Apr 14, 2012

இலவசக் கல்வி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த செய்தியை எவ்வளவு பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை, எதுவும் பரபரப்போ அல்லது நடிகை பற்றிய நிகழ்ச்சியே என்று யாரும் கண்டுகொள்ளாமல் கூட போய்விடலாம். பொதுவா இப்படிதானே நடக்குது.

அதாவது உச்சநீதிமன்றம் மிகவும் வரவேற்க்க கூடிய தீர்ப்பை கூறி இருக்கிறது, ஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக்கீடு, 

தட்ஸ்தமிழில் வந்த செய்தியை பாருங்கள்.

http://tamil.oneindia.in/news/2012/04/13/india-sc-stamp-on-right-education-poor-students-to-study-free-aid0174.html

கல்வி என்பது மாபெரும் வியாபரமாக போய்விட்ட நமது நாட்டில், கல்வி என்பது இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை எப்பாடி ஏற்படும்? 1000 ருபாய் முதல் போட்டவர்கள் 100 ருபாய் லாபம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் கல்வி வியாபரத்திலே முதலே போடாமல் லாபம் மட்டும்தானே, லாபத்தில் குறை ஏற்பட்டால் விடுவார்களா?



என்ன மனது இருந்தால் ஏழை குழந்தைகளுக்கு கல்வி தர முடியாது என்று நீதிமன்றம் சென்றிருப்பார்கள். அதுவும் 25 சதவீதம்... மீதி 75 சதவீதம் தாரளமாக கொள்ளை அடிக்கலாமே, யார் தட்டி கேட்க முடியும், அதுவும் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற பெயரால், இவர்களால் சிறுபான்மை மக்களுக்க் நன்மை என்றால் அதுவும் கிடையாது.  ஒரு சிலர் வளரத்தான் எங்கும் எப்போதும் "சிறுபான்மை" என்ற சொல் பயன் படுது, இதை பற்றி தனியே தொடர் கட்டுரையே எழுத் முடியும். பிறந்தவுடனே ஸ்கூலில் சேர்க்கிற அவலம் நமது நாட்டில்தான் உள்ளது, ஏன்னா அப்பத்தான் நல்லா படிக்க முடியுமாம், ஆமாம் அப்படியே எல்லாரும் விஞ்ஞானிகளை உருவாக்கிறார்கள் பாருங்கள், நினைக்க நினைக்க மிகவும் எரிச்சாலத்தான் இருக்கு...

என்னுடைய எண்ணம் எல்லாம், அனைவருக்கும் சமமான இலவச கல்வியை கொடுக்க வேண்டும், ஏழை, நடுத்தர வகுப்பு, பணக்காரன் என்ற பாகுபாடு கல்வியில் இருக்கவே கூடாது,  எல்லாரும் சமம் என்ற நிலை கல்வியில் இருந்துதான் வரவேண்டும். அரசாங்கத்தின் கேவலமான நிலைப்பாடால், கொள்ளை அடிப்பவர்கள்தான் அதிகமாகி கொண்டே செல்கின்றனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்க்க கூடியது.

Apr 10, 2012

கள்ளகாதலும் உயிர் பறிப்பும்

தினமும் ஏதாவது ஒரு அதிர்ச்சி ஏற்பட்டு கொண்டே போகிறது, அதுவும் கள்ளகாதலினால் ஏற்படும் உயிர் பறிப்பும் அதிகம் அதிகம்… இன்று தட்ஸ்தமிழ் படிக்கும் போது மிகவும் கொடுமையான சம்பவமாக இது உள்ளது, அதாவது கள்ளக்காதலாக்காக பெற்ற குழந்தைகளைக் கொன்றதுதான்… படிக்கும்போதே மிகவும் வலித்தது…

என்ன ஒரு உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேமோ…


அதை படிக்க

http://tamil.oneindia.in/news/2012/04/10/tamilnadu-illicit-affair-auto-driver-killed-his-kids-aid0128.html


என்னுடையே கேள்வியெல்லாம், எதுக்கு குழந்தையை கொல்லனும்? அவருடைய கள்ளக்காதலியுடன் போய் தொலைய வேண்டியதுதானே… அந்த கள்ளக்காதலி கொல்ல சொன்னாராம் இவரும் கொன்னுட்டாறம்… ஒரு பெண் எப்படி இப்படியெல்லாம் குழந்தையை கொல்ல சொல்ல முடியும்? இதில் மிகவும் பாவம் அந்த குழந்தைகளின் தாய்தான்.. மிகவும் பரிதாபம்….


