Mar 8, 2010

மகளீர் தினமும் 33% இடஒதுக்கீடும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று மத்திய அரசாங்கத்தால் தாக்கல் செய்யபடும் மசோதாவில் ஒன்று, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ஆகும். ஆதரளிப்பவர்கள் அதிகம் என்பதால் இந்த இடஒதிக்கீடு கண்டிப்பக நிறைவேறிவிடும்.

காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட், திமுக, அதிமுக, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் இதை ஆதரிப்பதால் நிறைவேற மிகவும் வாய்ப்புகள் உள்ளன, எதிர்க்கும் கட்சிகள் மிகவும் குறைவு சிவசேனா, சாமஜ்வாடி, ராஸ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சாமஜ் போன்றவை, இவர்களின் பங்களிப்பு மக்களவையுளும் மாநிலங்களவையுளும் மிகவும் குறைவு, ஆதலால் மிகப்பெரிய சண்டை சச்சரவு இல்லாமலும், ஒரு பரபரப்பற்ற அல்லது வழக்கமான மசோதாவக இது நிறைவேறிவிடும்.




எனது கேள்வி எல்லாம், இந்த இடஒதுக்கீடு தேவைதான என்பதுதான்? ஏன் கொடுக்கவேண்டும் 33 சதவீத ஒதுக்கீடு? எதற்காக இந்த இட ஒதுக்கீடு? பொதுவாக இடஒதுக்கீட்டு ஆதரளிப்பவர்கள் கூறுவது, பின்தங்கி உள்ளவர்கள் முன்னேறுவதற்காக... காலங்காலமாக கூறுவது முன்னெறுவதற்காக என்றுதான், இந்த மசோதாவிலும் அதே பல்லவிதான், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், நாட்டில் சரிபாதி பெண்கள்தான் ஆனால் 10% பெணகளுடைய ஆதிக்கம் இல்லை அரசியலில்... இப்படி சொல்லி புலம்புவார்கள்.



இன்று அரசியல் ஆகட்டும் வேறு பிரபலத் துறையாகட்டும் ஆண்களுக்கு மிகச்சமமாகவே பெண்கள் வந்து கொண்டிருக்கின்றனர், எந்த துறையில் இப்போது பெண்கள் இல்லை? எல்லாவிதமான வேலைகளிலும் பெண்கள் தங்களது பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டின் முதன் குடிமகள் ஒரு பெண்தானே. சோனியாவகட்டும், ஜெயலலிதாவகட்டும் எந்த இடஒதுக்கீட்டை பெற்று இந்த இடத்தை அடைந்தார்கள்? அரசியலில் மட்டும் அல்ல. நான் இதை எழுதுவதால் பெண்களுக்கு எதிரானவன் என்று எண்ணவேண்டாம், பொதுவாகவே இடஒதுக்கீடு என்பது நல்ல தகுதி உள்ளவனை ஒதுக்கிவிட்டு தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கபடுவதாகும், காலங்காலமாய் ஜாதியாலும் மதத்தாலும் பிரித்தவர்கள் இப்போது பால் முறையிலும் வந்துவிட்டார்கள்.

பொதுவாக அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நன்றாய் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் நிலையும் வேண்டும், இப்போது அரசியலில் ஈடுபடுபவர்கள் அந்த அஞ்சா நெஞ்சு கொண்டவர்களாகவே வந்துள்ளார்கள்,  அவர்கள் ஜஸ்ட் லைக் தட் என்று வரவில்லை... அதாவது இடஒதுக்கீடு முறையை பெற்று வருபவர்களிடம் இந்த தகுதியை எதிர்பார்க்க முடியாது... பஞ்சாயத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கீடு கொண்டுவந்தார்கள், என்ன ஆயிற்று? ஜெயிப்பவர்கள் பெண்களாக இருக்கும், கையெழுத்து போடுவதற்காக பஞ்சாயத்து ஆபிஸ்க்கு வருபர்களாக உள்ளனர், அதே நிலமைதான் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஏற்படவேண்டுமா?

சரி, மகளீர் இட ஒதுக்கீடு செய்வதினால் தீமை என்ன??? அந்த பகுதியில் நல்லது செய்து கொண்டிருக்கும் ஒரு ஆண், தேர்தலில் போட்டியிட்டு இன்னும் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று நினைத்தால், அந்த தொகுதி பெண்களுக்கு உண்டான தொகுதி என்று அறிவிப்பு வந்தால், அவரால் கிடைக்க போகும் நன்மை இல்லாமல் போகலாம்.

மகளீர் இட ஒதுக்கீடு செய்வதினால் நன்மை என்ன??? பல அட்டூழியங்கள் செய்து வரும் ஒருவர், தமது தொகுதி பெண்களுக்கு என்று மாற்றியவுடன், தமது துனைவியை வெற்றிபெற (அதான் இப்ப காசு போதுமே) வைத்து, மேலும் அட்டூழியம் செய்யலாம்.

வாழ்க ஜனநாயகமும் இடஒதுக்கீடும்!

2 comments :

இராகவன் நைஜிரியா said...

ஒரு ஓட்டு என்ன... இரண்டு ஓட்டு போட்டுட்டேன்...

தமிழ் மணத்தில் ஒன்னு, தமிழிஷில் ஒன்னு என இரண்டு ஓட்டுப் போட்டாச்சு

Anonymous said...

கடைசி இரண்டு பத்திகள் முரண்

நல்லது செய்பவர் (ஆண்) வெளியேற்றபடுவர்., கேட்டது செய்யும் ஆண் பெண்ணை முன்னிறுத்தி செய்வார்.!


கேள்வி
1. நல்லது செய்பவருக்கு முன்னிறுத்த பெண் இருக்க மாட்டாரா? கேட்டது செய்பவருக்கு மட்டுமே முன்னிறுத்த பெண் இருப்பாரா?
2. கேட்டது செய்பவரே முன்னிறுத்தும் போது நல்லது செய்பவர் ஏன் முன்னிறுத்தி செய்ய கூடாது?
3. கெட்டது செய்பவர் ஆணாக இருந்தால் பரவாயில்லை .. பெண்ணாக இருக்க கூடாதா??