபின்.
வருகைக்கு நன்றி Varadaradjalou
வருகைக்கு நன்றி கலையரசன்.
Excellent story.
நன்றி குரங்கு :)
"கமு காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் இயற்கை விரோத போக்கினால் சூரியனின் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்தது... மேலும் அது சூரியனுக்கு மிகவும் ஆபத்தாக மாறிவிட்டது... கடந்த பல வருங்களாகவே சூரியன் தனது செயல்பாட்டை இழந்து வருகிறது. நாமும் முடிந்த அளவு அதை தடுப்பதுக்கு முயற்சித்தோம், ஆனால் இப்போது சூரியன் முற்றிலுமாக செயல்..."
oooo... global warming????
சுஜாதா கதையா...அல்லது அது மாதிரியா
Post a Comment