கள்ளகாதல் மிகவும் ஒரு கொடுரமாக பரவிக்கொண்டிருக்கிறது, ஏதாவது ஒரு தீர்வு கண்டிப்பா வேண்டும்.


சரி, குழந்தைகளை கொன்றவருக்கு நமது நாட்டின் அரசியல் சட்டபடி என்னதான் தண்டனை கொடுப்பார்கள்? இப்படி பட்ட ஆட்டகளையெல்லாம் என்னதான் செய்யலாம்?

Feb 23, 2012

மின்வெட்டு, என்னதான் செய்யலாம்?

மிகவும் ஒரு வேதனையான, குழப்பமான இன்னும் சொல்ல முடியாத  நிலையாகி கொண்டிருக்கிறது மின்தடை, சென்னையில் 2 மணிநேரமும்; பிற பகுதிகளில் 5 மணிநேரமும் மின்வெட்டு; இல்லை இல்லை சென்னையில் 3 மணிநேரமும் மற்ற பகுதிகளில் 6 மணிநேரமும் என்று, அரசாங்கமே ஒரு முடிவில்லாத அறிவிப்பு செய்ய கொண்டிருக்கிறது. மின்வெட்டு எவ்வளவு நேரம் என்று இன்னும் தீர்மானிக்கபடவில்லை.



எதுக்கு எங்கும் பாரபட்சம் பார்பானே, மொத்தமாக எல்லாபகுதிக்கும் 24 மனிநேரமும் வெட்டிடலாம் என்று கூட நினைக்கலாம்,  எதுவேன்னா நடக்கலாம்,  ஏன்னா எந்த வழியிலும் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு வராவே போவதில்லை...  ஏப்ரல், மே மாதங்களில் இதன் தேவை அதிகமா ஆகும் பொழுது; கண்டிப்பாக கொடுரமான மின்வெட்டை எதிர்பார்க்கலாம்...

அரசாங்கம்,, எவன்டா கை நீட்டி பேசுறது, இப்ப யார புடுச்சு ஜெயிலில் போடலாம் என்றும், அரசியல்வியாதிகளுக்கும், அரசாங்க உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தடையில்லா மின்சாரமே கிடைக்கும் பொழுது, இதை பற்றி நினைக்க நேரம் ஏது? 

சரி என்னதான் செய்யலாம்???
  • மின்திருட்டை தடுக்க வேண்டும், எங்காவது எந்த கட்சி பொதுகூட்டம் நடக்கும் போதும் சரி, கல்யாணம், ஊர் பொதுவிழா (திருவிழா) நடக்கும் போதும் சரி 90% மின் திருட்டுதான் நடக்குது.
  • 220~240 வோல்டேஜ், 110~120 வோல்டேஜ் மாறவேண்டும், ஏன் என்றால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மின்கடத்தல்(?) ஆகும் போது அதிகமாக வீணாகுது.
  • கட்டுபாடான மின்வினியோகம், சென்னை போன்ற நகரங்களே அதிக அதிக மின்சாரத்தை உருஞ்சுகின்றனர்; அதுவும் பணக்கார வீடுகளில் நாய் கக்கா போகும் இடங்களில் கூட ஏசிதான் இருக்கும், இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் மிகஅதிகப்ட்சம் இவ்வளவுதான் என்று மாற்றவேண்டும்.
  • கடைகளின் பயன்பாடு, சில கடைகள், MNC நிறுவனங்கள் ஜொலிக்குதே ஜொலிஜொலிக்குதே என்று தடையில்ல மின்சாரத்தை பயன்படுத்துவதை தடைசெய்யவேண்டும்
  • சோலார் திட்டம், அராசாங்கம் மானியம் கொடுத்து வீடுகளில் சேலார் மின்சேமிப்பு திட்டத்தை கொண்டுவரலாம்.
  • கூடங்குளம், மிக கண்டிப்பா செயல்படுத்த வேண்டும்.

