Feb 23, 2012

மின்வெட்டு, என்னதான் செய்யலாம்?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மிகவும் ஒரு வேதனையான, குழப்பமான இன்னும் சொல்ல முடியாத  நிலையாகி கொண்டிருக்கிறது மின்தடை, சென்னையில் 2 மணிநேரமும்; பிற பகுதிகளில் 5 மணிநேரமும் மின்வெட்டு; இல்லை இல்லை சென்னையில் 3 மணிநேரமும் மற்ற பகுதிகளில் 6 மணிநேரமும் என்று, அரசாங்கமே ஒரு முடிவில்லாத அறிவிப்பு செய்ய கொண்டிருக்கிறது. மின்வெட்டு எவ்வளவு நேரம் என்று இன்னும் தீர்மானிக்கபடவில்லை.எதுக்கு எங்கும் பாரபட்சம் பார்பானே, மொத்தமாக எல்லாபகுதிக்கும் 24 மனிநேரமும் வெட்டிடலாம் என்று கூட நினைக்கலாம்,  எதுவேன்னா நடக்கலாம்,  ஏன்னா எந்த வழியிலும் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு வராவே போவதில்லை...  ஏப்ரல், மே மாதங்களில் இதன் தேவை அதிகமா ஆகும் பொழுது; கண்டிப்பாக கொடுரமான மின்வெட்டை எதிர்பார்க்கலாம்...

அரசாங்கம்,, எவன்டா கை நீட்டி பேசுறது, இப்ப யார புடுச்சு ஜெயிலில் போடலாம் என்றும், அரசியல்வியாதிகளுக்கும், அரசாங்க உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தடையில்லா மின்சாரமே கிடைக்கும் பொழுது, இதை பற்றி நினைக்க நேரம் ஏது? 

சரி என்னதான் செய்யலாம்???
  • மின்திருட்டை தடுக்க வேண்டும், எங்காவது எந்த கட்சி பொதுகூட்டம் நடக்கும் போதும் சரி, கல்யாணம், ஊர் பொதுவிழா (திருவிழா) நடக்கும் போதும் சரி 90% மின் திருட்டுதான் நடக்குது.
  • 220~240 வோல்டேஜ், 110~120 வோல்டேஜ் மாறவேண்டும், ஏன் என்றால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மின்கடத்தல்(?) ஆகும் போது அதிகமாக வீணாகுது.
  • கட்டுபாடான மின்வினியோகம்சென்னை போன்ற நகரங்களே அதிக அதிக மின்சாரத்தை உருஞ்சுகின்றனர்; அதுவும் பணக்கார வீடுகளில் நாய் கக்கா போகும் இடங்களில் கூட ஏசிதான் இருக்கும், இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் மிகஅதிகப்ட்சம் இவ்வளவுதான் என்று மாற்றவேண்டும்.
  • கடைகளின் பயன்பாடு, சில கடைகள், MNC நிறுவனங்கள் ஜொலிக்குதே ஜொலிஜொலிக்குதே என்று தடையில்ல மின்சாரத்தை பயன்படுத்துவதை தடைசெய்யவேண்டும்
  • சோலார் திட்டம், அராசாங்கம் மானியம் கொடுத்து வீடுகளில் சேலார் மின்சேமிப்பு திட்டத்தை கொண்டுவரலாம்.
  • கூடங்குளம், மிக கண்டிப்பா செயல்படுத்த வேண்டும்.

 இதை நான் எழுதும் போது கூட இருட்டில் இருந்தே எழுதினேன் :)

8 comments :

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் மஸ்தான் ஒலி,
இன்றைய மின்வெட்டை தடுக்க ரேசன் முறையிலான மின்விநியோகமே தீர்வு. தமிழ்நாட்டின் இன்றைய மின்தேவை 11 ஆயிரம் மெகா வாட். கையில் கிடைப்பதோ 7 ஆயிரம் மெகாவாட். 4500 மெகாவாட் பற்றாக்குறை. ஆனால் இதை நிவர்த்தி செய்ய அரசிடம் எந்தவொரு உருப்படியான திட்டமும் இல்லை. எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குறிப்பட்ட அளவு தான் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும். உதாரணமாக 150 யூனிட் தான் ஒவ்வொரு வீட்டிற்கும் என்று (அடிப்படை தேவைக்கேற்ப அளவீடு செய்தல் வேண்டும்.) மேலும் நீங்கள் குறிப்பிட்டபடி கூடங்குளம் திட்டம் அமுலுக்கு வரவேண்டும். மேலும் மின் திருட்டையும் தடுக்க வேண்டும். தங்களின் பதிவுகள் மொத்தத்தில் ஆக்கபூர்வமான சிந்தைனகளின் தொகுப்பு.

..:: Mãstän ::.. said...

வலைக்கும் வஸ்ஸலாம்.

உண்மைதான் ரேசன் முறையிலான மின்விநியோகமே தேவை, இதுவே தீர்வாகாது... மின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும்...

கருத்துக்கு மிக்க நன்றி

Anonymous said...

good view, govt has to follow...

vijay, uk

திண்டுக்கல் தனபாலன் said...

நிரந்தர தீர்வு : மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் !

..:: Mãstän ::.. said...

Thanks திண்டுக்கல் தனபாலன்...

Anonymous said...

what you know கூடங்குளம்???

Anonymous said...

the only way, we should be enjoy without power...

Anthony said...

அன்பரே, கூடங்குளம் செயல்பட்டாலும் அதில் 25% இலங்கைக்கும், 50% இந்தியாவின் பிற மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிற்கும் தான் செல்லவிருக்கின்றது. இலங்கை, கர்நாடகா மற்றும் கேரளா அணுமின்கழிவினை நம்மீது கொட்டுவதற்குச் சமம் இது. விளம்பர பலகைகளுக்கும் மின்சாரத்தாலான கேளிக்கைகளுக்கும் தடை (சினிமா உட்பட), எட்டு மணிக்கு மேல் அத்தியாவசயமற்ற கடைகள் கட்டாய மூடல், நடத்தினாலே போதும் மின்சாரத்தடை 50% குறையும். பிரான்சு, ஜெர்மனி ஆகியவை ஏன் அணு உலையை தடைசெய்கின்றன என்பதை யோசிக்க வேண்டும். இன்றைய தேவைக்காக நாளைய சந்ததியினரை பணயமாக்காதீர்கள். கஞ்சிக்கு விதைநெல் வேண்டாம்.