Mar 3, 2010

சாமியார் - எனது எண்ணங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எப்படி இதை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை....

ம்ம்ம்ம்ம்ம்...

சாமியார் நித்தியானந்தா, இப்போது அதிகம் அதிகம் மக்கள் பேசும் பெயராகிவிட்டது. இவரை பற்றி அதிகபட்சம் எல்லாரும் எழுதியிருக்கிறார்கள், எழுதாவிட்டால் நான் தமிழன துரோகியாகிவிடுவேன், அதனாலும் நானும்... :)குமுதத்தில் கதவை திற காற்று வரட்டும், தொடர் எழுதும் போது அவ்வளவு பிரபலமாக நித்தியானந்தா, இப்போது வேறு மீடியா மூலமாக மிகவும் பிரபலம் அடைந்துவிட்டார். பொதுவாக ஒருவர் பிரபலம் அடைவதினால் ஏற்படும் தொல்லைகளில் ஒன்று பிரைவசி பாதிப்பது (ஆமா  பிரைவசி தமிழ் பதம் என்ன???).

ஒருவரின் அந்தரங்கதில் ஏன்தான் அவ்வளவு ஆர்வமோ? அதுவும் சாமியார் மற்றும் சினிமா பிரபலம் என்றால் ட்ரிபிள் ஆர்வம்... இரண்டு பேர் சேர்ந்து இருந்தால் இன்னும் அதிகம். ஏன் ஒருவரின் அந்தரங்கதில் குறிக்கிடவேண்டும்? அவர் எப்படி இருந்தால் என்ன? செக்ஸ் என்பது மாபெரும் குற்றமா? சாமியார் என்பவர் மனிதர்தானே அவருக்கும் உணர்ச்சிகள் இருக்காதா? அவரின் பொது வாழ்க்கையில் எப்படி இருக்கிறார் என்றுதான் பார்க்கவேண்டும். அவரின் கதவை திற காற்று வரட்டும் படித்திருக்கிறீர்களா? மிகவும் நன்றாய் இருக்கும், அவரின் சொற்பொழிவு கூட மிகவும் நன்றாய் இருக்குமாம்.

இப்படி பொது வாழ்க்கையில் மிகவும் நன்றாய் இருப்பவரை அசிங்கபடுத்தும் விதமாக, ஏன்தான் இவ்வளவு தொந்தரவுகளோ??? அவர் என்னவோ பலபேர் பணத்தை கொள்ளை அடித்து கொண்டு சென்றது போல... யாராவது அவர் மேல் கேஸ் போட்டார்களா? அல்லது அந்த நடிகைதான் அவர்மீது குற்றம் சுமத்தினாரா? ஏனோ இவ்வளவு வெறுப்போ?

எனக்கு தோன்றிய கேள்விகள்.

  • சாமியாரார் என்பவர் மனிதர்தானே, அவருக்கும் ஆசை இருக்காதா?
  • ஒருவரின் பெட்ரூமில் நடப்பதை ஏன் படம் பிடிக்கவேண்டும்?
  • தனிமனித சுதந்திரத்தில் தலையிட யார் அனுமதி அளித்தார்கள்?

13 comments :

Anonymous said...

neenga solrathu romba sari avarukum aasaigal irukum illenu sollala athuku avar sadarana manithanaga irunthuttu pogattume ethukku ippadi vesam podanum mutrum thuranthathane munivar thurakkalenumpothu ethuku ange poganum sadaranama irukkavendiyathuthane

Dr.P.Kandaswamy said...

மாஸ்டன் அவர்களுக்கு,

நீங்களும் சாமியாரைப்பற்றி பதிவு போட்டாச்சா? இண்ணைக்கு பதிவுலக நிலைமை என்னவென்றால், சாமியார் பதிவு போடாத பதிவர் பதிவரே அல்ல. நானேஏஏஏஏ ஒரு மொக்கை பதிவு போட்டிருக்கேன்னா பாருங்களேன் சாமியாரின் மகத்துவத்தை?

jass said...

kumudathula nallathan eluthurar illenu sollala avarukkum asaigal irukkum ethukku illenu poi vesam irukkunu kudumbathoda irunthukittu ubadesam pannina enna kudumbam irukuravan ubadesam panna koodathunu ethavathu sattam irukka enna asaigale illenu sollitu ippadi seirathuthan thappu

ஹுஸைனம்மா said...

