Oct 12, 2009

விஞ்ஞானிகளும் முடநம்பிக்கைகளும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
படிச்சவனும் எல்லா முடநம்பிக்கையிம் இருக்கும் என்பது அடிக்கடி உறுதி செய்யபடுகிறது..  இப்போது நான் பார்த்து அதிர்ச்சி அடைந்தது விஞ்ஞானிகள் வேறு ஒரு விஞ்ஞானிகானியை நரபலி கொடுக்க முயன்றது.

குவாலியர்: மத்தியப் பிரதேசத்தில் இளம் விஞ்ஞானி ஒருவரை இரு மூத்த விஞ்ஞானிகள் நரபலி கொடுக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (Defence research and development establishment) விஞ்ஞானியாக உள்ள சுசில்குமார் மிஸ்ராவின் மனைவி ஸ்ரீதா சர்மா.
இவர் 4 நாட்களுக்கு முன் குவாலியர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.


அதில், தனது கணவருடன் பணியாற்றும் மூத்த விஞ்ஞானிகளான காமேஸ்வர ராவ், பாஸ்கர் ஆகியோர் அவரை கடத்திச் சென்று நரபலி கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.


ராணுவத்தின் ரக்ஷா விஹார் காலனியில் வசிக்கும் காமேஸ்வர ராவ், தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி சுசில் குமாரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.அங்கு சுசில் சென்றபோது பாஸ்கர் ஏதோ பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது சுசில் குமாருக்கு குடிக்க பானம் கொடுத்துள்ளனர் இரு விஞ்ஞானிகளும்.அதை அருந்திய சுசில் குமார் மயங்கியுள்ளார். இந் நிலையில் கூர்மையான கத்தியுடன் இருவரும் அவரை நெருங்கியுள்ளனர். அப்போது பாஸ்கர் மந்திரங்களை ஜெபித்தபடி அருகே வந்ததால் அந்த சத்தத்தில் சுசில் குமார் முழித்துள்ளார். தன் கழுத்துக்கு அருகே கத்தியுடன் இரு விஞ்ஞானிகளும் நின்றிருந்ததைப் பார்த்து தப்பியோட அவர் முயன்றுள்ளார். அப்போது இருவரும் அவரை பிடித்து இழுக்கவே, உதவி கேட்டு குரல் எழுப்பினார் சுசில். இந்த சத்தம் கேட்டு வாட்ச்மேன் ஓடி வரவே அவரை விட்டுவிட்டனர் இரு விஞ்ஞானிகளும். ராவின் வீட்டிலிருந்து சுசில் குமார் தப்பியோடுவதை அண்டை வீட்டினரும் வாட்ச்மேனும் பார்த்துள்ளனர். தப்பியோடுகையில் வலது கையில் ஏற்பட்ட காயத்துடன் கண்டோண்மெண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் சுசில்குமார்.


நமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் இப்படிப்பட்ட விஞ்ஞானிகளும் இருப்பது வெட்கக்கேடு.
 
நன்றி தட்ஸ்தமிழ்
 
 
மிகவும் வருத்ததுகுறிய செய்தி.
 
சுசில் குமார் முழித்ததினால் தப்பித்தார் இல்லை என்றால்? நினைக்கவே கொடுறமாக இருக்கிறது.
 
அவர்கள் அப்படி செய்ய காரணம் என்ன?
 
தமிழகத்தை தவிர பலமாநிலங்களில் மூடநம்பிக்கை வேரூன்றி போய் உள்ளது... ஆனால் படித்தவர் மத்தியில் அதுவும் விஞ்ஞானியாக இருப்பவர்களிடம் இதுபோல் இருக்க காரணம் என்ன? நரபலி கொடுப்பதினால் என்ன நடந்து விட போய்கிறது? இதில் மதத்தை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை.  ஒருவர் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அவர்கள் வளர்ந்த விதமும் சமுதாயமும் காரணமாய் அமைகின்றன...
 
இதில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மிகச்சிறந்த நிறுவனங்களில்தான் கல்வி பயின்று இருப்பார்கள். அறிவியல் கல்வி கொடுக்கும் பல்கலைகழகம், ஒழுக்க கல்வியும் அனைத்து பகுத்தறிவும் முறையும் கற்பிக்கனும்.

இது மட்டும் அல்ல, நமது ISRO வில் கூட, ராக்கெட் ஏவும் போது நாள் பார்த்து,  இலுமிச்சை வெட்டிதான் அவற்றை ஏவுகிறார்களாம். பெரியார் போல அங்கு யாரும் இருக்காததுதான் காரணம் என்றால், முதலில் பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுமைக்கும் அதிக அளவில் பரப்பவேண்டும்.  பெரியார் எதிர்த்த அளவிற்க்கு மூடநம்பிக்கைகளை யாரும் எதிர்திருப்பார்களா என்பது சந்தேகமே. பெரியார் என்றாலே கடவுள் மறுப்பு என்ற கருத்தை மட்டும் விளங்கொண்டுள்ளவர்களிடமும் பெரியாரின் கருத்துக்கள் போய் சேரவேண்டியது மிக அவசியம்,  பெரியாரின் தொண்டர்கள் என்று கூறிகொள்பவர்கள், அவரின் அனைத்து கருத்துகளையும் அனைவரிடமும் சென்றடையுமாறு செய்யவேண்டும் இதுதான் எனது எண்ணம். அப்போதுதான் இப்படி பட்ட நிகழ்ச்சிகள் படித்தவர்களிடம் இருந்து மறையும்.

6 comments :

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
..:: Mãstän ::.. said...

stupid... dont comment here again.

Sajid said...

Human sacrifice as ritual is still practiced in many parts of India by certain tribes. In Tamilnadu, it is abolished. But to our pride, we still have the practice of killing female infants in many parts. This is not a superstition. Who will bring us the cure for this practice?

venkat said...

\\பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுமைக்கும் அதிக அளவில் பரப்பவேண்டும். பெரியார் எதிர்த்த அளவிற்க்கு மூடநம்பிக்கைகளை யாரும் எதிர்திருப்பார்களா என்பது சந்தேகமே. பெரியார் என்றாலே கடவுள் மறுப்பு என்ற கருத்தை மட்டும் விளங்கொண்டுள்ளவர்களிடமும் பெரியாரின் கருத்துக்கள் போய் சேரவேண்டியது மிக அவசியம், //


கண்டிப்பாக செய்யவேண்டும்.

சி. கருணாகரசு said...

நல்ல பதிவுங்க ... இன்று நம்பிக்கை என்பது கையில் இல்லை கைரேகையில் இருக்கிறது என்னசெய்ய?

..:: Mãstän ::.. said...

Thanks da mappi.

Thanks venkat

Thanks Karunarusu.