Sep 28, 2009

மனித நீதி தண்டனை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மறுபடியும் தண்டனை பற்றிய ஒரு பதிவு.  முந்தைய பதிவு இங்கே


இதை எழத தூண்டியது தருமியின் GO TO HELL ! பதிவுதான்.


அதாவது, அப்பதிவை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது எல்லாம், "மனித நீதி தண்டனை" பற்றிதான். மனித நீதி தண்டனை என்றால் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.

தண்டனை என்றாலே அது மனிதாபமற்றதாத்தான் இருக்கும். இதில் எப்படி வரும் மனித நீதி? முதலில் தண்டனை என்பதை மறுபடியும் கூறுகிறேன், ஒரு தவறு செய்கிறவர் அதை மீண்டும் செய்யாதிருக்க கொடுக்க படுவதுதான் தண்டனை, இதைத்தான் நான் விளங்கி கொண்டது.

ஒருவன் ஒருவரிடம் இருந்து 1000 பணம் திருடியதாக வைத்துகொள்வோம், மனித நீதி தண்டனையின் படி "எப்பா இவன பார்த்தா பாவமா இருக்கு! ஜெயில் தண்டனையிலாம் கொடுக்கிறது மனித நீதிப்படி தப்பு,  செல்லமா கன்னத்துல ரெண்டு அடி போட்டு விட்டுடுங்க."  இப்படி ஒரு தீர்ப்பு/தண்டனை இருந்தா அவன் மீண்டும் 1000000 திருடினால் அதற்கு காரணம் இந்த மனித நீதி தண்டனையாத்தான் இருக்கும். ஒரு தவறு செய்கிறவன் மீண்டும் அதை செய்யாதிருக்க கொடுக்க படுவதுதான் தண்டனை, அதை ஊக்கிவிக்கவா மனித நீதி தண்டனை???

மனித நீதி, மனித நீதி சொல்லி சொல்லி... பல நாடுகளில் தூக்கு தண்டனை இல்லாமல் செய்தாயிற்று, இப்ப எதுக்கு மற்ற தண்டனையும், தண்டிக்கிறது பாவம், விட்டுடிவோம் இப்படி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

நான் தருமியின் பதிவை மட்டும் வைத்து சொல்லவில்லை. பல்வேறு நாடுக்களில் உள்ள பல அறிவுஜீவிகள் இப்படிதான் கூறுகிறார்கள்.

அதாவது தவறு இழைத்தவர்களை தண்டிக்க கூடாதாம். இதுதான் மனித நீதி தண்டனையாம்.

இதைப்பற்றி பேசுபவர்கள் தவறு செய்பவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது, ஏதாவது நடந்து பிறகு தவறு செய்தவனை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து விடலாம் என்றால் அது சரியான முறை. இங்கு தவறிழைத்தவருக்கும் தவறிழைக்கப்பட்டவருக்கும் இவர்கள் எவ்விதத்திலும் சம்பந்த படாதவர்கள்.

ஒருத்தன் ஒரு பெண்னிடம் தவறாக நடந்தால் அல்லது அப்பெண்னை கெடுத்து விட்டால், என்ன தண்டனை கொடுக்கும் இச்சமுதாயம்? சில காலம் ஜெயில் தண்டனை. ஆனால் அப்பெண்னின் வாழ்க்கை??? இதே நேரத்தில் அவனின் உறுப்பை வெட்டினால், யாருக்காவது மீண்டும் இதை போல் செய்ய தோண்டுமா?  இவ்விசயத்தில் அனைவரும் பயப்படுவர்கள்.

பாதிக்கப்பட்டவனுக்குதான் வலி தெரியும், குஜராத் கலவரத்திலும், மும்பை குண்டு வெடிப்பிலும் தனது சொந்த பந்தங்களை இழந்தவர்களுக்கும் தெரியும் வலியும் வேதனையும்,  இவர்கள் இப்படி சொல்லி சொல்லியே அஜ்மல் கசாப்பை விடுதலை செய்ய வைத்து விடுவார்கள்.
 
சிங்கப்பூர் இப்போது பணக்கார நாடுகளில் ஒன்று, மலேசியாவை விட்டு பிரிந்து வரும்போது ஒரு சாதாரன நாடுதான் அது, எப்படி ஏற்பட்டது இவ்வளர்ச்சி? சும்மா இல்லை ஆரம்பத்தில் தவறிழைத்தவர்களையும் லஞ்சம் ஊழல்களில் மாட்டியவர்களை தயவு தாட்சனை இல்லாமல் தண்டித்தார்கள், இப்போது அவ்வாறே உள்ளது சிங்கப்பூர். இங்குதான் எது என்றாலும் கொடியை பிடித்து வந்து விடுகிறார்கள்.

அதிப்படியான தண்டனைகளே குறைவான குற்றங்களுக்கு வழிவகுக்கும்.

