Oct 26, 2009

இணையத்தில் உள்ள பரபரப்பு தகவல்களை உங்கள் வலையில் சேர்க்க

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ்மணம், தமிழீஸ் போன்றவற்றின் பரபரப்பு அல்லது முக்கிய செய்திகளை எப்படி நமது வலைபக்கத்தில் சேர்ப்பது?  போன்ற கேள்விகளை சில பேர் எனக்கு மெயில் மூலம் கேட்டார்கள்.


தனித்தனியாக சொல்வதை விட மொத்தமாக ஒரு பதிவிட்டால் வலைபக்கம் வைத்துள்ள அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்றுதான் இந்த பதிவு.


பல பேர்களுக்கு இது தெரிந்து இருக்கலாம், இது தெரியாதவர்களுக்காக...

மற்ற தளங்களின் பரபரப்பு செய்தியை வரவைப்பது மிகவும் சுலபம்.
நான் சொல்ல போகும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.


முதலில் RSS (நீங்க வேற நினைச்சுக்காதீங்க)  இதற்கு தமிழில் செய்தி ஒடை என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன், அதாவது ஒரு தளத்தின் செய்தி சுருக்கத்தை தருவது, அதாவது  தமிழ்மணத்தில் ஒரு பதிவு இணைகிறது என்றால் அந்த பதிவின் தலைப்பை தமிழ்மணம் செய்திஓடையாக வெளியிடும்.
ஒரளவுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.

இதை சில வழிகளில் நாம் வலையில் இனைக்கலாம்.
முதல் வழி

http://www.blogger.com/-> Dashboard -> Layout என்று செல்லவும்
Add a Gadget என்பதை கிளிக் செய்யவும்
பிறகு வரும் பாக்ஸில் Feed என்பதை செலக்ட் செய்யவும்
Feed URL என்பதை கேட்கும் அதில் நீங்கள் வேண்டிய RSS முகவரியை கொடுக்க வேண்டியதுதான்.

அவ்வளவுதான் :)


சில RSS முகவரிகள்

1.தமிழ்மணம் - http://www.tamilmanam.net/feed
2.தமிழீஸ் - http://www.tamilish.com/rss
3.தட்ஸ்தமிழ் - http://feedproxy.google.com/oneindia-thatstamil-all
4.தினமலர்(முக்கிய செய்திகள்) - http://rss.dinamalar.com/?cat=fpn (இது சரிவர இயங்குவதில்லை, மேலும் தினமலரின் செய்தி ஒடைக்கு)
5.தினமணி(முக்கிய செய்திகள்)  - http://www.dinamani.com/edition/rssSectionXml.aspx?SectionId=164 (மேலும் தகவல்களுக்கு)


வேறு வழி

http://www.google.com/uds/solutions/wizards/dynamicfeed.html என்ற தளத்திற்கு செல்லவும்,  இது பல செய்தி ஒடைகளை இனைத்து ஒன்றாய் தருகிறது.





Feeds Expression: என்பதில் உங்களுக்கு விருப்பமான சொல்லை தரலாம், அச்சொல் எந்த செய்திஓடையுடன் பொருந்துகிறதோ அதனை தறும், மேலும் "," என்று போட்டு எவ்வளவு வேண்டும் என்றாலும் இனைக்கலாம்.

Vertical, Vertical Stacked,Horizontal என்பது எவ்வாறு தோற்றம் அளிக்கிறது என்பதை மாறி மாறி கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.


Title: என்பதை கொடுக்கவும்.


எல்லாம் முடிந்தவுடன் Generate code எனும் பட்டனை கிளிக் செய்தால் ஸ்க்ரிப்ட் வடிவில் தயாரித்து கொடுக்கும் அதனை நமது வலையில் இனைக்க வேண்டியதுதான்.

பிளாக்ஸ்பாட்டில் இனைக்க
கோட் மொத்ததையும் காப்பி செய்யவும்
http://www.blogger.com/-> Dashboard -> Layout என்று செல்லவும்

Add a Gadget என்பதை கிளிக் செய்யவும்
பிறகு வரும் பாக்ஸில் HTML/JavaScript  என்பதை செலக்ட் செய்யவும்
தோன்றும் விண்டோவில் உங்களது கோட் பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்.

இவ்வளவுதான் முடிந்தது.


ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கே கேட்கவும்.

3 comments :

ஜியா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல பொது சேவை..........வலை பு உண்டு பன்னுவதற்கு

www.pudumadamnews.com
www.pdmtntj.com
www.onlineziya.blogspot.com

மேலே உள்ளது எல்லாம் நான் வடிவமைத்து பராமரிக்க கூடியது எப்படி இருக்குனு உங்க comment கேக்களாம்னுதான்..........

பீர் | Peer said...

ஒரு வலை பக்கத்தின் ஏதாவது ஒரு பகுதிக்கு மட்டும் ஃபீட் இணைப்பு கொடுக்க முடியுமா? உதாரணம்; தமிழ்மணத்தின் பரிந்துரைக்கப்பட்ட இடுகைகள் மட்டும்..

இளமுருகன் said...

என் வலைப்பதிவில் தலைப்பு செய்திகளை இணைத்துக்கொண்டேன்
நன்றி
இளமுருகன்
http://ahilanelamurugan.blogspot.com
உங்களை அன்போடு வரவேற்கிறேன்