Jun 6, 2010

புகையில்லா சென்னை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சமிபகாலமாக சென்னைவாசிகள் எங்கு பார்த்தாலும் "SMOKE FREE CHENNAI" என்ற வாசகம் காணப்படுகிறது.... ஸ்மோக் ஃபிரி என்பது சரிதான், ஆனால் சிகரட்டில் மட்டும்தான புகை காணப்படுகிறதா???மாநகரங்களில் வசிப்பவர்கள் இழக்கவேண்டிய ஒன்று ஆரோக்கியம், ஆமாம் சென்னையில் ஆரோக்கியத்தை இழந்துதான் பணத்தை(?) சேர்த்துக் கொண்டிருக்கிறோம். சிகரட் மட்டும் மட்டும் புகை விடுது என்பவர்கள்...


பஸ்கள், லாரிகள் வெளியுடும் கரும்புகை


சென்னையில் ஓடும் கார், ஆட்டோக்களின் புகை
இண்டஸ்ட்ரீஸ் வெளியிடும் புகை


பண்டிகையின் போது வெளியும் புகை


இப்படி புகையோ புகை, கண்டிப்பா இவை எல்லாம் நமக்கு பகைதான், ஆனால் எதிர்ப்பவர்கள் ஒன்றை மட்டுமே ஏன் எதிர்க்க வேண்டும்? புகையில்லா சென்னை என்பது, எங்கும் புகை இல்லாமல் இருப்பதை குறிக்கும் அல்லவா? சிகரட்டில் வெளிப்படும் புகை ஒன்றும் ஓசன் படலத்தை ஓட்டை போடுவதில்லை, புகைப்பவர்களின் இதயத்தில் ஓட்டை போடுவதோடு சரி, ஆனால், மேற்கண்ட வழிகளில் வெளிப்படும் புகை ஓசன் படலத்தை அல்லவா ஓட்டை போடுகிறது, இதனால் என்ன பிரச்சனை என்பவர்கள் வருங்கால சந்ததிக்காக நாம் சேர்த்து வைப்பது கொடிய நோய் நொடிகள்தான், போராடுபவர்கள் இதற்கும் சேர்ந்து போராடினால் மிகவும் நன்றாய் இருக்கும்!

நமது நாட்டில் அரசாங்காத்தின் பல்வேறு தூண்கள் பேருக்காகவே இருக்கின்றன... அதில் ஒன்றுதான், "மாசு கட்டுபாட்டு வாரியம்"... இதன் செயல்பாடுகளை யாராவது எடுத்து சொன்னால் தேவலை, பேருதான் "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஆனால் செயல்பாடுகளோ "மாசு கட்டுபடுத்தா வாரியம், உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டில் நமது நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா? 123வது இடம். அவ்வளவு சுகாதாரமாக நமது நாட்டை வைத்துள்ளோம். "மாசு கட்டுபாட்டு வாரியம்" ஒழுங்காகவே செயல்பட்டு இப்படி புகை வெளியும் பஸ், காரு, ஆட்டோ போன்றவற்றை தடை செய்து, கொடுரமாக புகை வெளியிடும் இண்டஸ்ட்ரீஸ் கட்டுபாட்டில் கொண்டு வந்தால் மிகவும் நல்லது.


கடைசியா இரண்டு தகவல்

  • சிக்ரட் குடிப்க்கும் ஆண்களுக்க் ஆண்மை குறைவு ஏற்படுமாம், பெண்களாய் இருந்தால் பெண் தன்மையே பரிபோகுமாம்.
  • சிக்ரட் குடிப்பவர்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்தால் அது குழந்தையின் உயிரை கூட பரித்து விடுமாம்,சமிபத்தில் வந்த தந்தியில் இருந்த தகவல்.

5 comments :

ஜெயகர் said...

'புகை'ப்படங்கள் அருமை. எல்லாமே சென்னையா?

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பின் சகோதரர் மஸ்தான்,
உங்களின் சமூக அக்கறை இந்த பதிவின் மூலம் வெளிப்படுகின்றது. பதிவுலகில் கடந்த ஒரு வாரமாக பலர் அக அழுக்குகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்க நீங்கள் புற அழுக்குகளைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டிருப்பது நல்லதொரு மாற்றம் மஸ்தான். புகையில்லா சென்னை என்பது அவ்வளவு சுலபமாக தொட்டு விடக் கூடிய இலக்கல்ல என்றாலும் தமிழக அரசு எத்தகைய சமரசமுமின்றி நடவடிக்கை எடுத்தால் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

..:: Mãstän ::.. said...

சென்னையும்தான் ஜெயகர்.

வ அலைக்கும் வஸ்ஸலாம், கண்டிப்பா தொட்டுவிட கூடய தூரம்தான், நாம் செய்வது ஏதாவது பயனளிக்காதா என்று ஏங்கும் சராசரிதான் நானும் :)

siva said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .. அதைப்போல ஒவ்வொருவருக்கும் சமூக
அக்கறை வேண்டும் , பள்ளி இறுதி வரை கட்டாய கல்வி கொடுக்க வேண்டும் , நீதி போதனை கல்வி தற்பொழுது பள்ளிகளில் வைப்பதில்லை அதை கொண்டு வர வேண்டும் , அப்பொழுது தான் அவர்களின் மனதில் சமுகத்தை பற்றிய நல்ல எண்ணம் வளரும்மற்றும் கடுமையான சட்டமும் இருந்தால் தான் , இதை தடுக்க முடியும்

ஹுஸைனம்மா said...

அந்தப் புகையும் ஒழிக்கப்ப்டவேண்டியதுதான்; இந்தப் புகையும்தான்!!

நீங்க சொல்றதப் பாத்தா, ‘அவன நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தறேன்’கிறதுதான் நெனப்புக்கு வருது!! நீங்க புகைப்பவரில்லையே? :-)))