Sep 30, 2009

தமிழை கொலை செய்தது போதும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
<<<
அய்யா இஸ்லாமியரே தமிழை கொலை செய்தது போதும் . இனியாவது தமிழை விட்டுவையுங்கள், தமிழ்நாட்டில் பிறந்த நீங்கள் தமிழில் எழுத தெரியவில்லை. உங்களுக்கெல்லாம் எதற்கு தமிழ் வலைப்பதிவு , உமக்கெல்லாம் உருது தான் லாயக்கு. தயவு செய்து நிறுத்திகொள்ளும் உமக்கு கோடி புண்ணியமாக போகும். நீங்கள் சொல்லவிருக்கும் பதிவுகள் அனைத்தையும் படிக்கவே தோன்றவில்லை ஏனென்றல் தமிழை கொலை செய்வது பார்த்து தான் . தமிழுக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் தயவு செய்து உங்கள் பதிவை தமிழில் எழுதுவதை நிறுத்தி கொள்ளுங்கள்----இவண் முனைவர் ப . பிரியா கண்ணப்பன்
priya.9582@gmail.com
>>>
 
இப்படி ஒரு மெயில் எனக்கு இன்று வந்திருந்தது.
 
நானா தமிழை கொலை செய்கிறேன்?
 
ஆரம்பத்தில் எதுவும் தவறாகத்தான் இருக்கும், போக போகத்தான் சரியாகும், நானும் முடிந்த அளவு தவறில்லாமல்தான் முயற்சிக்கிறேன். ஏதாவது எழுத்து பிழையிருந்தால் அதை கடிதத்தில் கூறிருந்தால் சந்தோசப்பட்டு திருந்திருப்பேன்.
 
நான் எழுது எழுத்தில் இலக்கண தவறு இருந்து, அதை மாற்ற சொல்லி கடிதங்கள் வந்தன, அவர்களுக்கும் நன்றி சொல்லி அவர்கள் சொன்ன மாற்றம் படி மாற்றினேன்.
 
ஏன் இந்த வன்மம்?
 
நான் தமிழில் எழுதுவதற்கு காரணம், அது எனது தாய்மொழி. உருது எனக்கு தெரியாது, எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. தெரிந்த மொழியில்தானே எழுத முடியும்.
 
ஏன் அனைத்தையும் மதக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்?
 
எது எடுத்தாலும் மதம்தானா?
 
தமிழை யாரும் இங்கு சொந்தம் கொண்டாட தேவை இல்லை. எல்லாருக்கும் பொதுதான் அது. தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடும் கூட்டம் என்றாவது தமது சொந்தமான் நிறுவனத்தில் தமிழில் பெயர் வைத்திருக்குமா? அனைவரையும் நான் சொல்ல வில்லை. இஸ்லாமியர்கள் நடத்தும் நிறுவனங்களில் பாருங்கள் முடிந்த அளவு தமிழில்தான் பெயர் வைத்திருப்பார்கள்,  இங்கு மட்டும் அல்ல, நான் துபாயில் பணிபுரிந்ததால் அங்கும் இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளுக்கு தமிழில்தான் பெயர். நாங்கள் தமிழை கொலை செய்ய விரும்பினால் ஏன் தமிழில் பெயர்?
 
என்னவோ இவர்கள் மட்டும்தான் தமிழை காப்பது போலவும், மற்றவர்கள் தமிழை கொலை செய்வது போலவும்...
 
 

இலங்கையில் தமிழ் சகோதர்கள் செத்து கொண்டுறுக்க, என்ன செய்தார்கள் இவர்கள்?
 
 
 
தமிழ் மொழிக்காக வாழ்கையில் என்ன செய்திருப்பார்கள்? அடுத்தவர்களை குற்றம் சொல்வதை தவிர?
 
 
 
 
எதுக்கு எடுத்தாலும் குறை.
 
எப்படித்தான் மதத்தை எல்ல விசயத்திலும் முடித்து போடுவார்களோ?
 
அது எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க தோணுகிறது?
 
தமிழை யாரும் இங்கு வாழ வைக்க வேண்டாம்.
அதுதான் பல பேரை இங்கு வாழ வைத்து கொண்டிருக்கிறது.

28 comments :

பீர் | Peer said...

தமிழ் வாசிக்கத் தெரியாத பல தமிழர்கள் இருக்கிறார்கள்..
:(

Thekkikattan|தெகா said...

அடக் கொடுமையே! இப்படி ஒரு மின்னஞ்சலா வெளங்கிரும் மொழி போங்க...

பிழைகள் செய்தால் தவறைத் திருத்தி எழுதச் செல்லிக் கொடுப்பவரல்லவா மொழிக்கு சேவை செய்பவர் ... மின்னஞ்சல் அனுப்பியவரைப் போன்றவர்கள் எதில் சேர்த்தி?

Mãstän said...

உண்மைதான் பீர்... தமிழ் பேசும் சில பேர்களுக்கு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியாது.

அப்படி பட்டவர்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்?

Mãstän said...

ஆமாம் தெகா,

தப்பு சொல்லி திருத்த சொன்னா எவ்வளவு சந்தோசம்....

<<<
எதில் சேர்த்தி?
>>>

எதில்??? :D

Robin said...

