Oct 16, 2009

தீபாவளியாம் தீபாவளி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
 சே... எரிச்சல் எரிச்சலா வருது... இப்படியா கொண்டாடுவாங்க?


எனக்கு வந்த எரிச்சலுக்கு அப்படியே.....


என்மேலயே எனக்கு கோவம் கோவமா வருது, பின்ன என்ன திபாவளி அதுவுமா ஊருக்கு போகலாம்னா எல்லா பஸ்சும் புஃல் அட ரயில்ல போகலாம்னா மூணு மாசத்துக்கு முன்னாடியே எல்லா புக்கிங்கும் முடிச்சுடுச்சு...


என்ன செய்றது? எனக்கு வந்த கடுப்புல பஸ்சுல போறவங்க வாறவுங்க எல்லாரையும் மனசுக்குள்ளே திட்டினேன். பிச்சை கேட்டு வந்த கிழடியை கூட விரட்டினேன்.  எனக்கு என்னோட கோவத்த யார்மேலாவது காமிக்கனும்.  அரசாங்கம் மேல கோவம் திரும்புச்சு, சே என்ன அரசாங்கம் நடத்துறாங்க, ஒரு பண்டிகை நாளும் அதுவுமா அதிகமா பஸ் விட்டாதான் என்ன... இப்படி இருப்பாங்க, இனிமே இவன்களுக்கு ஓட்டே போடக்குடாது அப்படின்னு மனசுக்குள்ளே சபிச்சேன். ஸ்டேட் கவர்மெண்டு இப்ப்டின்ன சென்ட்ரலாவது கூட ரயில் விட்டிருக்கலாம்.


அம்மா சொன்னது மனசுக்குள்ளே கேட்டுகிட்டே இருந்துச்சு... "டேய் அருண் எப்படியும் திபாவளிக்கு 2 நாளைக்கு முன்னாடி வந்துடுடா". அம்மா எதிர்பாத்துகிட்டே இருப்பாங்க...


இதுவரைக்கும், அருண் எனக்கு அது வாங்கி கொடுடா இது வாங்கி கொடுடான்னு எங்க அம்மா என்கிட்ட கேட்டதே இல்லை... என்னை அவ்வளவு பாசமா பாத்துகிட்டாங்க, நான் பசின்னா என்ன அப்படின்னு தெரிஞ்சுகிட்டதே சென்னைக்கு வேலை தேடி வந்த பிறகுதான், எங்க அம்மவுடைய அருமை நான் அவங்கள் விட்டு பிரிந்து வேலை தேடி வந்தவுடந்தான் அதிகாதிகமாக உணர்ந்தேன், நான் கொண்டாடிய திபாவளியெல்லாம் எங்க அம்மாவுடன்தான், ஒவ்வொரு வருசமும் அவங்க சேலை எடுக்குறாங்களோ இல்லையோ எனக்கு கண்டிப்பா சட்டை பேண்ட் இருக்கும். இந்த தடவை அது நடக்காதோன்னு நினைக்கும் போதே கண்ணுல இருந்து இரண்டு துளி கண்ணீர் வந்தது.


வாழ்க்கையில முதல் தடவையா ஆசை ஆசையா அம்மாவுக்கு சேலை எடுத்தேன், தங்கச்சிக்கு சுடிதாரும் அப்பவுக்கு வேஷ்ட்டி சர்ட் வாங்கி ரெடியா வச்சுகிட்டு கோயம்பேடு பஸ்டாண்டு வந்தவன்தான் கடைசியில நொந்து போய் நின்னுகிட்டு இருந்தேன்...


சரி பிரைவேட் பஸ்சிலாவது போவோம், அப்படின்னு நினைச்சுகிட்டு அங்கு போனேன்... அங்கும் சரியான கூட்டம்.  எப்படியாவது ஒரு சீட்டு கிடைச்சுடனும்...  சார் எங்க சார் போகனும்? ஒரு புரோக்கர் கேட்டார் மதுரைக்கு போகனும், 700 ஆகும் சார், என்னங்க இது மகா அநியாயமாக இருக்கு? கவர்மெண்டு பஸ்லே 180 ருபாய்தானே என்று என்னோட ஆதங்கத்த சொன்னேன், அப்படியா நீ கவர்மெண்டு பஸ்சிலே போ போ என்று விரட்டினார்.


என்ன செய்றதுன்னு யோசிச்சிக்கிட்டே போய் சில மதுரைன்னு போர்டு போட்டிருந்த இடங்கள் கேட்டேன்... எல்லாரும் ஒரே மாதிரி எல்லாம் புல்லாயிடுச்சுன்னு ஒரே பதிலை சொன்னாங்க.


