Oct 16, 2009

உங்களால் உதவ முடியாதா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





உணவு நாள் என்று ஒரு நாளை கொண்டாட வேண்டியதிருக்கிறது...  எல்லாவற்றிற்கும் நாள் வைத்து கொண்டாடியது போல் உணவு நாளையுமா?

கொண்டப்பட வேண்டியதா அல்லது கொடுக்க படவேண்டியதா?


நினைவு படுத்த வேண்டிய ஒன்றில் இரக்கமும் தர்மமும் சேர்ந்ததுதான் கொடுமை.


இந்த அவசர உலகில் நாம் பலவற்றை தொலைத்து கொண்டு வருகிறோம் அல்லது நாமே தொலைக்கப்பட்டு வருகிறோம்.


ஒரு வேளை உணவு இல்லை என்றால் எவ்வளவு துடித்து போய் விடுவோம், ஒரு அறிக்கையின் படி பல பேர்களுக்கு பல நாட்களுக்கு ஒரு வேளைதான் உணவு.  என்ன காரணமாய் இருக்கலாம் மக்கள் உணவு இல்லாமல் வீணாகி கொண்டிருக்க? நமது வாழ்ககை முறை பிரச்சினையா? நமது சமுக வஞ்சனையா? எதிர் காலம் எதிர் காலத்திற்கு என்று நிகழ்காலத்தை தொலைத்தவர்களினாலா? ஜீவகாருண்யம் என்று சொல்லி தனது வீட்டில் வளரும் மிருகங்களுக்கு உணவளிக்கும் மனிதர்களினாலா? உலகில் சராசரியாக விளையும் தானியங்களை குறிப்பிட்ட சிலரே அடைவதாலா? உணவை ஒழுங்காக வினியோகிக்க முடியாதலாலா?


இப்படியே பல காரணங்களை தேடிக் கொண்டிருக்கலாம்... நம்மால் முடிந்து இயலாமை என காரணங்களை தேடுவதும் ஆதங்க படுவதும் ஆகும். நாம வருத்த படுவதால் பசியோடுயிருக்கிறவன் வயிறு நிறைந்து விடுவதில்லை. நம்மால் முடிந்த உதவி பசித்தவனுக்கு உணவு அளிப்பதுதான்.


உலகில் ஆறில் ஒருவர் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார். பொருளாதார நெருக்கடி காரனாமாக கடந்த ஆண்டில் புதிதாக பிறந்த 10 கோடி பேர் உணவு பற்றாக் குறையால் பாதிக்க பட்டுள்ளார்களாம்.


எவ்வளவு பெரிய கொடுமை? ஆறில் ஒரு பேர் என்றால்... ஐந்து பேரும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தலே ஆறாவது மனிதனின் பசி ஆறிவிடுமே.


இதைபற்றி தினசரியில் வந்த செய்தி
உலகில் ஆறில் ஒருவர் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார். பொருளாதார நெருக்கடி காரனாமாக கடந்த ஆண்டில் புதிதாக பிறந்த 10 கோடி பேர் உணவு பற்றாக் குறையால் பாதிக்க பட்டுள்ளார்களாம். இதனால் சிக்கலான நேரங்களில் உணவு தட்டுபாட்டை எதிர் கொள்வோம் என்ற நேக்கத்தில் கொண்டாடப் படுகிற்து




1979 முதல் ஆண்டுதோறும் உலக உணவு தினம் அக்டோபர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை உணவு இல்லாத தினமாக அறிவிக்கும்படி இந்தியா, இலங்கை, சீனா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. பசி, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை போன்றவற்றுக்கு எதிராக உலக சமூகம் ஒன்று படவேண்டும் என்ற நோக்கில் உலக உணவு தினத்தை ஐ.நா., சபை அறிவித்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிலவும் உணவுப்பற்றாக்குறையையும், உணவுப்பொருள் விலையேற்றத்தையும் சுட்டிக்காட்டி எல்லோருக்கு உணவு வழங்க மாற்றுவழிகளை கண்டறிய வேண்டும் என தன்னார்வ தொண்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.


