Oct 26, 2009

கம்யூனிஸ்ட் எப்பவும் இப்படிதானா?




இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு காலத்தில் மாஸ்கோதான் வழிபடும் கோயிலாக விளங்கியது. ஸ்டாலிந்தான் அவர்களின் தலைவணங்கி வந்த கடவுள். புரட்சி, வர்க்கப் போர், முதலாளித்துவ ஒழிப்பு, ரத்தக்களறி ஆகிய வார்த்தைகள் அவர்களுடைய மூலமந்திரமாக விளங்கின.

இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு சீனாவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமலுக்கு வந்தது. உடனே பீகிங் நகரை மாஸ்கோவுடன் தங்கள் இரண்டாவது கோயிலாக சேர்த்துகொண்டனர். மாஸேதுங் மற்றொரு கடவுளானர்.

திடீரென்று கம்யூனிஸ்டு சீனா, இந்திய எல்லையில் ஊடுருவி பன்னிரண்டாயிரம் சதுர மைல்களைப் பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டுவிட்டது. இந்த ஆக்கிரமிப்புக்க்காரணமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி, நாட்டில் அதற்கிருந்த சிறிதளவு ஆதரவையும் இழக்க நேர்ந்தது. கேரளத்தில் நடைபெற்ற மறு தேர்தலிலும் சரி, நாட்டின் பொது தேர்தலிலும் சரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அடியோடு குடை சாய்ந்தது.

"இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதெப்படி?" என்பதைச் சென்ற வாரம் ஹைதராபாத்தில் கூடிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் யோசிக்கலாயிற்று. சீனா பற்றி மிக நாசூக்கான வகையில் ஒரு தீர்மானம் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பைப் பெரிதுபடுத்தாமலும், அதே சமயத்தில் இந்திய அரசாங்கத்தின் 'சீன'க் கொள்கையை ஆதரித்தும் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், 'சீனா பலாத்காரமாக இந்திய மண்ணை ஆக்கிரமித்துள்ளது அநியாயம்' என்று கண்டித்து ஒரு வார்த்தைகூடக் காணப்படவில்லை.

"ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பகுதியிலிருந்து சீனப் படைகள் பின்வாங்கி, எல்லையில் ஒரு ராணுவ சூன்யமான பிரதேசம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மேலும் சம்பவங்கள் நடைபெறாமலிருக்கும். இதற்கு ஒப்புக் கொண்டால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும்" என்ற இந்திய பிரதமரின் கோரிக்கைக்கு சீனா இணங்க வேண்டுமென்று தீர்மானம் வற்புறுத்தாது ஏன்? நாட்டின் பாதுகாப்பைவிட, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சீனாவின் நல்லெண்ணம்தான் முக்கியமாகத் தோன்றுகிறது.

'நம் எல்லை எதுவோ அது நமக்கே சொந்தம். அதை விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்று புதிர் போடுகிறார் கம்யூனிஸ்டு தலைவர் டாங்கே. ஆனால், எது நம் நாட்டின் எல்லை என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஒருவேளை, சீனப் படங்களில் குறிப்பிட்டுள்ள எல்லையைத்தான் சொல்லுகிறாரோ?

ஆனந்த விகடன் 2.9.62

டிஸ்கி: இது ஆனந்த்விகடன் 28.10.09 இதழில் பொக்கிஷம் பகுதியில் வந்தது. கம்யூனிஸ்டு கட்சி சீனா ஆக்கிரமிப்பு மற்றும் அக்கிரமம் பற்றி அப்பவும் எதுவும் சொல்லவில்லை இப்பவும் எதுவும் சொல்லவில்லை.

இணையத்தில் உள்ள பரபரப்பு தகவல்களை உங்கள் வலையில் சேர்க்க

தமிழ்மணம், தமிழீஸ் போன்றவற்றின் பரபரப்பு அல்லது முக்கிய செய்திகளை எப்படி நமது வலைபக்கத்தில் சேர்ப்பது?  போன்ற கேள்விகளை சில பேர் எனக்கு மெயில் மூலம் கேட்டார்கள்.


தனித்தனியாக சொல்வதை விட மொத்தமாக ஒரு பதிவிட்டால் வலைபக்கம் வைத்துள்ள அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்றுதான் இந்த பதிவு.


பல பேர்களுக்கு இது தெரிந்து இருக்கலாம், இது தெரியாதவர்களுக்காக...

மற்ற தளங்களின் பரபரப்பு செய்தியை வரவைப்பது மிகவும் சுலபம்.
நான் சொல்ல போகும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.


முதலில் RSS (நீங்க வேற நினைச்சுக்காதீங்க)  இதற்கு தமிழில் செய்தி ஒடை என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன், அதாவது ஒரு தளத்தின் செய்தி சுருக்கத்தை தருவது, அதாவது  தமிழ்மணத்தில் ஒரு பதிவு இணைகிறது என்றால் அந்த பதிவின் தலைப்பை தமிழ்மணம் செய்திஓடையாக வெளியிடும்.
ஒரளவுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.

இதை சில வழிகளில் நாம் வலையில் இனைக்கலாம்.
முதல் வழி

http://www.blogger.com/-> Dashboard -> Layout என்று செல்லவும்
Add a Gadget என்பதை கிளிக் செய்யவும்
பிறகு வரும் பாக்ஸில் Feed என்பதை செலக்ட் செய்யவும்
Feed URL என்பதை கேட்கும் அதில் நீங்கள் வேண்டிய RSS முகவரியை கொடுக்க வேண்டியதுதான்.

அவ்வளவுதான் :)


சில RSS முகவரிகள்

1.தமிழ்மணம் - http://www.tamilmanam.net/feed
2.தமிழீஸ் - http://www.tamilish.com/rss
3.தட்ஸ்தமிழ் - http://feedproxy.google.com/oneindia-thatstamil-all
4.தினமலர்(முக்கிய செய்திகள்) - http://rss.dinamalar.com/?cat=fpn (இது சரிவர இயங்குவதில்லை, மேலும் தினமலரின் செய்தி ஒடைக்கு)
5.தினமணி(முக்கிய செய்திகள்)  - http://www.dinamani.com/edition/rssSectionXml.aspx?SectionId=164 (மேலும் தகவல்களுக்கு)


வேறு வழி

http://www.google.com/uds/solutions/wizards/dynamicfeed.html என்ற தளத்திற்கு செல்லவும்,  இது பல செய்தி ஒடைகளை இனைத்து ஒன்றாய் தருகிறது.





Feeds Expression: என்பதில் உங்களுக்கு விருப்பமான சொல்லை தரலாம், அச்சொல் எந்த செய்திஓடையுடன் பொருந்துகிறதோ அதனை தறும், மேலும் "," என்று போட்டு எவ்வளவு வேண்டும் என்றாலும் இனைக்கலாம்.

Vertical, Vertical Stacked,Horizontal என்பது எவ்வாறு தோற்றம் அளிக்கிறது என்பதை மாறி மாறி கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.


Title: என்பதை கொடுக்கவும்.


எல்லாம் முடிந்தவுடன் Generate code எனும் பட்டனை கிளிக் செய்தால் ஸ்க்ரிப்ட் வடிவில் தயாரித்து கொடுக்கும் அதனை நமது வலையில் இனைக்க வேண்டியதுதான்.

பிளாக்ஸ்பாட்டில் இனைக்க
கோட் மொத்ததையும் காப்பி செய்யவும்
http://www.blogger.com/-> Dashboard -> Layout என்று செல்லவும்

Add a Gadget என்பதை கிளிக் செய்யவும்
பிறகு வரும் பாக்ஸில் HTML/JavaScript  என்பதை செலக்ட் செய்யவும்
தோன்றும் விண்டோவில் உங்களது கோட் பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்.

இவ்வளவுதான் முடிந்தது.


ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கே கேட்கவும்.

Oct 25, 2009

தம்பதியின் அந்தரங்க உரையாடல்

கணவன் மனைவியின் ஒரு ஜாலி உரையாடல்.