தண்டனைகள் அதிப்படுத்த வேண்டும் என்று போராடிகொண்டிருக்க, தண்டனைகளே நீக்க வேண்டும் என்று போராட்டம்...... ம்ம்ம்ம் என்ன செய்வது ஒரு விதமா நோய் இவர்களை பிடித்து ஆட்டுகிறது.

6 comments :

தருமி said...

இந்தப் பதிவைப் படித்த பிற்குதான் இதை எழுதியவர் யாரென்று பார்க்கத் தோன்றியது. நினைத்தது போலவே நீங்கள் இஸ்லாமியர் என்று தெரிகிறது.
//ஏதாவது நடந்து பிறகு தவறு செய்தவனை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து விடலாம் என்றால் அது சரியான முறை. //
தண்டனை வேண்டுமென்கிறீர்கள். சரி. அப்படியானால் மேலே சொன்னதை சரியென்கிறீர்களே ... எதனால்? உங்கள் மதம் சொல்லிவிட்டதே என்பதா அது? செய்றது செஞ்சிட்டு மனித மன்னிப்பு (எந்தக் காரணத்தாலும்) கிடச்சிருச்சின்னா அதை எப்படி சரியான முறை என்கிறீர்கள்? செஞ்ச தப்புக்கு தண்டனை வேண்டாமா?

இதற்குத்தான் மதம் மதமாக மட்டும் இருக்கணும்னு சொல்றது. அதை தாண்டி போனா இந்த மாதிரி 'விசித்திரங்கள்'தான் நடக்கும்!

Mãstän said...

தருமி, இதில் எதற்கு மதத்தை நுழைக்கிறீர்கள்?

//ஏதாவது நடந்து பிறகு தவறு செய்தவனை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து விடலாம் என்றால் அது சரியான முறை. //

நான் சொல்ல வந்தவை, பாதிக்கப்பட்டவர்கள் வேண்டும் எனில் மன்னித்து விடலாம். நடுவில் சில பேர் தண்டனைகளே வேண்டாம் சொல்வபவர்களை என்ன செய்வது? அதற்காகதான் அவ்வாறு சொல்லிருந்தேன்.

தண்டனை என்பது கண்டிப்பக வேண்டியதுதான், நான் வழியிருத்தி இப்பதிவிட்டதின் நேக்கமே தண்டனைகளை போதாது அதிக படுத்தவேண்டும்.

எதையும் ஏன் மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டும்?

தருமி said...

தவற்றால் பாதிக்கப்பட்டவன் மன்னித்து விட்டால் த்ண்டனை தேவையில்லை என்பது உங்கள் மதக்கொள்கைதானே. அதனால்தானே அது சரி என்கிறீர்கள்.

எனக்கு ஒருவன் தவறு செய்துவிட்டு காசு கொடுத்தால் நான் மன்னிப்பேன். உடனே கோர்ட்டும் அந்த தவறை மன்னித்து விடலாமா? மன்னித்து விடவேண்டும் என்றுதானே உங்கள் மதம் சொல்கிறது

Robin said...

//முதலில் தண்டனை என்பதை மறுபடியும் கூறுகிறேன், ஒரு தவறு செய்கிறவர் அதை மீண்டும் செய்யாதிருக்க கொடுக்க படுவதுதான் தண்டனை, // தவறு செய்கிறவர் மட்டுமல்ல தவறு செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களையும் தடுப்பதுதான் தண்டனையின் நோக்கம்.

Robin said...

உடைகளை ஆங்காங்கே கிழித்துவிட்டு ஃபேஷன் என்று சொல்வதுபோல வித்தியாசமாக சொல்வதுதான் நாகரீகம் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. சமுதாயம் சீரழிந்து வருகிறது என்பதற்கான அறிகுறிதான் இது. பழையவற்றில் உண்மையிலேயே தேவையில்லாதது தீமையானது இருந்தால் விட்டு விடலாம். அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்ப்பேன் என்று சில அறிவு ஜீவிகள் (?) கிளம்பியிருக்கிறார்கள்.

Robin said...

நாகரீகம் உச்ச நிலையை அடைந்து இப்போது அநாகரீகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அரைகுறை ஆடைகளுடன் அலைந்த மனிதன் ஒழுங்காக உடை உடுத்தி நாகரீக நிலையை அடைந்தான், இப்போது மீண்டும் அரைகுறை ஆடைகளுடன் அநாகரீக நிலைக்கு போய்கொண்டிருக்கிறான். இந்த அவலங்களை பேசுபவர்கள் எல்லாம் இப்போது காட்டுமிராண்டிகள்! அநாகரீகத்தை ஆதரிப்பவர்கள் நாகரீக மனிதர்கள்! தாங்கள் மிருக நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை கூட அறியாதவர்களை என்னவென்று சொல்வது?