உணவு உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ளப் பட்ட பல திட்டங்கள் விவசாயிகளுக்கோ, ஏழைகளுக்கோ பெரிய அளவில் பலன் தரவில்லை என இந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவுப்பொருள் விலையேற்றம், கலப்படம், உற்பத்தி குறைவு போன்றவை பெரும்பாலும் ஏழைகளையே கடுமையாக பாதிக்கின்றன. தினமும் ஏறத்தாழ 92 கோடிப்பேர் பட்டினியுடன் தூங்கச்செல்கின்றனர் என உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. இதை 2015ம் ஆண்டுக்குள் 50 கோடியாக குறைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். உணவு தினத்தை, உணவு இல்லாத தினமாக அறிவித்தால் மட்டுமே உலக உணவுச்சிக்கல் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதும் தொண்டு அமைப்புகளின் வாதம்.


நன்றி தினமலர்




நம்மால் இயன்ற பொருள் உதவி செய்தால் ஒருவருடைய வயிறு நிறையும், நம்மால் நமது வயிறு நிறையும் போது அடையும் ஆனந்ததை விட மற்றவர்களுக்கு உணவளித்து பார்ப்பது பல மடங்கு ஆனந்ததை அளிக்க கூடியது. சாலையில் செல்லும் போது ஒருவருக்கு பிச்சை போடும் 10 ருபாயை விட அவருக்கு கொடுக்கும் ஒரு வேளை உணவு சிறந்தாகும்.




ஏழைகளுக்கு உணவு அளிக்கிறவன் கர்த்தருக்கு உண்வளித்தவனாவான் என்கிறது கிருஸ்த்துவம்

அண்டை வீட்டார் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே என்கிறது இஸ்லாம்.


பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம் என்கிறது இந்துஸ்சம்


வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை, நாமும் அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்க ஒரு நொடி போதும். அடுத்தவர்களின் பசியை ஆற்றிப் பாருங்கள், வாழ்கை அடுத்தவர்களை வாழ வைத்து பார்ப்பதுதான்.

நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ விசேசமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒரவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.



ஒரு ஆய்வின் படி உலகத்தில் பல பேர் இரவு உணவு உண்ண வசதியில்லாமல் பட்டினியால் உறங்குகின்றனர். என்ன ஒரு கேவலமான உலகில் நாம் வசிக்கின்றோம், ஒரு பக்கம் உணவு மீந்து வீணாகிறது, மறுபக்கம் உணவில்லாமல் மக்கள் வீணாகின்றனர். உங்களிடம் கேட்டுகொள்வது எல்லாம் ஒற்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்களுக்கு அறியாதவர் தெரியாதவருக்கு உணவிடுங்கள்.

உங்களால் உதவ முடிந்தால்...
http://www.helpageindia.org/
www.mctrust.org.in/helpoldage.htm
http://www.ashanet.org/
http://www.karmayog.org/
http://www.hotfrog.in/Products/Welfare-Organisation
http://www.udavumkarangal.org/




அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி

4 comments :

thoaranam said...

நல்லதொரு பதிவு. உலகமயமாக்கல் முதலாளியம் எல்லாவற்றையுமே கேள்விக்குள்ளாக்கிறது. மனிதாபிமானம் மானுட நேசிப்பு என்பதான சொற்களின் முழு அர்த்தத்தை சாதாரண முதலாளிகளாலேயே உணர வாய்ப்பில்லாத போது தனது ஈடில்லாத இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக்கிப் பாயும் உலகமுதலாளித்துவத்திடம் எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?
ஜனநாயகத்தின் நான்காவது தூணையே விளம்பரக் கம்பமாக்கிவிட்டதே இந்த உலகமயமாக்க முதலாளியம்.
முகிலன்
தோரணம்

govind said...

true post

நல்லதொரு பதிவு. உலகமயமாக்கல் முதலாளியம் எல்லாவற்றையுமே கேள்விக்குள்ளாக்கிறது. மனிதாபிமானம் மானுட நேசிப்பு என்பதான சொற்களின் முழு அர்த்தத்தை சாதாரண முதலாளிகளாலேயே உணர வாய்ப்பில்லாத போது தனது ஈடில்லாத இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக்கிப் பாயும் உலகமுதலாளித்துவத்திடம் எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

agree this

பாவா ஷரீப் said...

assalamu alaikkum.
very nice mastan


http://karuvaachi.blogspot.com/

அன்புடன் நான் said...

அக்கறையுள்ல பதிவுங்க பாராட்டுக்கள்.