Nov 11, 2009

மாறவே மாட்டாங்களா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பொதுவா ஏமாறுவதுக்கு என்றே சில பேர் உள்ளனர் போல். இதில் ஏமாற்றுபவர்களை விட, ஏமாறுபவர்களையே குற்றம் சொல்லனும். சமிபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் இந்த பதிவை எழுத தூண்டியது. 

அதாவது, ஒரு கணிணி நிறுவனத்தில் பணம் கட்டினவர்களை அந்நிறுவனம் பட்டை நாமம் சாத்திஉள்ளது...

எப்படிதான் ஏமாறுவார்களோ?

சில பேர் தானும் சாப்பிடாமல், மற்றவர்களுக்கு தானம் செய்யாமலும் சேமித்து சேமித்து இப்படி ஏமாற்று பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து எப்படிதான் சிந்திக்காமல் ஏமாறுகிறார்களோ? சிறிது வருடங்களுக்கு முன்பு சிட்பண்ட் என்ற பெயரில் ஏமாற்றி கொண்டுருந்தார்கள். 

இப்போதும் அவர்கள் தொடர்கிறார், வேறு வேறு பெயர்களிலும். மக்கள் இப்போதும் தொடர்ந்து ஏமாறுகிறார்கள்.

சில விசயங்கள் நமக்கே தெரியவேண்டும். பணம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்நிறுவனத்தின் நம்பகதன்மையை சிந்திக்க வேண்டாமா? 100000 முதலீடு செய்து மாதம் 20000 வருமானம் வரும் என்றால் நம்பிவிடுவதா? சமிபகாலமாக அதிககமாக பஸ், ரயில் போன்றவற்றில் சிலபோஸ்டர் தென்படுகின்றன... அவைகளின் சாராம்சம்...

"மாதம் 5000 வருமானம்,  இது மார்கெட்டிங் கிடையாது, கஷ்டப வேண்டியதில்லை, சேல்ஸ் வேலையிம் கிடையாது, உங்களது விருப்பபட்ட நேரங்களில் வேலை செய்யலாம்"

இப்படிலாம்,  இருக்கின்றது... எப்படி வரும் 5000 ருபாய்.. சும்மா தூக்கி கொடுத்திருவாங்களா 5000 ருபாய்??? நாம அவர்கள் கொடுக்கும் நம்பருக்கு பேசினால் அப்படியே ஐஸ் முழுங்கியது போல் பேசுவார்கள்.. அவர்கள் இடத்திற்கு கூப்பிட்டு  நீங்க எந்த வேலையிம் செய்ய வேண்டாம், 100000 பணம் கட்டிடுங்க... மாசம் மாசம் 5000 ருபாயா 5 வருசத்திற்கு கொடுப்போம், ஜாலியா இருக்கலாம்னு சொல்வார்கள்... ஏமாறுவதற்கே இருக்கும் மக்களும் பணத்தை கட்டி விட்டு வருவார்கள்.

ஏமாற்றுபவர்கள் பலவிதம், கம்பியூட்டர் பெயரில் கூட... "டாக்குமொண்ட் பிராஸ்ஸிங்... ஒரு குறுப்பிட்ட அமொண்ட் கட்டிடுங்க, எவ்வளவு கட்டுறீங்களோ அதற்கு தகுந்தார்போலவே டாக்குமொண்ட் கொடுப்போம், நீங்கள் அதை பிராஸ்ஸிங் செய்து மாதம் 50000 வரை சம்பாதிக்கலாம்..." பணத்தாசையில் வீட்டை அடமானத்தில் வைத்து சேர்வார்கள்.

எனக்கு தெரிந்தவர் நடந்த உண்மை சம்பவம் இது.
சென்னை சுற்றி பார்க்க வந்த அவரது குடும்பம், எங்கோ செல்லும் போது, ஏதோ ஒரு பார்மில் அவர்களது மொபைல் நம்பரை கொடுத்துள்ளனர், அவர்களும் அதை மறந்து விட்டனர், கொஞ்ச நாளில் அவர்களுக்கு ஒரு போன் வந்துள்ளது,  "உங்களுக்கு சிங்கப்பூர் போவதற்கு பரிசு விழுந்துள்ளது" என்று கூறிவுள்ளார்கள், அவர்களும் ஒரே குஷியாகி அடுத்த நாளே சென்னை வந்து ஒரே குஷியா இருந்தாங்க... அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு போனவுடன்... உங்களுக்கு பரிசு விழுந்தது உன்மைதான். சீக்கிரமா பாஸ்போர்ட்லாம் ரெடி பன்னுங்க, விசா, டிக்கட், தங்குற செலவு எல்லாம் நாங்களே பார்த்து கொள்வோம், அவரு ரெம்ப சந்தோசமாயிட்டாரு... அவர்கள் சில இடங்களில் அவரின் கையெழுத்து வாங்கிவிட்டு, இது நீங்க எங்க கிளப்பில் மெம்பரா சேர்ந்தாதான் இது எல்லாம் அணுவிக்க முடியும் என்றவுடன், அவரும் அவரின் மிகவும் அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து விட்டனர்.

எல்லா இடங்களிலும் இவர்கள் உள்ளனர்,  வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூட ஒரு கூட்டம் ஏமாற்றி கொண்டு இருக்கின்றது. நாம அங்கு போன பிறகுதான் தெரியும், ஏதாவது அவர்களிடம் சேர்ந்து கோர்ஸ் படித்தால்தான் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வார்களாம்... வேலை என்பது உறுதி கிடையாது... வேலை கிடையாது என்பது உறுதி :)
இப்படி பலபேர் இருக்கின்றன்ர், ஏமாற்றுவர்களின் லிஸ்டில்... நாம்தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுநிறுவன வங்கிகளே 11% மேல் வட்டி தறுவதில்லை... மற்றவர்கள் எப்படி தறமுடியும்? சிந்திப்பார்களா?

2 comments :

புலவன் புலிகேசி said...

//சில பேர் தானும் சாப்பிடாமல், மற்றவர்களுக்கு தானம் செய்யாமலும் சேமித்து சேமித்து இப்படி ஏமாற்று பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்//

உண்மைதான் நண்பரே...

Anonymous said...

eamaanthu paathavanukkuthaan thaan eppadi emaanthom entu theriyum...kodumaithaan...

appaavekalai eamarttuvarkalai eppadi kalai eduppathu...
appaavikal...paavikalaaka maaravendum...