 இதை நான் எழுதும் போது கூட இருட்டில் இருந்தே எழுதினேன் :)

Jan 1, 2012

இனிய 2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

2012 ஆரம்பித்து விட்டது….

எப்படி 2011 முடிந்தது என்றே தெரியவில்லை… இதே இப்பதான் ஆரம்பித்தது போல் உள்ளது, அவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டது, நாட்கள் மிகவும் வேகமா ஓடுகிறது… 2011 கடுமையான வெயில், மழை, குளிர் என்று 2010 விட அதிகமாக இருந்த்து, 2012ல் 2011 விட அதிகமாக இருக்கும்…

எனக்கு 2011 ஒரு கொடுமையான வருடமாகத்தான் இருந்தது, மருத்துவத்துக்கு சம்பளம் போதாயென்று கடன் வாங்கி வெலவு செய்ய வேண்டியது இருந்த்து… வருடம் வருடம் நமது சம்பளம் கூடுதோ இல்லையோ டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுக்கபடும் பீஸ்/செலவு கூடிக்கொண்டே போகிறது… மருத்துவத்தை சேவை என்று கூறுவதை 2012 வருடத்தில் இருந்து நிப்பாட்ட வேண்டும்.

இந்தவருடம் எப்படி இருக்கும் என்பதை பார்போம், எல்லாமே ஒரு எதிர்பார்ப்புனே… நல்லதே நடக்கனும் இன்ஷா அல்லாஹ்.

அனைவரும் அனைத்து வளங்களை பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.



நோய் நொடியற்ற மகிழ்ச்சியான புத்தாண்டாக நல்வாழ்த்துக்கள்

Jun 28, 2011

தியாகராய நகர்

பல நாட்கள் ஆகிவிட்டது பதிவு எழுதி... நம்ம என்னத்த எழுதி அப்படீன்னு விட்டுறது; ஒரு சோம்பேறித்தனம் தான், வேறேன்ன

சமிபத்தில் சென்னை டி நகருக்கு ஷாப்பிங் செய்வதற்காக சென்றிருந்தேன், என்ன ஒரு கூட்டம், என்ன ஒரு கூட்டம், எங்கிருத்துதான் இந்த மக்கள் வருகின்றனோ??? எப்பவுமே இப்படிதான் போலெ, அப்படி ஒரு கூட்டம். ரங்கனாதன் தெருவில் ஒவ்வொரு அடியாகத்தான் நடக்க வேண்டிததிருந்தது, கொஞ்சம் வேகம நடக்கவே முடியாது... எப்படியும் யாரோடவாவது மோதிகொண்டே செல்ல வேண்டும் அவ்வளவு மக்கள் கூட்டம்.

ரங்கனாதன் தெருவில் இரு பக்கமும் இருக்கும் கடைகள் பாதி சாலையை அடைத்தார்கள் என்றால், சாலையோரம் வியாபரம் செய்வபவர்கள் மீதி இடத்தையும் ஆக்கிறமிப்பு செஞ்சு மக்கள் நடக்க வழி இல்லாமல் செஞ்சுடுறாங்க...

மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் இருந்து,ரங்கனாதன் தெரு வழியாக உஸ்மான் சாலை அடைய குறைந்தது 10 நிமிடம் ஆகும்.






அவ்வளவு கூட்ட்ட்டமா இருக்கு.

இவ்வளவு மக்கள் வந்து செல்கின்றனரே? ஏதாவது நல்ல உணவு விடுதி இருக்கா? சரவண பவன் இருக்கு, அங்கு போய் சாப்பிடனும்னா, குறைந்தது 30 நிமிடம் பொறுக்கனும்... வேறு நல்ல ரெஸ்டாரன்ட்?