நல்ல ஜாலியான மூடுல பேசிக்கிறாங்க




மனைவி : நீங்க என்ன செய்வீங்க நான் இறந்துட்டா? திரும்ப கல்யாணம் செய்வீங்களா?
கணவன்சே சே மாட்டேன்
மனைவி: ஏன், மாட்டேன்! கல்யாண வாழ்கையை விரும்பமாட்டீங்களா?
கணவன்: ம்ம்ம்... விரும்புவேன்
மனைவி: பின்ன ஏன், இன்னும் ஒரு கல்யாணம் செய்ய கூடாது?
கணவன்: சரி சரி, செஞ்சுகிறேன்.
மனைவி: செஞ்சுப்பீங்களா? (கோவப்பார்வை)
கணவன்: (க்கும்...., அமைதியா இருக்கார்)
மனைவி: நீங்க நம்ம வீட்டுல தங்குவீங்களா?
கணவன்: கண்டிப்பா, இது  ரெம்ப நல்ல வீடு இல்லயா...!
மனைவி: ம்ம்ம்... நீங்க அவளோட இந்த பெட்ரூம்மை யூஸ் பன்னுவீங்களா?
கணவன்: அப்ப, நாங்க போய் எங்கே தூங்குறது?


மனைவி: என்னோட படத்தை எடுத்துட்டு அவ படத்தை மாட்டி விடுவீங்களா?
கணவன்: அது செஞ்சுதானே ஆகனும்
மனைவி: என்னோட நகைகள் எல்லாம் அவகிட்ட கொடுப்பீங்களா?
கணவன்: சே சே, அவளோடதுதான் விரும்புவா.
மனைவி: ஓ, என்னோட காரை அவள ஓட்ட அலவ் பன்னூவீங்களா?

கணவன்: ஆமா ஆமா, அது புதுசுதானே...
மனைவி: எனக்கு டிரைவிங் கத்துகொடுத்தது போல, அவளுக்கும் கத்து கொடுப்பீங்களா?
கணவன்: இல்ல இல்ல, அவளுக்கு கார் ஓட்ட தெரியும்.
மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்...
கணவன்: ஷிட்
மனைவி:
கணவன்:

Oct 21, 2009

கடவுள் மோசமானவரா?

எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்கனும்?

கடவுளுக்கு கருணையே இல்லையா?

நான் யாருக்கும் எந்த துன்பமும் செய்யலையே!

எல்லாம் எனக்கு மட்டுமே நடக்கனுமா?

பட்ட காலிலே ஏன் படுதோ?

இறைவா ஏன் இந்த சோதனை?

நமக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது?

கடவுளே நீ  என்னை காப்பதே இல்லையா?

இப்படிலாம் எல்லாருக்கு ஏதாவது ஒரு நேரத்தில் சிந்தனை வரும். எனக்கும் அடிக்கடி கடவுள் மேல கோவம் கோவமா வரும், அது கொஞ்ச நேரம்தான் இருக்கும், அப்புறம் சகஜமாயிடுவேன். சின்ன விபத்து நடந்தா, நல்ல வேளை பெரிய விபத்து நடக்காம ஆண்டவன் காப்பாத்திட்டன்னுதான் நினைப்பேன், அதுபோல்  100 ருபாய் காணாமல் போனா 10000 போகாம இருந்துச்சேன்னு நினைப்பேன். ஏதாவது தவறா ஒரு விசயம் நடந்தா, நல்ல வேளை ரெம்ப பெருசா எதுவும் நடக்கலை இப்படித்தான் நினைக்கனும்.

உண்மையிலே கடவுள் நம்மளை எல்லா விசயத்திலும் பாதுகாத்து கொண்டுதான் இருக்கிறார், நாம்தான் புரிந்து கொள்வதுமில்லை, சரிவர நன்றி செலுத்துவதும் இல்லை,  நன்றி செலுத்த விட்டாலும் பரவாயில்லை நாம் செய்யும் அனைத்து தவறுக்கு காரணம் கடவுளே என்று தூற்றுகிறோம்.

கொஞ்ச நாளைக்கும் முன்பு என்க்கு இந்த மெயில் வந்துருந்துச்சு... மிகவும் நான் விரும்பிய மெயில். கடவுளின் கருணையை பற்றி ஒரு படத்தில் சொன்ன விசயம். பார்க்கும் அனைவருக்கும் ஒரு சந்தோசத்தை தர கூடியது.



பாருங்கள் இந்த படத்தில்... ஒருவனை எப்படி கடவுள் காக்கிறார் என்பதையும், அவன் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளான் என்பதையும்.





Oct 19, 2009

புது உயிரினம்

ஆராய்ச்சி நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.






பல்வேறு ரோபோக்கள் பழுதடைந்த ரோபோக்கள் என ரோபோக்கள் மயமாக இருந்தது.

இங்கு வேலை செய்யும் ரோபோக்கள் விஞ்ஞானிகள் என அழைக்கபட்டன.

பல்வேறு கிரகங்கள் மற்றும் சில பால்வெளிகளில் இருந்து ஜிவராசிகளை கண்டுபிடிக்கும் வேலையை சில ரோபோக்கள் செய்து கொண்டிருந்தன.

இப்படி ரோபோக்களின் தம்தம் வேலையை பிரித்து கொண்டுள்ளது.

அனைத்து ரோபோக்களும்  அதி வேகமாக அங்கும் இங்கும் என நகர்ந்து கொண்டிருந்தன,

பரபரப்பாக அனைத்து செயல்களையும் முடித்து கொண்டிருந்தன.

பலகாலமாக அவர்கள் தேடி கிடைத்த ஒரு கரப்பான்பூச்சியை குளோனிங் முறையில் அதிககமா உருவக்கி பெரிதுபடுத்தும் முறையில் மிகபிரமண்டமாக பெரிது படுத்தி அதனை வைத்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்தன.

அதன் இயங்கு முறையை தெரிந்து கொள்வதற்காக அதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன.

அனைத்து ரோபோக்களும் சிந்திக்கும் திறனுடன் தயாரிக்க பட்டாலும், அவைகளின் இயங்கு முறைகள் அனைத்தும் ஒன்று போல் இருந்தன.

ஜீவராசிகளை தேடி வென்றிருந்த ஒரு விண்கலம் உள்ளே நுழைந்தது...

அதனின் கேப்டன் மிகவும் படபடப்பாக காணப்பட்டார், பரபரப்புடன் அனைத்து ரோபோக்களும் காந்தவெளி மூலம் கட்டளை இட்டார். அனைவருக்கும் கேட்கும் விதமா பேச ஆரம்பித்தார்... நாம் பல காலமாக ஜிவராசிகளை தேடி கொண்டிருக்கிறோம்... நமது இயங்கு முறை மாற்றுவதற்கும் இதனை உபோயகபடுத்துகிறோம். இப்பொழுதுதான் ஒரு விசித்திரமான உயிரினம் மாட்டி உள்ளது. அதனை உங்கள் முன்பு காமிப்பதில் சந்தோசம்.

கேப்டன் ரோபோ சொல்லி முடித்தவுடன்... சில ரோபோக்கள். ஒரு மனிதனை தூக்கிவந்தார்கள்.

Oct 16, 2009

உங்களால் உதவ முடியாதா?






உணவு நாள் என்று ஒரு நாளை கொண்டாட வேண்டியதிருக்கிறது...  எல்லாவற்றிற்கும் நாள் வைத்து கொண்டாடியது போல் உணவு நாளையுமா?

கொண்டப்பட வேண்டியதா அல்லது கொடுக்க படவேண்டியதா?


நினைவு படுத்த வேண்டிய ஒன்றில் இரக்கமும் தர்மமும் சேர்ந்ததுதான் கொடுமை.


இந்த அவசர உலகில் நாம் பலவற்றை தொலைத்து கொண்டு வருகிறோம் அல்லது நாமே தொலைக்கப்பட்டு வருகிறோம்.


