Aug 9, 2010

இந்தியா 2020

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்திய குடிமக்கள் எல்லாருக்கு ஆசை இருக்கு போல, இந்தியா வல்லரசு ஆகனும் உலத்தை ஆட்டி படைக்கனும்னு... இது எந்த அளவுக்கு இருக்குன்னா, டீக்கடையில் விவாதிப்பது வரை வந்துள்ளது...



சமிபத்தில் டீ குடிப்பதற்காக சென்றிருந்த போது அங்கு இருந்த நான்கு பேர், எப்படியும் இந்தியா 2020ல் வல்லரசு ஆகிடும் என்கிற நிலையில் பேசிக் கொண்டிருந்தனர், நாமதான் சும்மா இருக்க மாட்டோமே, உடனே நான் ஆமா வல்லரசுன்னா என்ன என்றேன்? அங்கு இருந்த யாருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை, வல்லரசுன்னா வல்லருசுதான் அமெரிக்கா போல என்றார்கள்.. அதாவது மற்ற நாடுகளை கட்டுபடுத்த கூடிய அதிகாரமா? அல்லது எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கின்ற அதிகாரமா என்றேன்? அப்படி இல்லை, ஆனாலும் அப்படிதான் என்ற மலுப்பலுடன் பதில் சொன்னார்கள், உடனே இப்ப இந்தியன்தான் உலக அளவில் பணக்காரனாக இருக்கின்றான், இந்தியாவில்தான் அனைத்து செல்வாக்கும் இருக்கு, எந்த நாட்டின் மீது ராக்கெட் ஏவுகிற சக்தி நமக்கிருக்கும் இப்படி சொல்லி கொன்டே போனார்கள், உடனே நான் உலக அளவில் பணக்காரனாக இருக்கிற மும்பையில்தான் உலக அளவில் பிச்சைக்காரனாக இருப்பவனும் இருக்கின்றான் என்றேன்... என் மீது கோபம் போல் உடனே எழுந்து சென்று விட்டார்கள்.

எனக்கு தோன்றியதெல்லாம், வல்லரசு வல்லரசு என்கிறார்களே அப்படின்னா என்ன??? ரோட்டோரங்களின் படுத்து உறங்குபவர்கள் அதிகதிகம் உள்ள நாடு நமது நாடு. சமிப இரவில் நான் பார்க்க நேர்ந்தது, ஒரு ஏதோ ஒரு வண்டி (குப்பை அள்ளும்) அதன் உள்ளே இரு குழந்தைகள் உறங்கினார்கள் அந்த வண்டி கொசு வலையால் போர்த்த பட்டிருந்தது, வெளியில் அந்த குழந்தைகளின் அப்பவும் அம்மாவும் கொசு கடிக்க கடிக்க தூங்க முயற்சி செய்தார்கள்... உடனே நான் அவரிடம் ஏன் உங்களிக்கு வீடு இல்லையா ஏன் இங்கு தூங்கிறீர்கள் என்றேன்? அவர் எதுவும் பேசவில்லை, அவர் மனைவிக்கு யார் மீது கோபமே உடனே "
எங்களுக்கு இதான் வீடு, எங்க வேன்னா தூங்குவோம், யார் யாருக்கு வீடு கட்டி கொடுக்கிறாங்க எங்களுக்கும் ஒரு வீடு இந்த அரசாங்கம் தருதா, ஏன் நீ உங்க வீட்டுக்கு கூட்டிக்கு போயேன்" என்றார்கள்.

இவர்களை போல் பல பேர் வீதிகளில் வாழ்கின்றனர்... என்ன ஒரு கொடுமை அல்லவா? சில வயதானவர்களை பார்த்தால் மிகவும் மனது வலிக்கும், அதுவும் பசிக்காக கை ஏந்தும் மனிதர்களை கண்டாலோ, அப்படி ஒரு கஷ்டமா இருக்கும், அவர்களை கடக்கும் போதெல்லாம் அப்படியே மனது வலிக்கும், ஒரு குற்ற உணர்சியாவே இருக்கும், ஏதும் செய்ய முடியவில்லையே என்கிற வருத்தமான மனநிலையில் இருப்பேன்.

