Feb 11, 2010

இட ஒதுக்கீடும் இடமில்லா ஒதுக்கீடும்

சமிபத்தில் ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு கொடுக்கபட்ட இட ஒதுக்கீட்டை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது... இதற்காக பெரும் பிரச்சனை ஆந்திராவில் நடந்து கொண்டுள்ளது... தேவையில்லாத ஒன்று, அரசியல்வாதிகள் செய்யும் காரியங்களால் நமது நாடு இன்னும் இப்படியே இருக்கிறது.

எனது எண்ணம் எல்லாம்... இட ஒதுக்கீடே தேவையா என்பதை பற்றிதான், இது மதம் சார்ந்து சொல்ல வில்லை... மொத்தமாக நமது நாட்டில் மற்றவர்களுக்கு கொடுக்கபடும் இட ஒதுக்கீடு பற்றிதான்...

ஆரம்ப கல்வியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த ஒதுக்கீடு இறுதி வரை தொடந்தே கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் ஏழையாக இருந்தவர்களுக்கு எந்தவிதமான சலுகைகள் கிடைக்கபெறாத மக்களுக்கு கொடுக்கபட்டது இட ஒதுக்கீடு, பெற்றவர்கள் மிகவும் நன்றாய் இருக்க, மற்றவர்கள் இன்றும் இடமில்லாமல் அவதியுருகிறார்கள்.



ஏழை என்பது எல்லா ஜாதி மதத்திலும்தான் உள்ளது, ஏன் ஒருசிலருக்கு மட்டும் பாகுபாடு??? ஆரம்பத்தில் கொடுக்கபட்டது ஏதோ சரின்னால்லும், இன்னும் அதை தொடர்ந்து கொண்டிருப்பது என்ன நியாயம்? 60 வருங்களுக்கு முன்பிருந்த நிலமையா இன்றும் இருக்கிறது? மேலும் இந்த சலுகைகளை பெற்றவர்களே மேலும் மேலும் சலுகைக்காக முயல்கிறார்கள். இதில் ஏழை பணக்காரன் என்று வித்யாசம் இல்லை...

தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு கொடுப்பட்ட 3.5 சதவீத இட ஒதுக்கீடை நான் மனதலவில் ஒதுக்கியவன். இங்கு கொடுப்படும் 3.5 சதவீத இட ஒதுக்கீடை யார் யாரெல்லாம் அனுபவிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள், கண்டிப்பாக அவ்வசதியை பெற்றவர்களே மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள், ஏனெனில் இது மனித இயல்பு.  தமிழ்நாட்டில் பிறந்து பிரபலமாக இருக்கும் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு மூலம் அந்த பலனை அடைந்திருப்பார்களா என்றால் கண்டிப்பா இருக்காது. 

நன்கு படிப்பவன் ஒரு பள்ளியில் சீட் கிடைக்காமல், ஒன்னுமே தெரியாமல் ஜஸ்ட் இட ஒதுக்கீடு மூலம் உள் வருபவர்கள் கடைசியில் என்ன பெருசா சாதிச்சிட போறாங்க? ஒரு அரசாங்க வேலையில் சேர்ந்து மற்றவர்களை எரிச்சலா பேசுவதை தவிர?

அனைவரும் நமது நாட்டின் குடிமக்கள், ஒருவருக்கு சில சலுகைகளும் மற்றவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காமல் செய்வதுமா நீதீ? இடமில்லா ஒதுக்கீடும் செய்வது ஏனோ?  அனைவரும் சமம், யாருக்கும் எந்த பாகுபாடும் கிடையாது என்று கூறும் அரசாங்கமே இப்படி இன்னும் இட ஒதுக்கீட்டை விட்டு வைத்திருப்பது கொடுமைதான், இட ஒதுக்கீடு மூலம் என்ன சரியாக சாதிக்க முடிந்தது? ஏழைகள் எண்ணிக்கையை குறைக்க முடிந்ததா? சரி ஓரளவுக்கு நன்மை இருந்தாலும், இன்னும் இது தேவையா? நமது நாட்டில் இரவு உணவு இல்லாமல் உறங்குபவர்கள் எவ்வளவோ பேர் இருக்க... ரோட்டிலும் காட்டிலும் வசிப்பவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்.. உண்மையான ஒதுக்கீடு என்றால் இவர்களுக்கு செய்யவேண்டும்... மீண்டும் மீண்டும் கொடுத்தவர்களுக்கே கொடுப்போம் என்றால் என்ன தீர்வு?

யாருக்கும் எதிலும் இட ஒதுக்கீடே தேவையில்லை, ஜாதிக்கு மதத்திற்கு என்று அனைத்து இட ஒதுக்கீட்டையும் தடைசெய்யவேண்டும்.
நன்கு படிப்பவர்களுக்கு மட்டும் கல்வியும், நன்கு வேலை பார்க்க தெரிந்தவர்களுக்கு மட்டும் வேலையும் என்று மாறவேண்டும்.