Mar 30, 2010

விசுவல் ஸ்டூடியோ 2010 ஒரு பார்வை

நான் மிகவும் ஆர்வமாய் எதிர் பார்ப்பது மைக்ரோசாப்டின் விசுவல் ஸ்டூடியோ 2010 ரிலீஸை... வரும் ஏப்ரல் 12 அன்று விசுவல் ஸ்டூடியோ 2010 ரிலீஸ் என்று மைக்ரோசாப்டின் அறிவித்து விட்டது...

விசுவல் ஸ்டூடியோ 2008 இன்னும் முழுமையாக பயன் படுத்த ஆரம்பிக்காத நிலையில் புதிதாக விசுவல் ஸ்டூடியோ 2010... மைக்ரோசாப்ட் புதிதாக வெளியிட அனைத்து நிறுவனங்களும் விசுவல் ஸ்டூடியோ 2010 தெரிந்தவர்கள்தான் வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விடும்.. இதில் கொடுமை என்ன வென்றால் ஏப்ரல் 12 2010 அன்றுதான் விசுவல் ஸ்டூடியோ 2010 ரிலீஸ் ஆகிறது, ஆனால் ஏப்ரல் இறுதியிலே இது தெரிந்தவர்கள்தான் வேண்டும் என்று கூற ஆரம்பித்து விடுவார்கள்... 20 நாட்களுக்குள் எப்படிதான் அப்டேட்டட் டெக்னாலஜி பற்றி தெரிந்து கொள்வதோ???சரி, விசிவல் ஸ்டூடியோ 2010 உள்ள வசதிகள் என்ன...


 • டாட்நெட் 4
 • சில்வர்லைட் 4
 • சி# 4
 • டைனமிக் லாங்குவேஜ் ரன்டைம் (DLR)
 • விண்டோஸ் 7 புரோக்கிராமிங் சப்போர்ட்
 • ஷேர்பாயிண்ட் 2010 சப்போர்ட்
 • ஆபிஸ் 2010 புரோக்கிராமிங் சப்போர்ட்
இதுவரை டாட்நெட் 2 பிறகு வந்த எந்த டாட்நெட் வர்சனும் ஏஸ்பி.நெட்டில் இயங்கும் வர்சனை மாற்ற கூடிய வகையில் வர வில்லை, ஆனால் இதை இன்ஸ்டால் செய்யும் போது, நாம்  ஏஸ்பி.நெட்டில் வர்சன் 1, 2, 4 என்று மாற்றி கொள்ளலாம்.

MVC (மாடல் வியு கண்ட்ரோலர்), ஒரு பகுதியாக டாட்நெட்டில் இனைகிறது, அதன் மூலம் MVC தேவையான நேம்ஸ்பேஸ் வந்துவிடும், மேலும் ரூட்டிங் செய்வதை மிகவும் எளிதாக்கிகிறது.
சி சார்ப் 4, பல மாற்றம் இருக்கும் போல
 • டைனமிக் என்ற கீவோர்ட் புதிதாக சேர்த்துள்ளார்கள், இதன் மூலம் ரன் டைமில் மாறும் வசதியை கம்பையல் டைமில் பெறலாம்.
 • ஆப்சனல் பேராமீட்டர் சப்போர்ட் (விசுவல் பேசில் போல), அதாவது ஒரு மெத்தேடு கிரியட் செய்யும் போது பல பேராமீட்டர் பாஸ் செய்ய வேண்டியது வரலாம், அப்போது பல ஓவர்லோடிங் மெத்தேடு எழுதுவோம், இப்போது அந்த பேராமீட்டருக்கு டீபால்டாகவே ஒரு வேல்வை செட் செய்து விடலாம்.
 • நேமுடு பேராமீட்டர், மெத்தேடுக்கு வேல்வு பாஸ் செய்யும் போது எந்த பேராமீட்டருக்கான வேல்வு என்று சொல்லாம்... உம் ( testMethod(firstVal : 5); )


விசுவல் ஸ்டூடியோ ஐடியி
 • ஏஸ்பி.நெட் பேஜ் டிசைன் நேரத்தில் மட்டும்தான், கண்ட்ரோல்களை ட்ராக் அண்ட் ட்ராப் செய்தால் அந்த கண்ட்ரோல் <asp:TextBox runat="server" id="TextBox1" /> என்று வரும், இப்போது சோர்ஸ் (HTML view) மூலம் செய்யும் போதும் இவ்வசதியல் பெறலாம்.
 • புதிதாக ஏதாவது ஒன்றை எழுதுகிறீர்கள், அதன் ரெபரன்ஸ் எங்கும் இல்லை என்றால் ஏதாவது நேம்ஸ்பேசை விட்டு விட்டீர்களா என்று கேட்கும், இதில் நாம் தேவை எனில் அந்த எழுத்துக்கு புதிதான கிளாஸ் உருவாக்க சொல்லாம், மேலும் ஒரு கிளாஸில் இன்ஸ்டன்ஸில் மெத்தேடு இல்லை என்றாலும் இப்படி உருவாக்கி கொள்ளலாம், அதாவது புதிதான எம்ய்டி கிளாஸ், மொத்தேட் ஈசியாக உருவாக்கலாம். 