ஹும்ம்ம்ம்... சரவணபவனில் சாப்பிட 61 அல்லது 75 ருபாய், இதே ஏசி என்றால் 150, 180 ருபாய் உஸ்ஸ்ஸ்ஸ்... ஏன்தான் இவ்வளவு விலையோ? எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை என்று சரவணபவனை மொய்க்கும் கூட்டம் ஒருக்கும் வரை விலை குறைய சான்ஸே இல்லை.

அதேபோல் கழிப்பிட வசதி? இவ்வளவு பேர் வந்து செல்லும் இடங்களில் கழிப்பிட வசதி இருக்க வேண்டாம்? பாவம் பெண்கள். வருந்துவதை தவிர என்ன செய்ய

நான், ரங்கனாதன் தெருவில் இருக்கும் பல கடைகளுக்கும், மேலும் உஸ்மான் சாலையில் இருக்கும் பல கடைகளுக்கு சென்று வந்தேன்... எல்லா இடத்திலும் கூட்டம், கூட்டம், கூட்டம்... எல்லா வியாபரிகளும்

பணம்தான் குறிக்கோள், ஆனால் மக்களை பற்றிய கொஞ்சமாவது கவலை? சுத்தமாக கிடையாது. இவ்வளவு மக்கள் கூடும் இடங்களில், பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும்? பாதுகாப்பா அப்படீன்னா? வியாபரிகளும் கண்டு கொள்வதில்லை, அரசாங்கமும் வாங்கியதை வாங்கி கொண்டு அமைதியாகி விடுகிறது. 5 மாடி உள்ள கட்டடத்தில் 4 மாடியில் தீப்பிடித்தி விடுகிறது என்றால், ஆவசரமாக வெளியேறுவதற்கு Fire Exit கிடையாது, இருக்கும் ஒரே படி வழியாகத்தான் இறங்கி வரவேண்டும்... வருவதற்குள் தீ நம்மளை தின்றுவிடும். சாதரனமாகவே ஒரு கட்டிடம் கட்டும் போது, பல்வேறு விசயங்களை கடைபிடிக்க வேண்டும், அதுவும் இப்படி அதிகம் மக்கள் கூடும் இடங்களில் மூன்று மடங்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்... டி நகரில் எங்கும் இது கடைபிடிக்கவே இல்ல.

அரசாங்கம் எப்போதுதான் கண்டு கொள்ளபோய்கிறதோ??? எப்போதுமே பெரிய அளவில் விபத்து நடக்கிறதோ, அப்போதுதான் அரசாங்கத்தின் பார்வைக்கு வருமோ?

Jan 13, 2011

இன்னுமா தந்தி கலைஞரே???

கருணாநீதிக்கு அப்படி என்னதான் தந்திமேல் மோகம் என்று தெரியவில்லை, தொடர்ந்து தந்தி மேல் தந்தி.... தபால் துறையை வாழ வைத்து கொண்டிருப்பதே திராவிட இயக்கங்கள்தான் போல. இமெயில், போன், இண்டெர்நெட் என்று எவ்வளவோ வந்தாலும் பிடிவாதமாக பிரதமருக்கு தந்தி மேல் தந்தியாக அதுவும் மற்றவர்களின் துன்பத்தின் போதுதான்... என்ன ஒரு பிடிவாதமோ?

சிங்கள கடற்படை வெறிச்செயல்-மீனவர் பலி

நேற்று ஒரு தமிழக மீனவரை இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார், அதற்காக இந்திய பிரதம மந்திரிக்கு தமிழக முதல் மந்திரி தந்தி அனுப்புசாராம். இலங்கைகாரன் தொடர்ந்து தமிழக மீனவர்களை கொண்டுகிட்டு இருக்கான், தினமும் ஒரு குறிக்கோள் வச்சுருப்பான் போல, எப்படியும் ஒரு தமிழனை கொல்லனும்னு... இது பல நாட்களா தொடர்ந்து கொண்டே இருக்கு, இதை கண்டிக்க வேண்டிய பிரதமரும், முதல் அமைச்சரும் தந்தி கொடுத்து விளையாண்டுகிட்டு இருக்காங்க. ராசாவுக்கு ஒரு பிரச்சனைன்ன என்றவுடன் தனது தூதுவரை உடனே டில்லிக்கு விமானம் புடுச்சு போக சொல்லி பேச சொன்னார்; ஆனா? ஒரு வேளை தினமும் இதை கேட்டு கேட்டு சலிச்சுருக்குமோ? என்னாப்பாது டெய்லிந்தான் கொல்றானுக, என்னதான் செய்றதுன்னு நினைச்சுருப்பாரோ????



