Apr 30, 2010

நீக்க வேண்டுமா ஆட்டோ பர்மிட்டுக்கு தடையை?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆட்டோ பர்மிட்டுக்கு தடையை ரத்து செய்து அரசு செய்தி வெளியுட்டுள்ளது, இதற்கான காரணம் "சென்னையைவிட சிறிய நகரங்களான பெங்களூருவில் 78 ஆயிரம் ஆட்டோக்களும், ஐதராபாத்தில் 64 ஆயிரம் ஆட்டோக்களும் ஓடுகின்றனவாம்" சென்னையில் 52 ஆயிரம் ஆட்டோவே உள்ளனவாம்.

அதனால், சென்னையில் கூடுதல் ஆட்டோ ரிக்ஷாக்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு, ஆட்டோக்கள் பதிவு செய்யப்படுவதற்கான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ரிக்ஷா பெர்மிட்டுகள் தகுதி அடிப்படையில் விண்ணப்பம் செய்வோருக்கு வழங்கப்படும்.

நன்றி தட்ஸ்தமிழ்


முதலில் நன்றாய் ஆட்டோ ஓட்டுவது எப்படி என்பதையும் கற்று கொடுத்து விட்டு பர்மிட்டுக்கு பர்மிட் கொடுத்திருக்கலாம். இரண்டாவது பயணிகளிடம் எப்படி பேசுவது என்பதையும் சொல்லி கொடுத்திற்கலாம், மூன்றாவது நியாயமான முறையில் பணம் வாங்குவது என்பதை சொல்லி கொடுக்கலாம்... இப்படி பல உள்ளன...



பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஆட்டோக்களில் சவாரி செய்திருப்பவர்களிடம் சென்னையில் ஆட்டோ பயணம் செய்ய சொல்லுங்கள், ஒருவர் திருப்தியாக பயணம் செய்தால் அப்பறம் தடையை நீக்கலாம்.

சென்னையில் இருப்பவர்களிடம் கேளுங்கள், யாருமே ஆட்டோ ஓட்டுனருக்கு ஆதரவாகவே பேசவே மாட்டார்கள், விதிவிலக்குலாக சில ஆட்டோ டிரைவர் இருக்கலாம்... ஆனாலும் பெருபான்மை என்னவோ அதுதானே உண்மை. பொதுவா நான் எங்கு போனாலும் பைக், அல்லது ரயிலில் போயிவிடுவேன், சில நேரங்களில் பஸ் பயணம் செல்ல நேரலாம்... மற்றபடி என்ன அவசரம் என்றாலும் ஆட்டோ பயணத்தை விரும்பவதில்லை... அவர்கள் ஏறும் போது ஒரு வாடகையும் இறங்கும் போதும் ஒன்றாகவும் இருக்கும், கண்டிப்பா மீட்டர் போடவே மாட்டார்கள், இதுவரை யாருமே நியாயமான வாடகை கேட்டதே இல்லை, குறைந்தது 1 கிமீ போகவேண்டும் என்றாலும் 100 ரூபாயவது கேட்பார்கள், நமக்கு இடம் தெரியும் பக்கதில்தான் என்றாலும் அங்க சுத்தி இங்க சுத்தி போகனும் என்பார்கள், சென்னைக்கு புதியவர்கள் என்றால் ஆட்டோ டிரைவர்கள் பாடு கொண்டாட்டம்தான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கறந்து விடுவார்கள்.

ஓட்டுவது மிக மிக வேகமாக இருக்கும், சின்ன சந்தில் ஒரு மனிதன் நுழைய முடியுமா என்று இருப்பதில் கூட ஆட்டோவை நுழைக்க முயற்சி செய்வார்கள் உள்ளே இருக்கும் பயணி உயிரை கையில் பிடித்து, நாம போக வேண்டிய இடம் சீக்கிறமா வர கூடாதா என்று வேண்டி கொண்டிருப்பார்கள்.