டாட்நெட் 4 பிரேம்ஒர்க் டவுன்லோடு

Mar 29, 2010

இவர்கள் விளையாட ஆரம்பித்தால்

தோல்வி மேல் தோல்விகளை அடைந்து கொண்டிருக்கும் சென்னை வேஸ்ட் கிங்கை நாங்கள் காப்பாற்றுகிறோம் என்று திரையுலகை சேர்ந்தவர்கள் குதிக்கிறார்கள்...

இது சிரிப்பதற்காக மட்டுமே... ஜஸ்ட் என்ஜாய் பன்னுங்க, ரியலா நடக்கனும்னு எதிர்பார்க்க கூடாது, ஆமா!

நமது கேப்டன் (இது வேற, வேற கேப்டன்) தலைமையில ஆட்களை தேர்ந்து எடுக்கிறார்கள்...

 1. விஜயகாந்த்
 2. ரஜினி
 3. கமல்
 4. டாக்டர் விஜய்
 5. அஜித்இவர்களுடன் டோனி அண்டு கோவும் கலந்து கொள்கிறது.சினிமா ஆட்கள் கலந்து கொள்ளும் நியூஸ் தெரிந்தவுடன், பொன்னகரம் தேர்தல் ரிசல்ட்டை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சினிமாக்காவே மட்டும் உள்ள கலைஞர் கருணாநிதியும் நான் இதை பார்த்தே தீர்வேன் என்று ஒத்த சேர்ல நின்னு(?) வந்துடுறாரு.

துரதிர்ஷ்டவசமாக இவர்கள் மோதும் முதல் ஆட்டமே ராஜஸ்தான் ராயலோடு அமைந்து விடுகிறது... டாஸில் வென்ற ராஜஸ்தான் ராயலே பவுலிங் செய்கிறது... சென்னை வேஸ்ட் கிங் அணியிக்காக டோனியும் விஜயகாந்தும் ஓபனிங்கா போறாங்க சினிமா ஆட்கள் விளையாடுகிறார்கள் என்பதை அறிந்த பாரதிராஜா அண்ட் குருப்ஸ், அவர்களையும் ஆட்டத்தில் சேர்க்கவில்லை என்கிற கடுப்பில் எப்படியாவது இதை தடுக்க வேண்டும் என்கிற நோக்கில் ஆவேசமாக வருகிறார்

பிரஸ் : எதுக்கு சார் எதிர்க்கிறீங்க?
பாரதிராஜா: அஜித் ஒரு மலையாளி அது எப்படி நாங்க தமிழ்நாட்டுல விளையாட விடுவோம்...
பிரஸ்: சார் விளையாடுற மத்தவங்க வேற நாட்டை சேர்ந்தவங்களும் இருக்காங்க அதுக்கு நீங்க ஒன்னும் சொல்லை...
கூட இருந்த சீமான்: அது அப்படிதான் நாங்க அப்ப்டிதான் சொல்வோம்.. நீ எப்படி இலங்கையை சேர்ந்தவன சேர்த்தே???
பிரஸ்: ஏன் சார் இதை பெரிய நாட்டு பிரச்சனை ஆக்கிரூங்க???
பாரதிராஜா: ஆஅஅ... என்கிட்டையே கேள்வி கேக்கிருயா... (ஓவரா டென்சன் ஆயிட்டார்)

விஜயகாந்து ஓடி வந்து சமாதானப்படுத்துகிறார், சமாதானமாகி பாரதிராஜா அண்ட் குருப் கிரிக்கெட் பாக்க உக்காந்திடுறாங்க.

சும்மாவே, மக்கள் கூட்டத்திற்க்கு குறை இருக்காது, சினிமாவை சேர்ந்தவர்கள் விளையாடுகிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம்,  அவ்வள்வு கூட்டம்... எக்கச்சக்க கூட்டம்...