தமிழக மீனவரை அடித்தால் இலங்கை மாணவரை அடிப்போம் தமிழக மக்களுக்கு ஆதரவாய் கருத்து சொன்ன சீமானை பிடித்து உள்ளே போட முடிந்த இந்த ஆட்சியாளர்களுக்கு, இலங்கை நடத்தும் துப்பாக்கி சூட்டை மட்டும் தடுக்க இயலவில்லையா? பல நாட்களாக இலங்கை அரவு தமிழக மக்கள் மீது அறிவிக்கபடாத போரை நிகழ்த்தி வருகிறது. இன்னும் தந்தியே அனுப்பிகிட்டு இருந்தா மீனவ இனத்தையோ ஒழிச்சுரும்...

Jan 12, 2011

சில நிஜங்கள்...

இந்திய நாட்டின் சில நிஜங்கள், இது சில நேரங்களில் உலக அளவில் கூட பொருந்தும் இல்லையா?

மாங்கு மாங்குன்னு இரவும் பகலும் கண்ணு முழுச்சு படிச்சு முதல் வகுப்புல தேறி டாக்டராவோ பொறியாளரோவோ ஆகுறாங்க.






மாங்கு மாங்கு படிக்காட்டாலும் ஓரளவுக்கு படிச்சு இரண்டாம் வகுப்புல தேறி MBA வா ஆகி, முதல்ல வந்த டாக்டரையும் இஞ்னியரையிம் கண்ட்ரோல் செய்றாங்க..






கடமைக்குன்னு படிச்சு மூன்றாம் வகுப்புல தேறி, அரசியல்ல நுழைச்சு முதல்ல வந்தவர்களையும் இரண்டாம் வந்தவர்களையும் ஆட்டி படைக்கிறாங்க...








இதுதான் லீஸ்ட், சுத்தமா படிப்பும் ஏறாமே, எல்லாத்துலையும் பெயில் ஆகியும் தாதாவ ஆகி படுச்சவர்களை பூரா ஆட்டிவைக்கிறாங்க.

என்னத்த படிச்சு என்ன செய்றது??? வேன்னா பெஸ்ட் நாத்திகவாதின்னு சொல்லிக்கலாம் :)

Jan 10, 2011

கமலும் ஏ ஆர் ரஹ்மானும்

எம் எஸ் விஸ்வனாதன், இளையராஜா வரிசையில் அடுத்து வர மிக தகுதியானவர் தேவி ஸ்ரீ பிரசாத்தானாம், வருங்காலத்தை மிகச்சரியாக கணிக்கும் கமல்ஹாசன் சொல்லியிருக்கின்றார். கமலுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏ ஆர் ரஹ்மானை மட்டம் தட்டி கொண்டே இருக்க வேண்டும்.

கமலுக்கு அவரை தவிர மற்றவர்கள் பிரபலம் அடைவது பிடிக்கவே செய்யாது, அதுவும் உலக அளவில் பிரபலம் என்றால் வயிறு எரிவது இயற்கைதானே... பல காலமாக பெயரில் ஆஸ்கார் நாயகன், உலக நாயகன் என்றெல்லாம் விளிக்கபட்ட இந்த சாதா நாயகன் பல வருடங்களாவே ஆஸ்காரை வாங்கி வருகிறேன், வாங்கி வருகிறேன் என்று ஏமாற்றி ஒருவர் ஆஸ்காரை வாங்கியவுடன் அவரை விமர்ச்சிப்பது என்ன பண்போ?