சோர்வுடன், திரும்பவும் அரசாங்க பஸ் நிலையத்திற்கே வந்தேன், அப்போதுதான் மதுரைன்னு போர்டு போட்டுக்கிட்டு ஒரு பஸ் வந்துச்சு... கலைத்து விட்ட தேனிக்கள் எதையாவது கொட்டுறதுக்கு போறது மாதிரி பஸ்சை நோக்கி மக்கள் கூட்டம் ஒடியது... இதவிட்ட போகவே முடியாது எப்படியாவது இடம் புடுச்சுடனும்னு ஓஓஓஒடிப் போயி பஸ்சுக்குள்ளே ஏறி உக்காந்துட்டேன்...

உஸ் அப்பாடி.


மக்கள் கூட்டத்தால் அப்படியே நசுங்கி கொண்டு பஸ் கிளம்பியது...


இனி கவலை இல்லை, எப்படி ஊர் போய் சேர்ந்திடலாம்...


நல்லா சாய்ந்து தூங்க ஆரம்பித்தேன்,  திடீர்ன்னு டம்னு ஒரு சத்தம், எல்லாரும் என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறிட்டாங்க, டிரைவரும் பஸ்சை ஒரு ஒரமா நிப்பட்டுனாரு.


டரைவர் கீழே இறக்கி ரெம்ப நேரம் பாத்துட்டு டயர் ராடு ஒடஞ்சுடுச்சு, பஸ் இனி போகாது, எல்லாரும் இறங்கி வேற பஸ்சுல போங்க.

அடக்கடவுளே இப்படி ஒரு சோதனையா? நான் திபாவளிக்கு ஊர் போக முடியாது போல இருக்கேன்னு நினைச்சுகிட்டு கூட்டத்தோட கூட்டமா நின்னுகிட்டு இருந்தேன், 220 KM மதுரை அப்படின்னு போர்டு இருந்துச்சு, சரி கொஞ்சம் தூரம்தான் ஏது வந்தாலும் ஏறி போய்டனும்னு தீர்மானம் போட்டுகிட்டு இருந்தேன்.

நாங்கள் வருகிற அனைத்து வண்டிகளையும் நிப்பாடினோம், பல பேர் நிறுத்த வில்லை, சில பேர் நிறுத்தி குடும்பமாய் உள்ளவர்களை மட்டும் ஏற்றி கொண்டு சென்று விட்டனர்.

இப்படியே கூட்டம்லாம் குறைந்துவிட்டது... சே நாம மட்டும் மாட்டிக்கிட்டோம், ஏதாவது  பஸ்சு, லாரி வராதான்னு  வேண்ட ஆரம்பித்தேன்... நேரம் கடந்து கொண்டே சென்றது. இரவு 1 மணி ஆய்டுச்சு... எல்லா பஸ்சும் புல்லாவே கடந்தது..  

ரெம்ப நேரமா ஒன்னுமே வரலை...
கொஞ்ச நேரத்தில்... தூரத்தில் ஏதோ ஒரு வண்டி

பழனி ஆண்டவர் அப்படின்னு எழுதிருந்த ஒரு டாடா சுமோ வந்தது. நானும் தைரியமா கையை காமிச்சு நிப்பாட்டினேன். உள்ள ஒரு ட்ரைவரும் கூட ஒரு ஆளும் இருந்தனர், எப்படியும் சீட்டு கிடைச்சும் ஊர் போயிடலாம் அப்படிங்கிற குசில சென்னையில் இருந்து வந்தது பஸ் கெட்டு போனது எல்லாம் சொல்லி என்ன மதுரையில  விட்டட சொல்லி கொஞ்சுற நிலைமையில் சொன்னேன்... எல்லாம் கேட்டுகிட்டு இல்ல தம்பி நாங்க வேற ஒரு சோலியா போறோம்... அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டான் அந்த பா... சே வந்த வண்டியும் போய்டுச்சே... வருகிற பஸ் எல்லாம் புல் என்ன செய்வது.. ஒரே டென்சன்ல ரோட்டுல நின்னுகிட்டு இருந்தேன்...

போச்சு போச்சு, இந்த தீபாவளிய அம்மாவோட கொண்டா முடியாது போல இருக்கேன்னு சோர்ந்து போய் ஒரு ஓரமா இருந்துட்டேன்.