ஒரு வேளை உணவு இல்லை என்றால் எவ்வளவு துடித்து போய் விடுவோம், ஒரு அறிக்கையின் படி பல பேர்களுக்கு பல நாட்களுக்கு ஒரு வேளைதான் உணவு.  என்ன காரணமாய் இருக்கலாம் மக்கள் உணவு இல்லாமல் வீணாகி கொண்டிருக்க? நமது வாழ்ககை முறை பிரச்சினையா? நமது சமுக வஞ்சனையா? எதிர் காலம் எதிர் காலத்திற்கு என்று நிகழ்காலத்தை தொலைத்தவர்களினாலா? ஜீவகாருண்யம் என்று சொல்லி தனது வீட்டில் வளரும் மிருகங்களுக்கு உணவளிக்கும் மனிதர்களினாலா? உலகில் சராசரியாக விளையும் தானியங்களை குறிப்பிட்ட சிலரே அடைவதாலா? உணவை ஒழுங்காக வினியோகிக்க முடியாதலாலா?


இப்படியே பல காரணங்களை தேடிக் கொண்டிருக்கலாம்... நம்மால் முடிந்து இயலாமை என காரணங்களை தேடுவதும் ஆதங்க படுவதும் ஆகும். நாம வருத்த படுவதால் பசியோடுயிருக்கிறவன் வயிறு நிறைந்து விடுவதில்லை. நம்மால் முடிந்த உதவி பசித்தவனுக்கு உணவு அளிப்பதுதான்.


உலகில் ஆறில் ஒருவர் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார். பொருளாதார நெருக்கடி காரனாமாக கடந்த ஆண்டில் புதிதாக பிறந்த 10 கோடி பேர் உணவு பற்றாக் குறையால் பாதிக்க பட்டுள்ளார்களாம்.


எவ்வளவு பெரிய கொடுமை? ஆறில் ஒரு பேர் என்றால்... ஐந்து பேரும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தலே ஆறாவது மனிதனின் பசி ஆறிவிடுமே.


இதைபற்றி தினசரியில் வந்த செய்தி
உலகில் ஆறில் ஒருவர் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார். பொருளாதார நெருக்கடி காரனாமாக கடந்த ஆண்டில் புதிதாக பிறந்த 10 கோடி பேர் உணவு பற்றாக் குறையால் பாதிக்க பட்டுள்ளார்களாம். இதனால் சிக்கலான நேரங்களில் உணவு தட்டுபாட்டை எதிர் கொள்வோம் என்ற நேக்கத்தில் கொண்டாடப் படுகிற்து




1979 முதல் ஆண்டுதோறும் உலக உணவு தினம் அக்டோபர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை உணவு இல்லாத தினமாக அறிவிக்கும்படி இந்தியா, இலங்கை, சீனா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. பசி, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை போன்றவற்றுக்கு எதிராக உலக சமூகம் ஒன்று படவேண்டும் என்ற நோக்கில் உலக உணவு தினத்தை ஐ.நா., சபை அறிவித்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிலவும் உணவுப்பற்றாக்குறையையும், உணவுப்பொருள் விலையேற்றத்தையும் சுட்டிக்காட்டி எல்லோருக்கு உணவு வழங்க மாற்றுவழிகளை கண்டறிய வேண்டும் என தன்னார்வ தொண்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.


உணவு உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ளப் பட்ட பல திட்டங்கள் விவசாயிகளுக்கோ, ஏழைகளுக்கோ பெரிய அளவில் பலன் தரவில்லை என இந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவுப்பொருள் விலையேற்றம், கலப்படம், உற்பத்தி குறைவு போன்றவை பெரும்பாலும் ஏழைகளையே கடுமையாக பாதிக்கின்றன. தினமும் ஏறத்தாழ 92 கோடிப்பேர் பட்டினியுடன் தூங்கச்செல்கின்றனர் என உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. இதை 2015ம் ஆண்டுக்குள் 50 கோடியாக குறைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். உணவு தினத்தை, உணவு இல்லாத தினமாக அறிவித்தால் மட்டுமே உலக உணவுச்சிக்கல் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதும் தொண்டு அமைப்புகளின் வாதம்.


நன்றி தினமலர்




நம்மால் இயன்ற பொருள் உதவி செய்தால் ஒருவருடைய வயிறு நிறையும், நம்மால் நமது வயிறு நிறையும் போது அடையும் ஆனந்ததை விட மற்றவர்களுக்கு உணவளித்து பார்ப்பது பல மடங்கு ஆனந்ததை அளிக்க கூடியது. சாலையில் செல்லும் போது ஒருவருக்கு பிச்சை போடும் 10 ருபாயை விட அவருக்கு கொடுக்கும் ஒரு வேளை உணவு சிறந்தாகும்.




ஏழைகளுக்கு உணவு அளிக்கிறவன் கர்த்தருக்கு உண்வளித்தவனாவான் என்கிறது கிருஸ்த்துவம்

அண்டை வீட்டார் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே என்கிறது இஸ்லாம்.


பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம் என்கிறது இந்துஸ்சம்


வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை, நாமும் அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்க ஒரு நொடி போதும். அடுத்தவர்களின் பசியை ஆற்றிப் பாருங்கள், வாழ்கை அடுத்தவர்களை வாழ வைத்து பார்ப்பதுதான்.

நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ விசேசமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒரவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.



ஒரு ஆய்வின் படி உலகத்தில் பல பேர் இரவு உணவு உண்ண வசதியில்லாமல் பட்டினியால் உறங்குகின்றனர். என்ன ஒரு கேவலமான உலகில் நாம் வசிக்கின்றோம், ஒரு பக்கம் உணவு மீந்து வீணாகிறது, மறுபக்கம் உணவில்லாமல் மக்கள் வீணாகின்றனர். உங்களிடம் கேட்டுகொள்வது எல்லாம் ஒற்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்களுக்கு அறியாதவர் தெரியாதவருக்கு உணவிடுங்கள்.

உங்களால் உதவ முடிந்தால்...
http://www.helpageindia.org/
www.mctrust.org.in/helpoldage.htm
http://www.ashanet.org/
http://www.karmayog.org/
http://www.hotfrog.in/Products/Welfare-Organisation
http://www.udavumkarangal.org/




அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி

தீபாவளியாம் தீபாவளி

 சே... எரிச்சல் எரிச்சலா வருது... இப்படியா கொண்டாடுவாங்க?


எனக்கு வந்த எரிச்சலுக்கு அப்படியே.....


என்மேலயே எனக்கு கோவம் கோவமா வருது, பின்ன என்ன திபாவளி அதுவுமா ஊருக்கு போகலாம்னா எல்லா பஸ்சும் புஃல் அட ரயில்ல போகலாம்னா மூணு மாசத்துக்கு முன்னாடியே எல்லா புக்கிங்கும் முடிச்சுடுச்சு...


என்ன செய்றது? எனக்கு வந்த கடுப்புல பஸ்சுல போறவங்க வாறவுங்க எல்லாரையும் மனசுக்குள்ளே திட்டினேன். பிச்சை கேட்டு வந்த கிழடியை கூட விரட்டினேன்.  எனக்கு என்னோட கோவத்த யார்மேலாவது காமிக்கனும்.  அரசாங்கம் மேல கோவம் திரும்புச்சு, சே என்ன அரசாங்கம் நடத்துறாங்க, ஒரு பண்டிகை நாளும் அதுவுமா அதிகமா பஸ் விட்டாதான் என்ன... இப்படி இருப்பாங்க, இனிமே இவன்களுக்கு ஓட்டே போடக்குடாது அப்படின்னு மனசுக்குள்ளே சபிச்சேன். ஸ்டேட் கவர்மெண்டு இப்ப்டின்ன சென்ட்ரலாவது கூட ரயில் விட்டிருக்கலாம்.


அம்மா சொன்னது மனசுக்குள்ளே கேட்டுகிட்டே இருந்துச்சு... "டேய் அருண் எப்படியும் திபாவளிக்கு 2 நாளைக்கு முன்னாடி வந்துடுடா". அம்மா எதிர்பாத்துகிட்டே இருப்பாங்க...