விஜயகாந்திற்கு அதிக கூட்டத்தை பாத்தவுடன் குஷி ஆயிட்டார், விளையாட வந்ததை மறந்து, கத்தி பேச ஆரம்புச்சுட்டார்

விஜயகாந்த்: ஆங்! ஐபில் மொத்தம் 8 அணி இருக்கு, ஆனா மாறி மாறி ஒவ்வொரு அணிகிட்டயும் தோத்துக்கிட்டு இருக்குறது சென்னை வேஸ்ட் கிங், இதுக்குகெல்லாம் காரணம் கருணாநிதிதான், இந்த திமுக போச்சுன்னா எல்லா சரியாயிடும், இப்படிசொல்லிகிட்டு இருக்கும் போதே, பவுலர் பவுலிங் செஞ்சு கரக்ட்டா ஸ்டம்ல பட்டு அவுட் ஆயுடுறாரு... உடனே டென்சன் ஆன விஜயகாந்த், இதுக்கும் காரணம் கருணாநிதிதான் நான் சும்மா விடவே மாட்டேன் கத்திட்டு போயிட்டார்.

அடுத்தது கமல்: நேர அம்பயர்ட்ட போறாரு... ம்ம்ம்ம்... நான் ஒரு காமன் மேன், நீங்க என்னை பேர் சொல்லி கூப்பிடலாம்னு நினைக்கலாம், பட் நான் ஒரு காமன் பேனா சீ மேனா இருக்கேன், நான் இங்க வந்த வேஸ்ட்டுன்னு நினைக்கல... வேஸ்ட் கிங்க மாத்த வந்தது என்னை வேஸ்ட்டுன்னு நினைக்க கூடாது, நான் விளையாட விரும்பலை எல்லாரும் ஆசைப்பட்டாங்கன்னுதான் வந்தேன், நான் போறேன் ஆஅஅஅஅஅஅஅ அபிராமி அபிராமன்னு அழுதுக்கிட்டு உள்ளே ஓடிட்டார்.

அடுத்து வருகிறார்... டாக்டர் விஜய், எதுவும் பேசாம உம்முன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு பேட்டை புடிக்கிறார்... பால் போட்டவுடன் நல்லா ஓங்கி அடுச்சுடுறார் ஆச்சிரியமா சிக்ஸ் போயிடுச்சு... 6 ரன் மட்டும் கிடச்சவுடன் உடனே டாக்டர் விஜய் அம்பயர்கிட்ட போயி முதல்ல பவுண்ட்ரி லைனை தாண்டி போச்சு அதனால 4 ரன்னும், பறந்துபோயி விழுந்தது அதனாலே 6 ரன்னும் இப்படி மொத்தம் மொத்தம் மொத்தம்10 கொடுக்கனும் சொல்லுறாரு.. அம்பியர் டென்சன் ஆகி விஜயை சமாதனப்படுத்த ஆரம்பிக்கிறார்... உடனே விஜய் சமாதானமா போறதுக்கு நான் ஒன்னும் புறா இல்லைடா, சுறாடான்னு கிளம்பி போயிடுறார்.

அடுத்து அஜித் வருகிறார், வரும்போதே பிரஸ்காரங்க கேள்வி கேக்க ஆரம்பிக்க, மைக்கை பாத்தவுடன் அஜித்துக்கு உடம்புலாம் அப்படியே நடுங்க ஆரம்புச்சுடுது, அப்படியே கை கால் நடுங்க.. யாருமே என்னை மிரட்டல நானாத்தான் இந்த விளையாட்டுல கலந்துக்கிறேன்....யாருமே என்னை மிரட்டல மிரட்டலஅப்படீன்ன்னு புலம்ப ஆரம்புச்சுட்டார்... இவர் வேலைக்கு ஆகமாட்டாருன்னு உடனே உள்ளே வர சொன்னவுடனே... இல்லை நான் போறேன் போறேன்னு ஸ்டேடியம் விட்டே போயிடுறாரு.

நெக்ஸ்ட் வருகிறார் சூப்பர் ஸ்டார்... ஹஹான்னு சிரிச்சுக்கிட்டே உள்ளே வருகிறார், பேட்டை கொடுத்தவுடன் டக்குன்னு பேட்டை கீழே போட்டுறாரு, மறுபடியும் எடுத்து கொடுக்க அப்பவும் பேட்டை கீழே போட்டுறாரு... என்னடான்னு யோசுச்சு பாத்தா பேட் வெயிட்டை சூப்பர் ஸ்டாரால தூக்க முடியலை... :( பேட்டையே தூக்க முடியாத இவரு எப்படி விளையாடுவாருன்னு அம்பயர் ரஜினியை விளையாட அனுமதிக்கலை... உடனே... கண்ணா, பேட்டு புடுச்சவன் எல்லாம் அடிக்க மாட்டான், அடிக்கிறவன் எல்லாம் பேட்டு புடிக்கமாட்டான்னு ஒரு லூசுதனமா தத்துவம் சொல்லிவிட்டு, மனசுக்குள் சொல்லிகொள்கிறார் இமயமலைல இருந்தவன கூட்டி வந்து கொல்றாங்களே ஆண்டவா! என்று பெருமூச்சு விடுகிறார்.

