Jun 16, 2010

ரயில்வேயில் நடக்கும் கொள்ளை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சிறுவயதில் அனைவருக்கும் இருக்கும் கனவுதான், அதாவது ரயிலில் பயணம் செய்வது, ரயில் பயணம் செய்வது மட்டுமல்ல, அதை பார்ப்பது கூட மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாகவே உள்ளது. எனக்கு ரயில் பயணம் செய்வது அவ்வளவு சந்தோசம், அதனுடைய கூஊஊ என்று கூவிக்கொண்டு போகும் சப்தமும், பர்த் கிடைத்து படுக்கும் போது அதன் தாலாட்டு போல் அமைவது... சே, இவை எல்லாம் அனுபவித்தவர்களுக்குதான்...

நடுத்தரவர்க்கம் மட்டுமல்லாது அனைவரும் விரும்பி பயணம் செய்வதும், விரும்பவதும் ரயிலில்தான், ஏனென்றால் அதனின் வேகமும், அனைத்து வசதிகளும்... பயணம் செய்து கொண்டிருக்கும் இப்படி கிடைக்கும் வசதிகள்தான் அனைவரையும் ரயிலை மிகவும் விரும்ப வைக்கின்றன... மிக முக்கியமாக தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல் விலையில் உயராமல் இருக்கும் ரயில் கட்டணத்தின் விலைதான் நடுத்தரவர்க்கம் மற்றும் ஏழை மக்கள் மிக விரும்ப ஒரு காரணம் ஆகும்!சமிபகாலமாக, ரயிலில் பயணம் செய்வது கடினமான ஒன்றாய் ஆகிவிட்டது, அதுவும் மிகவும் கடினமான ஒன்றாய் ஆகிவிட்டது, ஜெனரல் கம்பார்ட்மெண்ட் எனப்படும் பொதுப்பெட்டி ஒரு ரயிலில் 4 தான் அதிக பட்சமாக இருக்கிறது, அந்த 4 பெட்டிகளிலும் அதிகபட்சமாக 300 நபர்கள் முதல் 350 நபர்கள் வரை இருக்கலாம், ஆனால் இப்போது என்ன நடக்கிறது ஒரு பெட்டியிலே 400 நபர்கள் வரை இருக்கிறார்கள்... இதெல்லாம் சாதாரன நாட்களில்தான் ஏதாவது திருவிழா நேரம் என்றால் தொலைந்தோம்... படியில் தொங்குவதற்கு கூட இடம் இருக்காது, அவ்வளவு கூட்டமாக இருக்கும்.இரண்டாம் படுக்கை வசதி என்பது 3 மாதங்களுக்கு முன்பு புக் செய்தால் மட்டுமே நன்றாய் படுத்து கொண்டு போகலாம், இல்லையென்றால் கொடுமைதான். புக்கிங் ஏஜெண்ட் எப்பொழுது நியமித்தார்களோ, அப்போது ரிசர்வரேசன் என்பது அதிக பணம் கொடுப்பவர்களுக்கு என்பதாகிவிட்டது... ஒரு வாரத்தில் எங்காவது பயணம் போகவேண்டியது இருந்து, ரயில் போய் ரிசர்வ் செய்து விடுங்கள் பார்ப்போம், கண்டிப்பா கிடைக்காது, அதே நேரத்தில் ஏதாவது ஒரு ரயில் புக்கிங் ஏஜெண்ட் பார்த்து கூட 200 அல்லது அதனின் கூடவோ கொடுத்தால் நீங்கள் கண்டிப்பாக பயணம் செய்வது உறுதி. எப்படி அவர்களுக்கு இதனை கொடுக்க முடிகிறது, எல்லாம் ரயில்வேயில் தவறுகள்தான்... ரிசர்வ் செய்யும் ஒருவர், ஒரே நேரத்தில் 6 பேர்களை ரிசர்வ் செய்யலாம், ஆனால் ஒருவர் மட்டும் ஐடி கார்ட் காமித்தால் போதும், புக்கிங் ஏஜெண்ட் ஏதாவது பெயரிலும் வயசிலும் டிக்கட்டை புக் செய்து விட்டு மற்றவர்களுக்கு வழி இல்லாமல் செய்து விடுகிறார்கள்.

உங்களுக்கு மிகவும் அவசரமாய் போக வேண்டுமா???
தட்கல் கூட கிடைக்க வில்லையா???
புக்கிங் ஏஜெண்ட் கூட உதவ வில்லையா???