பிரம்மச்சரியம் என்ற திருட்டுப் போர்வைக்குள் இருந்துகொண்டு இதைச் செய்ததால்தான் பிரச்னையே.

பிரைவசி தமிழ் பதம் - நீங்களே சொல்லிருக்கீங்களே - தனிமனித சுதந்திரம்.

கும்மி said...

// ஹுஸைனம்மா said...
பிரம்மச்சரியம் என்ற திருட்டுப் போர்வைக்குள் இருந்துகொண்டு இதைச் செய்ததால்தான் பிரச்னையே.//

வழிமொழிகிறேன்

கக்கு - மாணிக்கம் said...

சாமியார்கள் நடிகைகளுடன் அல்லது பிற 'குடும்ப' பெண்களுடன் படுக்கட்டும், கிடக்கட்டும். அதை பற்றி எனக்கு எவ்வித கருத்தும் இல்லை. என் வினாவெல்லாம். சாமியார்கள் என்றால் ஆண் கமனாட்டிகளை விட இந்த பெண்கள் (சகல மட்டத்திலிருந்தும்) ஏன் அங்கு குவிந்து விடுகின்றனர்? எத்தனையோ சாமியார்கள் சந்திசிரித்தாகிவிட்டது. இன்னும் ஏன் இவர்களை நம் பெண் மணிகள் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் என் கோபமும் குழப்பமும்.

malar said...

இன்று தமிழிஸ் பதிவுகள் எல்லாம் சாமியார் பதிவுதான்....
சன் டிவி இந்த தகவலை போட்ட பிற்குதான் எல்லோரும் பதிவு போடவேண்டும் என்று இருந்தார்களா?

சன் டிவி அவருடைய லீலைகளை அசிங்கமாக போட்டது என்றால் குமுதம் வெப் டிவி ஒரு படிமேல் போய் காட்சிகள் முழுதும் அப்பட்டமாகவே காட்டி விட்டது.அருவருக்கதக்கது.


?

Goretti Valeso said...

One of the Best Post.
Why is our society full of hypocrites.
Did he ever tell not anyone to have sex.
We people are obsessed with sex but dont agree to this fact.
India has the 2nd largest population.Highest number of rapes in the world.
How did that Come about.Certainly not by having sex.

Tamil media cannot go lower levels than this.

I&B Ministry should ban sun tv.Why telecast news in a sleezy way during prime time.
AXN,MTV,FTV were warned and some even banned.

hayyram said...

ivanukku ranjithaa vellaam too much paa.. hm hm..

hayyram said...

இப்படியும் பொழப்பு ஓடுது பலபேருக்கு.

www.hayyram.blogspot.com

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
..:: Mãstän ::.. said...

ஒரு அனானி கருத்துக்காக வருந்துகிறேன் :(, இப்படியும் சில பேர். சே... அனைத்திற்காகவும் மதமும் ஜாதியும்....

கேவலமான பிறவி.

Anonymous said...

உங்கள் பதிவு அனைத்தும் மிக நன்றாக இருக்கும் ஆனால் இந்த பதிவில் நிங்க இப்புடி எழுதிடிங்களே... சாமியார் மத்தவங்ககிட்ட பிரம்மச்சரிம் கடைப்பிடிக்க சொல்லிட்டு சாமியார் மட்டும் எப்படி லீலைகள் செய்யலாம்..? சாமியாரும் மனிதன்'தான்னு எல்லாருக்கும் உணரனும் , நம்மை போலத்தான் அவர்களும் அவர்களுக்கு அதீதசக்தி எல்லாம் எதுவும் இல்லை . உங்களது அறியாமையை அவர்கள் பயன்பாடுத்திகொல்கின்றனர்........
- சக்திவேல்