எங்களையும் சேர்த்து கொள்ளுங்கள், நாங்களும் மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளோம் என்று குரல் வர திரும்பிபார்த்தால், ரஞ்சிதானந்தா தனது சேவை நாயகிவுடன் உள்ளே வருகிறார்... ஸ்டேடியத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆசி வழங்கி கொண்டு, கையை உயர்த்தி வருகிறார்... ரஞ்சிதானந்தா வருவதை பார்த்த அனைவரும் அப்படியே ஸ்டண்ட் ஆகிவிட்டார்கள்... அவரை பார்த்த மக்களும் ஸ்டார்களும் கொஞ்சம் கொஞ்சமா சூடாகிறார்கள்... அவர் அங்கு இருந்தால் ஏதாவது தப்பாக (?) நடந்து விடும் என்பதை அறிந்த டோனி, ரஞ்சிதானந்த பக்கத்தில் சென்று... "சாமி பாக்கி இருக்குற சிடிலாம் எப்ப வெளிவரும்" அப்ப்டின்னு கேக்குறாரு....  இவர் இப்பவாவது ஏதாவது செய்வாருன்னு  எப்பவும் போல மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்...

Mar 27, 2010

வித்தியாசமான விளம்பரம்

வித்தியாசமாக செய்யனும் எல்லாரும் நினைப்பதுதான்... ஆனா சில பேர் அல்லது சில குருப் சேர்ந்தே அப்படி செய்ய முடிகிறது...  வித்தியாசம் எனும் பெயரில் நாம் செய்யும் காப்பி பேஸ்ட் டைப் விசயம்தான் அதிகம்... :)

இப்போது இங்கு நான் இனைத்திருக்கும் லிங்க் கூட மிக வித்தியாசமானதுதான்...  சில பேர் இதை பார்த்திருக்கலாம், ஆனால் சில பேர்தான் இதை பார்த்திருக்க முடியும்... அதிகமானோர் பார்க்காமல் இருப்பவர்களே... நான் பார்த்து மிகவும் வியந்துவிட்டேன்... மெர்சடீஸ் காருக்கான விளம்பரம்... அங்கு a to s வரை கிளிக் செய்து பாருங்கள்.. ஒவ்வொன்றும் லோடு ஆக நேரம் எடுக்கலாம் பொறுமை தேவை... வித்தியாசமான ஒன்றை எதிர் பார்பீங்கள் என்றால் கண்டிப்பாக இதை ரசிப்பீர்கள்உதாரணம், R (RECYCLABLE) என்பதை கிளிக் செய்தால்... Mercedes காரின் பாகங்கள் எப்படி ரீசைக்களிங் (மறுபயன்பாடு) செய்யபடுகிறது என்பதை பற்றி கூறுகிறது, அங்கு கிளிக் செய்தவுடன் எல்லா எழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி கொண்டு அனைத்து எழுத்தும் சேர்ந்தவுடன் வேறு ஒரு வாக்கியம் வரும்... என்ன ஒரு சிந்தனை இல்லையா??? இப்படி எல்லாமே சூப்பருதான்.

கிளிக் செய்யவும் http://www.a-to-s.co.uk

Mar 26, 2010

சென்னை வேஸ்ட் கிங் -- இன்னுமா உலகம் நம்புது

ஒவ்வொரு தடவையும், இப்ப ஜெயிச்சுருவாங்க இந்தா ஜெயிச்சுகிட்டு இருக்காங்காங்க அப்படீன்னு நம்பி ஏமாந்து போறதுதான் எனக்கு பொழப்பா இருக்கு... ஏன்தான் சென்னை சூப்பர் கிங் இப்படி ஆயிடுச்சோ... முதல் IPL பைனல் வரை வந்தாங்க.. இரண்டாவது IPL செமி பைனல்வரை... இப்ப அவ்வளவுதான் சங்குதான்... ஆனாலும் சூப்பரான முன்னேற்றம்... எல்லாருக்கும் ஏறுமுகம் இருக்கும், ஆனா நம்ம சென்னை சூப்பர் கிங்குக்கோ சூப்பரான இறங்குமுகம்... :)

ஓரளவுக்கு பேட்டிங் இருக்குன்னு நம்பலாம்... மத்தபடி பவுலிங், பீல்டீங்... சே நினைக்க  நினைக்கவே அப்படியே பிபி ஏறுது... நேத்து பீல்டீங்கிற பேர்ல இவங்க செஞ்ச விசயம்... பந்து கைல பட்டு போனாலும் அப்படியே விட்டுடு வேடிக்கை பாத்துக்கிட்டு பொணம் மாதிரி நிக்கிறாங்க... பவுலிங் போட்டா எப்படிதான் புல்டாஸா போடுவாங்களோ அதுலாம் சென்னை சூப்பர் கிங் கிட்டதான் கத்துக்கனும்.... 

