Apr 23, 2010

ஐபில்: இப்பதான் சந்தோசம் :) (ஓட்டும் போடுங்களேன் பிளீஸ்)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நேற்று நடந்த ஐபில் டி20 சென்னை - டெக்கான் விளையாட்டை பார்த்திருந்திருப்பீர்கள், அதில் சென்னை ஜெயித்தது மிகவும் சந்தோசமாக இருந்தது, அதைவிட சந்தோசமா இருந்தது டெக்கான் தோற்றது...











கடைசியில் சென்னை ஜெயித்தாலும் சந்தோசம்தான் மும்பை ஜெயித்தாலும்தான், ஏன் என்றால் வெளிநாட்டுகாரன் கேப்டன்சிப் இல்லாமல் இந்தியர்கள் தலைமையில் ஜெயிப்பது மிகவும் சந்தோசமா விசயம். இதே நேரத்தில் டெக்கானோ, ராஜஸ்தான் ராயலோ ஜெயித்துவிட்டார்கள் என்றால் அவர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியாது... வெளிநாட்டுகாரன்தான் ஜெயிப்பான் என்கிற மனோபாவம் வந்துவிடும்.

இந்த தடவை எப்படியும் சென்னைதான் ஜெயிக்கனும், பாவம் முதல் தடவை பைனல் வரை வந்தார்கள், இரண்டாவது செமி பைனல் வரை, இப்போது பைனல் வரை வந்து விட்டது, கண்டிப்பாக ஜெயித்து விடவேண்டும் :) எப்படியோ வரும் ஞாயிறு மிகச்சரியான போட்டி இருக்கு.

ஹைடன் எப்பவும் போல் இந்த சீசன் 3யில் செதப்பி வருகிறார் (பெருசா பணம் விளையாடிருக்குமோ???) அவரை பார்க்க பார்க்க அப்படி டென்சனா இருக்கு, அவரை விட்டு விட்டு கெம்பை எடுக்கலாம், மற்றபடி வள்ளல் பாலாஜியவும் நீக்கிவிடலாம். மும்பை அணியில் சச்சின் மற்றும் பொல்லார்டுக்கு அடிபட்டது சென்னைக்கு மிகவும் சாதகம் எப்படியோ டோனிக்கு அதிர்ஷ்டம் இருப்பதை ஒற்றுக் கொள்ள்வேண்டும். சென்னை சூப்பர் கிங் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

பார்க்கலாம் டோனியா சச்சினா என்று.




இங்கு ஓட்டிங் பட்டை வலது பக்கம் உள்ளது, அதில் பைனலில் யார் ஜெயிப்பார்கள் என்று கேள்வி உள்ளது, தயவு செய்து ஒரு ஓட்டு போட்டு போங்க



எல்லாம் ஒரு சூதாட்டம்தான்... இருந்தாலும் மனசு கேக்க மாட்டேங்கிது.

8 comments :

Anonymous said...

csk win

நாமக்கல் சிபி said...

சென்னைதான் ஜெயிக்கும்ணு எல்லாரும் பந்தயம் கட்டுவாங்க! ஆட்டத்தின் பாதியில் போக்கு வித்தியாசமாக மாறும்! அப்போழுது மும்பை ஜெயிக்கும் என்று முன்பை விட அதிக பந்தயம் கட்டுவார்கள்!

இறுதியில் எந்த அணிக்காக அதிக பந்தயம் கட்டப்பட்டுள்ளதோ அந்த அணி தோற்கும்!

அதான் சூதாட்ட விதி!

rajasurian said...

யார் வேண்டுமானால் ஜெயிக்கட்டும். மேட்ச் விறுவிறுப்பாக சென்றால் சரி.

Sabarinathan Arthanari said...

//சென்னைதான் ஜெயிக்கும்ணு எல்லாரும் பந்தயம் கட்டுவாங்க! ஆட்டத்தின் பாதியில் போக்கு வித்தியாசமாக மாறும்! அப்போழுது மும்பை ஜெயிக்கும் என்று முன்பை விட அதிக பந்தயம் கட்டுவார்கள்!

இறுதியில் எந்த அணிக்காக அதிக பந்தயம் கட்டப்பட்டுள்ளதோ அந்த அணி தோற்கும்!

அதான் சூதாட்ட விதி!//

இப்படியும் இருக்குமோ ?!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

உண்மை! ஹெய்டன் கேட்ச் practice கொடுத்தார். அதேமாதிரி தான் ரோஹித் ஷர்மாவும் சிம்மண்ட்சும். பணம் விளையாடி இருக்குமோ ?

என்றும் அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பி

Anonymous said...

ஏண்டா லூசு பயலே... வெள்ளைகாரன் கேப்டனா இருக்குற அணி வெற்றி பெறக்கூடாது ஆனா வெள்ளைக்காரன் நல்லா ஆடி ஒரு அணி வெற்றி பெறலாம். நல்லா இருக்கு உங்க கருத்து.

Unknown said...

Chennai won the series, CSK rocks :)

81 peoples supported CSK... we rocks

Unknown said...

Thanks everyone to vote and comment here.