இந்தியன் படத்தில் இயக்குனர் ஷ்ங்கரின் வற்புற்தலினால், தென்னாலி படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிகுமார் வற்புற்தல் காரணமாகவே ஏ ஆர் ரஹ்மான் கமல் படத்திற்கு இசை அமைத்தார், அல்லது கமல் ஏ ஆர் ரஹ்மானை இசை அமைப்பதற்கு இயக்குனர்கள் காரணமாக ஒப்பு கொண்டார்.

கமலும் எப்படியாவது ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராக எந்த இசை தொகுப்பாளர்களாவது கொண்டு வந்து விட வேண்டும் என்று வெறி, அதனால்தான் தசவாதரம் படத்தில் ஹிமேஸ் ரேஸ்மியாவை கொண்டு வந்தார், அவர் என்னடான்னா நான் ரஹ்மானின் ரசிகன், எனக்கு ரஹ்மான் இசையில் பாடனும்னு ஆசைன்னு கமல் மூஞ்சில் கரியை பூசிட்டு போய்ட்டார்... கமலும் விடல விக்ரமாதித்தன் போல் தொடர்ந்து கொண்டிதான் இருக்கிறார்....

உலக நாயகன், உலக நாயகன் என்று கூறுகிறார்களே... அப்படி என்னதான் உலக அளவில் விரும்ப படும் படங்களை எடுத்துவிட்டார்? அவரின் பிரபலமான அவ்வை சண்முகி முதல் மன்மதன் அம்பு வரை ஆங்கில படங்களின் காப்பி, சொந்தமாக ஒரு கதையை யோசிக்க தெரியாத இந்த உலக நாயகன் ஏன் தான் இப்படி?

சமிப குமுதத்தில் இதை பற்றி சில இசையமைப்பாளர்களிடம் கேட்டு கருத்து வெளியிட்டு உள்ளது, அதில் சில பேர் கூறி உள்ளது
சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர் என்றால் அது சிம்புதான்

இப்படி கூறினால் எப்படி ஏற்கொள்ள முடியாதோ, இப்படி கூறினால் எப்படி கூறியவர்கள் அசிங்கபடுவார்களோ, இதனால் எப்படி கமலுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லையோ, அதேபோலத்தான் கமல் கூறியதை எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்வுகளை படிக்கும் போது, தவளை கதைதான் ஞாபகம் வருது... உங்களுக்கும் வருதா??? தமிழ்ழண்ண்டா....

Dec 6, 2010

தற்கொலை செய்வதற்கான ஐடியா

இது எனக்கு மெயில் மூலம் வந்தது, நன்றாய் இருப்பதினால் இங்கு வெளியிடலாம் என்றுதான். யாரும் முயற்சிக்க மாட்டீர்கள் இருந்தாலும்... யாராவது ஏதாவது செஞ்சுகிட்டா அதுக்கு நான் காரணம் இல்லை :)












Nov 29, 2010

கண்டிப்பாக செய்ய வேண்டிய சாலைவிதி

சாலைவிதி..., மாற்றம் செய்யவேண்டியது எவ்வளவோ உள்ளது, இன்னும் இதேபோல் தொடர்ந்து கொண்டிருந்தால் பெருநகரத்தில் இருப்பவர்கள் கடுமையான விரக்தி உள்ளாவர்கள்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் அதிகமாகி கொண்டே போகிறது, இப்போது கார் வாங்குவது என்பது ஒரு அவசியம் ஆகிவிட்டது, வரும்காலங்களின் கார் என்பது கட்டாயமாகிவிடும். ஆனால் சாலை வசதி மட்டும் மாறவே மாறாது, அப்படியே இருக்கும்... அதாவது போக்குவரத்து நெரிசல் தகுந்தார்போல் சாலையை மாற்ற மாட்டார்கள்... என்னதான் மெட்ரோ ரயில் விட்டாலும் கொஞ்ச நாளிலே போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்து விடும், இன்னும் 1900 போட்ட சட்ட திட்டங்களையோ கொண்டிருந்தால் வருங்காலத்தில் கண்டிப்பாக வருத்த படுவோம்.