இதற்கு சென்னை சூப்பர் கிங் என்று பெயர் இருப்பதற்கு பதிலா சென்னை வேஸ்ட் கிங் அப்படின்னு பேரை மாத்திடலாம், அப்படி ஒரு கேவலமான ஆட்டம்... டோனியை வச்சுக்கிட்டு இந்தியா அணி எப்படிதான் டி20 விளையாட போகுதோ... ம்ம்ம்ம்... வர வர எரிச்சலா இருக்கு... ஆரம்பத்துல சென்னை ஆதரித்த என்னுடைய நண்பர்களாம் கொஞ்சம் கொஞ்சமா பிரிஞ்சு போயிட்டாங்க... நாந்தான் சரி எப்படி ஜெயிச்சுருவாங்க... டோனிக்கு காயம் பட்டுருச்சு பாவம்... இப்படி நானே என்னை சமாதானம் செய்து கொண்ட நேரங்கள் அதிகம்... அட எல்லாரும் சென்னை சூப்பர் கிங் வெறுத்துட்டா ஆதரிக்க யாருமே இல்லைன்னே நான் இருந்தேன்... ஆனா,இன்னும் தொடர்ந்தா கேவலம்னு வேற ஒரு நல்ல டீம தேடுறேன்... இப்பவுலாம் பெங்களூர் டீம் நல்லா விளையாடுது... என்னமோ தெரியலை கர்நாடகா அப்படீன்னாலே ஒரு மாதிரியா இருக்கு... பேசாமா நம்ம சச்சின் இருக்குற பக்கமா சாஞ்சுடபோறேன் :) ஆயிரம்தான் இருந்தாலும் சச்சின் மாதிரிவருமா...


இந்த தடவை மும்பை இந்தியன் தான் ஜெயிக்குது என்ன பெட்???

Mar 24, 2010

புது கேலக்ஸி கண்டுபிடிப்பு

அமெரிக்க மற்றும் அய்ரோப்பா விஞ்ஞானிகள் சேர்ந்து புதிதாக ஒரு கேலக்ஸியை கண்டுபிடித்துள்ளார்கள், அது நமது மில்கிவேயை விட அதிக தூரத்தில் இருக்கிறதாம். அதாவது 10 பில்லியன் ஒளி வருட தூரம் நமது பூமியில் இருந்து.இந்த கேலக்ஸி கண்டுபிடித்ததினால், நமது பால்வெளி எப்படி உருவாகியிருக்கலாம் என்று வருங்காலத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் பெருவெடிப்பு நிகழ்ந்தை பற்றியும் அறிவதற்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்.

இந்த சூரிய குடும்பத்தில் இருக்கும் பல்வேறு கோள்களை பற்றியே இன்னும் தெரியாத நிலையில், அதாவது சில கோள்களை பற்றியே இப்போதுதான் அறிந்து கொண்டுள்ளனர். புதுவகை கேலக்ஸியினால் என்ன என்ன நன்மைகள் என்பதை பற்றி வருங்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக நமது பால்வெளியை வைத்து, அதனின் கோள்களை வைத்து ஜாதகத்தை கணித்து கொண்டிருந்தவர்களுக்கு, புது கேலக்ஸியும் அதனை சார்ந்த கண்டுபிடிப்புகளும் இவர்களின் உண்மை நிலையை தெரியப்படுத்தும்.

வருங்காலத்தில் புது கேலக்ஸியில் ஏதாவது ஆக்ஸிசன் இருக்கும் ஒரு கோளில் மனிதன் பிளாட்டு போட்டு வித்தாலும் விக்கலாம் :)

Mar 16, 2010

காற்றில் ஓடும் கார்

இனி பெட்ரோல் நாடுகளுக்கு ஆப்புதான்... பொதுவா பெட்ரோலியம் புரடக்ட்  உபயோகப்படுத்துவது வாகனங்களில்தான், அந்த வாகனங்களும் இப்போது பெட்ரோலை பயன்படுத்துவதை நிறுத்திவிடும், ஏனென்றால் காற்றில் ஓடும் கார் கண்டுபிடித்துள்ளார்கள், அழுத்தி சேமிக்கப்பட்ட ஆக்ஸிசன் மூலம் ஓடும் காரை உருவாக்கி உள்ளார்கள்...