இந்த மக்களின் நிலமையை மாற்றிவிட்டு இந்தியா சொல்லி கொள்ளட்டும் வல்லரசு என்று... நமது நாட்டில்தான் ஏழை கடைசிவரை ஏழையாகவே இருக்கிறான், பணம் இருப்பவனிடம் பணம் சேர்ந்து கொண்டே போகிறது. எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் முறை அல்லவா? கல்வியில் சமத்துவம் வேண்டும் என்பதற்காகத்தான் யூனிபார்ம் என்கிற முறையை கொண்டு வந்தார்கள், ஆனால் பணம் இருப்பவனுக்கு ஒரு சமத்துவம் மற்றவர்களுக்கு ஒரு சமத்துவம் என்று ஆகிவிட்டது நமது நாட்டில், இப்படி ஆரம்ப நிலையிலே பல்வேறு வேறுபாடுகள்... சில நாடுகளில்(வல்லரசு என்று சொல்லி கொள்ளும்) ஒரு மாணவனின் படிப்பு செலவு அனைத்தையும் அரசாங்கமே எடுத்து நடத்தும், ஆனால் இங்கு?

நீதி எல்லாருக்கும் பொது, சட்டம் கண்டிப்பா கடமையை செய்யும் என்பார்கள், ஆனால் அந்த சட்டம் பணம் இருந்தால் வாயை மூடி கொண்டுவிடும் உதாரணம் எல்லாம் தேவை இல்லை, நீதிபதியே கொள்ளை அடிக்கிற நாடு நம்நாடு, குஜராத் கலவரத்தில் காரணகர்த்தாவ இருக்கிற ஒருவரே இன்னும் முதலமைச்சராக இருக்கிறார், சிபிஐ அவர் மந்திரி சபையில் இருக்கும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து அதை இங்கு நடத்தலாமா வேறு மாநிலங்களுக்கு மாத்தலாமா என்று முதலமைச்சராக்காக நீதியை மாற்றுகிறார்கள்.

தமிழ்நாடு அரசாங்கம்
சில பேர்களுக்கு இலவச வீடு கட்டி தறுகிறது, கொடுமை என்னன்னா ஏற்கனவே அவர்களுக்கு வீடு இருக்கிறது, ஏன் இந்த ரோட்டு ஓரத்தில் இருப்பவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா அல்லது ரோட்டு ஓரத்தில் இருப்பவர்கள் என்னத்த ஆடி பாடி மகிழ்விக்க போறாங்க என்கிற மனநிலையா? அதானே டான்ஸ் ஆடியும் புகழ்ந்து பேசினால்தானே இலவச வீடு கிடைக்கும்...

பல கிராமங்களில் இன்று வரை மின்சாரமே கிடையாது அப்படியே இருந்தாலும் அதிக பட்சம் மிக குறைந்த அளவே அங்கு இருக்கும், நகரத்திற்கு ஒரு முறையும் கிராமங்களுக்கும் ஒரு முறையும் பின்பற்றும் நாடுதானே நமது.

அன்னிய நாடு எது சொன்னாலும் தலை ஆட்டி அதன்படி செயல் படும் அரசியல் வாதிகளை கொண்ட நாடு நமது, போபால் விசவாய்வு தாக்கி இறந்தவர்களுக்கு இன்று வரை நிவாரணம் கிடைக்கவில்லை, இதெல்லான் வேண்டாம் என்று தனது தேவைக்காக போராடும் மக்களை மாவோயிஸ்ட்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டு கொல்லும் நாடுதானே நமது?


நமது நாடு முன்னேறினால் மிகவும் சந்தோசமே, ஆனால் எல்லாருக்கும் வாழ்வு சந்தோசமா இருக்கனும், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து கிடைக்கனும், அத்யாவசிய தேவைகளான நீர், வீடு, மின்சாரம் இவைகளை கொடுத்து விட்டு சொல்லி கொள்ளட்டும் வல்லரசு என்று.


எல்லருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்

1 comments :

mohamedali jinnah said...

RAMADAN KAREEM

Assalamuallikum.
May Allah keep us on the right path, and accept our fasting and prayers.
We wish the best blessings of Ramadan to all. May Allah accept our worship and may He help us rejuvenate our faith. May He help us share the joy of this month with all our family, friends and neighbors.
Jazakkallahu khairan
Mohamed Ali jinnah