இதுவரைக்கும், அருண் எனக்கு அது வாங்கி கொடுடா இது வாங்கி கொடுடான்னு எங்க அம்மா என்கிட்ட கேட்டதே இல்லை... என்னை அவ்வளவு பாசமா பாத்துகிட்டாங்க, நான் பசின்னா என்ன அப்படின்னு தெரிஞ்சுகிட்டதே சென்னைக்கு வேலை தேடி வந்த பிறகுதான், எங்க அம்மவுடைய அருமை நான் அவங்கள் விட்டு பிரிந்து வேலை தேடி வந்தவுடந்தான் அதிகாதிகமாக உணர்ந்தேன், நான் கொண்டாடிய திபாவளியெல்லாம் எங்க அம்மாவுடன்தான், ஒவ்வொரு வருசமும் அவங்க சேலை எடுக்குறாங்களோ இல்லையோ எனக்கு கண்டிப்பா சட்டை பேண்ட் இருக்கும். இந்த தடவை அது நடக்காதோன்னு நினைக்கும் போதே கண்ணுல இருந்து இரண்டு துளி கண்ணீர் வந்தது.


வாழ்க்கையில முதல் தடவையா ஆசை ஆசையா அம்மாவுக்கு சேலை எடுத்தேன், தங்கச்சிக்கு சுடிதாரும் அப்பவுக்கு வேஷ்ட்டி சர்ட் வாங்கி ரெடியா வச்சுகிட்டு கோயம்பேடு பஸ்டாண்டு வந்தவன்தான் கடைசியில நொந்து போய் நின்னுகிட்டு இருந்தேன்...


சரி பிரைவேட் பஸ்சிலாவது போவோம், அப்படின்னு நினைச்சுகிட்டு அங்கு போனேன்... அங்கும் சரியான கூட்டம்.  எப்படியாவது ஒரு சீட்டு கிடைச்சுடனும்...  சார் எங்க சார் போகனும்? ஒரு புரோக்கர் கேட்டார் மதுரைக்கு போகனும், 700 ஆகும் சார், என்னங்க இது மகா அநியாயமாக இருக்கு? கவர்மெண்டு பஸ்லே 180 ருபாய்தானே என்று என்னோட ஆதங்கத்த சொன்னேன், அப்படியா நீ கவர்மெண்டு பஸ்சிலே போ போ என்று விரட்டினார்.


என்ன செய்றதுன்னு யோசிச்சிக்கிட்டே போய் சில மதுரைன்னு போர்டு போட்டிருந்த இடங்கள் கேட்டேன்... எல்லாரும் ஒரே மாதிரி எல்லாம் புல்லாயிடுச்சுன்னு ஒரே பதிலை சொன்னாங்க.


சோர்வுடன், திரும்பவும் அரசாங்க பஸ் நிலையத்திற்கே வந்தேன், அப்போதுதான் மதுரைன்னு போர்டு போட்டுக்கிட்டு ஒரு பஸ் வந்துச்சு... கலைத்து விட்ட தேனிக்கள் எதையாவது கொட்டுறதுக்கு போறது மாதிரி பஸ்சை நோக்கி மக்கள் கூட்டம் ஒடியது... இதவிட்ட போகவே முடியாது எப்படியாவது இடம் புடுச்சுடனும்னு ஓஓஓஒடிப் போயி பஸ்சுக்குள்ளே ஏறி உக்காந்துட்டேன்...

உஸ் அப்பாடி.


மக்கள் கூட்டத்தால் அப்படியே நசுங்கி கொண்டு பஸ் கிளம்பியது...


இனி கவலை இல்லை, எப்படி ஊர் போய் சேர்ந்திடலாம்...


நல்லா சாய்ந்து தூங்க ஆரம்பித்தேன்,  திடீர்ன்னு டம்னு ஒரு சத்தம், எல்லாரும் என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறிட்டாங்க, டிரைவரும் பஸ்சை ஒரு ஒரமா நிப்பட்டுனாரு.


டரைவர் கீழே இறக்கி ரெம்ப நேரம் பாத்துட்டு டயர் ராடு ஒடஞ்சுடுச்சு, பஸ் இனி போகாது, எல்லாரும் இறங்கி வேற பஸ்சுல போங்க.

அடக்கடவுளே இப்படி ஒரு சோதனையா? நான் திபாவளிக்கு ஊர் போக முடியாது போல இருக்கேன்னு நினைச்சுகிட்டு கூட்டத்தோட கூட்டமா நின்னுகிட்டு இருந்தேன், 220 KM மதுரை அப்படின்னு போர்டு இருந்துச்சு, சரி கொஞ்சம் தூரம்தான் ஏது வந்தாலும் ஏறி போய்டனும்னு தீர்மானம் போட்டுகிட்டு இருந்தேன்.

நாங்கள் வருகிற அனைத்து வண்டிகளையும் நிப்பாடினோம், பல பேர் நிறுத்த வில்லை, சில பேர் நிறுத்தி குடும்பமாய் உள்ளவர்களை மட்டும் ஏற்றி கொண்டு சென்று விட்டனர்.

இப்படியே கூட்டம்லாம் குறைந்துவிட்டது... சே நாம மட்டும் மாட்டிக்கிட்டோம், ஏதாவது  பஸ்சு, லாரி வராதான்னு  வேண்ட ஆரம்பித்தேன்... நேரம் கடந்து கொண்டே சென்றது. இரவு 1 மணி ஆய்டுச்சு... எல்லா பஸ்சும் புல்லாவே கடந்தது..  

ரெம்ப நேரமா ஒன்னுமே வரலை...
கொஞ்ச நேரத்தில்... தூரத்தில் ஏதோ ஒரு வண்டி

பழனி ஆண்டவர் அப்படின்னு எழுதிருந்த ஒரு டாடா சுமோ வந்தது. நானும் தைரியமா கையை காமிச்சு நிப்பாட்டினேன். உள்ள ஒரு ட்ரைவரும் கூட ஒரு ஆளும் இருந்தனர், எப்படியும் சீட்டு கிடைச்சும் ஊர் போயிடலாம் அப்படிங்கிற குசில சென்னையில் இருந்து வந்தது பஸ் கெட்டு போனது எல்லாம் சொல்லி என்ன மதுரையில  விட்டட சொல்லி கொஞ்சுற நிலைமையில் சொன்னேன்... எல்லாம் கேட்டுகிட்டு இல்ல தம்பி நாங்க வேற ஒரு சோலியா போறோம்... அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டான் அந்த பா... சே வந்த வண்டியும் போய்டுச்சே... வருகிற பஸ் எல்லாம் புல் என்ன செய்வது.. ஒரே டென்சன்ல ரோட்டுல நின்னுகிட்டு இருந்தேன்...

போச்சு போச்சு, இந்த தீபாவளிய அம்மாவோட கொண்டா முடியாது போல இருக்கேன்னு சோர்ந்து போய் ஒரு ஓரமா இருந்துட்டேன்.

மேரி மாதான்னு போர்டு போட்ட ஒரு லாரி வந்துச்சு, நானும் நம்பிக்கை இல்லமாத்தான் நிப்பட்டினேன், ஏற்கனவே பல லாரி நிப்பாடி ஒருத்தரும் ஏற்றவில்லை, சரி இங்காவது இடம் கிடைக்காதான்னு ஒரு நப்பாசைல நிப்பாட்டினேன். டிரைவரும் நிப்பாட்டினாரு,  சார் இப்படி சென்னைல இருந்து வந்தேன், மதுரை போகனும் அங்க இறக்கிவிட்டிருங்களான்னு கேட்ட உடனே சரிதம்பி வாங்க, நாங்களும் மதுரைதான் போறோம்.

ஒரே ஆனந்த்மாய் இருந்துச்சு.

ஏறி அமர்ந்தேன்.

நல்ல வேகம்...
அப்பாடி மதுரையிம் வந்துடுச்சு... ஒரே சந்தோசம், 100 ருபாய் காசு கொடுத்தேன் டிரைவரிடம் அதுக்கு அவரு காசுல்லாம் வேனாம் தம்பி பட்டாசு வச்சுரிந்திங்கன்னா கொஞ்சம் கொடுத்திட்டு போங்க வீட்டுல பிள்ளைகளுக்கு கொடுக்கனும்,  உடனே நான் வைய்திருந்த பேக்கில் இருந்து கொஞ்சம் பட்டாசு எடுத்து கொடுத்தேன். சந்தோசமா வாங்கி கொண்டார், சரின்னே ரெம்ப தங்ஸ், உங்க பேரு என்னன்னே கேட்டேன் பாஷா  என்றார்.