"அய்யா இஸ்லாமியரே" என்று அழைத்ததிலிருந்தே தெரியவில்லையா, அவர் எப்படிப்பட்டவர் என்று. இப்படிப்பட்ட ஜென்மங்கள் தானாக திருந்தினால்தான் உண்டு. விட்டுத்தள்ளுங்கள். ஆரோக்கியமான விமர்சனங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

Mãstän said...

நன்றிகள் ராபின்... :)

Zahoor said...

மஸ்தான் அண்ணா, சில எழுத்து பிழைகள் இருகின்றன. ஆனால் அந்த மின்னஞ்சல் வேறு ஒன்றுமில்லை, காண்டு. முனைவர் என்றால் அவர் பெரிய பருப்பா?

மதத்தின் பெயரால் சொல்லப்படும் இது போன்ற வசவுகள், எனக்கு பள்ளி நாட்களில் இருந்தே பழகிவிட்டன.

சுரேஷ்குமார் said...

அவர்களைப் பற்றி யோசிப்பதே தவறு.விட்டுதள்ளுங்கள்.

புலவன் புலிகேசி said...

மதம் என்பது யானைகளுக்கு மட்டும் தான் பிடிக்க வேண்டும்.. மனிதனுக்கு அல்ல.........
http://pulavanpulikesi.blogspot.com/2009/09/2.html

யோ வாய்ஸ் (யோகா) said...

அவருக்கு தமிழை சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்காம்? அவர் போன்றவர்களை கணக்கில் சேர்க்காதீர்கள்...

Barari said...

munaivar endru solbavar thamilaal than vayiru valappavar.anaal naam thamizai nenjaara nesiththu pesi makizbavarkal.ivarkal veetti poi paarththaal theriyum ivarkal thelungo/allathu kannadamo pesuvaarkal aannal naam thamiz mattum thaan pesuvom.vittu thallungal sakotharare.

Mãstän said...

உண்மைதான் Zahoor.

மதத்தின் பெயரால் ஏன் பாகுபாடு என்றுதான் எனக்கு புரியவில்லை. :(

Mãstän said...

ஆமாம் சுரேஷ் குமார், விட்டு தள்ளுவோம். :)

Mãstän said...

உண்மையான வரி புலிகேசி

Mãstän said...

ஆமாம் யோ வாய்ஸ் (யோகா),

எல்லா உரிமையும் இருப்பது போல... ம்ம்ம்... நன்றி.

தீப்பெட்டி said...

முனைவர் ப . பிரியா கண்ணப்பனுக்கு கடுமையான கண்டனங்கள்..

Mãstän said...

வருகைக்கும் கருத்துக்கு நன்றி சகோ Barari.


மிகவும் அழகா உண்மையை சொல்லிருக்கீங்க.

Mãstän said...

நன்றிகள் தீப்பெட்டி.

கடுமையான கண்டனங்கள்.

செந்தழல் ரவி said...

அதெல்லாம் முடிச்சு போட்டுடுவமில்ல :((((((

தொடர்ந்து எழுதுங்க, இதை எல்லாம் கண்டுக்காதீங்க.

குரங்கு said...

These peoples are useless. Don’t treat them as human being. Really biggest stupid. If anyone like being as good Tamil person, they could encourage who are writing in Tamil.

Be on continue write in Tamil…
I’m sorry to write in English

அன்புடன் மலிக்கா said...

தமிழ் நம் தாய்மொழி இதில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுவதே சிறப்பு,
பழிச்சொல் இழிச்சொல்லுக்கெல்லாம் பயந்தால் வேலைக்காகது

இழிச்சொல்களை புறந்தள்ளி இனிய தமிழை தொடர்வோம்..

http://niroodai.blogspot.com/

Sajid said...

Hi Mappi, There is no work in this world without criticism. It is hard for some people to digest, when reading an article in our language with errors. Try to amend these errors and take care not to repeat them. We all admire your interest, please go ahead with your work. It's really interesting.

Mãstän said...

வருகைக்கும் கருத்துக்கு நன்றி ரவி...

Mãstän said...

கருத்துக்கு நன்றி குரங்கு

Mãstän said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா.

ஆமாம் தமிழை தொடர்வோம், தமிழால் தொடர்வோம்

Mãstän said...

ஹாய்டா சாஜி,

நானும் முயற்சித்து தப்பில்லாமல் எழுதுகிறேன்.

Anonymous said...

IVANTHAN TAMILAN!!!!

samee said...

riyadh tamil sangam - tamilch changam endru ezhuthach cholliyum ippadiththan (ch illamal) ezhuthukirarhal... tamil pesu thanga kasu endru program tamil valarkka tamilp pesu, thangak kasu endruthan ezhutha vendum - ellam oru vilambarathukkakath than seikirarkal.. alllamal unmaiyaanath thamizh valarkkum nokku illai.... kaazhppunarchiyudan silar muslim veruppudan kooruvathaip puram thalli.. muyarchithu mudintha alavup pizhai indrith thamizil ezhuthavum.. thangal thamizh pechu vadivath thamizh - athai anthak kannotthil parkkumbothu.. ondrum thavarillai... thodarka.. passport kuritha thakaval payanulla pathivu..anbudan p.s. ahmed B.Sc., M.A.(Tamil)