Jan 30, 2013

விஸ்வரூபம் : கருத்து சுதந்திரம்

எதற்கு இவ்வளவு எதிர்ப்பு என்றே தெரியவில்லை... எந்த நேரத்தில் படம் ஆரம்பித்தாரோ ஒரே சிக்கல்தான்; பாவம் கமல்... பரிதாபம்தான், எவ்வளவு தடை இந்த படத்தை வைத்து இந்து முஸ்லீம் பிரச்சனையை ஊதி பெரிதாக்கலாம் என்றே பலபேர் நினைக்கின்றனர்... ஒரு வழியாக தடை நீங்கிடுச்சு; 30 ஜனவரி முதல் படம் கண்டிப்பாக திரைப்படும், நல்ல ஒரு விளம்பரம் ஆகிடுச்சு... அப்படி என்னதான் இருக்கு படத்தில என்றே பலபேர் சென்று பார்பார்கள். முஸ்லீம்கள் முஸ்லீமை பற்றி சொல்வதற்கும் மற்றவர்கள் சொல்வதற்கு மிகவும் வித்தியாசம் இருக்கும்... தலிபானை பற்றி யாருக்கு நல்ல அபிப்பிராயம் இருக்க முடியும்? அவர்கள் மனிதர்களே இல்லை... அவர்கள் அப்படிதானே? இதில் கமல் என்ன தப்பாக சொல்லிவிட்டார் என்றே தெரியவில்லை?


 

தாலிபான் எனும் தீவிரவாதியை அழிக்க கூடிய தமிழக முஸ்லிமா கமல் வருகிறாரம்; இதுவே கமலை தவிர மற்றவர்வர்கள் எடுத்திருந்தால் எப்படி இருந்துருக்கும்? கமலுக்கு வக்காலத்து வாங்கவில்லை... ஆனால்...எப்பவுமே எல்லாரை நல்லவராக காட்ட முடியாது, உண்மை இதுதான்; அக்பர் ஒரு பெரிய சக்ரவர்த்திதான், ஆனால் பீர்பால் பற்றிய கதையில் அக்பர் ஒரு சைடு ஆர்ட்டிஸ்டாகதான் வருவாரு.... அங்கு போய் அக்பரின் சாகசங்களை சொல்ல முடியாது.


கருத்து சுதந்திரம்: இதுதான் கண்டிப்பா விவாதிக்க கூடியது, ஓசில கூகுள் பிலாக் கொடுத்துருக்கு என்னுடைய சிந்தனை எல்லாம் பட்டை தீட்டுவேன், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்களின் நம்பிக்கையும் சிதைப்பேன் இதுதான் கருத்து சுதந்திரம், ஒருவர் ரோட்டில் செல்லும் போது கையும் காலையும் வீசிக்கொண்டு நடந்தால் அது அவர் சுதந்திரம், அதே அவர் கையை மூலம் அடுத்தவர் நடக்க முடியாமல் தடுதால் அது சுதந்திரமா? இல்லை அடுத்தவர் முகத்தில் கை வைப்பது சுதந்திரமா? என்கிட்ட காசு இருக்கு நான் எப்படி வேன்னா படம் எடுப்பேன்னு இது என்னுடை கருத்து சுதந்திரம், ஒருவர் தனது பணத்தின் மூலம் அவரை பற்றி எவ்வளவு கேவலமாக வேண்டும் என்றால் எடுக்கலாம், ஆனால் அவரின் குடும்பத்தாரை பற்றி எடுக்க முடியாது கூடாது, ஏன்னா அவர்க்கு அவரின் குடும்பத்தாரை பற்றி கேவலமாக எடுக்க ரைட்ஸ் இல்லை... முடியவே முடியாது எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கு அப்படிதான் எடுப்பேன், எழுதுவேன் அப்படி என்பவர்களை என்ன செய்ய முடியும்?


பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ சிப்பாயை கழுத்தை அறுத்து கொலை செய்தானே அப்ப ஏன் முஸ்லீம்கள் போராடலை/பாகிஸ்தானை எதிர்க்கலை என்கிறார்கள், ஆமா இதை குற்றமாக கூறும் எவ்வளவு பேர் இதற்கு எதிராக போராடினார்கள்? சன் நியுஸ்ல இயக்குனர்/தயாரிப்பாளர் செல்வமணி மற்றும் கேயார் கூட கூறினார்கள்; அவர்கள் இதற்கு எதிராக போராடினார்களா? எதாவது எதிர்ப்பை தெரிவித்தார்களா? நாம் எல்லாரும் ஒரு காமன் மேன் அவ்வளவுதான்... எங்கயாவது ஒரு அன்னா ஹசாரே வரும்போது சேர்ந்து இருந்து சப்போர்ட் செய்வோம், வேறு என்னதான் செய்திருக்கிறோம்? இது ஒரு லூசுதனமான வாதமாகத்தான் இருக்கு. ஒரு செய்தி எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை, ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு செல்பவர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கும் செல்வார்கள், அப்படி ஒரு வேனில் செல்லும் போது தொண்டி எனும் இடத்தில் அந்த வேன் விபத்துக்கு உள்ளாகிறது அனைவரையும் தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக முஸ்லீம்கள் உதவி செய்திருக்கிறார்கள்.


பல பேர்களின் கருத்து, படத்தை படமாக ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே பார்க்க கூறுகிறார்கள் அதுவும் தமிழகத்தில்... ஆளும் கட்சியும் சரி, எதிர்கட்சியும் சரி திரைபடத்தின் மூலம் வந்தவர்களே. பொழுதுபோக்கு என்பது தேய்ந்து போயிடுச்சு, நம்மக்கள் பவர்ஸ்டாரை முதலமைச்சர் ஆக்காமல் விடமாட்டர்கள் அல்லவா? முஸ்லீம்னாவே குண்டு வைக்கிறவனாவும், ஆடு மாடு வெட்டுகிறவனாகவும், சாம்புராணி போடுகிறவனாகவும் காட்டுகிறது இந்த பொழுதுபோக்கு சாதனம். நான் சென்னையிலதான் இருக்கேன், வீடு வாடகைக்கு பிடிக்க முடியாது; முஸ்லீம்னு சொன்னாவே வீடு கொடுக்க மாட்டேங்கிறாங்க, ஏன்? எப்படி வந்தது இந்த வெறுப்புணர்வு?  ஊடகமும் ஒரு காரணம் இல்லையா????


எப்படியோ, முஸ்லீம்கள் மேல் நல்ல நட்புடன் இருப்பவர் கமல், பாபர்மசூதி இடிப்பின் போது திரையுலகின் முதல் ஆளாக தனது கண்டனத்தை பதிவு செய்தவர் கமல், மருதநாயகம் என்ற பெயரில் முஸ்லீம்களே மறந்துவிட்ட ஒருவரை பற்றி படத்தை ஆரம்பித்தவர்... இனிமேலும் இவற்றை கமலிடம் எதிர்பார்க்க முடியுமா???