சாலைகளில் எந்த விதமான விதிகளையும் மதிக்காமல் ஓட்டுவது ஆட்டோ டிரைவர்களாகத்தான் இருக்கும், ஒரு ஆட்டோவில் பேசிவிட்டு அடுத்த ஆட்டோவிற்கு சென்றால், முதலில் பேசிய ஆட்டோ டிரைவர் "... போற மூஞ்சிய பாரு, ந்தா 20க்கு போகனுமா, த்தா...." என்று மற்ற ஆட்டோ டிரைவருடன் கூட்டு சேர்ந்து கொள்வார்கள். இப்படி ஒன்று இல்லை... பல கூறலாம்...

இருந்தாலும் சில பேர் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள், சமிபத்தில் எனது நண்பர் தனது மனைவியை கூட்டி கொண்டு சென்னை வந்தார், அவருக்கு ஒரு மகன், மனைவிக்கு உடம்பு சரியில்லை.. ஒரு ஆட்டோவில்தான் சென்னை முழுக்க பயணம் செய்தார்... ஆட்டோ டிரைவர்தான் கூட இருந்து அனைத்து விதமான உதவிகளையும் செய்தார், அவரின் மகனை முழுவதுமாக பார்த்து கொண்டது ஆட்டோ டிரைவர்தான், கடைசியில் பணம் கொடுக்க போகும் போது, பரவாயில்லை சார், முதல்ல அவங்க சரி ஆகட்டும் என்று பணத்தை மறுத்தார்... இப்படியும் சிலபேர்....



ஆனாலும், அரசாங்கம் ஆட்டோ பர்மிட்டுக்கு இருந்த தடையை நீங்கவதற்கு முன்பு அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் சில கட்டுபாடுகளை விதித்திருக்கலாம்.

  • மீட்டர் பொருத்துவது
  • கணிவாய் பேசுவது
  • சாலைவிதிகளை மதிப்பது

6 comments :

Anonymous said...

true

இராகவன் நைஜிரியா said...

கூடுதல் பெர்மிட் கொடுக்கும் போது, கூடுதல் ஆட்டோக்கள் ஓடும். போட்டியினால் விலை குறைய வாய்ப்பு இருக்கும். இப்படியெல்லாம் சொல்லித்தான் நம்மள நாமளே தேத்திக்க வேண்டியிருக்கு.

Anonymous said...

இப்படிதான் பக்கத்து மாநிலங்களில் சாராயம் இருக்குன்னு அதை விக்க அனுமதி கொடுத்தாங்க....

Unknown said...

உண்மைதான் இராகவன் :)

அமர பாரதி said...

என்ன சொல்றதுன்னு தெரியல. ஆனா பெர்மிட்னு ஒன்னு இருக்கறதாலதான் சுமார் 75% ஆட்டோக்களின் உரிமையாளர்கள் காவல் துறையினராகவோ அரசியல்வாதிகளாகவோ இருக்கிறார்கள். அதை எடுத்து விட்டால் தகுதியுள்ள எவரும் ஆட்டோ ஓட்டலாம். அப்போது சேவையும் மேம்படும், வாடகையும் குறையும். அதை குற்றம் சொன்னால் எப்படி?

அய்யா அனானி, சாராயமும் ஆட்டோ பெர்மிட்டும் ஒன்னா?

vijayan said...

தமிழ்நாட்டில் பெருன்பான்மையான ஆட்டோ உரிமையாளர்கள் போலீஸ் மற்றும் போக்குவரத்து துறையை சார்ந்தவர்கள்.எந்தவிதமான சட்டமும் அவர்களை கட்டுபடுத்துவது இல்லை.அரசும் இதைப்பற்றி பெரிதாக அலட்டிகொல்லுவதில்லை.கர்நாடகத்தில் கூப்பிட்ட இடத்திற்கு வர மறுப்பார்கள்,நீங்கள் மெனக்கெட்டு போலிசிக்குபோனால் கண்டிப்பாக action எடுக்கிறார்கள்.மற்றபடிமீட்டருக்கு மேல் கேட்பதெல்லாம் மிக கம்மி பேர் தான்.