-----------------------------------





அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Oct 12, 2009

விஞ்ஞானிகளும் முடநம்பிக்கைகளும்

படிச்சவனும் எல்லா முடநம்பிக்கையிம் இருக்கும் என்பது அடிக்கடி உறுதி செய்யபடுகிறது..  இப்போது நான் பார்த்து அதிர்ச்சி அடைந்தது விஞ்ஞானிகள் வேறு ஒரு விஞ்ஞானிகானியை நரபலி கொடுக்க முயன்றது.

குவாலியர்: மத்தியப் பிரதேசத்தில் இளம் விஞ்ஞானி ஒருவரை இரு மூத்த விஞ்ஞானிகள் நரபலி கொடுக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.



மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (Defence research and development establishment) விஞ்ஞானியாக உள்ள சுசில்குமார் மிஸ்ராவின் மனைவி ஸ்ரீதா சர்மா.
இவர் 4 நாட்களுக்கு முன் குவாலியர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.


அதில், தனது கணவருடன் பணியாற்றும் மூத்த விஞ்ஞானிகளான காமேஸ்வர ராவ், பாஸ்கர் ஆகியோர் அவரை கடத்திச் சென்று நரபலி கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.


ராணுவத்தின் ரக்ஷா விஹார் காலனியில் வசிக்கும் காமேஸ்வர ராவ், தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி சுசில் குமாரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.அங்கு சுசில் சென்றபோது பாஸ்கர் ஏதோ பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது சுசில் குமாருக்கு குடிக்க பானம் கொடுத்துள்ளனர் இரு விஞ்ஞானிகளும்.அதை அருந்திய சுசில் குமார் மயங்கியுள்ளார். இந் நிலையில் கூர்மையான கத்தியுடன் இருவரும் அவரை நெருங்கியுள்ளனர். அப்போது பாஸ்கர் மந்திரங்களை ஜெபித்தபடி அருகே வந்ததால் அந்த சத்தத்தில் சுசில் குமார் முழித்துள்ளார். தன் கழுத்துக்கு அருகே கத்தியுடன் இரு விஞ்ஞானிகளும் நின்றிருந்ததைப் பார்த்து தப்பியோட அவர் முயன்றுள்ளார். அப்போது இருவரும் அவரை பிடித்து இழுக்கவே, உதவி கேட்டு குரல் எழுப்பினார் சுசில். இந்த சத்தம் கேட்டு வாட்ச்மேன் ஓடி வரவே அவரை விட்டுவிட்டனர் இரு விஞ்ஞானிகளும். ராவின் வீட்டிலிருந்து சுசில் குமார் தப்பியோடுவதை அண்டை வீட்டினரும் வாட்ச்மேனும் பார்த்துள்ளனர். தப்பியோடுகையில் வலது கையில் ஏற்பட்ட காயத்துடன் கண்டோண்மெண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் சுசில்குமார்.


நமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் இப்படிப்பட்ட விஞ்ஞானிகளும் இருப்பது வெட்கக்கேடு.
 
நன்றி தட்ஸ்தமிழ்
 
 
மிகவும் வருத்ததுகுறிய செய்தி.
 
சுசில் குமார் முழித்ததினால் தப்பித்தார் இல்லை என்றால்? நினைக்கவே கொடுறமாக இருக்கிறது.
 
அவர்கள் அப்படி செய்ய காரணம் என்ன?
 
தமிழகத்தை தவிர பலமாநிலங்களில் மூடநம்பிக்கை வேரூன்றி போய் உள்ளது... ஆனால் படித்தவர் மத்தியில் அதுவும் விஞ்ஞானியாக இருப்பவர்களிடம் இதுபோல் இருக்க காரணம் என்ன? நரபலி கொடுப்பதினால் என்ன நடந்து விட போய்கிறது? இதில் மதத்தை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை.  ஒருவர் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அவர்கள் வளர்ந்த விதமும் சமுதாயமும் காரணமாய் அமைகின்றன...
 
இதில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மிகச்சிறந்த நிறுவனங்களில்தான் கல்வி பயின்று இருப்பார்கள். அறிவியல் கல்வி கொடுக்கும் பல்கலைகழகம், ஒழுக்க கல்வியும் அனைத்து பகுத்தறிவும் முறையும் கற்பிக்கனும்.

இது மட்டும் அல்ல, நமது ISRO வில் கூட, ராக்கெட் ஏவும் போது நாள் பார்த்து,  இலுமிச்சை வெட்டிதான் அவற்றை ஏவுகிறார்களாம். 



பெரியார் போல அங்கு யாரும் இருக்காததுதான் காரணம் என்றால், முதலில் பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுமைக்கும் அதிக அளவில் பரப்பவேண்டும்.  பெரியார் எதிர்த்த அளவிற்க்கு மூடநம்பிக்கைகளை யாரும் எதிர்திருப்பார்களா என்பது சந்தேகமே. பெரியார் என்றாலே கடவுள் மறுப்பு என்ற கருத்தை மட்டும் விளங்கொண்டுள்ளவர்களிடமும் பெரியாரின் கருத்துக்கள் போய் சேரவேண்டியது மிக அவசியம்,  பெரியாரின் தொண்டர்கள் என்று கூறிகொள்பவர்கள், அவரின் அனைத்து கருத்துகளையும் அனைவரிடமும் சென்றடையுமாறு செய்யவேண்டும் இதுதான் எனது எண்ணம். அப்போதுதான் இப்படி பட்ட நிகழ்ச்சிகள் படித்தவர்களிடம் இருந்து மறையும்.

நான்காவது தூண்

நான்காவது தூண் வர வர கொதித்து எழ ஆரம்பித்துள்ளது.


இப்ப எழ காரணம்???


அவர்களை மற்றவர்கள் குற்றம் சாட்டியதை ஜீரணிக்க முடியவில்லை, அது எப்படி எல்லாரையும் நாங்கள்தான் குற்றம் சொல்வோம் நீங்கள் எப்படி எங்களை சொல்லலாம்,  என்று தெருவுக்கு தெரு வந்து போராடுகின்றனர். அவர்கள் எவரை பற்றியும் பற்றியும் எப்படியும் செய்திகள் போடுவார்கள், அவர்களை மற்றவர்கள் செய்தியாக்கியது பொருக்கவில்லை.





பத்திரிக்கை அன்பர்களை பற்றி அவர்களின் குடும்பங்களை சினிமா நபர்கள் விமர்ச்சித்தை தாங்க முடியவில்லையே... இப்படிதானே இருந்திருக்கும் நீங்கள் மற்றவர்களின் மனதை காயப்படுத்தும் போதும், பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தை உங்களது பேனா எனும் ஆயுதத்தலால் குத்தி கிழிக்கும் போது அவர்கள் மனது என்ன பாடுபட்டிருக்கும்.

சினிமாவும் சினிமா நடிகைகளும் எப்படி என்று அனைவருக்கு தெரியும்,  சில பத்திரிக்கை செய்தது சினிமா நடிகைகளுக்கு மார்க்கெட்டிங். அமாம் அதுதான் உண்மை,  இந்த நடிகை இவ்வளவு வாங்குகிறார், அந்த நடிகை அவ்வளவு வாங்குகிறார் என்ற செய்தியால் என்ன நன்மை இருக்க போய்கிறது?  அந்த நடிகைகளை நாடிசெல்லும் நபர்கள் விலை நிர்ணயம் செய்வார்கள்.

இது நாள் வரை நடிகைகளின் நாய் தொலைந்து போனதை பெருமையாக எழுதி நாயின் படத்தை பெரிதாக பத்திரிக்கையில் போடுவதை சந்தோசமாகவும் இதுதான் மக்களுக்கு ஆற்றும் தொண்டு  என்று நினைத்தவர்கள் இன்று அதே நடிகைகளுக்காக எதிரான குரல்.


நான்காவது தூண் என்று ஊடகங்களை சொல்வார்கள். அந்த ஊடகங்களை சேர்ந்தவர்களே மிகவும் கொதிக்க ஆரம்பித்து விட்டார்கள், அதுவும் அவர்கள் அபிமான நடிகைகளுக்கு எதிராக, பாவம்... போராடுவதற்கு முன்பு பல சினிமா எழுத்தாளர்கள் "இந்த கொடுமைய பார்ப்பதற்காகவா என்னை உயிருடன் விட்டு வைத்துள்ளாய் கடவுளே" என்று மனம் நொந்துருப்பார்கள்.


