Mar 26, 2010

சென்னை வேஸ்ட் கிங் -- இன்னுமா உலகம் நம்புது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒவ்வொரு தடவையும், இப்ப ஜெயிச்சுருவாங்க இந்தா ஜெயிச்சுகிட்டு இருக்காங்காங்க அப்படீன்னு நம்பி ஏமாந்து போறதுதான் எனக்கு பொழப்பா இருக்கு... ஏன்தான் சென்னை சூப்பர் கிங் இப்படி ஆயிடுச்சோ... முதல் IPL பைனல் வரை வந்தாங்க.. இரண்டாவது IPL செமி பைனல்வரை... இப்ப அவ்வளவுதான் சங்குதான்... ஆனாலும் சூப்பரான முன்னேற்றம்... எல்லாருக்கும் ஏறுமுகம் இருக்கும், ஆனா நம்ம சென்னை சூப்பர் கிங்குக்கோ சூப்பரான இறங்குமுகம்... :)

ஓரளவுக்கு பேட்டிங் இருக்குன்னு நம்பலாம்... மத்தபடி பவுலிங், பீல்டீங்... சே நினைக்க  நினைக்கவே அப்படியே பிபி ஏறுது... நேத்து பீல்டீங்கிற பேர்ல இவங்க செஞ்ச விசயம்... பந்து கைல பட்டு போனாலும் அப்படியே விட்டுடு வேடிக்கை பாத்துக்கிட்டு பொணம் மாதிரி நிக்கிறாங்க... பவுலிங் போட்டா எப்படிதான் புல்டாஸா போடுவாங்களோ அதுலாம் சென்னை சூப்பர் கிங் கிட்டதான் கத்துக்கனும்.... 

இதற்கு சென்னை சூப்பர் கிங் என்று பெயர் இருப்பதற்கு பதிலா சென்னை வேஸ்ட் கிங் அப்படின்னு பேரை மாத்திடலாம், அப்படி ஒரு கேவலமான ஆட்டம்... டோனியை வச்சுக்கிட்டு இந்தியா அணி எப்படிதான் டி20 விளையாட போகுதோ... ம்ம்ம்ம்... வர வர எரிச்சலா இருக்கு... ஆரம்பத்துல சென்னை ஆதரித்த என்னுடைய நண்பர்களாம் கொஞ்சம் கொஞ்சமா பிரிஞ்சு போயிட்டாங்க... நாந்தான் சரி எப்படி ஜெயிச்சுருவாங்க... டோனிக்கு காயம் பட்டுருச்சு பாவம்... இப்படி நானே என்னை சமாதானம் செய்து கொண்ட நேரங்கள் அதிகம்... அட எல்லாரும் சென்னை சூப்பர் கிங் வெறுத்துட்டா ஆதரிக்க யாருமே இல்லைன்னே நான் இருந்தேன்... ஆனா,இன்னும் தொடர்ந்தா கேவலம்னு வேற ஒரு நல்ல டீம தேடுறேன்... இப்பவுலாம் பெங்களூர் டீம் நல்லா விளையாடுது... என்னமோ தெரியலை கர்நாடகா அப்படீன்னாலே ஒரு மாதிரியா இருக்கு... பேசாமா நம்ம சச்சின் இருக்குற பக்கமா சாஞ்சுடபோறேன் :) ஆயிரம்தான் இருந்தாலும் சச்சின் மாதிரிவருமா...


இந்த தடவை மும்பை இந்தியன் தான் ஜெயிக்குது என்ன பெட்???

6 comments :

வரதராஜலு .பூ said...

//இதற்கு சென்னை சூப்பர் கிங் என்று பெயர் இருப்பதற்கு பதிலா சென்னை வேஸ்ட் கிங் அப்படின்னு பேரை மாத்திடலாம், //

நெஜமாவே மாத்தலாம்ங்க. ரொம்பவே வெறுப்பேத்தறாங்க.

Srinivas said...
This comment has been removed by the author.
Shreene said...

எனக்கு என்னமோ டீம் பிளேயர் ஏலம் எடுகும்போடு டீம் ரிசல்ட்யும் வாங்கி இருபாங்கலோனு தோணுது ........

வரதராஜலு .பூ said...

நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

http://varadaradj.blogspot.com/2010/03/blog-post_26.html

..:: Mãstän ::.. said...

@வரதராஜலு, நீங்கள் உங்கள் தளத்தில் சொல்கிற கருத்து உண்மையிலே ஏற்றுக் கொள்ளதக்கதுதான்... மணீஸ்பான்டே எடுத்துருக்கலாம்...

@Shreene, ஹஹஹ... எனக்கும் இந்த எண்ணம் இருந்துச்சு.... :)

அக்பர் said...

ஹா.. ஹா.. ஹா.. ஒரே சிந்தனை.

coool