கவலை வேண்டாம், சாதாரன டிக்கட் எடுத்து கொண்டு ரிசர்வ் கம்பார்ட்மண்டில் ஏறி டிடியை (டிக்கட் பரிசோதிப்பர்வரை) கொஞ்சம் கவனித்தால் போதும்... எப்படிதான் இவர்களுக்கு மட்டும் சீட் இருக்குமோ? பணம் தின்னும் கழுகாக மாறி வருகிறார்கள். ஒரு சிலபேர் நல்லவர்களாய் இருக்கலாம், ஆனால் மிக அதிகமானோர் கவனிப்புக்கு மயங்குறவர்களே... பொதுவாக RAC 1 என்று இருந்த்தால் ஏதாவது ஒரு டிக்கட் கேன்சல் ஆகிவிட்டது என்றால் அவர்களுக்கு ஒதுக்க வேண்டும், அதுதான் நியாயமும்.. ஆனால் TTE அப்ப்டி செய்வதில்லை, பணம் இருக்கா, கண்டிப்பா சீட் கிடைக்கும், இல்லையா சீட்ல இருக்கும் முனை கூட கிடைக்காது.

இப்படி பட்ட கொள்ளைகள் ரயில்வேயில் நடந்து வருகிறது... யாரும் இதற்கு எதிராக எந்த விதமான ஆக்சனும் எடுக்கவில்லை.


பல நாடுகளில் வேலையை செய்ய வேண்டாம் என்றால்தான் லஞ்சம்
ஆனால், இந்தியாவில்தான் வேலையை செய்ய லஞ்சம்.

இந்தியன் படத்தில் வரும் வசனம்

9 comments :

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்..ஏசியில் கூட ஏறி இப்படி அட்ஜஸ்ட் செய்யலாம்.நம் தென்னிந்தியாவில் கொஞ்சம் கஷ்டம் தான். வட இந்தியாவில் அதிகம் இப்படி நடக்கிறது. ரிசர்வ் செய்யாத கோச்சில் குறிப்பிட்ட அளவு மட்டும் டிக்கெட் கொடுத்தால் என்ன? என்னமோ செய்துக்கோங்க எங்களுக்கு தேவை பணம் தான் என்பது போல் உள்ளது ....

யாசவி said...

இதுக்கே இப்படின்னா, வட இந்தியாவ போய் பாருங்க தமிழ்நாட்டை கோயில் கட்டி கும்புடுவீங்க

நெல்லை செல்வா said...

First of all, I liked this document very much Mastan. Thanks for sharing this. Behalf of our low class peoples, our central govt can plan to provide more than six UR(Unreserved) compartment.Because they are under poverty. So please take care of this suggestion.

vijay said...

this is real one... it happening here...

அக்பர் said...

மிக மிக உண்மை

Anonymous said...

Railways has become totally totally corrupted. Now a days, you can not get any train tickets without paying Rs.200 or 300 more to 'booking agents'.

Moreover, there are so much of 'POLITICS' going on in railways with respect to region, caste etc,.

nerkuppai thumbi said...

என் அனுபவம் மிக வேறானது.
கணினி முன்பதிவு முறையும், r a c முறையும் வருவதற்கு முன்னால், தூங்கும் வசதி பெட்டி நடத்துனர்கள் அதிகம் பணம் வாங்கிக்கொண்டு, இருக்கைகள் கொடுத்தனர்; ஆனால் இப்போது, அது கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது என நான் கருதுகிறேன்.
என் முதல் தூங்கும் வசதி பெட்டி பயணம் 1972; (இது வரை எட்டு மாநிலங்களில் பணி செய்திருக்கிறேன்; ஆண்டுக்கு ஓரிரு முறை தமிழ் நாடு சென்று வந்திருக்கிறேன்; அதாவது மிக நீண்ட புகை வண்டி பயணங்கள்; பதிவு செய்யாமல் பயணிக்க முடியாத பயணங்கள்).
தத்கால் முறையும் மிக பயனுள்ளதாக இருக்கிறது.அன்ரிசர்வ்ட் பேட்டிகள் ஓரிரண்டு அதிகம் வைக்கலாம் என்பது சரியே.
நெற்குப்பை.தும்பி வலைப்பதிவு: www.makaranthapezhai.blogspot.com

NIZAMUDEEN said...

இனிய பயணம் ரயில் பயணம்தான்.
ஆனால், தற்போது கொடுமையான
பயணமாக இருக்கிறது. நானும் ஓர்
இடுகை எழுதியுள்ளேன்,
'ரயில் வரும் நேரமாச்சு!'
என்ற தலைப்பில்.

t8 said...

I will ask my mum and think about it...
;-D