ஊடகங்கள் சரியா செயல் பட்டு இருந்தால், அதற்கு எதிராக ஒன்று நடக்கும்போது மக்களே வீதிக்கு வந்து ஊடகங்களுக்கு ஆதரவா போராடுவார்கள். சில ஊடகங்கள் தவிர பலவேறு ஊடகங்கள் என்ன செய்தார்கள் மக்களுக்கு?

 இப்போது வரும் தினசரி பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் என்ன தலைப்பு செய்தியாக இருக்கும்??? சமிபம் வரை புவனேஸ்வரி  தலைப்பு செய்தியாக இருந்தார்,  கொஞ்ச நாட்களுக்கும் அவரே இருப்பார்...  முக்கியமா மக்களின் அத்யாவசிய தேவைகளை பற்றி எந்த ஊடகம் எழுதாது... அப்படியே எழுதினாலும், கண்டிப்பா அதை பின் தொடர்ந்து செய்தி போட மாட்டார்கள்.


கேட்டா உடனே சொல்வார்கள் பத்திரிக்கை விற்க வேண்டாமா என்பார்கள்.


ஏதாவது பரபரப்பு தகவல் வேண்டும் இவர்களுக்கு... அடுத்தவர்களின் கொடுர மரணம் இவர்களுக்கு பரபரப்பான தகவல். அடுத்தவர்களின் வாழ்கையின் படுக்கை அறை வரை சென்று பரபரப்பு தகவல் தேடி தலைப்பு செய்தியாக்குவதுதான் இவர்களின் நான்காவது தூண்.


  • அரசாங்க வேலையில் இருக்கும் சில பேர் இன்னும் ஜாதி/மத வெறி கொண்டு செயல் படுகின்றனர் அவர்களுக்கு எதிராக?
  • ஹோட்டல்களில் நாளும் பொழுதும் சாப்பாடு விலையை கூட்டிக்கொண்டு கேவலமான சாப்பாடு போடுகின்றார்களே அவர்களை பற்றி?
  • சீரழிந்த சாலை பற்றி கவலை பட்டிருப்பார்களா?
  • ரேசன் கடையில் பொருட்கள் ஒழுங்கா தருவதில்லை... இதைபற்றி?
  • சராசரியா நடக்கும் திருட்டை பற்றியும் & பின்தொடர்ந்த செய்தி?
  • சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாலையில் உறங்கும் மனிதர்களை பற்றி?
  • மாற்றபடும்/இயற்றபடும் சட்டங்களை பற்றிய ஒரு பார்வைகள்?
  • நீதி மறுக்க படுவோரை பற்றி?


இப்படி எழுதிக் கொண்டே போகலாம். 


அதிகமான மாத, வார இதழ்களில் இருக்கும் செய்தியே சினிமாவை பற்றிதான். மேலும் கிசுகிசு வேறு... க் பேருல முடிகிற இவர் சின்ன ச் வச்சுருகாராம்... இப்படி எழுதி எழுதியே வாழ்கையை ஓட்டிக்கொண்டுள்ளனர்...


சாலையில் செல்லும் போது PRESS என்று பெருமையாக சொல்லி போலீஸ்காரரிடம் இருந்து தப்பி செல்லமட்டும் நான்காவது தூண்ணின் உதவிவை பெற்று கொள்ளும் பத்திரிக்கையாளர்கள், மக்களுக்கு நன்மை செய்யும் செய்தியை வெளியிட எப்போது வெளியிட போறார்கள்?  , எது மக்களுக்கு விரோதமானதோ, எதனால் மக்கள் அதிகமாக உணர்ச்சிக்கு ஆளாவர்களோ அந்த செய்தியைதான் அதிகமாகவும் மக்கள் பார்வை படும் விதத்திலும் வெளியிடுவார்கள்.

ஜனநாயக முதல் தூண் மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறார், இவர்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை...  இரண்டாவது  அரசு ஊழியர்கள் பொதுவா இந்தியாவில் இருக்கும் பலபேர் இன்னும் அதிக வரி கட்டி கொண்டுருக்க இவர்கள்தான் காரணம், மூன்றாவது நீதிமன்றங்கள், இதுதான் கொஞ்சம் கொஞ்சம் மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது, நான்காவது தூண் ஊடகம் அது எப்படி இருக்கனும்? முதலில் இருக்கும் தூண்கள் சாயும் போது காப்பாற்றவேண்டியது நான்காவது தூண்தான். ஆனா கொடுமை என்னன்னா கட்டிடம் சாய்வதற்கு நான்காவது தூணே காரணமாய் அமைந்து விடுகிறது.

இந்தியா சிறந்த நாடாக மாற ஊடகம் சரியாக மாறினால், மக்களுக்கு எதிரானவைகளை எதிர்த்து வணிக நோக்கில் மட்டும் செயல்படாமல், நீதி நேர்மையுடன் செயல் பட்டால் மக்கள் வருவார்கள் உங்களுடன் போராட என்பதுதான் எனது எண்ணம்.

Oct 9, 2009

உங்கள் ஒவ்வொரு பதிவும் வாசிக்கபடும் எண்ணிக்கையை பதிவில் இணைக்க [Page view counter]

பிலாக் அல்லது வலைப்பக்கம் வைத்துள்ளீர்களா?



உங்கள் பிலாக்கின் அல்லது வலைப்பக்கத்தின் குறிப்பிட்ட பதிவை எவ்வளவு பேர் படித்தனர் என்ற விபரத்தை அப்பதிவில் தெரியப்படுத்த விரும்புகிறீர்களா?


எந்த பதிவை அதிக படியான பேர் படித்தனர் என்ற விபரத்தை தெரிந்து கொள்ளுதல் நல்லதுதானே, மேலும் அப்பதிவை வாசிப்பவருக்கும் அதை தெரிய படுத்தாலாம், அவரும் நமக்கு முன்பு இவ்வளவு பேர் படித்து சென்றுள்ளனர் என்று அறிந்து கொள்வார்கள்.


அதாவது, இங்கு எனது பதிவில் நீங்கள் பார்க்கலாம் "இப்பதிவை நீங்கள் xxxx வது நபராக வாசிக்கிறீர்கள்" என இருக்கிறது. இதே போல் உங்களது பிலாக்கிலும் செய்யலாம், மிகவும் எளிதான ஒன்று. நீங்கள் செய்ய வேண்டியது...

முதலில் வலை சொந்தமாக வைத்திருப்பது ஹிஹி.. :)


உங்கள் http://www.blogger.com செல்லவும்... பின்பு Layout --> Edit HTML என்று


வருசையாக கிளிக் செய்து செல்லவும்.


முதலில் Download Full Template என்பதை கிளிக் செய்து உங்களது பிலாக் டெம்ப்ளேடை சேமித்து கொள்ளவும்.





அங்கு Expand Widget Templates என்ற செக் பட்டனை கிளிக் செய்யவும்

<data:post.body/>  என்றதை கண்டுபிடித்து அதற்கு முன்பு


<b:if cond='data:blog.pageType == "item"'>
<div>
இதை நீங்கள்
<script src='http://mastan.moved.in/blog/blogcount.php' type='text/javascript'/>
வது நபராக வாசிக்கிறீர்கள்</div>
</b:if>


என்ற மேற்படி உள்ளதை சேர்க்கவும்


பின்பு சேமித்து விடவும். அவ்வளதுதான்... எவ்வளவு ஈசி பாத்தீங்களா?




In English


Hi, Are you running website or blog? Do you like to add page viewing counter in your site? Its so simple… here I’m explain how to configure in blogspot.


First goto www.blogger.com -> Dashboard -> Layout -> Edit HTML

Before start anything please click “Download Full Template” to save your existing code.
And enable “Expand Widget Templates”
Then find <data:post.body/>
Once find , add bellow code before that line

<b:if cond='data:blog.pageType == "item"'>
<div> You are
<script src='http://mastan.moved.in/blog/blogcount.php' type='text/javascript'/>
 person read this...
</div>
</b:if>

Then save it. That’s all.
If your having your own domain or site… just simple add my code under your </head>  tag that’s all.