அதிக பட்சமாக மணிக்கு 120 கிமி வேகத்தில் போகலாம். பொலுசன் கிடையாது,  புகை கிடையாது... இப்படி பல கிடையாதுகள்...மேலும் தேவைப்படும் காற்றை நமது வீட்டிலே அடைத்து கொள்ளலாம்...நமது நாட்டில் டாடா கார் நிறுவனம் இதற்காக உரிமையை வாங்கி உள்ளது, விலையும் 4 லட்சத்தில்தான் இருக்குமாம்.

இதை பாருங்கள்

Mar 8, 2010

காதலும் கடும்துன்பமும் பறவைகளுக்கும் உண்டா?

இந்த படங்கள் எனது நண்பர் மூலம் அனுப்ப பட்டது, இங்கிருக்கும் பறவைகளை பாருங்களேன்... யார் சொன்னது, பறவைகளுக்கு உணர்வு இல்லை என்று? இப்படத்தை பார்த்தவுடன் மிகவும் வருத்தமாக இருந்தது.

தனது துணை, காரில் அடிபட்டதை கண்டு, அதை தனது இறக்கை மூலம் காக்கிறதுதுணைக்கு பசிப்பதினால், உணவு தேடி செல்லபோகிறதுதிரும்பவந்து பார்க்கும் போது, துணை இறந்து கிடப்பதை பார்கிறதுகடும்துன்பத்தில் கதறுகிறது.அழுகிறது... :(
மகளீர் தினமும் 33% இடஒதுக்கீடும்

இன்று மத்திய அரசாங்கத்தால் தாக்கல் செய்யபடும் மசோதாவில் ஒன்று, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ஆகும். ஆதரளிப்பவர்கள் அதிகம் என்பதால் இந்த இடஒதிக்கீடு கண்டிப்பக நிறைவேறிவிடும்.

காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட், திமுக, அதிமுக, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் இதை ஆதரிப்பதால் நிறைவேற மிகவும் வாய்ப்புகள் உள்ளன, எதிர்க்கும் கட்சிகள் மிகவும் குறைவு சிவசேனா, சாமஜ்வாடி, ராஸ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சாமஜ் போன்றவை, இவர்களின் பங்களிப்பு மக்களவையுளும் மாநிலங்களவையுளும் மிகவும் குறைவு, ஆதலால் மிகப்பெரிய சண்டை சச்சரவு இல்லாமலும், ஒரு பரபரப்பற்ற அல்லது வழக்கமான மசோதாவக இது நிறைவேறிவிடும்.
எனது கேள்வி எல்லாம், இந்த இடஒதுக்கீடு தேவைதான என்பதுதான்? ஏன் கொடுக்கவேண்டும் 33 சதவீத ஒதுக்கீடு? எதற்காக இந்த இட ஒதுக்கீடு? பொதுவாக இடஒதுக்கீட்டு ஆதரளிப்பவர்கள் கூறுவது, பின்தங்கி உள்ளவர்கள் முன்னேறுவதற்காக... காலங்காலமாக கூறுவது முன்னெறுவதற்காக என்றுதான், இந்த மசோதாவிலும் அதே பல்லவிதான், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், நாட்டில் சரிபாதி பெண்கள்தான் ஆனால் 10% பெணகளுடைய ஆதிக்கம் இல்லை அரசியலில்... இப்படி சொல்லி புலம்புவார்கள்.இன்று அரசியல் ஆகட்டும் வேறு பிரபலத் துறையாகட்டும் ஆண்களுக்கு மிகச்சமமாகவே பெண்கள் வந்து கொண்டிருக்கின்றனர், எந்த துறையில் இப்போது பெண்கள் இல்லை? எல்லாவிதமான வேலைகளிலும் பெண்கள் தங்களது பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டின் முதன் குடிமகள் ஒரு பெண்தானே. சோனியாவகட்டும், ஜெயலலிதாவகட்டும் எந்த இடஒதுக்கீட்டை பெற்று இந்த இடத்தை அடைந்தார்கள்? அரசியலில் மட்டும் அல்ல. நான் இதை எழுதுவதால் பெண்களுக்கு எதிரானவன் என்று எண்ணவேண்டாம், பொதுவாகவே இடஒதுக்கீடு என்பது நல்ல தகுதி உள்ளவனை ஒதுக்கிவிட்டு தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கபடுவதாகும், காலங்காலமாய் ஜாதியாலும் மதத்தாலும் பிரித்தவர்கள் இப்போது பால் முறையிலும் வந்துவிட்டார்கள்.

