Jan 13, 2011

இன்னுமா தந்தி கலைஞரே???

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கருணாநீதிக்கு அப்படி என்னதான் தந்திமேல் மோகம் என்று தெரியவில்லை, தொடர்ந்து தந்தி மேல் தந்தி.... தபால் துறையை வாழ வைத்து கொண்டிருப்பதே திராவிட இயக்கங்கள்தான் போல. இமெயில், போன், இண்டெர்நெட் என்று எவ்வளவோ வந்தாலும் பிடிவாதமாக பிரதமருக்கு தந்தி மேல் தந்தியாக அதுவும் மற்றவர்களின் துன்பத்தின் போதுதான்... என்ன ஒரு பிடிவாதமோ?

சிங்கள கடற்படை வெறிச்செயல்-மீனவர் பலி

நேற்று ஒரு தமிழக மீனவரை இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார், அதற்காக இந்திய பிரதம மந்திரிக்கு தமிழக முதல் மந்திரி தந்தி அனுப்புசாராம். இலங்கைகாரன் தொடர்ந்து தமிழக மீனவர்களை கொண்டுகிட்டு இருக்கான், தினமும் ஒரு குறிக்கோள் வச்சுருப்பான் போல, எப்படியும் ஒரு தமிழனை கொல்லனும்னு... இது பல நாட்களா தொடர்ந்து கொண்டே இருக்கு, இதை கண்டிக்க வேண்டிய பிரதமரும், முதல் அமைச்சரும் தந்தி கொடுத்து விளையாண்டுகிட்டு இருக்காங்க. ராசாவுக்கு ஒரு பிரச்சனைன்ன என்றவுடன் தனது தூதுவரை உடனே டில்லிக்கு விமானம் புடுச்சு போக சொல்லி பேச சொன்னார்; ஆனா? ஒரு வேளை தினமும் இதை கேட்டு கேட்டு சலிச்சுருக்குமோ? என்னாப்பாது டெய்லிந்தான் கொல்றானுக, என்னதான் செய்றதுன்னு நினைச்சுருப்பாரோ????தமிழக மீனவரை அடித்தால் இலங்கை மாணவரை அடிப்போம் தமிழக மக்களுக்கு ஆதரவாய் கருத்து சொன்ன சீமானை பிடித்து உள்ளே போட முடிந்த இந்த ஆட்சியாளர்களுக்கு, இலங்கை நடத்தும் துப்பாக்கி சூட்டை மட்டும் தடுக்க இயலவில்லையா? பல நாட்களாக இலங்கை அரவு தமிழக மக்கள் மீது அறிவிக்கபடாத போரை நிகழ்த்தி வருகிறது. இன்னும் தந்தியே அனுப்பிகிட்டு இருந்தா மீனவ இனத்தையோ ஒழிச்சுரும்...

7 comments :

Vijay said...

useless indian govt

Raja said...
This comment has been removed by a blog administrator.
..:: Mãstän ::.. said...

sorry Raja... ur comment deleted! Karunanithi such person, I do agree!

தமிழன்பன் said...

கவலைப்படாதீர்கள். இதே மீனவ சமூகம் அடுத்த தேர்தலிலும் கருணாநிதிக்கே வாக்களிக்கும்....

முஹம்மத் ஆஷிக் said...

தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக.
இறப்புக்கு தந்தி-கொடுமை.
அவர் மகனுக்கு கேபினெட் வாங்க சக்கர நாற்காலியில் டெல்லிக்கு பறந்து செல்வார்.

இன்னிக்கு நியூஸ் கேட்டீங்களா..? மீனவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா மாறப்போறாங்கலாம். ரொம்ப கோபத்தோட உத்வேகமா சொல்றாங்க.

இர.கருணாகரன் said...

அன்பு நண்பரே !

நம்மால் ஆதங்கப்பட மட்டுமே முடியும்

வேறென்ன செய்ய.. பொங்கி வரும் கோபத்தை அடக்கப் பழகிக் கொண்டோம்

இன்று அதுவே வழக்கமாகிவிட்டது,

நமக்கு அப்பாடா, என்வீட்டில் மரணமில்லை எனும் மனப்பாங்கு மாறவேண்டும்.

படிக்கும் பொது விழியில் வழியும் கண்ணீரை துடைக்க மறந்து உள்ளுக்குளே வெம்பி வெதும்பி வேதனை படுவதை தவிர என்னால் ஏதும் ஆகவில்லை.

மீண்டும் ஒரு முறை என் சோகத்தை நினைவூட்டிய உங்களுக்கு அன்பு கலந்த நன்றி.

jiff0777 said...

எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..