இதை உபயோகப்படுத்துவர் கவனத்திற்க்கு...


<div> இதை நீங்கள் <script src='http://mastanoli.99k.org/blog/count.php' type='text/javascript' />  வது நபராக வாசிக்கிறீர்கள்</div>

இதை கீழ் உள்ளது போல் மாற்றலாம்.

<div> <script src='http://mastan.moved.in/blog/blogcount.php' type='text/javascript' /> already seen this </div>



நீங்கள் உங்கள் வசதி போல் மாற்றி கொள்ளலாம், எனது புரோக்ராம் படித்த நபர்களின் எண்ணை மட்டும் காட்டும் உங்களது இஷ்டம் போல் எதை வேண்டும் என்றாலும் இனைக்கலாம்.

மிக பெரிதாக காட்ட < h1 >  </h1> என்ற டேக்கில் எழுதவும்...

வேறு கலரில காமிக்க <div style="color:red"> என்று மாற்றலாம்.


இது மிகவும் எளிதான விசயம்.


மேலும் இதை பற்றி தெரிய
HTML Basic
More about DIV

Oct 7, 2009

எச்சரிக்கை: உங்களது இலவச இமெயில் திருடப்பட்டிருக்கலாம்

நீங்கள் gmail, yahoo, hotmail, msn போன்றவற்றில் இலவச இமெயில் சேவை வைத்திள்ளீர்களா?

உங்களக்காகவே இப்பதிவு.




மேல் குறிப்பிட்ட ஒன்றில் அக்கவுண்ட் வைத்து இருந்தால், உடனடியாக உங்களது கடவு சொல்லை (password) மாற்றிவிடவும்.

ஏதாவது புஷ்ஷிங் மெயில் வந்து, அவர்கள் குறிப்பிட்டுள்ள லிங்க் கிளிக் செய்து உங்களது கடவு சொல்லை மாற்றும் படியும் மிறினால் 36 மணி நேரத்தில் உங்களது அக்கவுண்ட் அழிக்கபடும் என்பதையும் தயவு செய்து இக்னோர் செய்து விடுங்கள்.

உங்களது gmail, yahoo, hotmail, msn இமெயில் முகவரி மற்றும் பாஸ்வோர்ட் மாற்றப்படலாம்.

ஏனெனில் பலபேரின் இமெயில் முகவரி மற்றும் கடவுசொல் இனையத்தில் வெளியிட படுகிறது.

மைக்ரோசாப்ட் அறிவிப்பு


இதைப்பற்றி மேலும் படிக்க

Oct 5, 2009

அவசர ஊர்தியின் ஒரு அவசர வேண்டுகோள்

அவசர ஊர்தி...


அருமையான பேரு. அவசரமாய் செல்ல வேண்டி இருப்பதால் அவசர ஊர்தி.





நல்ல பேருதான் வைத்துள்ளனர்.


எல்லாவற்றிக்கும் ஆதி அந்தம் அர்த்தம் தெரிந்துள்ள நமது மக்க்ளுக்கு இதன் அர்த்தம் இன்னும் விளங்க வில்லை என்பதுதான் கொடுமை.


அல்லது எப்பவும் போல எவன் செத்தா எனக்கு என்ன அப்படிங்கிற மனப்பான்மையா கூட இருக்கலாம்.


நானும் சென்னையில் பல இடங்களில் உய் உய் உய்ன்னு கத்திக்கிட்டு போற ஆம்புலன்சுன்னு எழுதி இருக்கிற அவசர ஊர்திகளை பார்த்துள்ளேன். ஆனா பாவம், எழுத்தில் மட்டுமே அது அவசரம். மத்தபடி தேமேன்னு மெதுவா ஊர்ந்து போகும்.


அவசரத்த எடுத்துட்டு ஊர்திய மட்டும் வச்சு இது ஊர்ந்து போக கூடியதுதான்னு சென்னை மக்கள் நினைச்சுட்டாங்க போல.


ஆம்புலன்ஸ் மட்டுமே எந்த விதமான சாலை போக்குவரத்து விதிகளுக்கு கட்டுபடாமல் செல்ல கூடியது.


ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அதை ஓட்டும் தினத்தில் யாரிடமாவது திட்டு வாங்குவார் அல்லது திட்டுவார். நமது மக்கள் புரிந்து கொண்டதுபோல் இதுவரை அவசரத்திற்கான அளவுகோலை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பது எனது எண்ணம்.


என்ன காட்டு கத்தலாய் கத்தினாலும் இதற்கு வழிவிடுபவர்கள் குறைவானவர்களே... ஆம்புலன்ஸ் சப்தம் காதுக்குள் ஒலித்தாலும் சரி அதனின் ஓளி கண்ணை கூசசெய்தாலும் சரி எனக்கு என்ன, நான் போறதுதான் எனக்கு முக்கியம் என்று போவோறே மிக அதிகமானோர்.


யாருக்கு என்ன அவசரமோ, என்ன சீரியஸ் மேட்டரோ? என்றாவது சிந்தித்து செயல்பட்டிருப்பார்களா? ஒவ்வொரு தடவை ஆம்புலன்ஸ் பார்க்கும் போதெல்லாம் எனது மனதில் வலி உண்டாகும். கடவுளே இதில் இருக்கும் மனிதரை காப்பாற்று என்று வேண்டிக்கொள்வேன், வழியும் விட்டு ஒதுங்க ஆரம்பித்துவிடுவேன். ஆம்புலன்ஸ் போக வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் சென்றாலே அம்மனிதர் குணமாகிவிடுவார். நான் துபாயில் 2 வருடம் வேலை செய்ததால் அங்கு இருக்கும் சாலை போக்குவரத்து விதிகள் இந்தியாவுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப்பட்டுள்ளேன். அங்கு ஆம்புலன்சின் உய் உய் உய்ன்னு சப்தம் கேட்டாள், சாலையில் செல்லும் அனைத்து வாகனங்கள் ஏதாவது சந்து பொந்து இடுக்குகளில் டக்கு டக்குன்னு போய் ஒளிந்து கொண்டு ஆம்புலன்சிற்கு வழி விடும், அந்த அளவிற்கு மக்கள் அதன் அர்த்தம் புரிந்து வைத்துள்ளனர், ஆதலால் மிக உடனடியாக அது செல்வதற்கு ஏற்ப வழி ஏற்படுகிறது. துபாயில் வசிப்பவர்கள் 70% பேர் நமது மக்கள்தான், அங்கு பின்பற்றும் விதிகளை இங்கு வந்தவுடன் மறந்து விடுகின்றனர்.


சமிபத்தில் சென்னையின் ஒரு மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் சப்தம் போட்டு கொண்டிருக்கிறது, நான் எதிர் பக்கமாக சென்று கொண்டுருந்தேன், எப்பவும் போல் அந்த மேம்பாலம் அந்த நேரத்தில் மிகவும் அதிப்படியான வாகனங்களாள் ஊர்ந்து கொண்டிருக்க, அந்த ஆம்புலன்சிற்கு வழி விடுவோர் எவருமில்லை... அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் அதன் முன்பு நிற்கும் வாகன ஓட்டிகளிடம் வழி விடும்படி கத்தி கொண்டிருந்தார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரின் கூட இருந்தவர் கண்ணீருடன் கதறி அனைவரிடம் கெஞ்சி கொண்டிருந்தார், வழி விட்டவர் கொஞ்சம்தான்... கொடுமையான விசயம் கேட்டு கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்தவர்கள்தான் அதிகம், அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது ஏன் என்றால் முன்பு நிற்கும் வாகனங்கள் வழி கொடுத்தால்தான் அவர்களும் வழி கொடுக்க முடியும்.


இப்படி ஒருத்தர் மாற்றி ஒருத்தர் குற்றம் சொல்லும் வழக்கத்தைதான் அதிப்படுத்தி வைத்திருக்கிறோம்.