பொதுவாக அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நன்றாய் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் நிலையும் வேண்டும், இப்போது அரசியலில் ஈடுபடுபவர்கள் அந்த அஞ்சா நெஞ்சு கொண்டவர்களாகவே வந்துள்ளார்கள்,  அவர்கள் ஜஸ்ட் லைக் தட் என்று வரவில்லை... அதாவது இடஒதுக்கீடு முறையை பெற்று வருபவர்களிடம் இந்த தகுதியை எதிர்பார்க்க முடியாது... பஞ்சாயத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கீடு கொண்டுவந்தார்கள், என்ன ஆயிற்று? ஜெயிப்பவர்கள் பெண்களாக இருக்கும், கையெழுத்து போடுவதற்காக பஞ்சாயத்து ஆபிஸ்க்கு வருபர்களாக உள்ளனர், அதே நிலமைதான் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஏற்படவேண்டுமா?

சரி, மகளீர் இட ஒதுக்கீடு செய்வதினால் தீமை என்ன??? அந்த பகுதியில் நல்லது செய்து கொண்டிருக்கும் ஒரு ஆண், தேர்தலில் போட்டியிட்டு இன்னும் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று நினைத்தால், அந்த தொகுதி பெண்களுக்கு உண்டான தொகுதி என்று அறிவிப்பு வந்தால், அவரால் கிடைக்க போகும் நன்மை இல்லாமல் போகலாம்.

மகளீர் இட ஒதுக்கீடு செய்வதினால் நன்மை என்ன??? பல அட்டூழியங்கள் செய்து வரும் ஒருவர், தமது தொகுதி பெண்களுக்கு என்று மாற்றியவுடன், தமது துனைவியை வெற்றிபெற (அதான் இப்ப காசு போதுமே) வைத்து, மேலும் அட்டூழியம் செய்யலாம்.

வாழ்க ஜனநாயகமும் இடஒதுக்கீடும்!

Mar 3, 2010

சாமியார் - எனது எண்ணங்கள்

எப்படி இதை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை....

ம்ம்ம்ம்ம்ம்...

சாமியார் நித்தியானந்தா, இப்போது அதிகம் அதிகம் மக்கள் பேசும் பெயராகிவிட்டது. இவரை பற்றி அதிகபட்சம் எல்லாரும் எழுதியிருக்கிறார்கள், எழுதாவிட்டால் நான் தமிழன துரோகியாகிவிடுவேன், அதனாலும் நானும்... :)குமுதத்தில் கதவை திற காற்று வரட்டும், தொடர் எழுதும் போது அவ்வளவு பிரபலமாக நித்தியானந்தா, இப்போது வேறு மீடியா மூலமாக மிகவும் பிரபலம் அடைந்துவிட்டார். பொதுவாக ஒருவர் பிரபலம் அடைவதினால் ஏற்படும் தொல்லைகளில் ஒன்று பிரைவசி பாதிப்பது (ஆமா  பிரைவசி தமிழ் பதம் என்ன???).

ஒருவரின் அந்தரங்கதில் ஏன்தான் அவ்வளவு ஆர்வமோ? அதுவும் சாமியார் மற்றும் சினிமா பிரபலம் என்றால் ட்ரிபிள் ஆர்வம்... இரண்டு பேர் சேர்ந்து இருந்தால் இன்னும் அதிகம். ஏன் ஒருவரின் அந்தரங்கதில் குறிக்கிடவேண்டும்? அவர் எப்படி இருந்தால் என்ன? செக்ஸ் என்பது மாபெரும் குற்றமா? சாமியார் என்பவர் மனிதர்தானே அவருக்கும் உணர்ச்சிகள் இருக்காதா? அவரின் பொது வாழ்க்கையில் எப்படி இருக்கிறார் என்றுதான் பார்க்கவேண்டும். அவரின் கதவை திற காற்று வரட்டும் படித்திருக்கிறீர்களா? மிகவும் நன்றாய் இருக்கும், அவரின் சொற்பொழிவு கூட மிகவும் நன்றாய் இருக்குமாம்.

இப்படி பொது வாழ்க்கையில் மிகவும் நன்றாய் இருப்பவரை அசிங்கபடுத்தும் விதமாக, ஏன்தான் இவ்வளவு தொந்தரவுகளோ??? அவர் என்னவோ பலபேர் பணத்தை கொள்ளை அடித்து கொண்டு சென்றது போல... யாராவது அவர் மேல் கேஸ் போட்டார்களா? அல்லது அந்த நடிகைதான் அவர்மீது குற்றம் சுமத்தினாரா? ஏனோ இவ்வளவு வெறுப்போ?

எனக்கு தோன்றிய கேள்விகள்.

 • சாமியாரார் என்பவர் மனிதர்தானே, அவருக்கும் ஆசை இருக்காதா?
 • ஒருவரின் பெட்ரூமில் நடப்பதை ஏன் படம் பிடிக்கவேண்டும்?
 • தனிமனித சுதந்திரத்தில் தலையிட யார் அனுமதி அளித்தார்கள்?