மேரி மாதான்னு போர்டு போட்ட ஒரு லாரி வந்துச்சு, நானும் நம்பிக்கை இல்லமாத்தான் நிப்பட்டினேன், ஏற்கனவே பல லாரி நிப்பாடி ஒருத்தரும் ஏற்றவில்லை, சரி இங்காவது இடம் கிடைக்காதான்னு ஒரு நப்பாசைல நிப்பாட்டினேன். டிரைவரும் நிப்பாட்டினாரு,  சார் இப்படி சென்னைல இருந்து வந்தேன், மதுரை போகனும் அங்க இறக்கிவிட்டிருங்களான்னு கேட்ட உடனே சரிதம்பி வாங்க, நாங்களும் மதுரைதான் போறோம்.

ஒரே ஆனந்த்மாய் இருந்துச்சு.

ஏறி அமர்ந்தேன்.

நல்ல வேகம்...
அப்பாடி மதுரையிம் வந்துடுச்சு... ஒரே சந்தோசம், 100 ருபாய் காசு கொடுத்தேன் டிரைவரிடம் அதுக்கு அவரு காசுல்லாம் வேனாம் தம்பி பட்டாசு வச்சுரிந்திங்கன்னா கொஞ்சம் கொடுத்திட்டு போங்க வீட்டுல பிள்ளைகளுக்கு கொடுக்கனும்,  உடனே நான் வைய்திருந்த பேக்கில் இருந்து கொஞ்சம் பட்டாசு எடுத்து கொடுத்தேன். சந்தோசமா வாங்கி கொண்டார், சரின்னே ரெம்ப தங்ஸ், உங்க பேரு என்னன்னே கேட்டேன் பாஷா  என்றார்.


-----------------------------------





அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

15 comments :

Ahmed said...

Happy diwali

Ahmed said...

Nice story man

siva said...

Very Nice story ...

// சார் எங்க சார் போகனும்? ஒரு புரோக்கர் கேட்டார் மதுரைக்கு போகனும், 700 ஆகும் சார், என்னங்க இது மகா அநியாயமாக இருக்கு? கவர்மெண்டு பஸ்லே 180 ருபாய்தானே என்று என்னோட ஆதங்கத்த சொன்னேன், அப்படியா நீ கவர்மெண்டு பஸ்சிலே போ போ என்று விரட்டினார். //

It was happen to me also for last diwali

கோவி.கண்ணன் said...

//உடனே நான் வைய்திருந்த பேக்கில் இருந்து கொஞ்சம் பட்டாசு எடுத்து கொடுத்தேன். சந்தோசமா வாங்கி கொண்டார், சரின்னே ரெம்ப தங்ஸ், உங்க பேரு என்னன்னே கேட்டேன் பாஷா என்றார்.//

பாஷா பாஷா.......

:)

பாஷா பட்டாசும் கொளுத்தலாமே !

Unknown said...

நன்றி அஹமது
நன்றி சிவா

பொதுவா பண்டிகை காலங்களில் இப்படிதான் நடக்கிறது.

நன்றிகள் கோவி சார்.
தாரளமாய் கொளுத்தனும் :)

Sajid said...

Nice article mappi. I think most of us have such experience during festive seasons
.

Barari said...

kathaiyin utkaruththu ellorukkum ondrai unarththukirathu.manitha neyam//matha nallinakkam.keep it up mastan.

george ananth said...

It's good......

Unknown said...

Thanks da saji for regular visit and comment

Thanks Barari, actually I wish to join community.

மிரட்டல் said...

நல்ல மனிதநேய கதை.

எல்லா மதத்திலும் இப்படி ஆள் இருப்பார்கள்.

திபாஒளி வாழ்த்துக்கள்

shangar said...

happy diwali..

sangeetha said...

நல்லருக்கு.
திப்வலி வாழ்த்த்துக்கல்

சிங்கக்குட்டி said...

புகார் பண்ண யாருமே முன் வராததால், பண்டிகை காலங்களில் இப்படி நடக்கிறது.

நல்ல பதிவு.

குரங்கு said...

Happy Diwali

அகல்விளக்கு said...

//அப்பாடி மதுரையிம் வந்துடுச்சு... ஒரே சந்தோசம், 100 ருபாய் காசு கொடுத்தேன் டிரைவரிடம் அதுக்கு அவரு காசுல்லாம் வேனாம் தம்பி பட்டாசு வச்சுரிந்திங்கன்னா கொஞ்சம் கொடுத்திட்டு போங்க வீட்டுல பிள்ளைகளுக்கு கொடுக்கனும், உடனே நான் வைய்திருந்த பேக்கில் இருந்து கொஞ்சம் பட்டாசு எடுத்து கொடுத்தேன். சந்தோசமா வாங்கி கொண்டார், சரின்னே ரெம்ப தங்ஸ், உங்க பேரு என்னன்னே கேட்டேன் பாஷா என்றார்.//

மதத்தை தாண்டிய மனிதநேயம்