இங்குதான் ஆம்புலன்ஸ் மான்புமிகு மந்திரிகளுக்ககவும் பெரிய பதவியில் இருக்கும் அரசாங்க ஊழியர்களுக்காவும் வழி விட்டு கொண்டிருக்கிறது.


அதையிம் விட கொடுமை சிக்னல் சிவப்பு விளக்கில் ஆம்புலன்ஸ் இங்கு நிறுத்தபடுகிறது.


நமது மக்கள் இரக்க குணம் மிக்கவர்கள்தான், ஒரு விசயம் தமது குடும்பத்தினற்கும் சுற்றாருக்கும் ஏற்படாதை வரை அவ்விசயத்தில் இரக்கமற்றவர்களாகவே இருப்பார்கள்.


இவ்விசயத்தில் முன்அனுபவம் தேவையா? யாரும் ஆம்புலன்சில் போகவேண்டும் என்று ஆசை படமாட்டார்கள்.


தயவுசெய்து ஆம்புலன்சின் உய் உய் உய்ன்னு சப்தம் கேட்கும்போதும் சரி, அதன் ஒளி நம்மை சென்றடையிம் போதும் சரி, மனதில் இருத்தி கொள்ளுங்கள் நீங்கள் வழிவிடும் போது ஒரு உயிர் காப்பாற்ற படுகிறது. நமக்கு ஏதாவது தேவையின் போது மற்றவர்கள் அதாவது அறியாது தெரியாதவர்கள் உதவும் போது எவ்வளவு சந்தோசம் கிடைக்குமோ அதை விட பல மடங்கு சந்தோசம் மற்றவர்களுக்கு உதவும் போது ஏற்படுகிறது.


இதை படிக்கும் நீங்கள், நீங்களும் மாறி மற்றவர்களும் மாற உதவலாமே? ஒரு உயிர் உங்களாலும் காப்பற்ற படுகிறது என்பது எவ்வளவு சந்தோசமா விசயம்.


வாழும் வாழ்கை கொஞ்சம்தான், மற்றவர்களுக்கு உதவி வாழ்கையை அழகாக ஆக்கிக்கொள்ளலாமே.

Oct 1, 2009

எதிர்கால உலகம்

இப்போது உள்ள உலகத்தை இரண்டாக பிரிக்கலாம்.


கமு கபி (கணிணி ஆட்சிக்கு முன் கணிணி ஆட்சிக்கு பின்)

நாங்கள் இருப்பது கபி 69 வருடம்.






ஏனென்றால் இப்போது அனைத்தையும் நிர்வாகிப்பது கணிணிதான்.

நாங்கள் இப்போது வசிப்பது பூமி கிரகத்தில் அருகில் இருக்கும் InD532 கிரகம், இதை எல்லாம் செயற்கை முறையில் கணிணியால் உருவாக்க பட்டவை. பூமியில் மனிதர்கள் வசிப்பதுக்கும் இடம் இல்லாததால், இவ்வாறு கணிணியே இடம் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.
 எங்கள் InD532 கிரகத்தை பராமரிப்பது CCx93BB என்கிற கணிணிதான் அதுதான் எங்களின் தலைவன்.


இந்த சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து CCxxxxx ரக கணிணிகள் மட்டும் அனைத்தையும் பராமரித்து பாதுகாப்பது பூமியில் உள்ள Axhd எனும் கணிணியாகும், அதுதான் உலகத்தின் தலைவன்.

பிறப்பும் இறப்பும் கணிணி வசம் தான்.


எங்களை உருவாக்கியதும் கணிணிதான், அழிப்பதும் அதுவே.


மனிதர்கள் எந்த இடங்களில் தேவை என்பதை கணிணி முடிவு செய்யும், பிறகு BIOTECH முறையில் அவர்களை 52 நிமிடம் 12 வினாடிகளில் உருவாக்கிவிடும்.

அனைவருக்கும் 500 மாதங்கள் மட்டுமே இங்கு வசிப்பிடம். பிறகு மனிதனின் உயர்கூறு செல்களை அழித்துவிட்டு அவர்களின் மூளை எடுத்து அதன் அனைத்து தகவல்களையும் ஓளியின் சேமிப்புகிடங்கில் வைத்து விட்டு பிறகு மூளையை flush செய்து விட்டு அடுத்து உருவாக்கும் மனிதர்களுக்கு வைத்து விடும்.


மனித இனத்தை இன்னும் அழிக்காமல் விட்டு வைத்திருக்க காரணம், மனிதனின் சுய சிந்திக்கும் திறன், முக்கியமா மனித மூளையின் இடது பக்கம், இந்த ஒருவிசயத்தை கணிணியால் இன்னும் அடைய முடிய வில்லை. எங்களை உபயோகித்து பல்வேறு செயல்களை செய்து வருகிறது.

மனிதர்களின் மூளையில் மிக பெரிய அளவிலான கணிணி ஒன்று பொருத்த பட்டு அது மனிதனின் பிம்பமாமாய் இருக்கும்.

இங்கு அனைவரும் அனைத்து விசயங்களிலும் கண்காணிக்கப்படுவர்.

யார் எங்கிருந்தாலும் கணிணி அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து கொண்டே வரும், யாரும் தவறு செய்யவும் மாட்டார்கள், ஏன் என்றால் மனிதர்களுக்கு தவறு செய்யும் மூளையின் நியுட்ரான் செல்களை அழித்துவிட்டுதான் மனிதர்களின் உருவாக்கத்தை உறுதி செய்யும்.


கமு 250 வருடங்களில் மனிதர்களின் வாழ்ந்த வாழ்கை முறையை பற்றி படித்திருக்கிறேன். அப்போது ஆண், பெண் என்றும் ஜாதி மதம் என்றும் மொழி இனம், நாடு என்றும் பல்வேறு கூறுகளாக பிரிந்து இருந்ததை நினைத்து வியப்பாக இருக்கும், மேலும் மனிதர்களே மனிதர்களை உருவாக்குவார்கள் என்பதும் ஆணும் பெண்னும் சேர்ந்துதான் மனித இனம் உருவாகியது என்பதையும் எங்களால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.


அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்கைமுறை மிகவும் சிரமத்திற்கு உள்ளானது... ஒரு இடங்களில் இருந்து இன்னும் ஓர் இடங்களுக்கு தனது உடம்பின் மூலமா சென்றிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடிய விசயம்... நாங்கள் எங்களின் இயக்ககளை மற்றும் உடல் கூறுகளை மின்காந்தங்களாகா மாற்றி பயணம் செய்வோம். எங்களின் வேகம் நியுட்ரானின் வேகத்தை விடவும் வேகமானது.

புது பால்வெளியை  கண்டுபிடிக்கும் வேலை எனக்கு,  நானும் இப்போதுதான் வேலையை முடித்து வருகிறேன்.

வந்தவுடன்...


நான் இருக்கும் இடத்தில் Axhd கணிணி Virtual 4D முறையில் தோன்றி நான் மற்றும் அனைவர்களும் தனது பிம்பத்தையும் மக்கள் தொடர்புமையத்தை  கண்டிப்பாக தொடர்பு கொள்ளுமாறு ஆணையிட்டது.

ஏதாவது மிக முக்கியமான காரணத்தை தவிர Axhd எங்களை தொடர்பு கொள்ளாது.


இதற்கு முன்பு ஒருமுறைதான் இப்படி தொடர்பு கொண்டிருக்கிறது.


எல்லாரும் தொடர்பு கொண்டவுடன் Axhd பேச ஆரம்பித்தது. "கமு காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் இயற்கை விரோத போக்கினால் சூரியனின் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்தது... மேலும் அது சூரியனுக்கு மிகவும் ஆபத்தாக மாறிவிட்டது... கடந்த பல வருங்களாகவே சூரியன் தனது செயல்பாட்டை இழந்து வருகிறது. நாமும் முடிந்த அளவு அதை தடுப்பதுக்கு முயற்சித்தோம், ஆனால் இப்போது சூரியன் முற்றிலுமாக செயல்..."


இப்படி Axhd பேசிக் கொண்டிருக்க போது... மிகப் பெரிய அதிர்வுடன், நாங்கள் எதையோ நோக்கி வேகமாக இழுக்கப்பட்டோம்...