சமிபத்தில் ஒரு சட்டம் போட்டிருக்கிறார்கள், என்னவென்றால் இ-சாலன் முறை, இ-சாலன் முறை வந்தால் மட்டும் திருந்திட போகிறார்களா என்ன? அவர் தொடர்ந்து தவறு செய்து கொண்டிருந்தால் அவரின் அத்யாவசிய தேவைகளான குடிநீர், மின்சாரம் போன்றவற்றை தடை செய்ய வேண்டும், அப்போது ஓரளவுக்கு தவறுகள் மட்டுபடும்.

சென்னை போன்ற பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் தனிமனித ஒழுக்கமின்மையாகும், எல்லாருக்கும் எங்கும் அவசரம்தான். ஒரு பகுதி ஒரு வழி சாலையாக இருந்தால் அதில்தான் தவறாக போக முயற்சிப்பார்கள், இதில் ஆட்டோ ஓட்டுனர் ஆகட்டும் அல்லது இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் ஆகட்டும்.... அனைவரும் தவறிலைப்பதில் குறைந்தவர்கள் அல்ல.

நான் பார்த்த வரை, சென்னையின் மற்றும் அனைத்து மாநகரங்களின் போக்குவரத்துக்கு மிக தேவையான ஒன்று, மஞ்சள் பெட்டி பகுதி (Yellow Box System) கொண்டுவருவதாகும். இது எதற்கு என்றால் நான்கு ரோடு சந்திக்கும் பகுதி என்றால் நேராக செல்பர்கள் குறுக்காக செல்பவர்களுக்கு தோதாக நிற்க வேண்டும், அதாவது மஞ்சள் ஒளிந்தவுடன் நிற்க ஆரபித்து, சிவப்பு ஒளிரும் போது நின்றுவிட வேண்டும் அதுதான் முறை, ஆனால் என்ன நடக்கிறது என்றால் ஒருவர் சீக்கிறமாக சென்றுவிட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் செல்லும் வழியை அடைத்து கொள்வார்கள்.


மஞ்சள் பெட்டி என்பது நடுவில் போடப்படும் ஒரு மஞ்சள் கட்டம் ஆகும், எதற்கு என்றால் அந்த கட்டத்திற்குள் எந்த வாகனமும் அதிக நேரம் நிற்க கூடாது.

கிழே இருப்பதுதான் மஞ்சள் பெட்டி


இப்ப நான் நேரே செல்லவேண்டும் என்றால் பச்சை விளக்கு எரிந்தால் மேலும் மஞ்சள் கட்டத்திற்குள் சிக்காமலும் இருக்க வேண்டும்; மஞ்சள் கட்டத்திற்குள் சிக்க கூடாது என்றால் நான் போக வேண்டிய அளவு இடம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும். கீழே உள்ள படத்தை பாருங்கள் 1ம் எண் வண்டி போவதற்கு பச்சை விளக்கு எரிந்தும் நிற்கிறது, ஏனேன்றால் 3ம் எண் வண்டி சென்றால்தான் அதனால் மஞ்சள் பெட்டியில் மாட்டாமல் செல்லமுடியும்; அதே நேரத்தில் 2ம் எண் வண்டி சென்று கொண்டியிருக்கிறது ஏனெறால் அந்த வண்டி எப்படியும் மஞ்சள் பெட்டி பகுதியில் நிற்க போவதில்லை. மஞ்சள் பெட்டியில் நின்றால் என்ன நடக்கும் மற்றவர்களின் (குறுக்காக செல்பவர்களின்) வழியை மறைத்து கொண்டிருப்பதினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.


இந்த முறை அனைத்து வெளிநாடுகளில் உள்ளது, நமது நாட்டில் இன்னும் வரவில்லை, வந்தால் மிகவும் நல்லது; மஞ்சள் பெட்டில் ஒரு குறிப்பிட்ட நேர அளவை தாண்டி நின்றால் போக்குவரத்து விதிகளுக்கு மாறு செய்தகாக நம்மீது ஃபைன் போடுவார்கள். அதை தொடர்து செய்தால் நமது ஓட்டுனர் உரிமம் கூட ரத்து செய்யபடலாம்.

எவ்வளவு நல்ல விசயம் அல்லவா? யாராவது இதை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்து கொண்டு போங்களேன்.