Sep 14, 2009

அரசு ஊழியர்களின் மட்டும் குற்றவாளிகளா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சமிபத்தில் ஒரு முக்கியமான அதுவும் மிகவும் வரவேற்க்க கூடிய கருத்து தெரிவித்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள்.
அக்கருத்து இதுதான் (கவனிக்கவும் கருத்துதான் தீர்பு அல்ல)


ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.ஊழல் குற்றங்களை ஒழிப்பது தொடர்பான மாநாட்டில் அவர் பேசுகையில்,


பொது மக்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற பணத்தில் வாங்கி குவிக்கும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது நியாயமானதே. லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு உரிய சட்டம் கொண்டு வர வேண்டும்.


அரசு ஊழியர்கள் ஊழல் புரிந்து அதன் மூலம் சொத்துக்களை குவித்திருந்தால் அவரிடம் உள்ள சொத்துகளை ஜப்தி செய்யும் பொறுப்பு அம்மாநில அரசுக்கு உண்டு.


லஞ்ச-ஊழல் தடுப்பு புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்துள்ள சுமார் 9,000 வழக்குகள் நீதிமன்ற பற்றாக்குறை காரணமாக நிலுவையில் இருந்து வருகின்றன.


வழக்கு தொடருவதற்கு உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வழங்குவதன் மூலமும் தாமதத்தை தவிர்க்க முடியும்.


ஒரு அரசு அதிகாரி மீது லஞ்ச ஊழல் புகார் எழுந்தால் அதை விசாரிக்க அனுமதி வழங்குவதற்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை ஆகிறது. இப்படி காலதாமதமானால் விசாரணையை எப்படி நடத்த முடியும்?.


ஊழல் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்கு சிறப்பு வழக்கறிஞர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் இத்தகைய வழக்குகளைச் சிறப்பாக நடத்த முடியும்.


மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அரசு வழக்கறிஞர்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதற்குப் பதில் குறிப்பிட்ட வழக்கறிஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் இந்த வழக்குகளை அவர்கள் திறமையாகக் கையாள முடியும்.


ஊழல் வழக்குகளில் அதிக எண்ணிக்கையில் சாட்சிகளை சேர்ப்பதில் தான் சிபிஐ கவனம் செலுத்துகிறது. அதற்குப் பதில் வலுவான ஒரு சில சாட்சிகள் மூலம் வழக்கு விசாரணையை விரைவிலேயே முடிக்க முடியும். வழக்குகளை 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை இழுக்க வேண்டிய அவசியமிருக்காது. 10 சாட்சிகளை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதை விட ஒரே ஒரு உறுதியான சாட்சியை முன்னிறுத்தி வழக்கை சிறப்பாக நடத்தலாம்.


ஊழல் வழக்கு களை விசாரிப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பிட்ட அரசு அதிகாரி லஞ்ச ஊழல் புரிகிறார் என்பதற்கு உரிய ஆதாரங்களை அளித்தால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வழக்கு பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.


மத்திய அரசின் முன்னோடி திட்டமான கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் பட்டியல்கள் போலியாக தயாரிக்கப்பட்டு எந்த வேலையும் செய்யாத இடைத்தரகர்கள் ஊதியம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதேபோல் அத்தியாவசிய பொருட்களை பொது மக்களுக்கு வழங்கும் பொது வினியோக திட்டத்திலும் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன என்றார் பாலகிருஷ்ணன்.

நன்றி தட்ஸ்தமிழ்


இது மிகவும் சந்தோசமடைய கூடிய ஒன்றுதான், நமது நாட்டில் இப்படி சிந்திக்க கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது மிகவும் அதிசியம்.

சட்டம் எல்லாரும் பொதுவாகவா இருக்கிறது?  சட்டம் என்பது வாதாடும் வழக்குறைஞரின் வாத திறமையால் முடிவு செய்ய படுகிறது. பணம் உள்ளவன் சிறந்த வழக்குறைஞரை தேர்வு செய்து வழக்கில் இருந்து விடுவித்து கொள்கிறான், இல்லாதவனுக்கு கோவிந்தாதான்...  நீதியை ஒலிக்க வேண்டிய சட்டம் பணம் உள்ளவனிடம் ஒளிந்து கொள்கிறது அல்லது பணத்தால் ஒழிந்து போய்கிறது.

அரசு ஊழியர்கள் தவறு செய்தால்  உச்ச பட்ச தண்டனை, இடமாற்றம்தான், அதுவும் குறிகிய காலம்தான்... பிறகு அவர்கள் ஏதாவது (?) செய்து பழைய இடத்தை அடைந்து விடுவர்கள்.

அரசு ஊழியர்களின் தவறுக்கு அவர்களின் சொத்துக்க்ளை பறிமுதல் செய்வதை விட, அதற்கு தூண்டு கோலாக இருக்கும் அரசியல்வதிகளின் சொத்தை பறிமுதல் செய்யலாம்.  ஏனெனில் வெற்றி பெற்ற மனிதனின் பின்னால் ஒரு பெண் இருப்பது போல், தவறு செய்யும் அரசு ஊழியர்கள் தவறுக்கு பின்னால் அரசியல்வதிகள் இருக்கின்றனர்.

நமது அரசாங்கமும் அரசு ஊழியர்களின் தவறுக்கு பாதிப் பொறுப்பு எடுத்து கொள்ளலாம், ஏன் என்றால்... அரசாங்க வேலை செய்யும் ஊழியர்களில் சிலருக்கு மிக அதிக மிக மிக அதிக சம்பளமும் சிலருக்கு மிகக்குறைவன சம்பளமும் கொடுக்க படுகிறது.   இவ்விசயத்திலே அரசாங்கம் சரியான விதி முறைகளையும் அனைவருக்கும்  நல்ல சம்பளமும் வழங்கினால், ஏன் தவறு செய்ய போகிறார்கள். 

1947 எழுதிய சட்டத்தை வைத்துக்கொண்டு அழுவதை விட, காலத்திற்கு தகுந்தார் போல் சிறந்ததை உருவக்கி கொள்ளலாம்.

டிஸ்கி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குன்னு இவங்களே கேச பைல் செஞ்சு விசாரிப்பாங்களே,  அதப்போல ஊழல் செய்பவர்களுக்கு எதிரா ஏன் செய்யவில்லை? சும்மா தோனுச்சி அதான் டிஸ்கில...

4 comments :

Anonymous said...

1947 எழுதிய சட்டத்தை வைத்துக்கொண்டு அழுவதை விட, காலத்திற்கு தகுந்தார் போல் சிறந்ததை உருவக்கி கொள்ளலாம்.

vijay said...

our law has to change, but... who are going to take resposbility?

Mãstän said...

வருகைக்கு நன்றி விஜய்

தமிழ். சரவணன் said...

அரசியல் வாதிகளும் பணமுதலைகளும் இந்த பழைய சட்டங்களை வைத்து தங்களை பாதுகாத்துக்கொள்கினறன்... ஆகையால் மிக எளிதில் மாற்ற அனுமதிக்கமாட்டார்கள்... எதிர்த்துக்கேட்டால் நம் மீதே தாடா பொட போன்ற சட்டங்களை ஏவிவிடுவார்கள்...