Mar 2, 2010

திருட்டு விசிடி

திருட்டு விசிடி விற்பவர் பிடிபட்டார், ஓடி பிடித்தோம் வலை வீசி பிடித்தோம் என தினந்தோறும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. தினசரி பத்திரிக்கைகளும் அதற்காக சில பத்தியை ஒதுக்கி இருக்கும் போல், மிகச்சரியாக அவ்விடத்தில் சிலபேர் போட்டோவை வெளியிடுவார்கள். விசிடி என்பதே தப்பு எந்த படத்தை இப்போது விசிடி அடக்க முடிகிறது? டிவிடி, புளுரேய் என்று முன்னேறிக் கொண்டிறிக்கிறார்கள். இன்னும் விசிடி? ஹும்ம்ம்...
சரி, விற்பவர் பிடிபட்டார், விற்பவர் பிடிபட்டார்... என்பவர்கள், இதையும் அவர்கள் வேறிடத்திலுருந்துதானே வாங்கி கொண்டுவந்திருக்க வேண்டும் அந்த தயாரிப்பாளர்(?) என்ன ஆனார், அவரை பற்றி எதற்கு எந்த நியுஸ் இல்லை??? திருட்டு விசிடி விற்பவர்கள் உண்மையில் மிகவும் பாவம், ஒரு டிவிடி விற்றால் அதிகபட்சம் 10 ருபாய் கிடைக்குமா? 10 ருபாய்க்கு ஆசைப்படுபவற்களுக்கு குண்டர்சட்டம் எல்லாம் பாயுது... இவைகள் சாதாரண டிவிடி விற்பவர்களுக்கே பாயவேண்டுமா... நம்ம நாட்டுலதான் சட்டத்தை மிகவும் திறன் பட பயன்படுத்துகிறார்கள்.நான் சொல்ல வந்ததே வேற மேட்டரு... அதாவது ஏதாவது ஒரு புதிய தொழில்நுட்பம் வரும் பொழுது அதை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்... இல்ல, மாட்டேன், என்னால் முடியாதுன்னு சொன்னா அந்த தொழில்நுட்பம் நம்மை சீண்டித்தான் செல்லும். தொழில்நுட்பம் என்பது சுனாமி மாதிரி அப்படியே அடிச்சு தூக்கிபோட்டு போய்கிட்டே இருக்கும்...  இப்ப எல்லாம் சின்ன மொபைல் போனில் 10 MP கேமரா வந்துடுச்சு... ரொம்ப ரொம்ப ஈஸியா படம் எடுத்து போய்கிட்டே இருக்கலாம். படம் எடுக்குறது மட்டும் இல்லை, அதை ஆன்லைனில் வெளியிடுவதும் மிக மிக எளிதான காரியம்.  டிவிடி தொழில்நுட்பத்தை கண்டிப்பாக திரைத்துறையினர் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.


ஒரு படத்தை இருவர் பார்க்க சென்றால் குறைந்தது 350 - 500 ருபாய் ஆகும்... டிக்கட் விலை குறைந்தது 80 முதல் 150 வரை இது கவுண்டரில் வாங்கினால்தான் பிளாக்கில் வாங்கினால் இரண்டுமடங்கு விலை, வெளியே 22 ருபாய்க்கு விற்கும் கோக்கோ பெப்சியோ 50 ருபாய்க்குமேல். அதையெல்லாம் விட 6 ருபாய்க்கு வாங்கும் சமோசா குறைந்தது 20 ருபாய் முதல் 30 ருபாய் வரை... இப்படி கொள்ளை மேல் கொள்ளை, இவற்றை சரி செய்வதற்கு எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளர்களோ,  நடிகர்களோ முன்வரவில்லை... திருட்டு விசிடி திருட்டு விசிடி என்று ஆவூன்னா முதல்வரை பார்க்க போய் விடுகிறார்கள், என்ன ஒரு பிஸியான வேலை இருந்தாலும் முதல்வர் திரைத்துறையினறை பார்க்க மட்டும் தவறுவதில்லை. குண்டர்சட்டமும் பாஞ்சுக்கிட்டேதான் இருக்கு, ஏதாவது தடுக்க முடிந்ததா???

கண்டிப்பா முடியாது...  ஒரு படம் வெளியிடும் போதே அதன் டிவிடி பதிப்பையும் வெளியிட்டால் ஓரளவிற்கு இதை தடுக்கலாம். விலையையும் ஓரளவிற்கு நியாயமாக வைத்தால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாது, தியேட்டரில் படம் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக அங்குதான் பார்பார்கள். திருட்டு விசிடியும் ஒழியும்.